பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
நாள் பாடல்
மாவீரர் நாள் அன்றும்
போராளிகளின் இறுதிச்
சடங்களின் அன்றும்
ஒலிக்கப்படும் பாடல்
மாவீரர் நாள் பாடல் ஆகும்.
இந்த பாடல்
புதுவை இரத்தினதுரை
அவர்களால் இயற்றப்பட்டது.
வர்ணராமேஸ்வரன் அவர்கள்
பாடியது .
ஈகச்சடரேற்றும்
பொழுது இது பாடப்படுகிறது,
அல்லது ஒலிபரப்படுகிறது.
இந்தப் பாடல்
பின்வருமாறு தொடங்கிறது:
மொழியாகி எங்கள்
மூச்சாகி நாளை முடிசூடும்
தமிழ்மீது உறுதி !
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற
வேங்கை வீரர்கள் மீதிலும்
உறுதி !
இழிவாக வாழோம்!
தமிழீழப்போரில் இனிமேலும்
ஓயோம் உறுதி !
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின்
குரல்மொழி கேட்கிதா ?
குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின்
குரல்மொழி கேட்கிதா ?
குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர்
உங்களின் தோழிகள் உறவினர்
வந்துள்ளோம் !
உங்களைப் பெற்றவர்
உங்களின் தோழிகள் உறவினர்
வந்துள்ளோம் !
அன்று செங்களம்
மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம்
மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம்
விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம்
விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின்
திருமுகம் காட்டியே மறுபடி
உறங்குங்கள் !
ஒருதரம் உங்களின்
திருமுகம் காட்டியே மறுபடி
உறங்குங்கள் !
0 Comments:
Post a Comment