பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
கல்வி மேம்பாட்டுப் பேரவை
தமிழீழக்
கல்வி மேம்பாட்டுப்
பேரவை நடத்திய தமிழீழப்
பொதுக்கல்வித் தேர்வில்
சித்தியடைந்த மாணவர்களைப்
பாராட்டி தமிழீழ தேசியத்
தலைவர் வே . பிரபாகரன் 1993
மாசி 13 இல் வெளியிட்ட
அறிக்கையில் 'மனித
வளர்ச்சிக்கும் சமூக
மேம்பாட்டிற்கும்
கல்வி ஆதாரமானது . ஆணிவேர்
போன்றது. சமுதாய
விடுதலைக்குத்
தம்மை அர்ப்பணிக்கும்
தெரிவிக்கும ,;
கல்வி கற்கும்
உரிமைக்கும் இடையில் நாம்
என்றுமே முரண்பாட்டைக்
கற்பிக்க முயல - வில்லை.
இரண்டுமே எமது சமூகத்தின்
வாழ்வியக்கத்திற்கு
இன்றியமை - யாதவை. போரும்
கல்வியும் இணைந்த
ஒரு வாழ்வு இன்று எமது
வரலாற்றுத் தேவையாக
உள்ளது . எமது போராட்டம்
கல்விக்கு கவசமாக
இருப்பது போல கல்வியும்
எமது போராட்டத்திற்கு
காப்பரணாக நிற்க வேண்டும்.
இன்று தமிழீழத்தில்
கல்வித்துறை சீரழிந்த
நிலையில் உள்ளது .
தமிழரின் கல்வியைத்
திட்டமிட்ட வகையில்
சிறீலங்கா அரசு
புறக்கணித்து வருகிறது.
எத்தனையோ நெருக்கடிகள்
இடர்பாடுகளை எதிர்கொண்டு
எமது மாணவர் சமூகம்
கல்வியை கற்க
வேண்டியிருக்கிறது .
தமது ஆர்வத்தினாலும்
திறமையினாலும் கடும்
உழைப்பினாலும்
கல்வி கற்றுப் பொதுத்
தேர்வுக்கு தயாரானாலும்
உரிய காலத்தில்
அவை நடைபெறுவதில்லை.
தேர்வு நடைபெறும்
காலங்களிலும் அரச படைகள்
அமைதியைக்
குலைத்து விடுகின்றன .
இத்தனை தடைகளையும்
தாண்டித்தான்
எமது மாணவர்கள்
தேர்வுகளுக்கு முகம்
கொடுக்க
வேண்டியிருக்கிறது . இந்தச்
சூழ்நிலையில் கணிதப்
பொதுத் தராதர சாதாரண தர
தேர்வுக்கு ஈடாக முதல்
தடவையாக
தமிழீழக்கல்வி மேம்
பாட்டுப் பேரவை சிறப்புற
நடாத்தி முடித்திருக்கிறது
. இந்த முயற்சியை நான் மனப்
பூர்வமாக பாராட்டுவதுடன்
இத்தேர்வில் தோற்றிய
தேர்ச்சி பெற்ற
அனைத்து மாணவர்களுக்கும்
எனது வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன்"
என்று கூறியிருந்தார்
0 Comments:
Post a Comment