-->

திரு. வேலுப்பிள்ளை அவர்களின் நினைவுமலர் -.- பாகம் .5.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

வேலுப்பிள்ளை ஐயாவின் நினைவுகள் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இலங்கை இராணுவத்தின் தலைமையகமான பனா கொடை படைத்தடுப்பு முகாமில் 06-01-2010ம் திகதி இரவு 9.00 மணியளவில் காலமாகினார் என்ற செய்தி ஈழத் தமிழர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. உலகில் நடைபெற்ற தேசிய இன விடுதலைப் போரட்டங்களில் பல வரலாற்றுச் சாதனைகளான தரைப்படை , கடற்படை, வான்படை ஆகியவற்றிற்கு தலைமை தாங்கி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வழி நடாத்திய தலைவர் பிரபாகரனின் பெற்றோர் என்ற காரணத்திற்காகவே பனாகொடை இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் . ஐயா காலமாகிய செய்தி 07-01-2010ம் திகதி நண்பகல் 1 மணியளவில் தெரிந்து கொண்டதும் ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்பு கொண்டு உரிய விசாரணைகள் நடாத்தப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ப10தவுடல் கையளிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தேன் . அநாதையாக அரச செலவில் அடக்கம் செய்யவேண்டாம் எனவும் மேலும் வேண்டுகோள் விடுத்தேன் . இதனைத் தொடர்ந்து கனடாவில் இருந்து இளைய மகள் திருமதி வினோதினி இராஜேந்திரன் (சித்திரா) அவர்களும் திரு. இராஜேந்திரன் அவர்களும் தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு உடலைப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொண்டனர் . அதற்கான அதிகாரத்தை வழங்கும் கடிதத்தையும் எனக்கு அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் வேலுப்பிள்ளை ஐயாவின் ப 10தவுடலையும், பார்வதிப்பிள்ளை அம்மாவையும் பொறுப்பேற்றேன் . வல்வெட்டித்துறையில் மச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டது . அதிலும் அம்மாவும் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. ஈழத் தமிழர்கள் நிம்மதி அடைந்தனர். முதலாவது உலக மகா யுத்தத்தில் திருகோணமலையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலை கடலுக்கு அடியில் இருந்து உள்ள 10ர் முறைகளைப் பாவித்து வெளியே எடுத்துவந்து அதை விற்ற பணத்தில் இருந்துதான் வல்வெட்டித்துறை சிவன்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிவன் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்துவந்த அமரர் வேலுப்பிள்ளை ஐயாவின் வாழ்க்கை சமய நெறியில் சென்றாலும் இள வயதிலேயே அரசாங்க சேவையில் இணைந்து பல படிகளைக் கடந்து , மாவட்டக் காணி உத்தியோகத்தராக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமை யாற்றிய பின்னர் ஓய்வுபெற்றார் . அக்காலகட்டத்தில் (1980) முல்லைத்தீவுப் பகுதியில் நெடுஞ்சாலைகள் திணைக்களத்தில் பணியாற்றிய பொழுது வேலுப்பிள்ளை ஐயாவின் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது . அதிகம் பேசமாட்டார். நேர்மையானவர். தன்னுடைய மகன் பிரபாகரனைப்பற்றி சுருக்கமாக விசரித்து அறிந்து கொள்வார் . வீர மகனைப் பெற்ற தந்தையாகப் போற்றப்பட்டாலும் சற்றும் பெருமை கொள்ளாதவர் . அன்னார் மனைவியையும், நாலு பிள்ளைகளையும், நாலு மருமக்களையும், பேரக் குழந்தைகளையும், ப10ட்டப்பிள்ளைகளையும், உற்றார், உறவினர்களையும் , நண்பர்களையும், அன்பர்களையும் விட்டுப்பிரிந்தாலும் அன்னாருடைய நாமம் ஈழத் தமிழர்களின் வரலாற்றிலும், வல்வெட்டித்துறை வாழ் மக்களின் நெஞ்சங்களிலும் என்றும் நிலைத்திருக்கும். பல ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்த காரணத்தினால் அங்கு உட்பட உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களிலும் வேலுப்பிள்ளை ஐயாவின் நாமம் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் . அன்புடன், ம. க. சிவாஜிலிங்கம் (எம்.கே. சிவாஜிலிங்கம்) யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் நெஞ்சமெல்லாம் வாழும் திருவேங்கடம் வேலுப்பிள்ளை தமிழ்தாயின் தவமைந்தனான மாவீரர் திலகமாம் பிரபாகரனின் தந்தை , உத்தமராம் வேலுப்பிள்ளை, தமிழர் பண்பாட்டுப் பெட்டகமாய்த் திகழ்ந்தார், வான்புகழ் வள்ளுவர் வகுத்த குறள்நெறி மனையறம் கண்டு , போற்றுதலுக்குரிய நமது அன்னை பார்வதி அம்மையாரின் வாழ்க்கைத் துணைவராக அறம் ஓங்கிய வாழ்வு நடத்தியவர் . நேர்மையின் சிகரமாக நாணயத்தின் இலக்கணமாக அரசுப்பணி ஆற்றியவர் .. இணைபிரியாத அன்றில்களைப் போல , வாழ்நாள் நெடுகிலும் தன் துணைவியாரோடு பாசமும் நேசமும் கொண்டு வாழ்ந்த அப்பெருமகன் , உடல் நலிவுற்றுப் பரிதவித்த தன் துணைவியார் நிலைகுறித்து எப்படியெல்லாம் கலங்கி இருப்பார் ? அப் பண்பாளரும், அவரது துணைவியாரும், என் இல்லத்துக்கு வந்ததும், அவர்களின் காலடிபட்டதையும் எண்ணியெண்ணி நான் பெருமிதம் கொள்வதும், அவர்கள் என் பேரப்பிள்ளைக்குப் “பிரபாகரன்” என்று பெயர் சூட்டி உச்சிமோந்து மகிழ்ந்ததும் , எப்படி மறப்பேன் நான்? முசிறியில் பர்வதி அம்மையார் சிகிச்சை பெற்ற காலத்தில், பலமுறை அவர்களைச் சென்று பார்க்கும் பாக்கியம் பெற்றேன். தமிழீழ நாயகனைத் தரணிக்குத்தந்த அத்தந்தை, மண்ணில் மறைந்தாலும், தமிழர் நினைவிலே வாழ்கிறார். மதிப்பிற்குரிய வேலுப்பிள்ளை ;அவர்களின் நினைவு ஏந்தல் நிகழ்ச்சியில், அன்னாருக்கும் புகழ் மலர்களைத் து }வுகிறேன். வல்வெட்டித்துறை என்ற மண்ணுக்கு , வரலாற்றில் ஒரு அழியாத புகழைத்தந்த குடும்பம் வேலுப்பிள்ளையின் குடும்பம் ஆகும் . “வல்வெட்டித்துறை” என்று சொன்னாலே நம்முடைய நாடி நரம்புகளில் மின்சாரம் பாயும் . ஆம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஜெருசலம் , இஸ்லாமியர்களுக்கு ஒரு மெக்கா , இந்துக்களுக்கு ஒரு காசி, அதைப்போலவே தமிழர்களுக்கு மாவீரர் திலகமாம் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை . உத்தமர் வேலுப்பிள்ளை உடலால் மறைந்தாலும் , நம் உள்ளங்களில் நிலைத்து இருப்பார். தமிழர்களின் தியாக வரலாந்றில் , வேலுப்பிள்ளையின் பெயர் நிரந்தரமாக இடம் பெற்று இருக்கும் . அலைகடலுக்கு அப்பால், தாய்த்தமிழகத்தில் இருந்து , என்னுடைய வீரவணக்கதை;தைத் தெரிவித்துக்கொள்கிறேன். வைகோ, தாயகம், பொதுச் செயலாளர், சென்னை-8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நன்றிகள் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இப்ப 10வுலகை விட்டுப் பிரிந்த செய்தி அறிந்த தும் அன்னாரது ப 10 தவுடலைக் கொழுப்பிலிருந்து வல்வெட்டித் துறை வரை கொண்டுவந்ததுடன் இறுதி நிகழ்வுவரை தங்கி யிருந்து சகலவிதமான ஒத்தாசைகளையும் வழங்கிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. ம.க. சிவாஜிலிங்கம் அவர்கட்கும் , மரணக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக தமிழ கத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு . தொல் திருமாவளவன் அவர்கட்கும், பெரியார் கழகப் பிரதிநிதி சட்டத்தரணி திரு. சந்திரசேகரம் அவர்கட்கும், கன டாவிலிருந்து வருகைதந்திருந்த திரு. ரமேஷ் அவர்கட்கும், ப10தவுடல் வல்வைக்கு கொண்டுவரப்பட்டதும் தேவை யான அனைத்து உதவிகளை வழங்கியது மட்டுமல்லாது நோய்த் தாக்கத்துக்குள்ளாகியிருக ்கும் அமரரின் துணைவியாரை வைத்தியசாலையில் வைத்திருந்து பராமரித்துக் கொண்டிருக்கும் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் க . மயி லேறும்பெருமாள் மற்றம் வைத்தியசாலையின் ஊழியர் களுக்கும் , இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்த சகல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கட்கும் , தமிழ்ஈழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் திரு . த. சித்தார்த்தன் அவர்கட்கும் , செய்மதி ஊடாக இரங்கலுரை நிகழ்த்திய திரு . ப. நெடுமாறன் அவர்கட்கும், திரு. வை. கோபாலசாமி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கட்கும், இயக்குனர் சீமான் அவர்கட்கும், அமரரது ப10தவுடல் தீருவில் சதுக்கத்திலும், வீட்டிலும் வைக்கப்பட்டிருந்த சமயம் யாழ் குடாநாட்டிலிருந்தும் , மற்றும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்து அன் னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிங்கள , இஸ்லாமிய, தமிழ் சகோதரர்களுக்கும், மற்றும் பல வழிகளிலும் தேவை யான சகல உதவிகளையும் வழங்கிய அனைவருக்கும் , நிதியுதவி வழங்கிய வெளிநாடுகளில் உள்ள லண்டன் நலன்புரிச்சங்கம் (வல்வை), வல்வை புரூஸ், லண்டன் திரு. வி. மகேந்திரராஜா, திரு. கு. ஜவகர்லால்நேரு ஆகியோருக்கும், இம்மலரினை குறுகிய காலத்தில் அச்சுப்பதிப்பு செய்து தந்த வல்வெட்டி ஸ்ரீவாணி அச்சக உரிமையாளர் திரு . சி. சிவகுமார் அவர்கட்கும், இன்றைய அந்தியேட்டி, சபிண்டீகரணக் கிரியைகளில் பங்குபற்றி ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்ட சகலருக்கும் மற்றும் பல வழிகளிலும் சகல உதவிகளையும் வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள். இங்ஙனம் குடும்பத்தினர் வல்வை வாழ் மக்கள் admin


1 Comment:

siva said...

தமிழனின் உண்மையான தலைவர் திரு.வேலுபிள்ளை பிரபாகரன்

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner