-->

தமிழீழ பாட்டு வரிகள் I (16 பாட்டு)

1.

தீயினில் எரியாத தீபங்களே - நம்
தேசத்தில் உருவான ராகங்களே
தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்
தரணியில் காவிய வடிவெடுத்தீர்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே

தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே
தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே
தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே
புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்
பாதகர் உயிர்களை முடித்தீரே
இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்
இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்
இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்
விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்
ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும் 




2.

“ஈழமண் தந்த குயில்” வர்ணராமேஸ்வரன்


“நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி
வாடும் வயிற்றை என்ன செய்ய
காற்றையள்ளித் தின்று விட்டு
கையலம்பத் தண்ணீர் தேட……
பக்கத்திலே குழந்தை வந்து
பசித்து நிற்குமே…- அதன்
பால்வடியும் முகம் அதிலும்
நீர் நிறையுமே……….
அதன் பால்வடியும் முகம்
அதிலும் நீர் நிறையுமே……….”
நிர்க்கதியான நிலையில் ஆண்டவனைக் கதியென்று பற்றித் தேவார திருவாசகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்போமே, அப்படியானதொரு வேளையில் எம்மக்களுக்கான ஊட்டமாக எழுந்தவை இந்த ஈழத்து எழுச்சிப்பாடல்கள். எண்பதுகளில் விடுதலைப் போராட்ட களத்தில் எல்.வைத்யநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய இந்த எழுச்சிப்பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் எழுச்சியோடு வெளிவரத் தொடங்கின. நம் கவிஞர்கள், நம் பாடகர்கள், நம் இசையமைப்பாளர்கள் என்று முற்று முழுதான ஈழத்துப் பரிமாணத்தோடு வெளிவரத் தொடங்கின. இது குறித்த விரிவான பதிவைப் பின்னர் தருகின்றேன்.

தலையெனவே காத்துநின்றெம் தலைவனாகினாய்




தலையெனவே காத்துநின்றெம் தலைவனாகினாய் - விடு
தலையதனை உதயமாக்கும் இரவியாகுவாய்
அலையெனவே மறத்தமிழர் திரண்டு நிற்கிறோம் - உம்
அடுத்த அடி வெற்றிக் கொடி சூளுரைக்கிறோம்

சிறுவயதில் ஏசுவாக கொடுமைகள் கண்டாய் - பின்
வீறு கொண்டு சிவகுருவாய் எதிரியழித்தாய்
இடையினிலே புத்தனாக சாந்தம் உடுத்தினாய் - இனி
கடைசியிலே கொள்ளும் அவதாரம் என்னவோ?

களத்தினிலே உம்முருவாய் வீரர் போரிட -சிங்
களத்தவர்கள் கதறியோடும் காட்சி நாம் கண்டோம்
அளப்பெரிய சாதனைகள் நிறைய நிகழ்ந்தன - எமது
இழப்பதனை ஈடுசெய்ய ஈழம் முகிழணும்

உம்மைப் போன்ற தலைவர் யார்க்கும் வாய்த்திடமாட்டார் - எம்
தெம்பைக்கூட்டி உணர்வை ஊட்ட முன்வரமாட்டார்
இம்மையில் நாம் ஈழமெனும் சுவர்க்கம் கண்டிட - நீர்
இருக்கையிலே(யே) ஈழம் கண்டு வளப்படுத்தணும்

அகவையிலே ஐம்பதுகள் தொட்டுவிட்டாலும் - எம்
அக அவையில் துடிப்புமிகு இளவரசர் நீர்
சுகமான சுமை தாங்கும் சூரிய தேவா - நீர்
யுகமாகி புகழோங்க வாழ்ந்திட வேண்டும்

தன்மானத்தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!, வாழி!! நீடூழி!




ஆழ்கடல் தன்னில் அவதரித்த முத்தே! ஈழத்
தமிழரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும்
போதே வரலாறு தந்தவன் மானத்தோடு
எம்மை தலை நிமிரச் செய்தவன்!

எங்கள் மண்ணின் கிழக்குச் சூரியன்
ஈழத்தாயவள் தந்த வீரத் திருமகன்!
கரிகாலனே! கடும்பகை எல்லாம் வெறும்
தூசென்று காட்டி நிற்கும் தீரனே!

தரையோடு தொடங்கினாய் இயக்கம்!
இன்று வான், தரை,கடலெங்கும்
தலைவா உன் முழக்கம்! பகை வெடிக்கும்
ஈழம் விரைவில் மலர்ந்து சிரிக்கும்!

கல்லறையில் விளக்கேற்றி பணிகின்றோம்


{காணொளி}





கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்
ஆஆஆஆஆஆ..

[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்
மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2
எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்
[மறைந்திடுமோ உம் நினைவு
அழிந்திடுமோ உம் கனவு] 2
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
ஆஆஆஆ....

தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்




--------------------------------------------------------------------------------
நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.


நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.


சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.


மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.


விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்

இருபதாவது வருடத்தில் புலிகளின் குரல் வானொலி

இருபதாவது வருடத்தில்
புலிகளின்
குரல் வானொலி 1990 ஆம் ஆண்டு மாவீரர் வார தொடக்க
நாளான 21 நவம்பர் அன்று புலிகளின் குரல் வானொலி தமிழீழதேசியத்தலைவர்அவர்களால்
ஆரம்பித்து வைக்கப்பட்டது
புலிகளின் குரல்
வானொலி ஒடுக்கப்பட்ட தமிழீழமக்களின்உரிமைக்குரலாகவும் ,எதிரியின்பொய்மைகளுக்கு எதிரானஉண்மைக்குரலாகவும்
ஓங்கி ஒலிக்க
வேண்டும் என்ற
முனைப்போடும் ,
விருப்போடும்
தமிழீழ
விடுதலைப்
புலிகளின்
தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்களால்
நவம்பர் 21, 1990

கல்லறை மேனியர் கண்திறப்பார்களே- மாவீரர் கானம் {காணொளி




கல்லறை மேனியர் கண்
திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர்
கண்திறந்து சின்ன
புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே

மன்னவரை பாடுதற்கு இந்த
ஜென்மம்
போதவில்லை
கல்லறையில்
போடுதற்கு கோடி மலர்
பூக்கவில்லை
கோடி மலர்
பூக்கவில்லை

வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27

 


1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

தமிழீழக்காவல் துறை ஆரம்பி்க்கப்பட்டு இன்றோடு 20 ஆண்டுகள் 19-11-1991



தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன.



TAMILEELAM


பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் 1967 - 2.11.2007

 

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
1967 - 2.11.2007

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 02-11-2011

 


மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன்



 











பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவலைகள் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் 1967 - 2.11.2007

தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார்.
http://puliveeram.files.wordpress.com/2008/09/lrg-733-20071103002.jpg
மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை

எல்லாளன் சிறப்பு தாக்குதல்.





எல்லாளன் சிறப்பு தாக்குதல்.



எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்


22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான்.


இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள். இவர்களின் உயிர்த்தியாகமும், இந்தத் தாக்குதலுக்கான காத்திருப்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், இழப்புக்களும் வீண்போகவில்லை, வீண்போகவும் மாட்டாது.

"எல்லாளன் நடவடிக்கை" கரும்புலிகளின் 4ம் ஆண்டு வீரவணக்கம் 22-10-2011






22-10-2007

'எல்லாளன் நடவடிக்கை' - 21 வீரவேங்கைகள் விபரம் 22-10-2011

எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள்.


இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

லெப்.கேணல் இளங்கோ

அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது.

எல்லாளன் நடவடிக்கை" யின் முக்கியத்துவம் என்ன? 22-10-2011


'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்."

கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.

09.10.2007

என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

4ஆம் ஆண்டு நினைவில் எல்லாளன் நடவடிக்கை



தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி 4ஆண்டு நினைவுநாள்
22- ஒக்டோபர் -2011
தமிழீழ  விடுதலைப் போராட்ட வரலாற்றில்
என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக
2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது
தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க
காலத்தில  கெரில்லா போராட்டமாக
காணப்பட்டு அதன்  வளர்ச்சிப்படிகளில்
பல  திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக
வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின்
விடுதலைக்காக போராடும்
போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக
போராடிய

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம். 10-10-1987

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.

வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.

இந்திய இலங்கை கூட்டுச்சதியின் 24 வது வருடம் ! 05-10-1987




காலம் எல்லாவகையான தடங்களையும், தடையங்களையும்,சுவடுகளையும் பின்னோக்கி தள்ளியபடியே மிகமிக வேகமாக நகர்ந்துகொண்டு (ஓடிக்கொண்டு) இருக்கிறது.நினைவுப்படிவுகளின் மேல் புதிது புதிதாக ஏராளம் காட்சிகள் படியபடிய பழையவை மறைக்கப்படுதல் காலஓட்டத்தில் சாத்தியமாகிறது.அதுதான் இயல்பானதும்கூட. ஆனாலும் எத்தனைகாலம் கடந்தாலும் எத்தனை வருடங்கள் உருண்டோடி போனாலும் மனஆழத்தில் படிந்துவிட்ட நினைவுகள் எளிதில் கரைந்துபோகாது. இதோ இருபத்துநான்காவது வருடம் இது.அவர்கள் எம்முன் உருவங்களாக உலாவாமல் விட்டு இருபத்துநான்கு ஆண்டுகளாகிவிட்டன.

1987 ஒக்டோபர் 5ம்நாளில் விடுதலையின் மீதான தமது ஈடற்ற நம்பிக்கையையும் தாயகத்தின் மேலான அசைவற்ற பற்றுதலால் நஞ்சருந்தி வீரச்சவடைந்த பன்னிரண்டு வேங்கைகளின் இருபத்துநான்காவது நினைவுநாள் வந்துவிட்டது.குரூரமான ஒரு சதியின் முகம்நாண அவர்கள் தம்மை ஆகுதியாக்கி தேசத்தின்ஆன்மாவுடன் கலந்தார்கள். லெப்.கேணல் குமரப்பா,லெப்.கேணல் புலேந்திரன்,மேஜர் அப்துல்லா,கப்டன் பழனி,கப்டன் கரன்,கப்டன் ரகு,கப்டன் மிரேஸ்,கப்டன் நளன்,லெப்.அன்பழகன், லெப்.தவக்குமார்,லெப்.ரெஜினோல்ட்,இரண்டாம் லெப்.ஆனந்தகுமார் என்று பன்னிருவேங்கைகள் இந்தியவல்லாதிக்கத்தின் சதிகார முகத்திரையை கிழித்தபடியே

கால் நூற்றாண்டு கடந்தும் லெப்.கேணல் விக்டரின் நினைவுகள்! 12-10-1986




யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.
வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை.

யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி

லெப் கேணல் விக்டர் அவர்களின் நினைவுநாள் 12/அக்டோபர்/1986



லெப் கேணல்
விக்டர்
அவர்களின் நினைவுநாள் 12/அக்டோபர்/1986


விடுதலைப்புலிகளின்
மூத்த
உறுப்பினரான
லெப் கேணல்
விக்ரர்
இயக்கத்தின்
தலை சிறந்த
போர்
தளபதிகளில்
ஒருவராவார்


மன்னார்
பிராந்தியத்
தளபதியாகப்
பணியாற்றிய
லெப் கேணல்
விக்ரர்
அடம்பனில்
சிங்களப்
படையினருடனான
ஒரு வரலாற்றுச்
சண்டையின் போது
12.10.1986 ல்
களப்பலியானார்.
. . . . . . . . . . . . . . . . . . . . . .

லெப் கேணல் விக்டர் கவச எதிர்ப்புப் படையணி

லெப் கேணல் விக்டர்
தலைமையில் இடம்பெற்ற தாக்குதலில்
முதற் தடவையாக கவசவாகனம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது .

அதனை நினைவில் கொண்டு தேசியத் தலைவர் அவர்களால் 1996 ம் ஆண்டு விக்டர் கவசஎதிர்பு அணி உருவாக்கம் பெற்றது

லெப் கேணல் விக்ரர் நினைவு தொகுப்பு <காணொளி 12-10-1986



லெப் கேணல் விக்ரர்
<மருசலீன்
கியூஸ்லஸ்>
பனங்கட்டிக்கொட்டு மன்னார்
<14/11/1963 - 12/10/1986>
லெப் கேணல் விக்டர் அவர்களின் 24ம் ஆண்டு நினைவுநாள் 12/10/2010
மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய லெப் கேணல் விக்ரர் அடம்பனில்
சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல்
களப்பலியானார்
* * * * *
லெப் கேணல் விக்ரர் அவர்களின் , வரலாற்று நினைவுத்தொகுப்பு
காணொளியில் .. . . .
பாகம்1
http://bit.ly/auYmaI
பாகம்2
http://bit.ly/b9FKz9
பாகம்3
http://bit.ly/c4oFZE



தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது

 தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது


* பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண்

பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி


பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி "..
பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…"
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்  அவர்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு

2ம் லெப் மாலதி


மன்னார்
ஆட்காட்டி வெளிதனிற்
பிறந்து
மாலதி யென்னும்
பெயர்'தனைத்
தாங்கித்
தன்னிகரில்லாத்
தமிழிச்சி தானெனத்தனையே ஈந்தாள்
தமிழீழத் தாயவள்
இன்னல் களைந்திட
எடுத்தடி வைத்தாள்!
ஈடிலா மகளிர்
அமைப்பினில்
இணைந்து
பன்னுதற் கரியபல
தாக்குதல்
புரிந்தே
பெருமை சேர்த்தனள்
பெண்ணினத்
திற்கே !

தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர் - 2ம் லெப் மாலதி


தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது. வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர். வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான்

தீயினில் எரியாத தீபங்களே <குமரப்பா, புலேந்திரன்


 


பாரத அரசின்
பாதங்கள்
எங்கள் தாயக
பூமியில் தடம்
பதித்தபோது தமிழீழ
மக்கள்
தங்களை வசந்தம்
தழுவிக்கொண்டதாகவே கருதினர்
ஸ்ரீலங்கா அரசின்
அராஜகத்தீயில்
எரிந்து கொண்டிருந்த
இவர்கள் பாரத
நாட்டின்
சிந்தனைக்காற்றில்
திழைக்கலாம்
என்று கனவுகள்
கண்டனர் . ஆனால்
காக்க
வந்தவர்களே தம்மைத்தாக்கிய
போது தமீழீழ
மக்களின்
கனவுகள் ,

தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04

தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04



தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04


1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது
இலங்கை அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்’ என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.

தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்

இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மாண்ட வேங்கைகள்

1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா - இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.

இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா - இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.



சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.

சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து

இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்



புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது

- தமிழீழத் தேசியத்தலைவர்
மேதகு வே .பிரபாகரன் அவர்கள் -

ஈழவிடுதலை வரலாற்றில் திலிபன் ஒரு தீருப்பு முனை. 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன. இந்தியாவின் வங்கதேச விடுதலையும் இந்திராவின் துணிச்சலும் தமிழீழம் விடுதலை காணும் என்ற கனவில் தமிழினம் மிதந்திருந்தது. ஆனால் இந்திராவின் மனதில் வேறு சிந்தனைகள் இருந்ததைச் சில பதிவுகள் கூறுகின்றன. அவற்றை இந்தியப் பிராந்திய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.

கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் 26-09-2001

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.



தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.
இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை.

மூத்த தளபதி கேணல் சங்கர்


வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்
26-09-2001


தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.


தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் நினைவு சுமர்ந்து 26-09-2011











"தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன? "இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்."

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் தியாகதீபம் திலீபன் நினைவககானம்








நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் -நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை -திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை -

பாடும்பறைவகள் வாருங்கள் -புலி வீரன் திலீபனைப் பாடுங்கள் -யாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் காலங்கள் பாடுங்கள் -

(பாடும்பறைவகள்..........................

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது , நீதிக்கு சோதனை தந்தது , நாங்கள் சிந்திய ரத்தங்கள் காய்ந்திடும் முன்னரே கால்களில் வீழ் எனச் சொன்னது ,

வேங்கைகள் இதை தாங்குமா - குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?

வீரன் திலீபன் வாதாடினான்- பசி தீயில் குதித்து போராடினான்

வாயில் ஒருதுளி நீரதும் இன்றி- வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது- ஆணவத்தோடு நடந்தான்- சாவினில் புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது பார்த்து மகிழ்ந்தது- ராணுவம் புலிச் சாவுக்கு ஆதிக்கம் காரணம்- அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய் -

எங்கள் மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்- துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner