-->

திரு. வேலுப்பிள்ளை அவர்களின் நினைவுமலர் -- பாகம் .4.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

புறநானு}ற்று வீரத்தை நம் கண்முன்னே நிகழ்த்திக்காட்டிய அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் முன்னோர்கள் ஆற்றிய சமய , சமுதாயப் பணிகள் யாழ்ப்பாணம் வசாவிளான் க . வேலுப்பிள்ளை அவர்கள் தான் எழுதிய “யாழ்ப்பாண வைபவ கௌமுதி” என்னும் நு }லில் அக்காலத்தில் வாழ்ந்த கல்விமான்கள் , பிரபுக்கள் ஆகியோர் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்தவரிசையில் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மூதாதையர்களில் ஒருவரான ஐயம்பெருமாள் வேலாயுதர் பற்றியும் அவரின் சந்ததியினர் பற்றியும் குறிப்பிட்டிருந்ததோடு அவர்கள் தாபித்த ஆலயங்கள், மடங்கள் என்பன பற்றியும் குறிப்பிட்டிருந்தார் . திரு.ஐயம் பெருமாள் வேலாயுதர் அவர்கள் 1807ம் வருடம் 261ஃ4 பரப்புக்கொண்ட “வேவிற்புலம்” என்னும் காணியை வேவிற்பிள்ளையார் கோயிலைக் கட்ட வழங்கியதோடு கோயிலுக்கருகாமையில் ஒரு மடத்தையும் தாபித்தார். வேலாயுதரின் நான்கு புதல்வர்களில் ஒருவரான ஞானமூர்த்தி என்பவர் வர்த்தகராக இருந்துள்ளார். இவ ரது புதல்வரான சங்கரப்பிள்ளை என்பவர் ஏழு கப்பல் களுக்கு அதிபதியாக இருந்து கடல் வணிகம் செய்ததுடன் அந்நாளைய காலனித்துவ அரசுக்கு ஒப்பந்தகார ராகவும் இருந்துள்ளார். வேலாயுதரின் இன்னொரு புதல் வரான திருமேனியார் முத்துமாரி அம்மன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து சிவபதமடைய , அக்கோயிலின் தர்மகர்த்தாவாகப் பொறுப்பேற்றார் . சங்கரப்பிள்ளை அவர்களின் ப 10ட்டனான ஞானமூர்த்தி அவர்களே தமிழ் அரசியல் தலைவர்கள் யாவரையும் ஒன்றுபடுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்த முக்கியஸ்தர்களில் ஒருவராவர் . வேலாயுதர் அவர்களின் இன்னொரு புதல்வரான புண்ணியமூர்த்தி என்பவரே வல்வை அருள்மிகு முத்து நம் தந்தை மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர் . இவர் வரலாற்றை உருவாக்கியவர் மட்டுமல்ல . வரலாற்றின் பக்கங்களில் ஏற்கனவே இடம் பிடித்தவர். வல்வெட்டித்துறையில் இராமநாதபுரம் ஜமீன் பரம்பரையினர் வழித்தோன்றல்கள் எனக் கருதப்படும் எசமான் பரம்பரையில் வழிவந்தவராவார். உலகம் போற்றும் பெருவீரனின் தந்தை என்ற எவ்விதச் செருக்கும் இல்லாமல் மக்களோடு இறுதி வரை போர்க்களத்தில் இருந்தார். உண்மை, நேர்மை, ஒழுக்கத்தை உயிராகக் கொண்டு தன் மக்களையும் மண்ணையும் நேசித்ததனால் தான் அவரின் பின் மக்கள் அணிதிரண்டனர் . இது குறித்து தலைவர் என்னிடம் கூறுகையில் இந்த பண்பினை எனக்கு கற்றுக் கொடுத்தது என் தந்தை அவர்கள் என்று கூறினார் . பார்புகழும் நம் தலைவனைத்தந்த தந்தை அவர்கள் இன்று நம்மிடையே இல்லை…! நம் தந்தையைப் போல் எத்தனையோ உறவுகளை இழந்திருக்கின்றோம். என்றும் உறுதியுடன் – செந்தமிழன் சீமான் மாரி அம்மன் கோயிலை 1795ம் வருடம் தாபித்தவர். வல்வெட்டிப் பகுதியில் பிரமுகராக விளங்கிய குமாரசாமி முதலியார் என்பவர் புண்ணியமூர்த்தி என்னும் புண்ணிய மணியகாரன் மகள் சிவகாமிப்பிள்ளையைத் திருமணம் செய்தவர் . இக் குமாரசாமி முதலியார் வல்வெட்டியில் ஒரு தர்மப் பாடசாலையைத் தாபித்து நடாத்தி வந்ததுடன் , அமெரிக்க மிஷனரிமார்களின் வருகையுடன் அப்பாடசாலையை அவர்களிடம் கையளித்துமுள்ளார் . இத்துடன் நின்றுவிடாது ஊரிக்காட்டில் உள்ள தமக்குச் சொந்த மான நிலத்தை அமெரிக்க மிஷனரிமாருக்கு கையளித் துள்ளார் . “பாதிரி பங்களா” என அழைக்கப்படும் இக்காணியில் அமைந்துள்ள கட்டடம் வல்வையில் அம்மை நோய் பீடிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நோய் தடுப்பு முகாமாக ( ஞரயசயவெiநெ) இருந்ததோடு, தற்காலம் இராணுவமுகாமாகவும் இருக்கின்றது . ஆனல்ட் சதாசிவம்பிள்ளை என்பவர் தான் எழுதிய “பாவலர் சரித்திரதீபகம்” என்னும் நு }லில் அன்னாரை வேளாளர் மரபில் பிறந்தவர் எனவும் வித்துவான் சி .கணேசையர் அவர்கள் தனது “ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்” என்னும் நு }லில் உயர் வேளாண் மரபினர் என்றும், 1934ல் வெளிவந்த வித்தகம் என்னும் மாதாந்த சஞ்சிகை உயர்ந்த வேளாண் மரபில் பிறந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . குமாரசாமி முதலியாரும் அவரது சந்ததியினரும் பிறப்பால் இந்து சமயத்தவராக இருந்தும் அந்நாளில் பாதிரி பங்களாவுக்கு ஓய்வுபெறுவ தற்கு வந்திருந்த அமெரிக்க மிஷனரிமார்களின் போதகர்களில் ஒருவரான வைமன் ஐயர் என்பவர்மேல் கொண்டுள்ள பற்றின் காரணமாக இவரது புதல்வன் கதிரவேற்பிள்ளை தனக்கு “ வைமன் கதிரவேற்பிள்ளை” என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார் . யாழ்ப்பாண வைபவ கௌமுதி, கதிரவேற்பிள்ளை அவர்களை உயர் ப 10ர்வீக குடும்பத்தில் ஒக்கலார் பரம்பரையில் (ஒக்கலார் என்பதன் அர்த்தம் தெரியவில்லை . நிகண்டுகளிலோ, மதுரைத் தமிழ் பேரகராதி போன்றவற்றிலோ இல்லை ) உதித்தவர் என்றும் குறிப்பிடுகிறது. ஊர்காவற்றுறைப் பகுதியில் நீதவானாகக் கடமையாற்றிய கதிரவேற்பிள்ளை அவர்கள் தமிழ்ச் சொல்லகராதி பாகம் ஐ இனை எழுதி 1904ல் வெளியிட்டுள்ளார். இதர பாகங்களை வெளியிடு முன்னரே 1904 ல் இறைவனடி சேர்ந்தார். கதிரவேற்பிள்ளை அவர்களின் புதல்வரான பாலசிங்கம் என்பவர் நீதிபதியாக இருந்ததுடன் , சட்ட நிரூபண சபையில் தமிழர் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார் . குமாரசாமி முதலியாரின் தாயாரினது தந்தையாரான சந்திரசேகர முதலியார் என் பவரே தீருவிலில் அமைந்துள்ள வயலு }ர் முருகன் கோயிலைக் கட்டியவராவார் . வேலாயுதரின் இன்னொரு புதல்வரான ஆறுமுகத் தார் என்பவர் வல்வெட்டித்துறையில் உள்ள சுவாமிகள் தீர்த்தமாடிவிட்டு தங்கியிருக்கும் ஊறணி மடம் , மடாலயம், கேணி என்பவற்றைத் தாபித்தவராவர் . வேலாயுதரின் அடுத்த புதல்வரான திருமேனியாரின் வழித்தோன்றலே அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையாகும் . திருமேனியார் அவர்கள் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருந்து அதனை வேறுசில பெரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு முத்துமாரி அம்மன் கோயிலுக்கு தர்மகர்த்தாவகப் பொறுப்பேற்றார் . மேலே குறிப்பிட்ட திருமேனியார் என்பவரின் புத்திரரில் ஒருவரான வெங்கடாசலம்பிள்ளை அவர்களே வல்வையில் இராசிந்தான் கலட்டி என்னும் இடத்தில் வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தை 1883 ல் தாபித்தவர். திருகோணமலைக்குச் சமீபமாக ஆங்கிலேயருக்குச் சொந்தமான டீசபை யுடடியவெiஉ முiபெ என்னும் ளமநவஉh ரகக் கப்பல் பயணம் செய்து கொண் டிருந்த போது கடலுள் மூழ்கிவிட்டது. ஆங்கிலேயரால் அக்கப்பலை மீட்டெடுக்க முடியாது போகவே , மூழ்கிய நிலையிலேயே வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் அதனை விலைகொடுத்து வாங்கி மீட்டெடுத்து , வேண்டிய திருத்தங்கள் செய்து மற்றைய கப்பல்களுடன் சேர்த்து கடல் வணிகத்தில் ஈடுபட்டு பொருளீட்டி மேற்படி கோவிலைக் கட்டினார். இவரிடம் 12க்கு மேற்பட்ட கப்பல்கள் இருந்துள்ளதாயும், அவற்றுள் ஒருகப்பல் தனியாக சிவன் கோவிலுக்குத் தேவையான பொருட்களை ஏற்றி இறக்குவதிலும் , இன்னொரு கப்பல் இப்பகுதியிலுள்ள வசதியற்ற வர்களுக்கான பொருட்களைக் கொண்டுவருவதிலும் ஈடுபட்டிருந்தது . பெரியதம்பியார், பெரியவர் என்னும் நாமங் களால் அழைக்கப்பட்ட அன்னார் இவ்வ 10ரிலுள்ள கோவில்களுக்குக் கிடைக்கப்பெறும் மகமைகளைப் பொறுப்பேற்று செலவுகளை மேற்கொண்டு கணக்குகள் தயாரிப்பதற்குப் பொறுப்பாக இருந்ததுடன், முத்துமாரி அம்மன் கோவிலுக்கும் தர்மகர்த்தாவாக இருந்துள்ளார் . இவ்வ10ரிலுள்ள சேதமடைந்திருந்த வைகுண்டப் பிள்ளையார், புட்டணிப் பிள்ளையார் ஆகிய இரு ஆலயங்களின் திருப்பணிகளை மேற்கொண்டவர் . முல்லைத்தீவின் கடற் கரை யோரமாக அமைந்துள்ள வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு எம்மவர்கள் செல்லும் சமயம் இளைப்பாறு வதற்காக அமைக்கப்பட்ட மடாலயமும் இவர் பொறுப்பி லேயே ஆக்கப்பட்டதாகும் . முத்துமாரி அம்மன் கோவிலுக்கு தென்புறமாக ஒரு மடத்தையும் , திருக்குளத்தை யும் அமைத்தவர். நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளை யார் கோவிலைத் திருத்திக் கட்டும் திருப்பணிகளை மேற்கொண்டதோடு இப்பகுதியில் 16 கிணறுகளையும் அமைத்துக் கொடுத்தவர் . அக் காலப்பகுதியில் தென்பகுதியில் வாழ்ந்த “வருசஹன்னடிகே ஹரமாணிஸ் சொய்ஷா” (றுயசரளய ர்யnயெனபைந ர்யசயஅயnளை ளுழலணய) என்பவரது செல்வத்துக்கு ஈடான செல்வத்தைக் கொண்டிருந்தவர் என அமரர் “தராகி” அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார் . திருமேனியாரின் இன்னொரு புதல்வரான குழந் தைவேற்பிள்ளையவர்கள் சிவன் கோவிலைத் தாபிப்பதற்கு தமது பொருட்களைக் கொடுத்துதவியதோடு 1859ம் வருடம் கொழும்பிலுள்ள யாழ்ப்பாணத்தார் கதிர்வேலாயுத சுவாமி கோயிலையும் பர்மா தேசத்தில் ஒரு முருகன் கோயிலையும் அமைத்துள்ளார். திருமேனியாரின் இன்னொரு புதல்வரான தம்பிப்பிள்ளை என்பவரின் பேரனான தம்பிப்பிள்ளை என்பவரே எம்மூரில் கட்டப்பட்ட அன்னப10ரணி என்னும் பாய்மரக் கப்பலை அமெரிக்கரான வில்லியம் ரொபின்சன் என்பவர் விலை கொடுத்து வாங்க , அதனை அமெரிக்கா வரை ஓட்டிச்சென்று ஒப்படைத்த தண்டயலாகும் . வெங்கடாசலபிள்ளையவர்களின் சிரேஷ்ட புத்திரரான வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வர் திருவேங்கடம் அவர்களின் ஒரே ஆண்மகனே அமரர் வேலுப்பிள்ளையாகும். திருவேங்கடம் அவர்கள் அக்காலத்தில் சிங்கப்ப 10ர் சென்று தொழில் பார்த்த காரணத்தால் “சிங்கப்ப 10ரார்” என்றே அழைக்கப்பட்டார். வெங்கடாசலபிள்ளையவர்களின் இன்னொரு புதல்வரான திருமேனிப்பிள்ளை என்பவர் சிவன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்துள்ளார் . இன்னொரு புதல்வரான அருணாசலம் என்பவரின் சந்ததியினரே ஒருவர் பின் ஒருவராக சிவன் கோயிலைப் பரிபாலித்து வருகின்றார்கள் . மேலே குறிப்பிட்டுள்ள ஐயம்பெருமாள் (வேலாயுதர்) என்பவரின் தந்தை வேலர் என்பவரது சகோதரர் காத்தார் என்பவராகும் . தீருவில் பகுதியில் வயலின் நடுவே அமைந்துள்ள கிணறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள காத்தார் என்பரால் வெட்டப்பட்டதால் , காத்தார் கிணறு என்றே தற்போதும் அழைக்கப்படுகிறது. இக்காத்தார் என்பவரின் பேரனான நாகர் என்பவரே நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்கு உற்சவ மூர்த்தி ஒன்றினைச் செய்துகொடுத்து சதுர்த்தி உற்சவத்தை ஆரம்பித்து வைத்தவர் . நாகர் என்பவரின் புதல்வரான தாமர் என்பவரின் புதல்வன் செல்லையா என்பவர் முத்துமாரி அம்மன் கோயில் , நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் , புட்டணிப் பிள்ளையார் கோயில் , வைகுண்டப்பிள்ளையார் கோயில் ஆகிய நான்கு கோயில்களுக்கும் ஒரே நேரத்தில் 1884ம் வருடம் தர்மகர்த்தாவாக இருந்தவர் . செல்லையாவின் சகோதரனான கதிர்காமர் என்ப வரே நெடியகாடு திருச்சிற் றம்பலப் பிள்ளையார் கோயிலைப் பெரிதாக அமைத்து பத்து நாட்கள் உற்சவத்தை ஆரம்பித்து வைத்தவர். கதிர்காமர் என்பவரின் புதல்வரான கந்தக்குட்டியார் என்பவ ரின் புதல்வர்களின் ஒருவரான வேலுப்பிள்ளை என்பவர் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து விலகிக்கொள்ள இன்னொரு புதல்வரான கதிரிப் பிள்ளை என்பவரின் புதல்வர்களான நடராசா , அருளம்பலம் ஆகியோர் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் தர்ம கர்த்தாவாக இருந்துள்ளார்கள் . இத்துணை புகழ்ப10த்த பெருமைமிக்க சந்ததியில் உதித்த அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்க ளின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல வல்வை வைத்தீஸ்வரனை இறைஞ்சி நிற்கின்றோம். admin


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner