-->

தமிழீழ பாட்டு வரிகள் I (16 பாட்டு)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1.

தீயினில் எரியாத தீபங்களே - நம்
தேசத்தில் உருவான ராகங்களே
தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்
தரணியில் காவிய வடிவெடுத்தீர்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே

தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே
தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே
தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே
புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்
பாதகர் உயிர்களை முடித்தீரே
இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்
இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்
இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்
விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்
ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும் 




2.


 டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்
காதில கொஞ்சம் போட்டுப்பாரு -இது
டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்
காதில கொஞ்சம் போட்டுப்பாரு
குட்டிக்கண்ணன் றோட்டில
வந்து நிண்டு பாட்டில
நாட்டுக்காக செய்தியொன்று
சொல்லிறன் தெருக்கூத்தில

நாடும் வீடும் எங்களுக்கு ரெண்டு கண்ணுதானே -நாம்
சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே
மானத்துக்குப் பேரெடுத்த நாங்கள் கவரிமானே
இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலிநடையப் போடு


அக்கா என்ன வெக்கத்தில தரையப் பாக்கிறீங்க
அண்ணே என்ன வளைஞ்சு குனிஞ்சு தலையச் சொறியிறீங்க
காலம் உங்களை நம்பித்தானே காத்திருக்குதிங்க
இது புரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப் போடு


நாங்கள் வாழவேண்டுமென்றால் நாடுமீள வேண்டும் -எங்கள்
நாடுமீள வேண்டுமென்றால் வேங்கையாக வேண்டும்
அண்ணன் பேரைச் சொல்லிப்பாரு உன்னில் வீரம் ஏறும்
இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப்போடு





3.

 ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாள்

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே
பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி

ஒவ்வொரு இரவும் இங்கே விடியும்
அவன் வீரம் சொல்லி நாள்தோறுமே
ஒவ்வொரு பூவும் இங்கே மலரும்
அவன் பேரைச் சொல்லி தினந்தோறுமே
இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்
அவன் பாதையில் பெண்ணே..!
சுடர் தீபம் ஏற்றிடு

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி
இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்
அவன் பாதையில் பெண்ணே..!
சுடர் தீபம் ஏற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே
பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

பயந்தவர் பார்வையிலே பெண்ணே
சின்னப் பனித்துளியும் கடலளவு
துணிந்தவர் மனதில் பெண்ணே
பெரும் அலைகடலும் துளியளவு
அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை
புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை
புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே
பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே




4.


ஆண்டாண்டு காலமதாய் நாம்
ஆண்டு வந்த பூமி
அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி
சுத்தி வந்த வீதி
எங்கள் அக்கா அண்ணையரே
எதிரி இங்கு வரலாமா
எங்கள் மண்ணை ஆள நினைச்சா
வேங்கை நாங்க விடலாமா


வீட்டுக்கொரு வீரன் போனா
விடுதலையும் நாளை வரும்
வீதியிலே சுத்தித் திரிஞ்சா
அடிமையாகச் சாக வரும்
ஆட்டம் போடும் ராணுவங்கள்
அலறி ஓடணும் . நாம்
அடிமை இல்லை என்று புதிய
பரணி பாடணும்


எங்கள் வேங்கைத் தலைவன் தானே
எங்களுக்கு வழிகாட்டி
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடுவோம் தீ மூட்டி
பொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு
புனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு


என்னினமே என் சனமே
இன்னும் என்ன மயக்கமா
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடவே தயக்கமா
பண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை
பந்தாடி வென்றிடவே ஆசையில்லையா




5.


ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
எம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய
அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!




6.


ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
தந்தானானே தாரேனானா தானா ஏய்
தந்தானானே தாரேனானா தானா....

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலி இதயம் இரும்பென எழுதும்
கவிதைகள் பொய் ஆகும்
அது இரும்பினிலில்லை அரும்பிய
முல்லை என்பதே மெய் ஆகும்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே
யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்
சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்
வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்
அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை
யாருக்கு இங்கே இது தெரியும்
கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென
தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்
இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர்
அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர்


ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்



7.


ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்
எங்கள் தமிழ் ஈழம்
அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்
ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்
எங்கள் தமிழ் ஈழம்
அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே
விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே

இன்னும் இவர் நெஞ்சால் எங்களது மண்ணைத் தாங்கியே உறங்குகிறார்
தாங்கியே உறங்குகிறார்
கண்ணிரண்டும் கரைந்து மலர் தீபம் ஏற்றி ஆண்டுதோறும் வணங்குகிறார்
ஆண்டுதோறும் வணங்குகிறார்
மண்ணில் இவர் சிந்திய குருதியால் நாடே சிவந்து கிடக்கிறது
சிவந்து கிடக்கிறது
இவர் கண்ணுறங்கும் கல்லறையில் தமிழ் ஈழம் எனும் ஒலி இசைந்து கேட்கிறது
இசைந்து கேட்கிறது

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்
எங்கள் தமிழ் ஈழம்
அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

எங்களோடு நேற்று உண்டு பேசி மகிழ்ந்து வீதி உலா வந்தவர்கள்
வீதி உலா வந்தவர்கள்
எங்கள் சங்கத் தமிழ்ஈழ தேசியத் தலைவன் நீதி வழி நடந்தவர்கள்
நீதி வழி நடந்தவர்கள்
சங்ககாலம் படைத்த புறங்களை மீண்டும் புதுப்பித்துப் போனாரே
புதுப்பித்துப் போனாரே
மக்காள் உங்கள் கால் பாதம் உறைவிடம் தன்னில் மிதியாமல் பதிப்பீரே
மிதியாமல் பதிப்பீரே

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்
எங்கள் தமிழ் ஈழம்
அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

மாலை சர்ப்பம் அணிந்த விசம் உண்ட கண்டனையும் வென்றுதான் நின்றார்கள் வென்றுதான் நின்றார்கள்
பெரும் குலையாத மலை போல் அழியாத சரிதமாய் ஞாலமதில் நிலைப்பார்கள்
ஞாலமதில் நிலைப்பார்கள்
அலைகடல் வானும் நதிக்கரை காற்றும் இவர்களை பறைசாற்றும்
இவர்களை பறைசாற்றும்
பூஞ்சோலை மாடம் சாலை சந்தி எல்லாமே இவர்களின் பேர் விளங்கும்
இவர்களின் பேர் விளங்கும்

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்
எங்கள் தமிழ் ஈழம்
அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்
எங்கள் தமிழ் ஈழம்
அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே
விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே



8.


இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்
நாளை சென்று வீழும்
சேதி சொல்ல
இங்கெவரால் முடியும்
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்

பூமியிலே சாகும் தேதி
யாருக்கிங்கு தெரியும்
கரும்புலிளுக்கு மட்டும் தானே
போகும் தேதி புரியும்
சாமிகளும் வாழ்த்தி வீழும்
சரித்திரங்கள் இவர்கள்
தமிழ் சந்ததியில் அழியாத
சத்தியத்தின் சுவர்கள்
சத்தியத்தின் சுவர்கள்

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்

வாழ்வினிலே வசந்த காலம்
துறந்தவர்கள் சிலரே
--ம் வாசலிலே இளமை ராகம்
மறந்தவர்கள் சிலரே
கரும்புலிகள் விரும்பி இங்கு
இருப்பிழந்து போவார்
எங்கள் கண்ணெதிரே நின்ற பின்னர்
உருக்குலைந்து போவார்
உருக்குலைந்து போவார்

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்

தோளில் ஏற்றிப் போவதற்கு
நாலு பேர்கள் வேண்டும்
இந்த தோள்கள் இன்றி கரும்புலியை
தீயின் வாய்கள் தீண்டும்
வாழும் காலம் நீள்வதிலே
வந்திடுமா பெருமை
இல்லை வாய்கள் நூறு போற்றிப் பாட
சாவதுதான் பெருமை
சாவதுதான் பெருமை

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்

அச்சமின்றி குண்டடைத்து
ஆடிப்பாடிப் போவார்
எங்கள் அண்ணன் பெயர்
சொல்லிச் சொல்லி
கரும்புலிகள் சாவார்
சக்கை வண்டி தன்னில் ஏறி
சரித்திரங்கள் போவார்
வரும் சந்ததியின் வாழ்வுக்காக
தங்கள் உயிர் ஈவார்
தங்கள் உயிர் ஈவார்

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்


நாளை சென்றுவீழும் சேதி சொல்ல
இங்கெவரால் முடியும்
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்



9.


மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்
பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்
புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்
பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்


வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்
வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்
வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற
வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்


வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
பஞ்சு நெருப்பாகி வரும் பகையை முடிப்போம் -பிர
பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்


வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்



10.


என் இனமே... என் சனமே...
என்னை உனக்குத் தெரிகிறதா
எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

அன்னை தந்தை எனக்குமுண்டு
அன்பு செய்ய உறவும் உண்டு
என்னை நம்பி உயிர்கள் உண்டு
ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

பாசறை நான் புகுந்த இடம்
பதுங்கு குழி உறங்குமிடம்
தேசநலன் எனது கடன்
தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

என் முடிவில் விடிவிருக்கும்
எதிரிகளின் அழிவிருக்கும்
சந்ததிகள் சிரித்து நிற்க
சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...



11.


காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம்
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது


வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா


எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது



12.


குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இது வேங்கைகள் வாழும் நாடு - அவர்
வீரத்தையே தினம் பாடு

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

அஞ்சல் அகற்றிட நஞ்சினை ஏந்தி
வெஞ்சமர் ஆடிடும் பிள்ளை - அவர்
வீரத்துக்கே இணையில்லை - இதை
நெஞ்சில் நினைந்து அஞ்சல் அகற்றி
கொஞ்சும் குரல்தனில் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இந்தியம் வந்திங்கு வஞ்சனை செய்தது
எங்கள் புலி பயந்தாரா - கொண்ட
இலட்சியத்தை மறந்தாரா - அவர்
சத்தியம் காக்க யுத்தம் புரிந்த
சங்கதியைத் தினம் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

காலைப் பொழுதினில் சோலை நடுவினில்
கானம் இசைத்திடும் குயிலக்கா - சுப
இராகம் இனிக்கும் உன் குரலக்கா
நாளை நமக்கொரு ஈழம் மலர்ந்திடும்
நாலு திசை எட்டப் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா



13.


தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை

ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்
உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில் ..ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த
வேளையில்
எங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன்
இருக்கும் இடம் போறேன் தமிழீழம் வந்தால் வாறேன்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
தென்றல் வந்து தொட்டுஎன்னைகேலி செய்த்து
நீ செனற இடம் சொன்ன பின்பு வேலி போட்டது

காலம் வந்து சேரும் புலி களத்தில் வாகை சூடும்
களத்தில் வாகை சூடும் என் கழுத்தில் மாலை ஆடும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
தங்க மேனி நொந்து ஈழத்தாய் அழுகின்றாள்
என்தலைவன் இந்த நிலையை பார்த்துத்தான் உருகின்றான்.
எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும்
எதிரி ஆவி போகும் தமிழ் ஈழம் வந்து சேரும்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

உன்னை நெஞ்சில் தூங்க வைத்துப்பாட்டு பாடுவேன் எம் உரிமைக்காக நானும் வந்து
படையில் சேருவேன்
வேங்கை தோற்பதில்லை நம்வீரர் சாவதில்லை வீரர் சாவதில்லை எம் விடிவு தூரம்
இல்லை
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்



14.


விழியில் சொரியும் அருவிகள் -எமை
விட்டுப்பிரிந்தனர் குருவிகள்
பகைவன் கப்பலை முடித்தனர் -திரு
மலையில் வெடியாய் வெடித்தனர்.
தம்பி கதிரவன் எங்கே
தணிகை மாறனும் எங்கே
மதுசாவும் எங்கே
தங்கை சாந்தா நீ எங்கே

தாயின் மடியினில் அங்கே -கடல்
தாயின் மடியினில் அங்கே

பாயும் கடற்புலியாகி வெடியுடன்
ஏறி நடந்தவரே -உங்கள்
ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக
கொடுத்தவரே
தமிழ் ஈழம் உமை மறக்காது
பகை கோண மலையிருக்காது

வேகமுடன் பெருங்கோபமுடன் பகை
வீழும் வெடியெனவானீர்
பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்
ஈரம் கசிந்திடப் போனீர்
விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி
வேகத்தில் கப்பல் விரிந்தது

நீரின் அடியினில் நீந்தி பகைவரை
தீயில் எரித்துவிட்டீரே -அவன்
ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே
ஈழம் மலர வைத்தீரே
வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்க



15.


போரம்மா
உனையன்றி யாரம்மா
போரம்மா
உனையன்றி யாரம்மா
போரம்மா
உனையன்றி யாரம்மா

செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்
ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்

அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்
ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்
ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்

மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு
வீசும் காற்றின் வேகம் கொண்டு
மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா
மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்
மண்ணில் வந்த வேங்கையம்மா

அண்ணன்சொன்ன வேதம் கேட்டு
விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி
ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா




16.


அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள்
அன்புக்கு புலிகள் நன்றி

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்
கதவு திறந்தீர்களே -எம்மை
தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி
பார்க்க மறந்தீர்களே
பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே..

எங்கள் உடல்களில் ஓம் செங்குருதி
உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள்
தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும்
நினைவு நூறல்லவா
நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா...

பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த
இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான்
முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள்
சிறகால் மறைத்தீர்களே
சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே



  
 


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner