பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
கரும்புலிகள்
தினத்தை முன்னிட்டு 1993
ஆடி 5இல் தமிழீழத் தேசியத்
தலைவர் விடுத்த
அறிக்கையில் , 'கப்டன்
மில்லருடன்
கரும்புலிகளின் சகாப்தம்
ஆரம்பம் ஆகியது .
என்றுமே உலகம் கண்டிராத,
எண்ணிப் பார்க்கவும்
முடியாத தியாகப்
படையணி ஒன்று தமிழீழத்தில்
உதயமாகியது . கரும்புலிகள்
வித்தியாசமானவர்கள்.
அப10ர்வமான பிறவிகள்.
இரும்பு போன்ற உறுதியும்
பஞ்சு போன்ற நெஞ்சமும்
கொண்டவர்கள் .
தங்களது அழிவில்
மக்களது ஆக்கத்தைக்
காணும் ஆழமான மனித நேயம்
படைத்தவர்கள் .
கரும்புலி என்ற
சொற்பதத்தில்
கருமையை மனோ திடத்திற்கும்
,
உறுதிப்பாட்டிற்குமே நாம்
குறிப்பிடுகின்றோம் .
இன்னொரு அர்த்த
பரிமாணத்தில் இருளையும்
அது குறியீடு செய்யும் .
பார்வைக்குப் புலப்படாத
பூடகமான இரகசியத்
தன்மையையும்
செயற்பாட்டையும்
அது குறித்து நிற்கும் .
எனவே கரும்புலி என்ற சொல்
பல அர்த்தங்களைக்
குறிக்கும் .
ஆழமான படிவமாக அமையப்
பெற்றிருக்கிறது . இந்த
இரகசியத்
தன்மை கரும்புலிகளின்
செயற்பாட்டு வெற்றிக்கு
மூலதாரமானது .
இது கருப்புலிகளின்
சகாப்தம் . இந்தப் புதிய
யுகத்தில் எமது போராட்டம்
புதிய பரிமாணங்களில்
விரியும் .
சாவுக்கு விலங்கிட்ட
மறவர்கள் புதிய
சரித்திரம் படைப்பார்கள்.
எமது சந்ததியின்
விடிவுக்கு விளக்கேற்றி
வைப்பார்கள் ",
என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment