பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
பெண்ணே!
நீ ஒரு வண்ண ஓவியம்
என்று இவ்வுலகு புகழும்!
அந்தப் பொய்யான
புகழுரையைக்
கேட்டு மயங்கி விடாதே!
நீயோ!
சரித்திரம்
படைக்கபிறந்தவள்!
சமுத்திரம் போல் உள்ள உன்
அறிவை புடமிட்டு சரித்திரம்
படை!
நெற்றியில் செந்தூரம்
வைக்கும் பெண்ணாக மட்டும்
இராதே!
செவ்வானம் போல்
பரந்து கிடக்கும்
இவ்வுலகைப் புரிந்துக்
கொள்ள புறப்படு!
வெறும் கவிதையாக மட்டும்
இராதே!
புது காவியமாக மாற
புறப்படு!
தென்றலாய் இராதே! புயலென
புறப்படு!
இவ்வுலக மாசுகளை அகற்று.
தெருவோரம் சிதறிக்
கிடக்கும்
சிறார்களை கடையேற்றும்
திறமை உன்னிடம் உண்டு.
தெருவோரம் ஒதுக்கப்பட்ட
முதியோர்களை கரம்
பிடித்து கரை சேர்க்கும்
திறமை உன்னிடம் உண்டு.
உன்
திறமையே உனக்கு ஆணி வேர்!
ஆயிரம் மின்னல்கள்
வெட்டுவதால் வானம் என்றும்
கிழியாது.
மேகம் மழை நீரைக்
கொட்டுவதால் இமயம்
கரையாது .
உன்னுள்
புதைந்து கிடக்கும்
திறமைகளை வெளியே கொணர
புயலென புறப்படு.
உனக்குள்
புதைந்து கிடக்கும்
திறமைகளை வெளி உலகிற்கு
காட்டு!
நீயும் வளர்வாய்!
இச்சமுதாயமும் வளரும்!
நாடும் வளரும்!
'வாழ்க பெண்ணினம்; வளர்க
பெண் தொழில்; வளர்க பெண்
கல்வி !' வளர்க
| மீள்
பதிவு செய்யப்பட்டது |
0 Comments:
Post a Comment