-->

தமிழீழ நீதித்துறை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

தமிழீழ நீதித்துறையின்
நீதியாளர்
1993 ஆவணி 19 இல் தமிழீழ
நீதித்துறையின் நீதியாளர்
சட்டவாளர் ஆகியோரின்
சத்தியப் பிரமாண
வைபவத்தில் ஆற்றிய
சொற்பொழிவில் 'போராளிகள்
நீதியாளர்களாகவும்
சட்டவாளர்களாகவும்
பொறுப்பை ஏற்றால்
தமது பிரச்சினைகளை
நேர்மையாக அணுகி சரியான
முறையில்
நீதி வழங்குவார்கள் என
எமது மக்கள்
எதிர்பார்க்கிறார்கள் .
போராளிகள் ஒரு உன்னத
குறிக்கோளுக்காக
தமது உயிரையும் துறக்கத்
தயாராகவுள்ள
இலட்சியவாதிகள்
என்பதை பொதுமக்கள்
அறிவார்கள்.
எனவே போராளிகளாகிய
நீங்கள் நீதி நிர்வாகத்தை
பொறுப்பேற்கும்
பொழுது மக்கள்
மகிழ்ச்சியடைகிறார்கள் .
மக்களின்
எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றும் வகையில்
நீங்கள் ;;நேர்மையுடனும்
பொறுப்புணர்வுடனும்
செயவாற்றுவீர்கள் என
நம்புகிறேன் . கற்றது கைமண்
அளவு, கல்லாதது உலகளவு
என்பார்கள். இந்த
உண்மையின் அடிப்படையில்
நீங்கள் உலக
அனுபவத்திலிருந்து நிறையக்
கற்றுக்கொள்ள முயல
வேண்டும் . அனுபவம்
மூலமாகவே நீங்கள் நிறைந்த
அறிவைப் பெற்றுக்
கொள்ளலாம் . மக்களின்
உணர்வுகளைப்
புரிந்து அவர்களின்
முரண்பாடுகளைக்
களைந்து அவர்களுக்கு நீதி
வழங்குவதை உங்கள்
கடமையாகக் கொள்ளவேண்டும் .
நேர்மையாகவும்
உண்மையாகவும்
செயற்படுவதில் பல
சிக்கல்கள் இருக்கத்தான்
செய்யும் . ஆனால் எப்போதும்
நேர்மை தவறாது
சத்தியத்தின் வழியில்
நீங்களும்
உங்களது கடமையைச் செய்ய
வேண்டும் . அதற்கான
உறுதியும் துணிவும்
உங்களிடம் இருக்க
வேண்டும் " என்றார்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner