பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
Courtesy: erimalai.info ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி, குடியிருப்பு என குட்டிக்கிராமங்கள் சேர்ந்தது சத்துருக்கொண்டான் கிராமம். மட்டக்களப்பு நகரத்திலருந்து நான்கு கிலோமீற்றர் தூரத்திலிருந்தாலும் கிராமத்துக்குரிய பண்பாட்டுக் கோலங்களை அது இழந்துவிடவில்லை. அரச உத்தியோகத்தவர்கள், கமம் செய்வோர், கடற்தொழில் புரிவோர் என பல்துறை தொழில் புரிபவர்கள் இக்கிராமத்திலிருந்தாலும் அரச உத்தியோகத்தவர்களும், விவசாயிகளும் பெருந்தொகையில் இருக்கின்றமை கிராமத்தின் வளத்தை கோடிட்டுக்காட்டுகிறது. அடிக்கடி சூறாவளி வீசி மட்டக்களப்பு மண்ணை பந்தாடியதுண்டு. சூறாவளியில் திருகி எறியப்பட்டாலும் தென்னங்கீற்று சத்துருக்கொண்டானுக்கு அழகும் குளிரையும் கொடுத்துக் கொணடேயிருக்கின்றன. தமிழர்களாகப் பிறந்தும் தன்கையே தன் கண்ணைக் குத்துவது போல முஸ்லீம் மக்கள் தமிழ்மக்களை கொள்வதில் சிங்கள இராணுவத்திற்கு துணைநினறார்கள். துணைநின்றது மாத்திரமல்லாமல் அக்கொலைகளிலெல்லாம் பங்கெடுத்துக்கொண்டார்கள். மதத்தால் வேறுபட்டிருந்தாலும் இனததால் ஒன்றுபடட முஸ்லீம் மக்களின் இத்தகைய செயற்பாடுகள் குரோத்மனப்பாங்கை வளர்த்துவிட சிங்கள இனவாதிகள் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாரகள். 1990 ம் ஆண்டு ஆவணிததிங்கள் 9ம் நாளில் சத்துருக்கொண்டானில் 184 நூற்று எண்பத்துநான்கு தமிழர்களின் அவலக்குரல் ஓஙகி ஓலித்து அடங்கிபபோனதை வெளிப்படுத்தவோ புரட்டிப்பார்ககவோ யாரும் விரும்பவில்லை. எரியும் நெருப்பில வெட்டி வெட்டி வீசிய எமது மக்களின் உடலகள் கருகிச் சாம்பலானதைக்கண்டும் காணாமலிருக்க எப்படி முடிந்தது. வெட்டி வீசப்பட்டவர்கள் ஏழைகளே. ஏழைகளின் குரலும் குருதியும் தமிழர் பூமியில் சிங்கள இனவாதிகளுக்கு மலினமாகிவிட்டதோ? தன்னுடைய மைத்துனிமார் மருமகள் அவர்களின் பிள்ளைகள் சீனியப்பு ( சித்தபபா, சீனியம்மா, சின்னம்மா) மாமா அவரகளின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள என ஒன்றாக முப்பததைந்துபேரை (35) இழந்த சினனத்தம்பி சின்னப்பிள்ளையிடம சத்துருக்கொண்டான் வின்சன் டிப்போ தோட்டத்தில தீயில எரிந்து போன எமது மக்களின் மரண ஓலத்தை பகிர்ந்துகொண்டேன். ஞாயிற்றுக்கிழமை நாலுமணிக்கெல்லாம் போன ஆமியும் முஸ்லீமும் சேர்நது கடகடவென்று ஊரெல்லாம் சுத்திவளைச்சிட்டாங்கள். பனிச்சையடி பிள்ளையாரடி ஆக்ளெல்லாம் முதல் நாளே எழுப்பி குடியிருப்புபக்கம் போய் தாங்கள். ஆமி ஊருக்க புகுந்து எல்லாரையும் கொல்லப்போறானென்று கதையொன்று வந்தது. கேள்விப்பட்டவுடன் பயத்தில் அவங்க எல்லாம் குடியிருப்புப் பக்கம் போனாங்கள். ஆனால் அவனுகள் குடியிருப்புக்கு போனவங்களையும் விடல்ல. அங்கதான நம்மட மாமாவையும அவங்கட பிள்ளையள் பிள்ளையளின்ட பிள்ளைகள் என பத்துபபேரை கொண்டுபோனாங்க. பனிச்சயடியில் வச்சு நம்மட மச்சாள்மார் பரஞ்சோதி சொளந்தரம் குணரெத்தினம் சீனியப்பு சீனியம்மை இவங்கட பிள்ளையள் பேரபிள்ளைகளென முப்பத்தைந்து பேரை பிடிச்சிட்டான். நம்மட குணரெத்தினத்திர முண்டு பிள்ளையள் பெரிய பாவம். ஒண்டுக்கு ஆறுவயது மற்றரெண்டுக்கும் எட்டு வயதும் பத்து வயதும் முண்டும் கை கால் வழங்காததுகள் இருக்கமாட்டுதுகள். படுத்தபடுக்கையிலதான் மலம் சலமெல்லாம் போகும். முத்தது நந்தினி அதுமட்டுந்தான் பிள்ளையாட்டம் இருந்தது. புத்தி சுவாதீனமில்லாத கை கால் வழங்காத இந்த முண்டு பிள்ளையளையும் கூட வந்தவங்கள் விடல்ல. அடிச்சு சப்பாத்துக்காலால் மிரிச்சு உழுக்கி போட்டு இழுத்துக்கொண்டு போனானுகள். புருஷன் பேரின்பன் முத்துப்போடியன் விட்டிட்டு ஓடினப் பிறகும் குணரெத்தினம் அந்தப் பிள்ளையளோட பட்ட கஸ்ரம் சொல்லேலாது. மகன் இவஙகளையெல்லாம் இழுத்திட்டுப் போனாங்களெண்டு நினைக்க பத்தி எரியுது. ஆமிக்காரனுகள் கூட்டிட்டுவந்த முஸ்லீங்களுக்கும் துவக்கு கொடுத்திருந்தாங்கள் அடுப்படியில் நிணடாப்போல கிணத்தடியி்ல் நிணடாப்போல உரல்ல நெல்லுப்போடடாப்போல அப்பிடி அப்பிடியே ஒதுக்கீட்டுப் போனாங்கள். உடுப்புககூட மாததவிடல்ல. பெரியதுரை கதைசிட்டு விடுவாரெண்டு சொன்னாப்போல அப்படியே போயிட்டாங்கள். எல்லாரையும் பிள்ளையாரடியில் ஒதுககீட்டு வந்தானுகள் வின்சன் டிப்போ தோட்டப்பக்கம் கொண்டு போயிடடானுகள். அங்க தான் அவங்கட காம்பு இருந்தது. இனி அங்க என்ன நடந்ததெண்டு பாக்க முடியல்ல. தோட்டதில் பெரிசாய் நெருப்பு எழும்பி பத்திககொண்டிருந்தது. அழுகைக் குரல் கேட்டது. விடியும் வரை நெருப்பு எரிஞ்சுகொண்டிருந்த. கத்திககுத்து வாங்கி செத்துப்போனமாதிரிககிடந்து தப்பியோடிவநத வண்ணான் ஒருவன் இருக்கின்றான். அவனுக்கு எலலாம் தெரியும். நெருப்பு எரிஞ்சுகொண்டிருக்க ஒவ்வொருத்தராய் வெட்டி வெட்டி நெருப்பில் வீசிட்டுததாங்களாம். ஒருததர கூட மிஞசலல. மறுகா ஒருத்தரும் டிப்போதோட்டப் பக்கம் போய்பபாக்க விடல்ல. ஒருகிழமை ரெண்டுகிழமை கழிச்சு எலலாரும் காம்பில் போய்க்கேட்டம நாங்க ஒருத்தரையும் பிடிக்கல்ல. கொண்டு வரவுமில்ல நமக்கு எதுவும் தெரியாது எண்டு சொல்லீடடாஙகள். இனி நாம் யாரிட்டப்போய்க் கேக்கிறது. நல்ல வேளை நம்மட சின்னமகன் சுதன் கதிரகட்ட வயல்பக்கம் போனாப்போல தப்பீடடான. அங்க இஞ்ச வேளைக்கு போனாக்களைத்தவிர எல்லாருமே இதில் பட்டிடடாங்கள். இதுகெல்லாம் முடிவு எப்ப மகன் வரப்போகுது. இனியும் செய்யமாட்டாங்களெண்டு எப்பிடிச்சொல்றது. அதுதான் நாம அவனுகளுக்கு கிட்டஇருக்காமல் கரடியனாத்துப் பக்கம் வந்திட்டம் என இந்த முதாட்டி சொல்லுமபோது பதினொரு ஆணடுகள் மறைந்து போனாலும் அந்த பயங்கர அனுபவம் அவர முக்ததிலும் குரலிலும் தெரிந்தது. சத்துருகொணடான் வின்சன் டிப்போ தோட்டத்தில எரிந்து சாம்பலாகிப்போன தமிழர்களுக்காக எங்கும் எந்தககுரலும் ஓங்கி ஒலிக்கவில்லை. ஏழைகளின ஏக்கமும் தாக்கமும் குரலும் குருதியும் மனித உரிமை அமைப்புகளைக்கூட கண்முடியிருக்கச் செய்துவிட்டது. தமிழரகளின புதைககுழி மேலும் அவர்களின் சாம்பல் மேட்டிலும் நின்று ஏப்பம் விடும் சிங்கள அரசிடம்
0 Comments:
Post a Comment