-->

லெப்டினன். சங்கர்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற


லெப்டினன்ட் சங்கர் ஒரு நாள் அதிகாலை,

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு

வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம்

முற்றுகையிடுகிறது. 1982 ம் ஆண்டு

அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ்

நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த

விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில்

வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத்

தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து

இராணுவத்தினரால் அந்த வீடு

முற்றுகையிடப்படுகிறது. அவ வேளையில்

அங்கிருந்த ஒரு இளைஞன்

முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான்

வைத்திருந்த கைத்துப்பாக்கியால்

சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக்

குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச்

சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி

வேட்டுக்கள் சரமாரியாகத்

தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த

இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு

பாய்கிறது. படுகாயமுற்ற நிலையிலுங்கூட

அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு

விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு

இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன்

இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை

அடைகிறான். தோழர்களிடம் தன் கைத்

துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே

விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில்

ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு

இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த

அவனது கட்டுடல் சோர்வடைகிறது. விடுதலைப்

போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால்

அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி

ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக

முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை

தோழர்கள் விசைப்படகுமூலம் கடல்

மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச்

செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல்

நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி

தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது.

தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு

பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை.

இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட

காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப்

பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த

முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (

27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு)

அந்த இளைஞன் இயக்கத்தில்

முதற்களப்பலியாகும் பெருமையை

அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே

நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு

கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர்

ஏற்றப்படுகிறது.) அவன்தான் வடமராட்சி

கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட

லெப்டினன்ட் சங்கர். சிங்கள

இராணுவப்படையினர் வலைவிரித்துத்

தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம்

என்றால் என்னவென்று அறியாத அடலேறு.

இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை

மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ

விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத்

தலைவன்.. ஒரு சின்னப்பிசகு என்றாலும்

கையோடு வெடித்து ஆளையே

முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின்

தயாரிப்புகளிலும் அச்சமில்லாது

ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக்

கண்காணிப்புக்கு அவன்

இலக்காகியிருந்தாலும் அச்சம்

எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில்

சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில்

சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள்

சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக

அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது

செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா

வீரன் என்ற முறையில் தனக்கும்

இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும்

என்பதில் சங்கர் எப்போதும்

விழிப்பாயிருப்பான். அரச படைகளின்

கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில்

ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும்

சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது.

விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள்,

ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப்

பத்திரிக்கையில் வாசிக்கையில்

குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம்

பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக்

குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.

ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச

படைகளின் கையில் எதிர்ப்பு

எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி

சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது

சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது.

குறிப்பாக, தமிழீழ

விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக்

கட்டங்களில் விடுதலைப்போராளிகளை

ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை

அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு

விடுதலைப் போராட்டத்தை

முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி,

அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும்

என்று சங்கர் கருதினான். இருபத்தொரு

வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட

வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல்

சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை

அடக்கிவிட முடியும் என்று பாசிச

சர்வாதிகாரி ஜே. ஆர்.ஜெயவர்த்தனா

சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம்

செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள்

மீது சங்கர் நடத்திய கெரில்லாத்

தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப்

போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு

எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது

வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி,

ஜீப் வண்டியை நிறுத்த வைத்து,

கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே

இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை

நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம்

சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து

ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில்

குறிவைக்கும் அவனது சாதுரியம்

அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர்

பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை

அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச

படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி

இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது

சீலனின் தலைமையில் நடைபெற்ற

கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு

சங்கரின் பங்கும் கணிசமானதாகும்.

அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள்

உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில்,

மாடிக்கட்டிடத்தோடு, பிரதான

வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே

அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ்

நி


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner