பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
வல்வை சிவன் ஆலய
ஆதீனகர்த்தாக்களில்
ஒருவர் ஆவார் அமரர்
அவர்கள் . அரச
பதவி வகித்தபோது அவரை ஜீப்
வாகனத்தில் மிகவும்
மரியாதையாக
ஏற்றி வருவதை நான்
பலமுறை கண்டிருக்கி றேன் .
அப்படியான ஒரு பெரிய
மனிதரை அவரது இறுதிக்
காலத்தில் சிறையில்
வைத்தமை கவலையளிக்கும்
விடயமாகும் . எனினும் அவர்
செய்த ப10ர்வ
புண்ணியத்தின் பேறாக
அவரது பிறந்த மண்ணில்
இறுதி யாத்திரை நடைபெற்றது
அனைத்து மக்களுக்கும்
ஆறுதலாகும் . வையத்துள்
வாழ்வாங்கு வாழ்ந்த
இவரது மறைவால்
துயருற்றிருக்கும்
குடும்பத்தாருக்கு எனது
ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவிப்பதோடு இவரின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல சர்வலோக நாயகியாகிய
அம்பாளை இறைஞ்சி வேண்டிப்
பிரார்த்
தித்து அமைகிறேன் .
ஓம் சாந்தி! சாந்தி!!
சாந்தி!!!
சிவஸ்ரீ சோமாஸ்கந்த
தண்டபாணிக தேசிகர்
( சிவாச்சார்ய பீடாதிபதி,
அகில உலக சைவக்குருமார்
சம்மேளனம் ,
பிரதமகுரு, வல்வை ஸ்ரீ
முத்துமாரி அம்மன்
தேவஸ்தானம் )
திருவேங்கடம்
வேலுப்பிள்ளை
நான் ஐயாவுடன்
பழகியதோ கொஞ்சக்காலம்தான்.
ஆனால்,
அவரைப்பற்றி நெஞ்சார
அறிந்ததோ ஏராளம் . தாரளமாக
எழுத என்
பேனா அடைக்கிறது –
மனவேதனை தான் காரணம்.
1980களில் அவரின்
வீடு உடைந்த நேரத்தில்
மந்திகை வைத்தியசாலையில்
நான் மாவட்ட வைத்திய
அதிகாரியாக இருந்தேன் .
வந்தார் ஐயா,
காவல்துறையினரதும்
மற்றவர்களினதும்
தொந்தரவுகள் கூடிய காலம்
அது . ஐயாவை ஒரு சிறு
தனிப்படுக்கை அறையில்
படுக்க
வைத்தேன் . “இருதய நோயாளி -
தொந்தரவு செய்ய வேண்டாம்”
என்ற
ஒரு பெயர்ப்பலகையையும்
போட்டேன் . நிம்மதியாக
கொஞ்ச நாட்கள்
இருந்தார்கள். பின்
எங்கோ சென்றுவிட்டார்கள்.
எத்தனை விதமான
சோதனைகளையும்
வேதனைகளையும் சுமந்த
மனுஷன் . நினைத்துப் பார்க்
கவே இதயம்
வேதனைப்படுகின்றது.
படபடக்கிறது. ஒரு நல்ல
ஆத்மா, சாதனை உருவம் –
உடலமைப்பு, தாராள மனம்.
மன்னாரில் 1980க்கு முதல்
நான் அங்கு மாவட்ட வைத்திய
அதிகாரியாக இருந்தேன் .
அவர் னு.டு.ழு ஆக இருந்தார்.
அந்த இடத்தில் சாராயம்
குடிக்காத ஒரேமனிதர்
வேலுப்பிள்ளை ஐயா தான்.
நான் தங்கும்
விடுதிக்கு அடிக்கடி
வருவார் – குளிப்பதற்காக,
மன்னாரில் அவ்வள
வான தண்ணீhப் பஞ்சம்.
னு.டு.ழு ஆக இருந்த
காலத்தில்
எத்தனையோ பேருக்கு
வன்னியில்
தலா ஐந்து ஏக்கர்நிலம்
தாராளமாக கொடுத்த
காணி வள்ளல் . காலம்
மாறினாலும் அவரின் குணம்
மாறியது கிடையாது .
நேர்மையான மனிதர். அதிகம்
பேசமாட்டார்.
பேசியதை செயலில் காட்டும்
அதீத திறமைசாலி .
வாழ்க்கையில்
யாரையுமே ஏமாற்றியது
கிடையாது .
மனதிலே எதையுமே தீங்காக
நினைக்காத செல்லக்கிளி.
மிகவம் இளகிய மனசு. ஆனால்
ஒன்று, அவரை இன்னொருவர்
ஏமாற்ற முடியாது ஏன்?? –
அவர் பேசுவதெல்லாம் உண்மை,
உண்மை.
“உண்மை என்றுமே ஏமாறாது
ஏற்றம் என்பது இறைவன்
வழங்கும் பரிசு
இறக்கம் என்பது அவன்
செய்யும் சோதனை”
ஐயா அவர்கள்
எத்தனை ஏற்றங்களை, இறக்கங்
களை கண்டும் சலிக்காமல்
இறைவனிடமே முறையிடுவார்.
“ஒன்றை நினைக்கின்
அது ஒழிந்திட்டொன்றாகும்
அன்றி அது வரினும்
வந்தெய்தும் – ஒன்றை
நினையாது முன்
வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்” -
முதியோர் சொன்னது.
“ கற்பகத்தைச்
சேர்ந்தோர்க்குக்
காஞ்சிரங்காய் ஈந்தேன்
முற்பலத்தில் செய்த வினை”
உன்
வாழ்க்கை ப 10ச்சியத்தில்
ஆரம்பமாகிறது.
அதற்கு முன்பக்கம் இலக்கம்
விழுந்தால் இறைவனின்
பரிசு . பின்பக்கம்
விழுந்தால் அவனது சோதனை.
ஐயா! உங்கள் பிரிவால்
போலும் உங்கள்
வீட்டை யும் , உங்களின்
பார்வதிப்பிள்ளையையும்
பார்ப்பதற்காக நு }ற்றுக்
கணக்கில்
தென்னிலங்கை மக்கள்
வருகிறார்கள் . அத்துடன்
உங்கள் வீட்டு மண்ணும்
கொஞ்சம் கொஞ்சமாக
தென்னிலங்கைக்கு
ஏற்றுமதியாகிறது –
மாவீரன் மண் அருகிக்
கொண்டே போகிறது .
இறைவன்
ஐயாவை எத்தனை தடவைகள்
சோதித்துவிட்டான்
மனம் தளராத மனுஷன்
ஐயா நீர் !
தடம் புரளாக
கோச்சு வண்டி ஐயா நீர்!
சலசலப்பில்லாத ஆழ்
கிணற்று தண்ணீர் ஐயா நீர்!
உலகம் என்றும்
மறக்காது போற்றுகின்ற
செந்தமிழ் தலைவனை ஈந்த எம்
ஊர்ப் பெருமகனே !
ஐயா! நீங்கள் சரித்திர
நதியின் அணைக்கட்டு!
அனுபவக் கல்லு}ரியின்
பேராசான்!
அறிவெனும் நந்தா விளக்கின்
சுவாலை !
உங்கள்
பிரிவு சரித்திரத்தின்
மகத்தான மணிமண்டம்
எங்கிருந்தாலும் நீர்
சிரஞ்சீவியே !
எங்கும்
சாந்தி நிலைக்கட்டும்……
அன்புடன் ,
க. மயிலேறும்பெருமாள்.
பெருவீரனின்
தந்தை என்பதை நிலைநிறுத்திய
தீரர்
வேலுப்பிள்ளையின்
மீது ஆணையிடுவோம்
- பழ நெடுமாறன் -
உலகத்
தமிழினத்திற்கு வீரமிக்க
தலைவனைப் பெற்றுத்தந்த
அய்யா வேலுப்பிள்ளை அவர்கள்
சிங்கள் வதைமுகாமில்
மரணமடைந்த
செய்தி தமிழ்கூறும்
நல்லுலகம் எங்கும்
வேதனை அலைகளைப்
பரப்பியுள்ளது . 86
வயது முதிர்ந்த அவரையும்
பிரபாகரனின் தாயார் பார்
வதி அம்மையாh அவர்களையும்
கடந்த 8 மாதங்களாக
வதை முகா மில்
அடைத்து வைத்து விசாரணை
என்ற பெயரில்
அவர்களுக்கு மன அளவில்
பெரும்
பாதிப்பை ஏற்படுத்தியதோடு
அவர்களுக்குத் தேவையான
மருத்துவவசதி , பக்குவமான
உணவுகள் எதுவும்
அளிக்கப்படவில்லை.
கடந்த 8 மாதத்தில்
அவர்களைச் சந்திக்க
யாரையுமே அனு மதிக்கவில்லை.
தமிழக முதல்வர்
கருணாநிதி அனுப்பிவைத்த
நாடா ளுமன்ற
குழுவினர்களாவது அவர்களைச்
சந்திக்க
முயற்சி செய்தி ருக்க
வேண்டும். இராசபக்சேவைச்
சந்தித்த
போதாவது அவர்களை விடுதலை
செய்யும்படி
வலியுறுத்தியிருக்க
வேண்டும் . ஆனால்
இக்கு ழுவினர்
அவ்வாறு செய்யவேண்டிய
கடமைகளிலிருந்து
தவறிவிட்டார்கள் .
வெளிநாடுகளில் வாழும்
பிரபாகரனின் சகோதரியும்
பிரபாகர னின் அண்ணன்
மனோகரனும் தங்கள்
பெற்றோரை தங்களிடம்
அனுப்பி வைக்கும்படி
விடுத்த வேண்டுகோளையும்
அரசு மதிக்கவில்லை .
தனது சாவிலும்
தானொரு வீரனின்
தந்தை என்பதை அய்யா
வேலுப்பிள்ளை
நிரூபித்திருக்கிறார்.
அரசிடம்
முறையிட்டு விடுதலை
பெறவிரும்பாமல்
இறுதிவரை முகாமிலேயே
வாழ்ந்து அந்தக்
கொடுமைகளை அனுபவித்து
கொஞ்சம்கூடக் கலங்காமல்
இருந்து மறைந்திருக்கிறார்
.
வல்வெட்டித்துறையில்
புகழ்பெற்ற குடும்பமான
திருமேனியார்
குடும்பத்தில் பிறந்தவர்
திருவேங்கடம்
வேலுப்பிள்ளை ஆவார் . இக்
குடும்பத்தின் மூதாதையரான
திருமேனியார் வேங்கடாசலம்
என்பவர் அவ்வ 10ரில் உள்ள
வல்வை முத்துமாயம்மன்
கோவில் , வல்வை வைத்
தீஸ்வரன் கோயில்,
நெடியகாடு பிள்ளையார்
கோவில் ஆகிய
மூன்று முக்கிய
கோயில்களை கட்டினார் .
திருவேங்கடம்
வேலுப்பிள்ளை,
திருமதி வல்லிபுரம்
பார்வதி அம்மையார்
ஆகியோருக்குப் பிறந்த
கடைக்குட்டிப்
புதல்வரே பிரபாகரன் ஆவார்.
இவருக்கு மனோகரன் என்ற
மூத்த சகோதரரும் ,
ஜெகதீஸ்வரி,
வினோதினி இரு மூத்த
சகோதரிகளும் உண்டு.
திருவேங்கடம்
வேலுப்பிள்ளை தனது 19ம்
வயதில்
இலங்கை அரசுப்பணியில்
சேர்ந்து படிப்படியாக
பதவி உயர்வு பெற்று
மாவட்டக்
காணி அதிகாரியாகப்
பணிபுரிந்து ஓய்வு பெற்றார்
. அரசுப் பணியில் இவர்
இருந்த காலத்தில் ஏராளமான
தமிழ் மக்களை அரச
நிலங்களில்
குடி யேற்றி மக்களின்
நன்மதிப்பைப் பெற்றார் .
நேர்மையுடன்
பணியாற்றி புகழ்பெற்றார்.
ஏழை எளிய மக்களின்
துயர்துடைக்கும் பணியில்
ஈடுபட்டு அனைவரின்
பாராட்டுதலுக்கும்
உரியவராகத் திகழ்ந்தார் .
தந்தையிடமிருந்த இந்த
நற்பண்புகள்
பிரபாகரனிடமும்
எதிரொலித்தன .
தமிழர்களுக்காகப்
போராடும்
மனஉறுதியை பிரபாகரன்
தனது தந்தையிடமிருந்தே
பெற்றார் என்றுதான்
கூறவேண்டும் . பெற்றோரின்
செல்லப்பிள்ளையாகத்
திகழ்ந்த
பிரபாகரன்மீது அவரது
தந்தைக்கு மிகவும் அன்பு.
எங்கு சென்றாலும்
தனது செல்ல மகனையும்
அழைத்துக்கொண்டு போவார்.
1956ம்
ஆண்டு பண்டாரநாயகா பிரதமராக
இருந்தபோது சிங் கள
மொழியை அரச மொழியாக
ஆக்கும்
சட்டத்தை இயற்றினார் . அந்த
சட்டத்தை மிகக்கடுமையாக
விமர்சித்து வேலுப்பிள்ளை
பேசியதை சிறுவனான
பிரபாகரன் கேட்டு கோபமும்
கொதிப்பும்
அடைவது வழக்கம் .
அந்தவயதில் தந்தை மூட்டிய
தீ பிரபாகரனின் மனதில்
புரட்சித் தீயாக
மூண்டு வளர்ந்தது .
அனுராதபுரத்தில்
வேலுப்பிள்ளை பணியாற்றிய
காலத்தில் இவர்கள்
வீட்டிற்கு அருகில்தான்
எல்லாளனின்
சமாதி இருந்தது . அந்த
சமாதியில்
தினசரி விளக்கேற்றி பார்வதி
அம்மையார்
வழிபடுவது வழக்கம் .
அப்போதுதான் பிரபாகரன்
அவர் வயிற்றில் கருவாக
உதித்தார் என வேலுப்பிள்ளை
பிற்காலத்தில்
கூறியிருக்கிறார் .
பிரபாகரனின் புரட்சிகர
நடவடிக்கைகளை அவரது தந்தை
விரும்பவில்லை என்பது போன்ற
பொய்யான
கட்டுக்கதைகளை சிலர்
திட்டமிட்டுப்
பரப்பமுயன்று வருகின்றனர்.
உண்மை அதுவல்ல.
பிரபா கரனின்
தந்தை இயற்கையிலேயே பற்றற்ற
உள்ளம் படைத்தவர் .
தனது பிள்ளைகள்
அவரவர்களின்
எதிர்காலத்தை அவர்கள்
விருப்பப்படிதான்
அமைத்துக்கொள்ள வேண்டும்.
பிள்ளைகளைப்
பெற்று வளர்த்துப்
படிக்கவைத்து ஆளாக்குவதோடு
பெற்றோரின்
கடமை முடிந்துவிடுகிறது
என்று நினைக்கக்கூடியவர் .
எனவே பிரபாகரனை அவரின்
போக்கிலேயே விட்டுவிடுவது
என்றுதான் அவர்
முடிவுசெய்தார் . மிக
இளவயதில் அதாவது 17ம்
வயதில் பிரபாகரன்
தனது படிப்பை
நிறுத்திவிட்டு விடுதலைப்
போராட்டத்திற்குத்
தன்னை அர்ப்பணித்துக்
கொண்டதை அவர் தவறாக
நினைக்கவில்லை. ஆனால்
படிப்பை முடித்துவிட்டுச்
சென்றிருக்கலாமே என்றுதான்
கருதினார் . பிரபாகரனின்
புரட்சிகர நடவடிக்கைகளின்
விளைவாக அமைதி நிலவிய அவர்
குடும்பத்தில் புயல் வீசத்
தொடங்கிற்று .
காவல்துறையின் தொந்தவுகள்
அதிகமான போதிலும்
எல்லாவற்றையும் அந்தக்
குடும்பம் பொறுமையுடன்
ஏற்றுக்கொண்டது .
பதவியிலிருந்து
ஓய்வுபெற்று 80களின்
நடுவில் அவர்
தமிழகத் ;திற்கு வந்து
தங்கியபோது அவருடன்
நெருங்கிப் பழகும்
வாய்ப்பு எனக்குக்
கிடைத்தது . அவர் தன்
மனையியுடன் திருச்சியில்
குடியிருந்தார் .
திருச்சி செல்லும்
போதெல்லாம் அவர்களைச்
சந்திப்பது எனது வழக்கம்.
அப்போது பிரபாகரன்
சென்னையில்தான் இருந்தார்.
ஆனாலும் மகனுடன்
தங்கவேண்டும்
என்று அவரோ அல்லது
பெற்றோரைத் தன்னுடன்
வைத்துக்கொள்ள வேண்டும்
என்று பிரபாகரனோ
நினைக்கவில்லை. அவர்கள்
அவ்வப்போது சந்திப்பார்கள்
. அவ்வளவுதான்.
ஒருமுறை சென்னையில்
பிரபாகரனை நான்
சந்தித்தபோது “அண்ணா ஒரு
உதவி செய்யவேண்டும்”
என்று கூறினார் .
வழக்கத்திற்கு மாறான அந்த
பீடிகையைக்
கண்டு திகைத்தேன் . “என்ன
செய்யவேண்டும் என்பதைச்
சொல்லுங்கள் செய்கிறேன்.
எதற்காக இந்தப்
பீடிகையெல்லாம்
போடுகிறீர்கள்” என்று நான்
கூறினேன் .
அவர் புன்னகையுடன்
”தமிழீழத்தில் உள்ள
பல்வேறு மாவட்டங்களின்
வரைபடங்கள் உள்ளன .
அவற்றைத்
திருத்தி இன்றிருக்கும்
நிலையில் ஆக்கித்
தரவேண்டும்”
என்று கூறினார் .
0 Comments:
Post a Comment