பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
மேஜர் நேரியன் ஓ அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்;தாலும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாள். எனம் கரம் பிடிக்கும் எழுது கோலால் இவன் வாழ்வினை முழுமையாக வரைந்திட முடியாது. என்றாலும் எழுதத் துடித்தது எம் மனம். சிறு துளியென்றாலும் உன்னால் முடிந்ததை எழுது என்றது. இவன் வீர வரலாற்றில் சிதுளிகள் இங்கே......... நேரியன்..... இவன் உள்ளத்தில் உற்றேடுக்கும் நேர்மை இவன் பெயரினுள்ளும் பொதிந்து இருந்தது, தருணை இவள் கண்களில் குடி கொண்டிருந்தது. தெளிவான பார்வை ஆழமான கருத்துமிக்க வார்த்தைகள், கண்டோரை எளிதில் கவரும் இவன் இதழ் சிந்தும் காந்தப் புன்னகை, பணிவைத் தன்னில் சுமந்திருக்கும் அழகிய வதனம் பெருமையில்லாத உள்ளம். ஆணுக்கு ஏற்ற அளவான உயரம். உயரத்திற்கேற்ற ஆரோக்கியமான உடல்வாகு. இவை எல்லாம் இணைந்து இவனை அலங்கரித்தன. 1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாத நடுப்பகுதியில் தன்னை முழுமையாகக் கரிகாலன் சேனையில் இணைத்துக் கொணடான். தனது ஆரம்பப் பயிற்சியினை வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமான சரத்பாபு 7 இல் பெற்றுக் கொண்டான். பயிற்சி முகாமில் தனது உடல் வலு, உள வலு என்பவற்றைப் பெருக்கிக் கொண்டான். பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சமர் எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் கல்விக்கும் உண்டு என்ற தலைவரின் கணிப்புக்கு இணங்க அரசியல் கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்டான். அரசியல் கற்கை நெறி ஆரம்பிக்கையில் தலைவரின் கருத்துரையை உன்னிப்பாக அவதானித்த இவன் அக்கற்கை நெறியின் அவசியத்தையுணர்ந்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினான். கற்கை நெறி ஆரம்பிக்கும் அன்றுதான் இவன் முதல் முதல் தலைவர் அவர்களை நேரே தன் விழிகளால் சந்தித்துக் கொண்டான். ஈதலால் அந்த நாளை தன் வாழ்வுக் காலத்தில் என்றும் கரைந்து போகாத நினைவாக தன் நெஞ்சமதில் பதித்து வைத்தான். போரளிகளின் வாழ்வு என்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் போல, கல்வியறிவும், களப் பயிறிசியறிவும் மாறி மாறி ஊட்டப்பட்டது. இவ்வாறு இவனது போராட்ட வாழ்வு கரைந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் பேய்கள் 'முன்னேறிப் பாய்தல்" என்ற நடவடிக்கை மூலம் வலிகாமப் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்தது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் ஏதிலிகளாக்கப்ட்டு இவன் இருந்த முகாம் வீதியேங்கும் வீசியெறியப்பட்டார்கள். இதனை அவதானித்த இவன் மனம் குமுறியது. களம் செல்லத் துடித்தான். இந்த வேளையில் தலைவரின் திட்டத்திற்கமைய முன்னேறிய பகைவன் மீது பாய புலிகள் தயாராகினார்கள். இவனும் அணியோன்றில் இணைக்கப்ட்டான். எனினும் புலிப்பாய்ச்சல் நடவடிக்கை எதிர்பார்த்ததை விட இலகுவில் வெற்றி கொள்ளப்ட்டதால் அவனது அணி சண்டைக்கு செல்லவில்லை. இவ்வாறு இவனது கள வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த போது 60 எம்.எம் மோட்டார் பயிற்சி பெறுவதற்காக அனுப்பட்பட்டான். இவன் எதையும் கற்றுக் கொள்வதில் கற்ப10ரம் என்பதால் குறுகியகால பயிற்சியுடன் மோட்டாரை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவனாக வெளியேறினான். வெளியேறிய இவன் தனது மோட்டாருடன் முதலாவது களத்தில் எதிரியைச் சந்திக்கிறான். அந்தக் களம் திருவடி நிலைப் பக்கமாக இருந்து முன்னேறிய எதிரி மீதான தாக்குதல். அத்தான்குதலின் போது இவனது வோக்கி டோக்கி செயலிழந்து விட்டது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எறிகணை ஏவ வேண்டும். உடனே தனது அறிவு அனுபவத்தைப் பயன்படுத்தி டாங்கியில் சத்தம் வரும் நிலை நோக்கி மோட்டரை ஏவினான். ஏவிய எறிகணைகள் எதிரியின் டாங்கி மீதும் அதனைச் சூழ உள்ள பிரதேசத்துள் மீதும் வீழ்ந்து வெடித்தன. இக்களத்தில் இவனது மோட்டாரை இயக்கும் ஆற்றல் வெளிப்பட்டது. மறுநாள் இவன் சூரியகதிர் இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள களம் விரைந்தான்;. அங்கு முன்னேறிய பகைவன் மீது நேர்த்தியான சூடுகளை வழங்கி எதிரியின் பக்கம் பலத்த இழப்பு ஏற்பட வழிவகுத்தான். 'சூரியக் கதிர்" இராணுவ நடவடிக்கை கோப்பாய் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்த போது இவன் அக்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டான். அங்கு தனது கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் ப10தம் ஆனையிறவில் இருந்து கிளிநோச்சி நோக்கி தனது ஆக்கிரமிப்பு கரத்தை நீட்டின. சத்ஜெய 1. 2 என ஆக்கிரமிப்பு முயற்சிகள் தோல்வியைத் தழுவ சத்ஜெய 3 எனத் தொடர்ந்தது. சத்ஜெய 3 இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள இவன் 120 எம். எம் மோட்டார் அணியில் ஒருவனாக நின்று செயற்பட்டான். பின்பு ஆனையிறவு பரந்தன் மீதான ஊடுருவல் தாக்குதலின் போது 1200 எம்.எம் மோடார் ஒன்றுக்கு தலைமை தாங்கி சென்று நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணிகளுக்கு பலம் சேர்த்தான். மே 13.. 2997 இல் மிகப்பெரும் பகைவெள்ளம் தாண்டிக்குளம் ஊடாகவும், நெடுங்கேணியுடாகவும் நகர்ந்தது. இதனை எதிர்கொள்;ள இவன் 120 எம் எம் பீரங்கியோன்றுக்கு தலைலை தாங்கிச் சென்று முன்னேறும் பகைவன் மீதும் தாண்டிக்குளம் மீதான ஊடுருவல் தாக்குதல், பெரியமடு மீதான ஊடுருவல் தாக்குதல் போன்றவற்றில் தனது பீரங்கி மூலம் நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணியின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தான் சிறிது காலம் சிங்களப் படைக்கு பெரும் சவாலவகக புளியங்குளத்தில் அமைந்திருந்த புலிகளின் முகாமினுள் இருந்து 82 எம் எம் ரக மோட்டார் மூலம் முன்னேறும் பகைவனுக்குச் சவாலாக அமைந்தான்.60 எம் எம் , 81 எம் எம் 82 எம் எம் 120 எம் எம் போன்ற பீரங்கிகளை இயக்குவதிலும் வரைபடத்தைக் கையாளுவதிலும் சிறந்து விளங்கிய இவன் விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவனானான் சமர்க்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்ட இவன் தன் அரசியல் கற்கை நெறியினைத் தொடர்ந்தான் அக்கற்கை நெறியினைக்கற்கும் போராளிகளில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவன். அத்துடன் இவனது கல்லுரிகளில் நடைபெறும் கலைநிகழ்வுகள் அனைத்திலும் இவனது பிரசன்னம் இருக்கும் இவன் மேடையேறினால் மேடையே மலர்ந்து சிரிக்கும். தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்துடன் ஒன்றிப் போய் நடித்து சபையோரை வியக்க வைப்பான். மேலும் சிறந்தவொரு பேச்சாளனாகவும் விளங்கினான். எந்தவொரு விடயத்தையும் அனுகி ஆராய்ந்து சிறந்ததொரு பேச்சை முன்வைப்பான். அத்துடன் துப்பாக்கி மூலம் குறிபார்த்து சுடும் கலையிலும் இவன் வல்லவன்தான். இவன் ஆற்றல் ஆளுமை கண்ட பொறுப்பாளரால் அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் ஆக நியமிக்கப்ட்டான். போராளிகளின் உணர்வலைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இவனுக்கு இருந்ததால் சிறந்த முறையில் தன் நிர்வாகத்தை நகர்; த்திச் சென்றான். அதன் மூலம் போராளிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றான். இவ்வாறு இவனது போராட்ட வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த வேளை தலைவர் அவர்களின் சிந்தனையில் சிரு~;டிக்கப்பட்ட திட்டமொன்றிறிகாக தேர்வு செய்யப் பட்டான். அப்பணி மிகவும் கடினமானது. அபபணி தொலைது}ரத்தில் இவனுக்காக காத்திருந்தது. ஆதலால் தொலைது}ரம் செல்ல ஆயித்தமானான். செல்லுமுன் தலைவர் அவர்களைச் சந்தித்து அத்திட்டம் பற்றி அறிவினைப் பெற்று தன் பணிக்கு சென்றான். அங்கு தனது பணியை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி தலைவரின் பாராட்டைப் பெற்றான். இவ்வாறு தன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அன்புத் தலைவரின் அழைப்பை ஏற்று மீதினில் ஏறி வர ஆயத்தமானான் அந்த வேளை அந்தக் கடற்கரையின் நீருக்குள் பாதம் பதித்து தனக்கெனக் காத்திருக்கும் விசைப் படகு நோக்கி நகர்கின்றான் நெரியன். அந்த விசைப் படகை அடைந்து அதற்குள் ஏறிக் கொள்கிறான். அதற்குள் ஏறிக் கொண்டவன் தன்; மனதுக்குள் பல கனவுகள் ஏற்றிக் கொண்டான். அன்புத் தலைவரின் தரிசனம் , அன்னை மண்ணின் தரிசனம் அன்புத் தோiர்களின் தரிசனம் அன்பு மக்களின் தரிசனம், என்று அவனின் எண்ண அலைகள்; ஆர்ப்பரிதது எழுந்து கொண்nருந்தவேளை விசைப்படகின் இயந்திரம் தன் இதயத்துடிப்பை இயக்கியது. பயணம் அலைகடலினு}டே நீண்டதொரு பயணம் ஆழ்கடலை இவனது படகு அண்மித்துக் கொண்டிருந்த வேளை கருமுகில் கூட்டங்கள் விண்மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் வான் தாய் தன் கண்ணீர்க் கடலின் கட்டுழடத்துவிட்டாள். இடிமின்னல் இடையிடையே தம் கண்களைத் திறந்து மூடின. கடல்த் தாயும் இயற்கையன்னையின் சிற்றத்தால் குழம்பிப் போனாள். அதனால் பேரலைகள் எழுந்தன. பயணம் தொடர்ந்தார்கள். யார் அறிவார்கள். அந்தக் கொடியோரின் குண்டுகள் இவர்களின் உயிரைக் குடிக்க காத்திருக்கின்றது என்று. கச்சதீவு கடல் மீது பேரினவாதப் பேய்களின் முன்று டோராக்கள் நேர் எதிரே தம் உயிர் பறிக்கும் கருவிகளின் குழாய்களை நீட்டி விட்டு இருந்தன. எதிர் பாராத பெரும் சமர் மூண்டது. பகைவனின் மூன்று படகுகளும் இவனது படகைச் சூழ்ந்து கொண்டன. இவகளிடம் ஆழ் ஆயுத பலம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. எனினும் பிரபாகரனின் பிள்ளைகள் இவர்கள் இவர்களிடம் மனோபலம் மலையாக இருந்தது. அந்த வேளையில் எதிரியின் படகில் இருந்து பாய்ந்து வந்த குண்டொன்று இவன் மார்பைத் துளையிடுகின்றது. இவன் கடல் மீது தன் இதழ்களைப் பதிர்ந்து முத்தம் ஒன்றை அளித்துவிட்டு மாவீரர் என்ற மகுடம் தன்னை சூடிக் கொள்கிறான். இவனின் வித்துடலை கடலன்னை தன்னோடு அணைத்துக் கொள்கிறாள் இவன் கரம் சுமந்த துப்பாக்கி இளைய புலிவீரன் கரம்மீதிலிருந்து எதிரியின் திசை நோக்கி அனல் கக்குகிறது.. இவன் நினைவுகளைச் சுமந்து கரிகாலன் படை, பகைகுகையினுள்ளே பாய்கின்றது. தமிழீழம் என்ற பூவிங்கே மலரும் மட்டும் இப்
0 Comments:
Post a Comment