-->

தமிழீழம் (Tamil Eelam)



தமிழீழம் (Tamil Eelam)

தமிழீழம் (Tamil Eelam) எனப்படுவது இலங்கைத் தமிழ் மற்றும்முஸ்லீம் தேசிய இனங்கள் தமது தாயக பிரதேசமாக கருதும்இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களை இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும்.
தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரைபிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டபெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.
தமிழீழக் கோரிக்கை 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில்தமிழரசுக்கட்சியினுடைய நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.

சுயநிர்ணய உரிமைப் போர்
தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை அல்லது தனிநாட்டுப் பிரிவினையை வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டுப் போர், ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெறுகின்றது. அரசியல் ரீதியான கோரிக்கைகளும், சாத்வீகப் போராட்டங்களும் 1956-ஆம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டன.

தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ இயக்கங்கள்
 தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)
 தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)
 தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)
 இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)
 தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (TPDF)
 தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
 தமிழீழ விடுதலை இயக்கம் (TELO)
 ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (EROS)
 ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (EPRLF)
 ஈழ தேசிய விடுதலை முன்னணி TELO.EROS.EPRLF.LTTE (ENLF)
 தமிழர் மக்கள் விடுதலைக் முன்னனி (PLOT)
 தமிழீழ விடுதலை இராணுவம் (TELA)
 தமிழீழ இராணுவம் (TEA)
 புரட்சிகர ஈழ விடுதலை இயக்கம் (RELO)
 தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT)
 மக்கள் தேசிய விடுதலை முன்னணி (PLFT)
 தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (TPSO)
 தமிழீழ விடுதலை தீவிரவாதிகள் (TELE)
 தமிழீழ புரட்சி அமைப்பு (TERO)
 தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)
 தமிழீழ செம்படை (RFTE)
 தமிழீழ தேசிய இராணுவம் (TENA)
 ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF)
 ஈழமக்கள் ஜனநாயக முன்னணி (EPDP))
 தமிழீழ பாதுகாப்பு படை (TEDF)
 ஈழ விடுதலை புலிகள் (ELT)
 தமிழீழ கொரில்லா இராணுவம் (GATE)
 தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (NDPT)
 தமிழீழ கழுகு முன்னணி (TEEF)
 இலங்கை விடுதலை தமிழ் இராணுவம் (IFTA)
 ஈழ புரட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)
 தமிழீழ புரட்சிகர மக்கள் விடுதலை இராணுவம் (TERPLA)
 தீப்பொறி
 கழுகு படை (EM)
 தமிழர் பாதுகாப்பு பேரவை
 தமிழீழ விடுதலை கோப்ராக்கள் / நாகம் படை (TELC)
 தமிழீழ கொமாண்டோக்கள் (TEC)
 சமூக புரட்சி சமூக விடுதலை (SRSL)
 தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி)
 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம்
இந்திய நலன்களுக்கும், மேலாதிக்க சக்திகளுக்கும் சார்பாக இருத்தல் தொடர்பான உட்சந்தேகங்கள், அதிகாரப்போட்டிகள், சகோதரக் கொன்றொழிப்புக்கள் போன்ற நிகழ்வுகளைத்தொடர்ந்து இப்போராட்டத்தை தொடக்கிய, கொண்டு நடத்திய தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே தற்போது தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவருகிறது.

அரசியல் அமைப்பு
தமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த அரசாங்கம் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதன்று.
தமிழீழ பகுதியில் பெரும்பான்மை நிலப்பரப்பின் பகுதியின் நிர்வாகம், நீதிமன்றம், கட்டமைப்புகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி பெரும்பாலான அம்சங்களுடன் செயல்பட்டுவருகிறது. இந்த பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ, நிர்வாக அடிப்படையில் துண்டிக்கப்பட்டதாக அமைந்துள்ளது.

தமிழீழத்தில் முஸ்லீம்கள்
தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை முஸ்லீம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லீம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.
யாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் 90களில் அவர்களைத் தீடீர் கட்டளையின் கீழ் வெளியே செல்லும்படி பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்கமுடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முஸ்லீம்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் அவர்களை மீண்டும் யாழில் குடியமர அழைத்தார்கள்

தமிழீழத்தில் சிங்களவர்
ஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள்.
தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.
கிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.

தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை
இந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இந்திய வம்சாவழித் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றதெனலாம்.

சமூக அமைப்பு
தமிழீழச் சமூகம் ஒரு சாதிய படிநிலை அடுக்கமைவு கொண்ட சமூகம். வெள்ளாளர் எனப்படும் பெரும்பான்மை வேளாண்மை நில உடமைச் சமூகமே ஆதிக்கமிக்க சாதியாகும். பிராமணர்களிடம் ஆதிக்கமிக்க சாதியாகத் திகழக்கூடிய அளவுக்குக் சனத்தொகை இல்லை. தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் தொடர் போராட்டம் காரணமாகவும், ஈழப்போராட்டம் காரணமாகவும் சாதிய அமைப்பு பெரும்பாலும் பலம் இழந்து இருக்கின்றது. எனினும் திருமணத்தின் ஊடாக தொடர்ந்து சாதிய அமைப்புப் பேணப்பட்டே வருகின்றது

தமிழீழ மொழிகள்
தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்)பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளி தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும். மேலும், புலம்பெயர் தமிழர்கள் பல மொழி தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்.

தமிழீழ மொழிகள்
தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்)பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளி தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும். மேலும், புலம்பெயர் தமிழர்கள் பல மொழி தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்.

தமிழீழத்தில் சமயங்கள்
தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி காலனித்துவ அரச சலுகைகள் காரணமாகவோ சமயம் மாறியவர்கள் ஆவர். தமிழ்க் கிறிஸ்தவர்களின் ஈழப் போராட்டத்துக்கான பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் மற்றும் பெளத்தம் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.

கல்வி
தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கித்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் இரு பல்கலைக்கழகங்கள் ஆகும்.

பொருளாதாரம்
தமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். தற்சமயம் ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.

உலகமயமாதல்
நவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியுள்ளது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு NGOs, நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முக பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.

எதிர்காலம்
தமிழீழத்தின் எதிர்காலம் அதன் அரசியல் நிலைமைகளிலேயே தங்கியுள்ளது. இனப்பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைத்தால் தமிழீழம் ஒரு வளர்ச்சிமிக்க சமூகமாக பரிணாமிக்க சந்தர்ப்பம் உண்டு. எவ்வித தீர்வும் இல்லாமல் இழுப்பறி நிலை தொடர்ந்தாலோ போர் மீண்டும் வெடிக்கும் தமிழீழம் என்ற இலக்கினை எட்டும்வரை.
‘’எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது’’
:-தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

‘’இணைய தளங்களில் இருந்து பெறப்பட்டவையை வைத்து தொகுக்கப்பட்டது. அந்த இணையத்தளங்களுக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும்’’

நன்றி
இலக்கியன்

தமிழினம்





சிங்கள இனவெறியரால்
எமதினம் சிதைபட்டு
திட்டமிட்டு அழிபடும் வேளையிலே
எமதினத்தின் விடுதலைக்காய்
வல்வெட்டித்துறையிலே ஊரிக்காட்டுமண்ணிலே
வீரத்தாய் பெற்றெடுத்த வீரப்புதல்வனே
நீ வாழும் இவ்வுலகில்
நாம் வாழ பெருந்தவம் செய்தோமே

ஈழத்தமிழரின் தேசியத்தலைவரே
உலகத்தமிழரின் அழியா முகவரியே
எமதினத்தின் வரலாற்று பொக்கிசமே

விளையாட்டு வயதிலே
இளமை பருவத்திலே
பொங்கி எழுந்தாயோ
புரட்சி தீயாய்

மட்டக்களப்பிலே தமிழீழமண்ணெங்குமே
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் கண்டு
சீறி எழுந்தாயோ சிறுத்தைப் புலியாய்

தமிழினம் வாழும் இடமெங்கும்
விடுதலை விதையை விதைத்து
இன்று பெரு விருசு;சமாய் வளர்ந்து
எம்மை காத்து நிற்கும் மாபெரும் தலைவனே

மாவீரர் திருநாள்
எமதுயிர் தலைவர் பிறந்த மறுநாள்
உலகத்; தமிழினம் காத்திருக்கம் பெருநாள்

வன்னி மண்ணிலிருந்து
விடுதலைப் பேரொலியாய்
எமது தலைவரின் குரலொலிக்கும்
சிங்களப் படை நடுங்கும்
மகிந்தவின் தலைபிசகும்
உலகெங்கும் செய்தியறியும்
தமிழீழமெங்கும் புலிக்கொடி பறக்கும்

வீரத்தாய் பெற்றெடுத்த வீரத்திரு மகனே
வாழ்க தலைவரே வாழ்க பல்லாண்டு
வாழ்க வாழ்கவே

மேதகு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைத்துளிகள்




நீதியும்,
சத்தியமும்
தமிழர் பக்கமாகவே நிற்கின்றன
தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளேயன்றி
வேறொன்று மல்ல
அரசியல் தர்மம் தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கிறது
* * * * * *

உலகில் மனித உரிமைகள்,
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
நிகழ்ந்த போது
தலையிட்டும்,
குரலெழுப்பியும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம்
ஈழத்தமிழரின் பேரவலத்தைக்கண்டும்
மெளனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது
* * * * * *

தமிழீழ மக்கள் அனுபவித்து வரும் பேரவலம் உலகத்தின் புருவத்தை
உயர்த்தவில்லை என்பது ஒருபுறம் ஆச்சரியமாகவும் மறுபுறம் வேதனையாகவும்
இருக்கிறது
* * * * * *

எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு
இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில் ஒரு ஆட்சி முறையை
அமைத்து வாழவே நாம் விரும்புகின்றோம்
* * * * * *
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ,
ஒவ்வொரு பக்கத்திலும் ,
எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது
* * * * *
* * * * *
மேதகு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைத்துளிகள்

1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்



1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்


எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்வதில் பெரும்பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இதனை வரலாறு மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கை வரலாற்றை அறிய உதவும் நூல்களில் மகாவம்சம் முதன்மையானது. இந்நூலின் கூற்றுப்படி கி.மு. 06 ஆம் நூற்றாண்டின் பின்பே இங்கு மனிதக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அந்த குடியேற்றங்கள் வட இந்தியாவிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்ல, ஆரியர் என்ற இனத்தவர்களே இங்கு முதலில் குடியேறினர் என்பதும் மகாவம்சம் தரும் தகவலாகும். ஆனால், ஆரியர் வருகைக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை தொல்லியல் ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன. ஆரியர் வருகைக்கு முன்பு இங்கு வாழ்ந்தவர்களை அமானுஷர் என்று (நாகரிகமடையாதவர்) மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த அமானுஷர்கள் யார்? என்பதனை ஆய்வாளர்கள் தொல்லியல், மானிடவியல், வரலாறு ரீதியாக மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் திராவிடர் என்பதனை தற்காலத்தில் நிறுவியுள்ளனர்.

மகாவம்சத்தை எழுதிய மகாநாமர், தன் இனம் (சிங்களவர்), தன்மதம் (தேரவாத பௌத்தம்), தன்மொழி (சிங்களம்) என்பனவற்றின் மீது கொண்டே உயர்ந்த பற்றுக்காரணமாக, பக்கச்சார்பான கருத்தை இந்நூலின் மூலம் வெளியிட்டுள்ளார். இவை மறுக்கமுடியாத உண்மை. எனவேதான், தான் சார்ந்த இனம், மதம், மொழி என்பனவற்றை உயர்வாகக் காட்டிய அதேவேளை, தமிழர்கள் தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுத்து அவர்களைப் புறம்தள்ளி சிங்களவர்களை உயர்வாக காட்ட முற்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, குறித்த காலத்தில் வாழ்ந்த ஏனைய மக்களின் மதம், மொழி, பண்பாடு தொடர்பான தகவல்களைத் திரிபுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக காட்டியுள்ளார். அதாவது, கி.மு. 247 இல் பௌத்தம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்தான் இங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகமடைந்தனர் என்ற கருத்துப்பட கூறியுள்ளார். அக்காலத்தில் காணப்பட்ட ஏனைய மதங்கள் தொடர்பான தகவல்களை மறைத்து தேரவாத பௌத்த மதம் தொடர்பான தகவல்களை முதன்மைப்படுத்தியுள்ளார்.

பௌத்த மதத்தில் தேரவாதம், மகாஜனம் எனும் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன. மகாவிகாரையை மையமாகக்கொண்டு வளர்க்கப்பட்ட, தான்சார்ந்த தேரவாத பௌத்த பிரிவு பற்றி சிறப்பித்து மகாநாமதேரர் குறிப்பிட்டுள்ளார். அபயகிரி விகாரையை மையப்படுத்திய மகாஜன பௌத்த பிரிவு பற்றியோ, ஏனைய மதங்கள் பற்றியோ உண்மையான தகவல்களை அவர் மறைத்து விட்டார்.

இதேபோன்றுதான் தமிழ் மன்னன் எல்லாளன் என்பவருக்கும் துட்டகைமுனுவுக்குமிடையில் நடைபெற்ற அரசியல் ரீதியான ஆதிக்கப் போராட்டத்தை, தமிழருக்கும் சிங்களவருக்குமிடையில் நடைபெற்ற இனப்போராட்டமாக மகாநாமதேரர் காட்டியுள்ளார். உண்மையில், கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த நாட்டில் இன, மத, மொழி அடிப்படையிலான போராட்டங்கள் இடம்பெற்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறிக்கொள்ளலாம்.

துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று நடைபெற்றதாகவும், அதில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் மகாவம்சம் தகவல்களைத் தருகின்றது. பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் போன்ற வரலாறு, தொல்லியல் துறைசார் ஆய்வாளர்கள், இந்த யுத்தம் இன, மத, மொழி ரீதியாக நடந்ததற்குச் சான்றுகள் இல்லை என்றும் மாறாக அரசியல் ஆதிக்கமே பிரதானமாக இருந்ததென்றும் காட்டுகின்றனர். எனவே, இனரீதியான வன்முறைகள் 1915 இன் வரை நடைபெற்றதாக தெரியவில்லை. அரசியல் ரீதியான ஆதிக்கமே காலத்துக்கு காலம் யுத்தங்கள் நடைபெறப் பிரதானமான காரணமாக இருந்தன என்பது நோக்கத்தக்கது.

ஐரோப்பியர் இலங்கையை ஏறத்தாழ 450

வருடகாலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செலுத்தினர். ஆங்கிலேயர் 1796 இல் இலங்கையில் தமது ஆட்சியை நிறுவிய பின்னர் 1815இல் கண்டி உட்பட முழுநாட்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இவர்கள் அதிகாரம் செலுத்திய காலத்திலேதான், இரண்டு இனங்களுக்கிடையிலான இனவன்முறை மோதல் முதன் முதலாக நடைபெற்றது. இது முஸ்லிம், சிங்கள இனங்களுக்கிடையிலான கலவரமாகும். எனவே, முதல் இனரீதியான அடி தமிழருக்கு அல்ல, மாறாக 1915 இல் சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டதென்பது உண்மை.

1833 இல் ஆங்கிலேயரால் சட்டசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1835 இல் அரசாங்க மொழி பெயர்ப்பாளராக இருந்த சிங்களவர் ஒருவர் மற்றும் தமிழர், பேகர் இனங்களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் மூன்று உறுப்பினர்கள் இனரீதியில் நியமிக்கப்பட்டனர்.இனரீதியான நியமனங்கள் 1835 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதென்பத��
� மற்றோர் முக்கிய விடயமாகும். இந்த சட்டசபையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவேண்டி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இனரீதியான பிரதிநிதித்துவத்தின் ஆபத்தினை உணர்ந்ததாலோ என்னவோ, 1910 இல் பிராந்திய பிரதிநிதித்துவத்தினை இலங்கையர் கோரலாயினர். இக்கோரிக்கையினை ஆங்கிலம் கற்ற வகுப்பினர் மேற்கொண்டனர். இதற்காக அகிம்சை போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் அவர்கள் நடத்தினர். 1833 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பில் திருத்தங்கள் கோரி தொடர்ச்சியாக ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட காலம். 1910 1915 இல் இக்கிளர்ச்சி தீவிரமடைந்திருந்தது. 1915 இல் பௌத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்தும் போது குறிப்பிட்ட கம்பளை முஸ்லிம் பள்ளிவாசலைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு எந்தவித ஆரவாரமும் இன்றி செல்ல வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காது ஊர்வலத்தில் ஈடுபட்ட பௌத்த சிங்களவர் செயற்பட்டுக் கொண்டனர். இதனால், இந்திய முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சமூக, பொருளாதார ரீதியாகக் காணப்பட்ட போட்டியானது இந்த கலவரத்திற்கு மற்றொரு காரணமாகவும் கூறப்படுகின்றது.எது எவ்வாறாக இருந்தபோதும், சமயம் சம்பந்தமான இந்த முரண்பாடானது முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயலுக்கு காரணமாயிற்று. இந்த வன்செயலினால், கம்பளையிலுள்ள முஸ்லிம்களின் கடைகள், சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வன்செயல் கொழும்பு, குருநாகல் போன்ற இடங்களுக்கும் பரவிக்கொண்டது. இந்த நிலையைக் கண்டு ஆங்கில அரசு அச்சமøடந்தது. இந்த அச்சத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. அப்போது முதலாம் உலக மகாயுத்தம் தீவிரமடைந்திருந்தது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா முக்கிய பங்கு வகித்திருந்தது.

இதனால் சிங்கள முஸ்லிம் குழப்பத்தின் பின்னணியில் அரசாங்கத்திற்கு விரோதமான சக்திகள் இருப்பதாக ஆளுநர் றொபட்தோமஸ் அச்சமும் ஐயமும் கொண்டார். இதனை அடக்க கடும் நடவடிக்கை எடுத்தார். ஏறக்குறைய நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிய முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களை அடக்க இராணுவச் சட்டத்தை (மார்ஷல்லோ) பிரகடனப்படுத்தினார். எவ்.ஆர். சேனநாயக்க அவரின் சகோதரர், டி.எஸ். சேனநாயக்க போன்ற பல சிங்களத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, கலகத்தை அடக்க எடுத்த கடும் நடவடிக்கையினால் வில்லியம்பதிரிஸ் உட்பட பல சிங்களவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முஸ்லிம் சிங்கள இனமோதல் மூலம் அவர்களிடையே காணப்பட்ட உறவுகள் திருப்தியற்றனவாக மாறிக்கொண்டன.தற்போது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையானது சிங்களவர்களாலும் அவர்களின் ஆட்சியாளர்களினாலும் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவானது. ஆனால், 1915 இல் இடம்பெற்ற முஸ்லிம் சிங்கள வன்முறையானது தாய்நாட்டவர்களுக்கிடையிலான��
�ாக அமைந்த போதும் அவற்றினை அடக்கியவர்கள் அந்நியரான ஆங்கில ஆட்சியாளர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கையின் இன ரீதியான வன்முறையானது தமிழருக்கு எதிராக அல்லாமல் முதன் முதல் முஸ்லிம்களுக்கெதிராகவே நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. சிங்களவர்கள், சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிராக இன்று மேற்கொள்ளும் இனவன்முறையின் முதற்படி 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் நடத்திக் காட்டப்பட்டதென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தனிச் சிங்களச் சட்டமும் தமிழர்களுக்கு எதிரான முதல் இனக்கலவரமும் 1956

இலங்கை சுதந்திரமடைந்த பின்பு சிறுபான்மையோர் புறக்கணிக்கப்பட்ட முதல் வரலாற்றுச் சம்பவம் 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமாகும். அப்போதைய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து கறைபடிந்த இலங்கை வரலாற்றை உருவாக்கினார். இதன் மூலம் தமிழ் மொழியையும் புறக்கணித்தனர்.

இதனை எதிர்த்து 1956 ஜூன் 5 ஆம் நாள் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிங்களமொழி மட்டும் சட்டத்திற்கு ஆதரவான குண்டர்களினால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். தமிழர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சுதந்திர இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்ட முதல் இனக்கலவரம் இதுவாகும். இதன் பின்பு இரண்டு இனங்களும் இரு துருவங்களாக ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் நோக்கும் நிலை தொடரும் நிலை ஏற்பட்டுக்கொண்டது.

1958 இனக்கலவரம்

1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.

ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள "ஸ்ரீ' சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி கோரி பிரதம மந்திரியின் இல்லத்தை முற்றுகையிட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கிழித்துத் தூக்கி வீசப்பட்டது. இதனால், நாடு முழுவதும் தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை சிங்களவர் ஏற்படுத்தினர். இக்கலவரம் 1958 மே 26, 27, 28 ஆம் திகதிகள் வரை நீடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாமுக்குள் புகுந்துகொள்ள நேர்ந்தது.

தமிழாராய்ச்சி மாநாடும் தாக்குதலும்

1974 ஜனவரி 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல வெளிநாட்டுப் பிரமுகர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.

1974 ஜனவரி 10 ஆம் நாள் மாநாட்டில் புகுந்த பொலிஸார் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். எந்தவித காரணமும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது 9 தமிழ்ப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இது மற்றொரு இனரீதியான ஒடுக்குமுறைத் தாக்குதலாகும். இது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இடம்பெற்றது.

1977 இன் இனக்கலவரம்

ஐ.தே.க.வினர் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடக்கும் முன்னர் தமிழருக்கு எதிரான மற்றொரு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. 1977 ஆகஸ்ட் 17 இல் அனுராதபுர புகையிரத நிலையத்தில் வைத்து தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனையடுத்து இனக்கலவரம் ஒன்று வெடித்தது.

இக்கலவரம் இரண்டு வாரகாலம் நீடித்தது. தமிழர்களின் உடைமைகள், உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இக்கலவரம் 1958 ஐ விட சற்று விரிவாக நடத்தப்பட்டது. மலையகத்திற்கும் பரவியது. இலங்கைவாழ் தமிழர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்ததோடு, இடம்பெயர்ந்தனர். இந்த துயரச் சம்பவங்கள் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாதவையாகும்.

1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாத இனக்கலவரம்

இதேபோன்று 1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஐ.தே.க. அரசாங்க காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இன வன்முறை இதுவாகும். அதாவது, ஜே.ஆர். ஆட்சிப் பொறுப்பேற்று நடந்த மற்றொரு துயரச் சம்பவமாகும்.

ஐ.தே.கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்ட தியாகராசா சுட்டுக்கொல்லப்பட்டார். அதுமட்டுமல்ல தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயம் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. 96 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய யாழ். நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. தமிழர்களின் அறிவியல் பொக்கிசம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதை எந்தத் தமிழராலும் ஜீரணிக்க முடியுமா?

யாழ்ப்பாணத்துக்கென நிரந்தர இராணுவ அணி ஒன்று நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பற்றியும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அத்துடன், 1981 ஜூலை 28 ஆம் நாள் ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலையம் தமிழ்ப் போராளிகளினால் தாக்கியழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகைந்துகொண்டிருந்த தமிழருக்கெதிரான மற்றொரு வன்செயல் 1981 ஜூலை 31 ஆகஸ்ட் 1 ஆம் திகதிகளில் திட்டமிட்டு ஐ.தே.க.வில் செல்வாக்குமிக்கவர்களால் இந்த இனவன்முறை முன்னெடுக்கப்பட்டிருந்தமைய���ம் நாம் நினைவு கூரத்தக்கது. கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர். மலையகத்திலும் திட்டமிட்டு தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள், உடைமைகள் சேதமாக்கப்பட்டன. இந்த இனவன்முறையினை அனுபவித்த தமிழர்களால் இதனை மறக்க முடியுமா?

1983 ஜூலை இனக்கலவரம்

1983 ஜூலை 23 ஆம் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் ரோந்து சென்ற படையினரின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் குண்டர்களால் இனவன்முறை மேற்கொள்ளப்பட்டது. இந்த இனக்கலவரத்தின் போது வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 52 தமிழர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட்டவர்களும் அடங்கியிருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்சேதம் ஏற்பட்டது.

தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத துயரச் சம்பவமாக 1983 ஜூலைக் கலவரத்தைக் குறிப்பிடமுடியும். இந்தக் கலவரத்தினால் இழப்புக்களைச் சந்தித்துக்கொண்டவர்களால் என்றும் இந்தக் கலவரத்தை மறக்க முடியுமா?

1983க்கு பிற்பட்ட காலத்திலும் பல இன ரீதியான தாக்குதல் சம்பவங்கள் வரலாற்றில் இருப்புக்கொண்டுள்ளன என்பதனை நாம் குறித்துக்கொள்ள முடியும்.

வீரகேசரி நாளேடு

சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
 
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்குப் போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.
இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.
இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களைத் துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்கள் இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.
முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.
வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.
1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.
மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.
இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.
1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.
யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவுப் படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாகச் செயற்பட்டார்.
வன்னியைச் சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்கக் காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.
தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்குத் தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.
அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.
2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.
போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டுத் தப்பினார்.
பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெறச் சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவு

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவு
[ செவ்வாய்க்கிழமை, 20 மே 2008
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் சாவடைந்துள்ளார்.
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்

இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகளால் 1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முதலாவது கட்டளைத் தளபதி ஆவார். 1993 ஆம் ஆண்டு வரையும் 1995-1997 ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலும் அவர் அப்பொறுப்பை வகித்தார்.
தமிழர்களின் போரியல் திறமையை உலகுக்கு அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 2000ம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றியவர்.
அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ம் ஆண்டு சிங்கப்பூரில் பிரிகேடியர் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்று விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilwin.com

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: ச.பொட்டு

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: ச.பொட்டு

 
தமிழீழத் தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார்.
பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:
பிரிகேடியர் பால்ராஜ் எங்களில் இருந்து பிரியமாட்டார். தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் மறைய மாட்டார்.
அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் வரலாறானது ஒரு சுதந்திரப் போராட்ட வரலாறாக மாறி தமிழர்களின் போரியல் வரலாறாக மாற்றம் பெற்றபோது அதன் நாயகனாக வாழ்ந்தவர் பால்ராஜ்.
போரின் நாயகனாகப் போர்க்களத்தின் மத்தியில் நின்று வழிநடத்திய வீரத் தளபதியாக வாழ்ந்தார்.
எம்மை ஆக்கிரமித்தவர்களுக்குச் சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய தளபதி பிரிகேடியர் பால்ராஜை, எதிரிகளால் கடைசி வரை வீழ்த்திவிட முடியவில்லை.
கொடிய நோய் அவரை எம்மிடம் இருந்து பிரித்து வைத்து விட்ட போதிலும் அவரின் வரலாறு அவர் சாதித்த போர் தொடர்பான சாதனைகள் என்றென்றும் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும்.
அது தமிழர்களின் வீர விடுதலைக்கான சுதந்திரப் போர் இயக்கமாக எம்மை வழிநடத்தும்.
தமிழர்களின் வரலாறு வீரம் செறிந்ததாக புதிதாக எழுதப் புறப்பட்ட காலத்தில் மிக முக்கிய நாயகனாக பால்ராஜ் விளங்கினார்.
தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக-
போர்க்களத்தில் தமது தளபதி எவ்வாறு படைகளை வழிநடத்த வேண்டும் என்ற தேசியத் தலைவரின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகச்சிறந்த "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் அவர்.
போர்க்களங்களில் துணிவுடனும் திறனுடனும் பதறாமலும் நின்று போர் விசாரணைகளை வழி நடத்தும் பண்பு அவருக்கே உரிய பண்பாக- அதுவும் இயல்பான ஒன்றாக- இயற்கையில் வாய்த்ததாக- அமைந்திருந்தது.
இந்திய இராணுவத்தினருடனான எத்தனையோ தாக்குதல்களில் திடீர் முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக நடத்தினார்.
மிக இளம் வயதில் அவர் கிராமப்புறம் சார்ந்த வாழ்கையை மேற்கொண்டிருந்ததால் கிராம வாழ்க்கை அவருக்குப் பிடித்திருந்தது.
ஆனால் அந்தக் கிராம வாழ்வுக்குள்ளும் மக்களை வழி நடத்துவதற்கான சிந்தனை அவருக்குள் இருந்தது.
படைப் பயிற்சிகளில் உளவியல் ஆசானாக இராணுவத் தலைமைத்துவனாக வெளிக்காட்டியவர்.
தமிழ் மக்களினதும் போராளிகளினதும் மன உறுதியை வளர்ப்பதில் சிறந்து விளங்கியவர் பால்ராஜ்.
பால்ராஜ் நோயினால் வீழ்ந்தது மனதைப் பிழியும் விடயம்.
அதேவேளை எதிரியால் அவரை வீழ்த்த முடியவில்லை என்பதும் எந்தவேளையிலும் எதிரியிடம் அவர் வீழந்துவிடவில்லை என்பதும் நாம் பெருமைப்படும் விடயம்.
ஆனால் அவர் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கான போர்க்களத் தளபதியாக இல்லாது வீழ்ந்து விடத் தயாராக உள்ள போர்க்களத் தளபதியாக செயற்பட்டார்.
பல்வேறு தாக்குதல்களில் பாரிய விழுப்புண்களை ஏந்தினார்
பால்ராஜ் வரலாற்றை படைத்தவர்.
வரலாற்றுக்கான சமர்களை வழிநடத்தி வென்றவர்.
அதற்காக குருதி கொடுத்து போர்க்களத்தில் நின்று சுழன்று போராடி வழிநடத்தியவர்.
சாவுக்குள்ளும் அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதையும் தமிழர்களுக்கான வீர விடுதலை வரலாற்றை தனது வாழ்வின் ஊடாக எப்படி நடத்தினார் என்பதையும் நாங்கள் பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களின் வீர விடுதலை வரலாற்று நாயகனாக வாழ்ந்தார்.
அவரது சாவைப்பற்றி அல்ல அவரது வாழ்வைப்பற்றி பெருமை கொள்வோம்.
அவரது வாழ்வு தமிழர்களின் விடுதலை வரலாற்றுக்கான இன்றியமையாத அத்தியாயமாக பதிந்து விட்டது என்பது பெருமை என்றார் அவர்.

பிரிகேடியர் பால்ராஜ் இறுதி வணக்கம்

விடைபெற்றார் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்
[ வெள்ளிக்கிழமை, 23 மே 2008
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார்.
தாய் மண்ணின் விடுதலைக்காக தன்னை முழுதாக ஒப்படைத்து பெருவெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து- திருப்புமுனைகளை ஏற்படுத்திய தளபதி பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் தளபதிகள், போராளிகள், பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்கத்துடன் இன்று  (வெள்ளிக்கிழமை, 23 மே 2008) முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.
மாரடைப்பால் சாவடைந்த பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வீரவணக்கம் செலுத்தியதனைத் தொடர்ந்து வித்துடல் தாயக மண் எங்கும் வலம் வந்து மக்கள் பல்லாயிரக்கணக்கில் இறுதி வணக்கம் செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.
மல்லாவி- கிளிநொச்சி- வட்டக்கச்சி- புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வைக்கப்பட்டு அங்கு வீரவணக்கக் கூட்டங்கள் நேற்றும், இன்றும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வித்தாகி வீழ்ந்த தமது தளபதிக்கு வணக்கம் செலுத்தினர்.
தளபதிகள், பொறுப்பாளர்கள் பிரிகேடியர் பால்ராஜின் போராட்ட வீரவரலாற்றை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து தமது வீரத்தளபதியின் விடுதலைக் குறிக்கோளை தமது உள்ளங்களில் இருத்தி உறுதி எடுத்துக்கொண்டு பிரிகேடியர் பால்ராஜூக்கு தமிழினம் விடை கொடுத்துள்ளது.
தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வணக்கம் செலுத்த பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.
முன்னதாக முல்லைத்தீவு நகரில் இன்று நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்க நிகழ்வு கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி பூரணி ஏற்றினர்.
உடன்பிறப்புக்கள் ஈகச்சுடரேற்றி, மலர்மாலைகளை சூட்டினர்.
தளபதி லக்ஸ்ம்ன, கடற்புலிகளின் தாக்குதல் தளபதி காதர் மலர்மாலை சூட்டினர்.
வீரவணக்க உரையை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை நிகழ்த்தினார்.
தொடர்ந்து வித்துடல் முள்ளியவளைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி வீரவணக்க நிகழ்வு முள்ளியவளை கோட்டப் பொறுப்பாளர் உமைநேசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரை மாவீரர் பணிமனை பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.
ஈகச்சுடர்களை உடன்பிறப்புக்கள் ஏற்றினர்.
மலர்மாலைகளை
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்
வடபோர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன்
மூத்த உறுப்பினர் செ.வ.தமிழேந்தி
தலைமைச் செயலகச் செயலர் சீரன்
தளபதி லக்ஸ்மன்
தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன்
போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ்
தளபதி கேணல் ஜெயம்
நிதித்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான  குட்டி
சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன்
நீதி, நிர்வாகப் பொறுப்பாளர் பரா
மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் மாறன்
மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர்களில் ஒருவரான மனோஜ்
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் சி.கரிகாலன்
மகளிர் மூத்த உறுப்பினர் தீபா
புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன்
தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் இளங்கோ
சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி துணைத்தளபதி அமுதாப்
கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம்
உள்ளிட்டோர் சூட்டினர்.
வீரவணக்க உரைகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்கால வீரத்தின் குறியீடு பிரிகேடியர் பால்ராஜ்: யோகி

நிகழ்கால வீரத்தின் குறியீடு பிரிகேடியர் பால்ராஜ்: யோகி

 
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.
யோ.செ.யோகி வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் போராட்டத்தில் காலத்துக்கு காலம் வீரத்தின் குறியீடாக ஒவ்வொருவர் விளங்குவர். எத்தனை வீரர் இருந்தாலும் குறியீடாக ஒரு சிலரே விளங்குவர்.
இன்றைய காலத்தில் தமிழீழ வீரத்தின் குறியீடாக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்குகின்றார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்கினார்.
வன்னி-முல்லைத்தீவு-மணலாறு களங்களில் மேஜர் பசீலன் அவர்களுடன் இணைந்து எதிரிக்கு எதிராக களமாடிய பால்ராஜின் திறன்களை இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் மணலாறு காட்டுக்குச் சென்ற தமிழீழத் தேசியத் தலைவர் அடையாளம் காண்கின்றார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உயர்நிலைத் தளபதிகள் எல்லோரும் வியந்து ஏற்கும் திறன் கொண்டவராக செயற்பட்டார்.
தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செயற்படுத்துபவராக பிரிகேடியர் பால்ராஜ் விளங்குகின்றார்.
தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிகழ்கால வீரத்தின் குறியீடாக அவர் விளங்குகின்றார் என்றார் அவர்.

பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தேசியத் தலைவர், தளபதிகள் வீரவணக்கம்

பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தேசியத் தலைவர், தளபதிகள் வீரவணக்கம்

 
 
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார்
மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் ஆகியோரும்
தளபதி மாசல்

மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத்தளபதி கீர்த்தி

 திருகோணமலை மாவட்ட சிறப்புத்தளபதி வசந்தன்

சிறப்பு வேவுப்பிரிவு தளபதி சசிக்குமார்

படைத்துறை மூத்த ஆசிரியர் தினேஸ்

முதன்மை உறுப்பினர் தமிழேந்தி

உள்ளக புலனாய்வுத்துறைப் பெறுப்பாளர் கபிலன்

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன்

கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத்தளபதி மணிவண்ணன்

குட்டிசிறி மோட்டார் படையணித்தளபதி கோபால்

குட்டிசிறி மோட்டார் படையணி மகளிர் தளபதி பவநிதி

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத்தளபதி கோபித்

படையத் தொடக்க பயிற்சிக்கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன்

படையப் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் தளபதி இரத்தினம்

மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் மாறன்

தளபதி ஜெரி

தளபதி விக்கீஸ்

தளபதி லோறன்ஸ்

உட்பட்ட தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து வித்துடல் வணக்கத்துக்காக மல்லாவியில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8:30 மணிக்கு மல்லாவியில் வீரவணக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து வித்துடல் மாங்குளத்தில் மலர் வணக்கத்துக்காக வைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் வீரவணக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து வட்டக்கச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பிலும் நாளை முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய பகுதிகளில் மக்கள் வணக்கத்துக்காக வித்துடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்

 
இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,
விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.
பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்பதுயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களிலெல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.
தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல்மிக்க, ஆளுமைமிக்க இலட்சியப்போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படைநகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.
பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
………………
(வே.பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

அதியுச்ச உழைப்பு முழுவதையும் விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: கேணல் தீபன்

அதியுச்ச உழைப்பு முழுவதையும் விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: கேணல் தீபன்

 
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ் என்று வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் புகழாரம் சூட்டினார்.
கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய வீரவணக்க உரை: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் இந்த விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ். பிரிகேடியர் பால்ராஜ் களத்தில் நிற்கின்றார் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும். எதிரிகளுக்கு நடுங்கும். எதிரியை கலங்கவைத்து  எதிரியை சிதறடித்து இந்த விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைகளுக்கு காரணமாக இருந்த முதன்மைத் தளபதியாக தளபதி பால்ராஜ் விளங்குகின்றார்.
தளபதி பால்ராஜ் என்றால் ஒவ்வொரு சிங்களப்படைக்கும் தெரியும். அந்தளவுக்கு எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக தளபதி பால்ராஜ் விளங்கினார். ஒவ்வொரு போராளிகளையும் உணர்வூட்டி அவர்களை எந்த எதிரிக்கும் எதிராக கிறங்காது பதற்றம் இல்லாமல் நின்று சண்டையிட வைப்பார். அந்தளவுக்கு போராளிகளுக்கு உறுதியையும் உற்சாகத்தையும் கொடுத்து தானும் களத்தில் உறுதியாகவும் உற்சாகமாகவும் நின்று வெற்றிகளுக்காக உழைப்பார் சண்டைக்களங்களில் அவரின் உறுதி- வீரம்- துணிச்சல்- ஆளுமை எல்லாவற்றையும் பார்க்கலாம்.
சாள்ஸ் அன்ரனி படையணியை உருவாக்கும் பொறுப்பு தேசியத் தலைவரால் அவருக்கு வழங்கப்பட்ட போது அதனை உருவாக்க முழுதாக உழைத்தார். இன்று எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக சாள்ஸ் அன்ரனி படையணி இருக்கின்றது எனில் அதற்கு தளபதி பால்ராஜ்தான் பின்னணியில் இருக்கின்றார். ஆனையிறவு வெற்றிகொள்ளப்பட குடாரப்பில் தரையிறங்கி எதிரியின் வியூகத்துக்குள் 34 நாட்கள் உறுதியாக நின்று வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.
34 நாட்களும் அவர் எதிரியின் உச்சபலத்துக்குள் உறுதியாக நின்று எதிரி நியமித்த 5 தளபதிகளையும் தோற்கடித்தார். பால்ராஜின் வரலாறு அழிக்கப்பட முடியாதது. ஆழமாக முத்திரையை அவர் பதித்துள்ளார்.  வீரம் என்றால் தளபதி பால்ராஜ் வீரத்துக்கு மறுபெயர்- துணிவுக்கு மறுபெயர் தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அவரின் வரலாறு அவரது வீரம் நம் எல்லோரிடமும் இருக்கவேண்டும்.
"நாம் எப்போதும் வீழ்ந்திடலாம். நம் போராட்டத்தின் வீச்சு- வேகம் ஒவ்வொருவரின் இழப்புக்களிற்குள்ளாகவும் வரவேண்டும்" என்பார் பால்ராஜ்.

போராட்டம் என்றால் இழப்புக்கள் ஏற்படும். இழப்புக்கள் இல்லாமல் போராட்டத்தை வெல்ல முடியாது. தளபதிகள் பலர் தம்மை அர்ப்பணித்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரதும் இழப்புக்களும் எமது போராட்டத்தை வீச்சாக்கித்தான் இருக்கின்றது. அவர்கள் தமது வீரத்தையும் வரலாற்றையும் தந்துவிட்டுச் சென்றுள்ளனர். அதனை நாம் உள்ளத்தில் நிறுத்த வேண்டும். பிரிகேடியர் பால்ராஜின் கனவு அவரது எதிர்பார்ப்பு எதற்காக அவர் தன்னை ஈய்ந்தாரோ அதனை நாம் உறுதியாக நிறைவேற்றுவோம்.
அவரது வீரத்தையும் வரலாற்றையும் உழைப்பையும் நம் உள்ளத்தில் எடுத்துக்கொண்டு அவரது எண்ணங்களை கனவுகளை நாம் நிறைவேற்ற உழைப்போம். அதற்கு எல்லோரும் தயாராவோம் என்றார் கேணல் தீபன். கிளிநொச்சியில் பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்க நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.

வித்துடலுக்கான ஈகச்சுடர்களை பிரிகேடியர் பால்ராஜின் உடன்பிறப்புக்களான சந்திரசேகரம், ஞானசேகரம் ஆகியோர் ஏற்றி மலர்மாலைகளைச் சூட்டினர்.
வட போர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன், போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ், தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன், நீதி- நிர்வாகப் பிரிவுப் பொறுப்பாளர் பரா, அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், தளபதி வசந்தன், தளபதி குமணன், தளபதி வீமன், சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணித் துணைத் தளபதி அமுதாப், தளபதி முகுந்தன், மருத்துவப் பிரிவைச் சேர்ந்த தேவா உள்ளிட்டோர் மலர்மாலைகளைச் சூட்டினர்.
மாங்குளம்

பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மல்லாவியிலும் மாங்குளத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உணர்வுபூர்வமாக வீரவணக்கம் செலுத்தினர். பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்கக் கூட்டம் மல்லாவி மாவீரர் மண்டபத்தில் மல்லாவிக் கோட்டப் பொறுப்பாளர் செம்மணன் தலைமையில் நடைபெற்றது.  பொதுச்சுடரினை வட போர்முனைத் தளபதிகளில் ஒருவரான ஜெரி ஏற்ற, ஈகைச்சுடரேற்றி மலர்மாலையை உடன்பிறப்பு சந்திரன் சூட்டினார்.
அவரைத் தொடர்ந்து மலர்மாலையை உடன்பிறப்பு ஞானம், மருமகன் சதீஸ், தளபதி கேணல் றமேஸ் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், தளபதி குமரனின் துணைவியார், சாள்ஸ் அன்ரனி துணைத்தளபதி அமுதாப், திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன், மல்லாவி மத்திய கல்லூரி அதிபர் யேசுதானந்தன், யோகபுரம் மகாவித்தியாலய முதல்வர் யோகானந்தர், பாலிநகர் பாடசாலை முதல்வர் கிருஸ்ணபிள்ளை, மல்லாவி வட்ட தேசியப் பணிக்குழுச் செயலாளர் சுந்தரலிங்கம், கனகராயன்குள கோட்டப் பொறுப்பாளர் ஞானவேல், ஆலங்குள மாவீரர் துயிலும் இல்லப் பொறுப்பாளர் இளம்பிறை ஆகியோர் சூட்டினர்.
வீரவணக்க உரையை தளபதி றமேஸ் ஆற்றினார்.  பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர். வித்துடல் மாங்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner