-->

திரு. வேலுப்பிள்ளை அவர்களின் நினைவுமலர் -- பாகம் .3.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

வரைபடத்தை திருத்துவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் நான் திகைத்தபோது , அவர் தொடர்ந்தார். “இதை முற்றிலுமாக சரியாகச் செய்யக்கூடியவர் ஒருவர் இருக்கிறார் . அவரிடம் நீங்கள்தான் பேசி அதைச் செய்யவைக்க வேண்டும்” என பிரபாகரன் கூறியபோது அருகிலிருந்த பேபி சுப்பிரமணியமும் மற்றவர்களும் சிரித்தனர். எனது திகைப்பு மேலும் அதிகமாயிற்று . பேபி குறுக்கிட்டு “அண்ணா! தலைவரின் தந்தைதான் இதை சரியாகச் செய்யக்கூடியவர் . அவரிடம் நீங்கள் பேசி இதை எப்படியாவது முடிக்கவேண்டும்” என்று கூறினார் . தனது தந்தையிடமிருந்து இந்த உதவியைப்பெற பிரபாகரன் தயங்குவதைப் பார்த்து நான் மனதிற்குள் நகைத்துக்கொண்டேன் . பிறகு திருச்சியில் உள்ள அய்யா வேலுப்பிள்ளையுடன் தொடர்புகொண்டபோது பளிச்சென்று “மகன் கூறினாரா?” என்று கேட்டார் . ஆம் என்று நான் சொன்னபோது அடுத்தவாரம் சென்னை வருவேன் . வந்து செய்து தருகிறேன் என்று சொன்னார் . அதைப்போல சென்னைவந்து ஒருவாரம் எனது வீட்டிலேயே தங்கியிருந்து அந்த வரைபடங்களை எல்லாம் திருத்திக் கொடுத்தார். 1988ஆம் ஆண்டு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று நு} லை நான் எழுதியபோது அய்யா வேலுப்பிள்ளை அதை முழுவதுமாகப் படித்துத் திருத்தங்கள் செய்துதந்தார் . பிரபாகரனின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டமுதல் நு } ல் அதுவாகும். பிற்காலத்தில் அதிலிருந்துதான் பலர் குறிப்புக்களை எடுத்து பிரபாகரனைப் பற்றிய நு } ல்களை எழுதினார்கள். 1989ஆம் ஆண்டில் சூலை மாதம் 23ஆம் தேதி திருச்சியில் அய்யா வேலுப்பிள்ளை தம்பதியரைச் சந்தித்தேன். சந்தித்துவிட்டு நான் திரும்பியபோது பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியானது . உடனடியாக புலிகளின் தலைமை அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு அச்செய்தியில் உண்மையில்லை என்பதை அறிந்தேன் . அய்யா வேலுப்பிள்ளையும் அம்மாவும் இச்செய்திகேட்டு மனங்கலங்கிவிடக்கூடாது என்பதற்காக திரும்பவும் அவசர அவசரமாக அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். ஆனால் வழக்கம்போல அவர்கள் எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் இருந்தார்கள் . பொய்ச்செய்தியை நம்பவேண்டாம் என்று நான் கூறியபோது அய்யா வேலுப்பிள்ளை சிரித்தார். மனைவியைக் காட்டி “இவர் தான் கொஞ்சம் கலங்கிப்போனார் . ஆனால் நான் அவருக்கு தைரியம் கூறினேன்” என்று சொன்னார். அந்தளவுக்கு தனது மகன்மீது அவருக்கு அளவுகடந்த நம்பிக்கையிருந்தது . அதற்குப்பிறகு பலமுறை இருவரும் மதுரையில் உள்ள எங்கள் வீட்டிற்கும் , பாபனாசத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கும் பலமுறை வந்து தங்கியிருக்கிறார்கள் . எங்கள் குடும்பத்திலேயே அவர்களும் அங்கமாகிவிட்டார்கள் என்று சொல்லவேண்டும் . அந்தளவுக்கு எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற சுகதுக்க நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் அவர்கள் உரிமையோடு கலந்துகொண்டார்கள் . சிலவேளைகளில் மகன் மனோகரன் மகள் வினோதினி ஆகியோரின் குடும்பங்களையும் அழைத்து வந்திருக் கிறார்கள் . அந்த நாட்கள் இனியவை. என்றும் மறக்க முடியாது. 1990ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரபாகரனின் அழைப்பையேற்று தமிழீழம் சென்றேன் . விரிவான சுற்றுப்பயணம் செய்துவிட்டு மார்ச்மாதம் நடுவில் தமிழகம் திரும்பினேன் . உடனடியாகத் திருச்சியில் தம்பியின் பெற்றோரைச் சந்தித்து தம்பி கூறிய செய்திகளைத் தெரிவித்தேன். இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டு தமிழீழப் பகுதி முழுவதிலும் புலிகளின் ஆட்சி நடப்பதையும் அங்குள்ள மற்ற நிலைமைகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூறினேன். அவர்களின் பேரக்குழந்தைகளான சாள்ஸ், துவாரகா ஆகியோரின் படங்களை எடுத்துக் கொடுத்தபோது வயதுமுதிர்ந்த அந்த இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை . முதன்முதலாக தங்கள் பேரக் குழந்தைகளின் படங்களை பார்த்தபோது அவர்களின் விழிகளில் நீர் துளிர்த்தது . 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பார்வதி அம்மையாரைப் பக்கவாதம் தாக்கிற்று. அதன் விளைவாக அவர் கை, கால்கள் செயலற்றுப்போயின. அந்தச் சூழ்நிலையில் அவர்களை ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது . முசிறியில் உள்ள டாக்டர் இராசேந்திரன் தாமாகவே முன்வந்து அவரது வீட்டில் வைத்து மருத்துவமும் பார்த்து அவர்களை நன்கு பராமரித்தார். அம்மையாரின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறியது . சில வாரங்களுக்கு ஒருமுறை முசிறி சென்று அவர்களைப் பார்த்து நலம் விசாரித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் . பிறகு அவர்கள் தாயகம் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தபோது நான் வெளியில் இல்லை . பொடாக் கைதியாக சிறையில் இருந்தேன் . அதற்குப் பின்னர் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவேயில்லை . 2005ஆம் ஆண்டில் வழக்கறிஞர் சந்திரசேகரன் தமிழீழம் சென்று பிரபாகரன் அவர்களையும் அவரின் பெற்றோரையும் சந்தித்துப் பேசிவிட்டு திரும்பினார் . அவர்கள் நலமாக இருப்பதாக அவர் கூறிய செய்தி எனக்கு நிம்மதியை அளித்தது . பின்னர் அந்த போர்ச்சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் கவலையடைந்தேன் . தனது பெற்றோரைப் போன்ற ஏராளமான வயதானவர்கள் போர்ச்சூழலில் சொல்லொன்னாத துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும்போது தனது பெற்றோரை மட்டும் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க பிரபாகரன் விரும்பவில்லை . அவர்களும் அவ்வாறு பத்திரமாக வெளியேற விரும்பவில்லை . தங்களுடைய புதல்வன் தலைமையில் நடைபெறும் விடுதலைப் போரட்டத்தின் போது அருகேயே இருப்பதுதான் தாங்கள் செய்யும் உதவியென அவர்கள் உறுதியோடு இருந்தார்கள். கடந்த எட்டுமாதங்களாக முகாமில் அவதிப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப் போலவே இவர்களும் அவதிக்குள்ளானார்கள் . தாங்கமுடியாத கொடுமைகளையெல்லாம் தாங்கிக்கொண்டார்கள். தங்கள் தலைவனின் பெற்றோர்கள் படும் துயரைப் பார்த்த மக்கள் மனம் கலங்கினார்கள் . ஆனாலும் அவர்கள் இருவரும் தங்களுடனேயே இருந்து அந்தத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டதைப் பார்த்து அந்த மக்கள் நெக்குருகி னார்கள் . திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பெருவீரனின் தந்தை மட்டுமல்ல , எக்காரணத்தைக் கொண்டும் அரசிடம் மன்றாடி முறையிட்டு விடுதலை பெறவேண்டும் என்று ஒருபோதும் எண்ணாத திண்ணிய நெஞ்சுரம் கொண்ட அவரும் ஒரு மாவீரரே! இறுதிவரை துன்பச் சூழலிலேயே வாழ்ந்து வீர மரணத்தைத் தழுவிக்கொண்டார் . அப்பா…….. - செந்தமிழன் சீமான் - ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த எம் இனத்தை விடுவிக்க வந்த பகலவன் ! எம்மினத்தின் சூரியன்! உலகத் தமிழர்களால் தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கப்படுகின்ற தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்பற்ற தலைவன் அன்னைத்தமிழ் ஆயிரமாண்டுகளாய்த் தவமிருந்து பெற்ற வீரப்பிள்ளை – எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரனை எமக்குத் தந்த மாதந்தை…… வேலுப்பிள்ளை . அப்பா…. உலகின் இனிமையான உறவு, சூரியனின் கதிர்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் அன்றாட விடியலுக்கு இப்புவியை அழைப்பது போல, இந்த மூன்றெழுத்து வார்த்தை நம்முள் எப்பொழுதும் திறந்துவிடும் இன விடுதலையின் ஞாபகக் கதவுகளை… .. நம் உணர்வுகளின் அனுமதியின்றி… . இன விடுதலையின் வித்தான அப்படிப்பட்ட அப்பா இன்று நம்மிடையே இல்லை ! கடைசிவரை உயிருக்கு உயிரான தம் மக்களோடு மக்களாய் முள்வேலி முகாம் என்ற திறந்த வெளிச் சிறையில் உணவு , உடை போன்ற அடிப்படை உயிராதாரங்கள் மறுக்கப்பட்டு கடைசிவரை வீரவாழ்வு வாழ்ந்து , இப்போது மாவீரராய் வீரமரணம் அடைந்துள்ளார் . போர்க்களத்திற்கு எதிரிகளுடன் போரிடத் தன் மகனை நெஞ்சுரத்தோடு புறநானு } ற்றில் நம் தமிழர்கள் அனுப்பி வைப்பர் . அத்தகைய பெருமைமிகு பண்பாட்டிற்கு நாம் சொந்தக்காரர்கள்… நாம் வரலாற்றில் படித்தறிந்த அந்தப் பெருமைமிகு புறநானு}ற்று வீரத்தை நம் கண்முன் நிகழ்த்திக்காட்டியவர் நம் தந்தை அவர்கள் . ஆம் அதுபோலவே தன் மகனுடன் போராட்டக் களத்தில் தானும் நின்று, எதிரிதந்த மரணத்தை எதிர்கொண்டு, அதன் பின்பு கொடுஞ்சிறையைச் சந்தித்து, அந்தச் சிறையிலேயே தன் வாழ்வை முடித்து புறநானு} ற்று வீரத்தின் இலக்கணமாக திகழ்ந்தவர் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் ! அவர் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி பல்லாயிரம் தமிழர்கள் தம் மக்களைப் போர்க்களத்திற்கு அனுப்பியதற்கு முன்மாதியாகத் திகழ்ந்தவர் நம் தந்தை அவர்கள்… admin


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner