-->

தமிழீழ பாடல் வரிகள் { 2 }

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற



{1}
தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்
சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா
போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்
புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா

நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்
நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே
நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்
நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்
சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்
தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்

நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்
நீளவிழி மை கரைய நீ கலங்கினாய்
ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டி நிற்கிறான் -எந்தன்
அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்
உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த
ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.

அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்
அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே
பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்
போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்
மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி
மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு





{2}
மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.
அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.
மானம் ஒன்றே

உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா
அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில் ஆட்சி விடுப்போமா

மானம் ஒன்றே

பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார் பகையாளர்
எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.

மானம் ஒன்றே

களத்தில் வீழும் வேங்கைகள் ..... கல்லில் உறைவார் கலையாக..
அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக..

மானம் ஒன்றே

தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன.. தலைவன்.... தப்பாது..
நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்

மானம் ஒன்றே





{3}
நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா
நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா] )
அடர்ந்த காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா )
உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா )

[எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய்
தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய்]
கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் )
நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய்

[தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய்
உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய்]
நம்பி நின்ற எங்களிற்கு நஞ்சை ஊட்டினாய் )
புலிக் காளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய் கம்பி நீட்டுவாய்

[வீதி எங்கும் சாவினோடு மக்கள் ஓடுறார்
புலி வீரர் நின்று எதிரியோடு யுத்தமாடுறார்]
நீதியற்ற பகைவனோடு கூட்டம் போடுறாய் )
அவன் நீட்டுகின்ற பதவியேற்று ஆட்டமாடுறாய் ஆட்டமாடுறாய்

[பெற்றதாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி]
அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் )
எம் அண்ணன் வந்து உங்களிற்குத் தீர்ப்புக் கூறுவார் தீர்ப்புக் கூறுவார்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner