-->

மண்டைதீவு தமிழ் இனப்படுகொலை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

        version     1986 ம் ஆனி பத்தாம் திகதி. யாழ்ப்பாணம் குருநகர் ஒவ்வொரு வீடுகளிலும் சோகம் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தநாள். மணித்தோள் நிமிர்த்திய தொழிலாளர்களை அங்கமங்கமாக வெட்டிக்கொன்றனர். சதைக் குவியலில் யார் யாருடைய அவையங்கௌன தெரியாது அள்ளி குழியில் இட்ட நாள். இயற்கையான சாவனாலும்-வயது முதிந்த சாவானாலும் சாவு ஒரு துயரமானதாகவே இருக்கும். மண்டைதீவில் நடந்த படுகொலைகள் குரூரத்தின் உச்சக்கட்டம். மனிதமற்ற கோரக் குதறலின் சிலுவைப் பாடுகளை மிஞ்சி கோரணியம் அன்றாடச் சீவியத்திற்கு உழைக்கப் போனவர்களுக்கு கடலம்மாவின் மடியே கல்லறையானது. ஒரே நாளில் நாடுகளெங்கும் செய்தியறிந்து துடித்தனர் மக்கள். சிறிலங்கா கடற்படையினர் செத்த பிணத்தில் சுவைகண்ட இரத்த வெறியின் இனவெறிக் குரூரம் கண்டும் கேட்டும் கண்டனத்தையும் தெரிவித்தனர். இன்றும் அன்று நடந்த படுகொலைகளை நினைவு படுத்தப்படுவது நடப்பவைகளை நடக்காமல் தடுப்பதற்காகவும். இறந்தவர்களை நினைத்துப் பார்த்து இருப்பவர்களின் இழப்பின் வலியையும் நெக்குருதலையும் உணர்வதற்காகவும் இறந்து போனவர்களை நினைத்துத் துக்கப்படுபவர் காட்டும் இரக்கமாக இருக்கலாம் என்பதற்காகவும் நினைவு கூரப்படுகிறது. அன்று தந்தையை தமையனை என மூவரை தனது குடும்பத்தில் இழந்த சிறுமி (இன்று அவளுக்கு பத்து வயதாகிறது) அழுதபடி சொன்னாள்: 'எங்கள் தந்தையர் உடல்களை மட்டும் அந்தக் கொடியவர்கள் சுட்டு வெட்டிச் சிதைத்து விடவில்லை எங்கள் வாழ்க்கையையுமே சிதைத்துவிட்டார்கள் இன்று நாங்கள் அநாதைக் குழந்தைகள் கிழிந்த பாயில் சுறுண்டு கிடக்கின்றோம் பசி ஒரு புறம் எதிர்கால வாழ்வில் பயம் மறுபுறம் - என எம்மை மிரட்டுகிறது. எமது அன்னையரின் அழுகைகளோ எம்மைச் சுற்றிவர ஒலித்துக்கொண்டிருக்கின்றன. நாம் என்ன செய்வோம்? நாங்களும் வாழ்வோம் நிச்சயம் எங்களின் கால்களிலேயே நாங்கள் நிற்போம். எமது தாயகத்தின் விடுதலைக்காக எமது தந்தையரை கொன்று சிதைத்தவர்களை பழிவாங்குவதற்காக எமது அண்ணன்மாருடன் நாமும் கைகளில் கருவி ஏந்துவோம் சுதந்திர வாழ்வு இல்லையேல் வீரமரணம் நிச்சயம இது சத்தியம்" தங்களின் வாழ்வின் இலக்கை உருவாக்கிய சத்திய சபதமாக இந்தப் படுகொலைகளைக் கண்டு மன உறுதியை வளர்த்துக் கொள்கின்றார்கள். தன் கணவனையும் மூன்று பிள்ளைகளையும் இழந்த தாய் பாடினாள்... 'எங்கள் செல்வங்களே! குடும்ப வறுமையைப் போக்க காலை உணவுமின்றி தொழிலுக்குப் போனீங்க அய்யய்யோ.. நான் எப்படி வாழப்போறேன்? அந்தக் கயவர்கள் துப்பாக்கியால் சுட்டு சோங்கால் அடித்து கத்தியால் குத்தி சிதைத்துவிட்டனர் எம் குடும்பங்களும் சிதைந்தே போச்சு இனி நாங்கள் பட்டினியில் படுக்கவேண்டியதுதான் இந்தக் கரைவலையை யார் கொண்டு இழுக்கப் போறானுகள்? எங்கள் செல்வங்களே அலை பாயும் கடல் வெல்ல போயிற்று வாங்க விடை தந்தோம் முரடர் உங்கள் தலைசீவிப்போடவா போனீர்கள்" கடற்படையினர் கறுப்பு உடைக்குள் மறைந்து நிகழ்த்திய கோரக் கொலைகளால் கண்டபலன் எதுவுமேயில்லை. நிர்க்கதியான நிலையில் நின்ற தொழிலாளர்கள் அவர்களிடம் கெஞ்சிய நிலையே கோரணியத்தின் சிலுவை மரணிப்பை மிஞ்சியதாக இருந்தது. வானத்தில் பேரிரைச்சல். ஒரு இராட்சத இயந்திரப் பறவை அந்த உழைப்பாளிகளை நோக்கி வட்டமிட்டுக்கொண்டு வருகிறது. மண்டைதீவு மினி முகாமிலிருந்து பயங்கரச் சத்தங்கள் கேட்கின்றன. அவர்களைக் கிலி கொள்ள வைக்கின்றன. ஆயினும் அவர்கள் தங்கள் தொழில்மேல் கவனத்தை செலுத்தி நின்றனர். இந்தவேளையில் மண்டாடியார் மவுண் திகைப்புடன் உரத்துக் கத்தினார். மவுண் காட்டிய திசையை எல்லோரும் பார்த்தனர். கடற்படைக் கப்பலொன்று அவர்கள் பாடு வரைக்கும் அண்மையாக வந்து கொண்டிருக்கிறது. நங்கூரமிட்டபடி நிறுத்தப்படும் படகிலிருந்து சிறிய பிளாஸ்ரிக் படகில் கறுப்புச் சட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏறிகொள்கின்றனர். ஹெலிகொப்டரிலிருந்து தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சூடுகின்றனர். இந்த நிலையைப் பார்க்கின்றபோது இந்த இனவெறித் துவேசம் கொண்ட படையினர் திட்டமிட்டே இத்தொழிலாளர்களை கொலைபுரியக் காத்திருந்த கடுழீயம் புரிகிறது. தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் - அவர்கள் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று எண்ணிய மறுகணம் காடையரின் நரபலி நாடகம் ஆரம்பமாகத் தொடங்கியது. 'ஐயோ" என்று கதறினார்கள். 'தம்பி, என்னை விட்டுவிடு ராசா நான் கிழவன்". என்று கையெடுத்து கும்பிடக் கும்பிட வெட்டினார்கள். 'நான் பிள்ளை குட்டிக்காரன் என்ர பிள்ளைகள் தவிச்சுப் போகும்". காலில் விழ நீருக்குள் அமர்த்திக் குத்திக் குதறினார்கள். கண்கள் சிவந்த கரிய வெறியர்களின் கண்ணில் பட்ட ஒரு சிறுவன் nஐயபாலன்-nஐயகாந்தன் ' அம்மா" என்று கதறினான். அவன் தமிழைக் கேட்டு கடுங்கோபத்தில் கூரிய பற்களால்; கடித்துக் குதறினார்கள். தமிழன் உழைத்து வாழ்வதற்காகல்ல இத் தீவில் சாகத்தான் பிறந்திருக்கிறான் என்பதையே மண்டைதீவு படுகொலைகள் நினைவூட்டுகிறது. 2005 களில் குமுதினிபடகினில் முப்பத்திநாலு தமிழரின் படுகொலையின் இருபதாவது வருடத்தை நினைவு கூர்ந்தோம். 2006 தூயஒளி படகில்சென்ற முப்பத்தியொருவரின் மண்டைதீவுப் படுகொலையை நினைவுகூர்கின்றோம். இதுமட்டுமல்ல அராலி, உதுமன் குளம், இதயபுரம், வல்வெட்டித்துறை, நயினாதீவு இன்னும் அறியமுடியா கடல்வெளிகளில் தமிழன் பிணங்களாய் மிதந்தான். 'காலையிற் சென்று கரைவலை இழுத்தோர் மாலையிற் பிணமாய் மறுகரை ஒதுங்குவர்." என ஒரு கவிஞன் பாடினான். அது நமக்கோர் உண்மைய உணர்த்துகின்றது. நாம் மரணத்துள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மையாகும். யாழ் ஆயர் பேரருள் வ.தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்கள் வழங்கிய இரங்கல் செய்தியின் போது. எந்த அழிவிலும் எல்லாத் துன்பத்திலும் நாம் இறை நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும் நாம் எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் போல் தோன்றினாலும், இறைவனால் கைவிடப்படவே இல்லை: இது போன்ற அழிவுகள் இனி குருநகர் மண்ணில் மட்டுமல்ல எமது தமிழ் மண்ணிலேயே நடக்காதிருக்கவேண்டும். அந்தச் செயல்கள் மக்களைத் துன்புறுத்துமானால் மனிதம் மரணித்து அதர்மம் தலைதூக்கி நின்று சவக்குழிகளையே பெருகப் பண்ணுகிறது. இத்தகைய இனவாதத்தைத் தூண்டும் படையினரை ஏவி வழிநடத்தும் ஆட்சியாளர்கள் காலத்துக்குக் காலம் தமிழரை அழிக்கின்றனர். பேரழிவுகளை உருவாக்குகின்றனர். சிங்கள பேரினவாத அரசியலாளர் படையினர் மத்தியில் அர்த்தமற்ற உணர்வினைத் தூண்டிவிட்டிருக்கின்றனர். அந்த இனத்துவேசிகள் படை பலத்தோடு ஆயதங்களைப் பாவித்தனர். இதன் எதிர்வினை என்னாகும் என்பதை இன்று கண்டு கொள்கின்றனர். தூயஒளிப் படகில் சென்றவர்கள் மீது நடந்த கொலைகளைக் கண்டு கொதித்த சிறுவர் சிறுமியர் இன்று எங்கே இருக்கின்றனர்? இந்தக் கொலைகள் எல்லாம் தவறானதென்பதை இன்னமும் இந்த இனவாதப் பேய்கள் உணரவில்லை. தமிழன் வலிமையடைந்து விட்டான. ; குருநகர் சனசமுக நிலையத்தில் முப்பத்தியொரு பிணங்களின் நடுவில் நின்று ஒரு சிறுவன் அழுகிறான். நாங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்தியதில்லை. கடலை உழுது பயனைப் பெற்ற குடும்பமாகக் கலப்பை கொண்டு கடலில் நின்றோம். கருஞ்சட்டை அணிந்த கயவரைக் கண்டு கைகளை உயர்த்தி உயிர்ப்பிச்சை கேட்ட எங்கள் தந்தையரை சகோதரர்களை கருணையின்றி கொடிய முறையில் சுட்டும் வெட்டியும் அடித்தும் சிதைத்துள்ளான் இனி நாமிருந்து என்னத்தைக் காணப்போகிறோம்...? போராடுவது மனிதனின் விதியெனில் போராட்டத்தில் மரணம் அடைவது மகத்துவம் உடையது. இந்தப் பாடல்களை தமிழன் மேதினியில் மீட்டிட மேலும் மேலும் உணர்ச்சி பொங்கிப் பெருகிடப் பாடுகிறான். ஆயுதம் ஏந்திக் களத்தினில் நின்றிட எம்மை உருவாக்கியதே இந்த இனவாதக் கொலைகள்தான். மிலேச்சத்தனமன ஆட்சியின் கூலிகளால் ஒரே குடும்பத்திலிருந்து பல ஆண் சந்ததியினர் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேருமே சிங்கள இனவாதப் படைகளால் அழிக்கபட்டவர்கள். ஒரு தாய் பிணக்குவியலின் மேல் விழுந்து அழுதாள். அடக்கத்தன ஆட்சியின் கூலிகளால் ஒரே குடும்பத்திலிருந்து ஆண் சந்ததியினர் அத்தனை பேருமே இனவாதப் படையால் அழிக்கப்பட்டனர் அந்தத்தாய் பிணக்குவியல் மேல் விழுந்தவள் அடக்கத்தன ஆட்சியின் கூலிகளால் ஒரே குடும்பத்திலிருந்து ஆண் சந்ததியினர் அத்தனை பேருமே இனவாதப் படையால் அழிக்கப்பட்டனர் அந்தத்தாய் பிணக்குவியல் மேல் விழுந்தவள் அடக்கத்திற்கு எடுத்துச் செல்ல வருபவர்களைக் கண்டு நெஞ்சிலடித்தழுதாள் தலைவிரி கோலமாய் நின்று உறுமி,ஆடி சீறினாள:; டேய்! உங்களை குழிக்குள் போடும் முன்னம் அந்த இனவெறிப் பேய்களைப் பிடிச்சுக் கொண்டுவந்து கண்டம்துண்டமாய் வெட்டி காக்கைகளுக்குப் போடுங்கடா! போர்முறை தவறி வெறுங்கையோடு நின்ற மன்னவரை வேரறுத்தானே பாவி இந்த அழுகுரல் இன்றுவரை கேட்கின்றது. ஆண்டுகள் ஆயிரமாயிரம் நூற்றாண்டுகள் ஆயினும் பழைய ஏற்பாடு தொடங்கி புதிய ஏற்hட்டின் வழியின் விடுதலை வாழ்வியலிலும் இன்று குருநகர் வரை இருபது வருடங்கள் கழிந்தும் இன்றுவரை தமிழீழத்தில் கேட்கும் நிலமை மாறவில்லை எமது குமாரர்களும் குமாரத்திகளும் பட்டயத்தால் மாண்டு போனார்கள் சீயோன் குமாரத்திகளின் நகரிலோ அழுகுரல் கேட்கிறது(எபி:5:15) சென்ஜேம்ஸ் பாடசாலை அதிபர் அ. ஸ்ரனிஸ்லாஸ் தனது இரங்கலில் இப்படியாகக் கேட்டார்: உலகில் எங்கேயாவது இப்படி ஒரு துன்பநாடகம் நடைபெற்றது என்றால் கேள்விக் குறியே மிஞ்சும். தமிழனுக்கு இதுதான் விதியா? அன்றேல் அரக்கத்தன்மை வாய்த்த தலைமத்துவத்தின் ஆதிக்க வெறியா? தியாக உள்ளமும் வீரமும் வைராக்கியமும் ஒருங்கே அமையப்பெற்ற எம் வீர இளைஞர்களுடன் நேருக்கு நேர் போர் பொருது


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner