பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
'தலைவர் இருக்கின்ற
காலத்திலேயே நாங்கள்
நிச்சயம் தமிழீழம்
மீட்போம் . இது உறுதி.
அதற்கு உங்கட
பங்களிப்புத்தான்
முக்கியம் .
அண்ணைக்கு நீங்கள் தான்
தோள் கொடுக்கவேண்டும் .
உங்கட பங்களிப்பில்தான்
எங்கட மண்ணை மீட்க
முடியும் . ஆதலால்தான்
நாங்கள் கரும்புலி என்ற
வடிவம் எடுத்தனாங்கள் .
வானேறி வந்து குண்டு போடுகிற
சிங்கங்களை அவையிட
குகைக்கையே சந்திக்கப்போறம் ."
கரும்புலி லெப்.கேணல்
இளங்கோ தமிழீழ
மக்களுக்கு எழுதிய
இறுதி மடலின் வரிகள் இது.
09.10.2007
என் அன்பான மக்களுக்கு,
சிங்கள வெறியன் என்ன
செய்கின்றான் என நீங்கள்
அனைவரும் கண்ணால்
பார்க்கிறீர்கள் .
இருந்தும் சில
விடயங்களை சொல்லிவிட்டு போறன்.
தலைவர் இருக்கிற
காலத்திலேயே நாங்கள்
நிச்சயம் தமிழீழம்
மீட்போம் . இது உறுதி.
அதற்கு உங்கட
பங்களிப்பும்தான் மிகவும்
முக்கியம் .
அண்ணைக்கு நீங்கள் தான்
தோள் கொடுக்க வேணும் . உங்கட
பங்களிப்பிலதான் எங்கட
மண்ணை மீட்க முடியும் .
அதனால் தான் நாங்கள்
கரும்புலி என்ற வடிவம்
எடுத்தனாங்கள் .
வானேறி வந்து குண்டு போடுகிற
சிங்கங்களை அவையிட
குகைக்கையே சந்திக்கப்
போறம் . அவைக்கு தமிழன்
படுகிற அவலத்தை புரிய
வைக்கப் போறம் . நிச்சயம்
அவைக்கு உணர்த்தியே தீருவம்.
தமிழர் படையில முப்படையும்
வளர்ந்து நிற்குது .
இனி நீங்கள்தான்
சிங்களவனுக்கு எதிராக
எழுந்து நிற்க வேணும் .
எங்களுக்கும் அழிக்க
வேண்டிய இடத்தில அழிக்கத்
தெரியும் என அடிச்சுக்
காட்டியிருக்கிறம் .
இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம்
அடிச்சுக் கொண்டே இருப்பம்
என அடிச்சுச்
செல்லுங்கோ சிங்கள
வெறியர்களுக்கு .
வழிகாட்டத் தலைவர்
இருக்கிறார் . நீங்கள்
எழுந்து மூச்சாக நின்றால்
போதும் தமிழீழம் விரைவாக
வந்து சேரும் .
புலிகளின் தாகம் தமிழீழத்
தாயகம் .
தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும்
நடந்திடக் கூடாது.
இ.இளங்கோ.
விடுதலைப் புலிகளின்
கரும்புலிகள் அணியினர்,
வான் புலிகளின் உதவியுடன்
கடந்த
திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம்
சிறிலங்கா வான்படைத்தளம்
மீது மேற்கொண்ட
வெற்றிகரமான 'எல்லாளன்
நடவடிக்கை" அதிரடித்
தாக்குதல்களின்
அதிர்ச்சியில்
இருந்து இன்னமும் சிங்கள
அரசோ அல்லது சிங்களப்
படைத்தரப்போ மீளமுடியாமல்
இருக்கின்றது .
தேசியத் தலைவரினால்
மிகவும் சிறப்பான முறையில்
திட்டமிடப்பட்டு துல்லியமான
முறையிலே குறுகிய
நேரத்தினுள்
சிறப்பு கரும்புலி அணியினரால்
வெற்றிகரமாக
நிறைவேற்றப்பட்டிருக்கும்
இந்தத் தாக்குதல்
நடவடிக்கை விடுதலைப்
புலிகளின் தாக்குதல்
தந்திரோபாயங்களையும்
அவர்களது போரிடும்
ஆற்றலையும் வல்லமையையும்
மீண்டும் ஒரு தடவை சிங்கள
அரசிற்கும் உலகத்திற்கும்
நிரூபித்துள்ளதாக
பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும்
அனைத்துலகச்
செய்தி நிறுவனங்களும்
கருத்து தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment