பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
இளங்கோவனின் இறுதிக்
குரல் ....
விடுதலைப் புலிகளினால்
முற்றுமுழுதான
கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவரப்பட்டிருந்த
அனுராதபுரம் வான்படைத்
தளத்தை மீளக்
கைப்பற்றுவதற்காக
பலமுறை சிறிலங்கா அரச
படைகளானது முயற்சித்தபோதும்
கரும்புலிகளின்
மூர்க்கத்தனமான
எதிர்த்தாக்குதல் காரணமாக
அது சாத்தியமாகவில்லை.
வான்படைத் தளத்தின் கள
நிலைமைகளைத் தெளிவாக
வன்னியின்
கட்டளைப்பீடத்திற்கு தொடர்ச்சியாக
தெரிவித்துக்கொண்டிருந்த
கரும்புலிகள் அணியின்
தலைவர் லெப். கேணல் இளங்கோ,
மூன்றாவது முறையாகவும்
காயமடைகின்றார் .
அந்நிலையில் தனக்கு கீழ்
செயற்பட்ட
கரும்புலி வீரர்களுக்குரிய
கட்டளைகளைச் சரிவர வழங்கி ,
தலைவன் நினைவைச் செயலில்
முடித்த அந்த வீரன்
கட்டளைப்
பீடத்திற்கு தனது இறுதி வரிகளை கூறுகின்றான்.
'தலைவர் நினைச்சதை நாங்கள்
செய்து முடிச்சிட்டம்.
நீங்களும் தலைவரின்
திட்டத்தை சரியாகச்
செய்யுங்கோ . தலைவர்தான்
கவனம். அவர கவனமாகப்
பாதுகாத்துக்கொள்ளுங்கோ.
நான் மூண்டாவது தரமும்
காயம் பட்டிட்டன் . நான்
தொடர்பைத்
துண்டிக்கிறன்....." என்ற
வார்த்தைகளோடு இளங்கோவின்
குரல் அடங்கிப்போகின்றது .
இந்த கரும்புலிகளின் உயரிய
அர்ப்பணிப்பு , தற்கொடை,
தமிழ் மக்களின் மீதும்
தேசியத் தலைவரின் மீதும்
அவர்கள் வைத்திருந்த
பாசம் ,
அன்பு எல்லாமே போற்றுதற்குரியது.
அந்த வீரர்களின் உயரிய
விருப்பமான தமிழீழம் என்ற
இலட்சியத்தினை அடைவதற்கு நாம்
எல்லோரும் தலைவரின்
பின்னால்
அணிதிரண்டு சிங்கள
படைகளுக்கு எதிராகப்
போராடி சுதந்திர
தமிழீழத்தினை விரைவில்
அமைக்கவேண்டும் .
இதுவே இந்த மண்ணுக்காக
தமது இன்னுயிர்களை ஈந்த
அந்த
கரும்புலி மாவீரர்களின்
தியாகங்களுக்கும்
அர்ப்பணிப்புக்களுக்கும்
நாம் செய்யும் மரியாதையாக
அமையும் .
-புரட்சி (தாயகம்)-
0 Comments:
Post a Comment