பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
எல்லாளன்
எல்லாளன் கி.மு 145 இல்
இருந்து கி.மு 101
வரை அனுராதபுரத்தைத்
தலைநகராகக்
கொண்டு இலங்கையை ஆட்சி செய்த
தமிழ் மன்னனாவான் .
இந்தத் தகவலைச் சிங்கள
வரலாற்று ஆவணமான மகாவம்சம்
பதிவுசெய்துள்ளது .
இவனது ஆட்சிக்காலம்
நீதியானதாகவும் ,
சிறப்பானதாகவும்
அமைந்ததாகப் பொதுவாக
சிங்களச் சார்பான ஆவணமாக
பார்க்கப்படும்
மாகவம்சமே குறிப்பிடுகின்றது.
மகாவம்சத்தின்படி எல்லாளன்
தென்னிந்தியாவில்
இருந்து படையெடுத்து வந்த
சோழ இளவரசனாவான் . ஆனால்
எல்லாளன் ஈழவூரின்
உத்தரதேசத்தை (தற்போதைய
பூநகரி) சேர்ந்தவன் ஆவான்.
அதற்கான ஆதாரங்கள் உண்டு.
உத்தரதேசத்தில் குறுநில
மன்னனாக எல்லாளன் முதலில்
விளங்கியமையால் தான்
வவுனிக்குளத்தை அக்காலவேளையில்
கட்டியுள்ளான்
ஆங்கிலேய நாட்டவரான
எச் .பாக்கர் மகாவம்சத்தில்
அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த
பெபிலாபியை பூநகரியின்
தென்னெல்லையிலுள்ள
பாலியாறு என அடையாளம்
கண்டு இங்குள்ள
வவுனிக்குளத்தின்
ஆரம்பத்தோற்றம்
எல்லாளனின் சாதனைகளில்
ஒன்றாக
இருக்கலாமெனக்கூறியுள்ளார்
கி.மு 3 ஆம்
நூற்றாண்டிற்கும்
( கி.மு247) கி.மு 1 ஆம்
நூற்றாண்டிற்கும்
( கி.மு29) இடைப்பட்ட 220
ஆண்டுகால அனுராதபுர அரசின்
வரலாற்றில் ஆட்சி புரிந்த
19 மன்னர்களுள் 8 தமிழ்
மன்னர்கள் 81
வருடங்களுக்கு மேல்
ஆட்சி புரிந்துள்ளனர்
இதில் 44 வருடங்கள்
எல்லாளனுக்கும் 22
வருடங்கள் அவனது தந்தை
ஈழசேனனுக்குமுரியவை .
ஆயினும், இக்கால
வரலாற்றைப் பல
அத்தியாயங்களில் கூறும்
மகாவம்சம் தமிழ்
மன்னர்களின் ஆட்சியைச் சில
செய்யுட்களில்
மட்டுமே கூறி முடிக்கின்றது
எல்லாளன் என்ற தமிழ்
மன்னனை வெற்றி கொண்டதன்
மூலம் சிங்கள இனத்தின்
விடுதலை வீரனாக
வருணிக்கப்பட்ட
துட்டகாமினியின் 24
ஆண்டுகால ஆட்சியை 843
செய்யுட்களில் கூறும்
மகாவம்சம் , 44 ஆண்டுகள்
நீதி தவறாது ஆட்சி நடத்திய
எல்லாளனை 21 செய்யுட்களில்
மட்டுமே கூறுகிறது.
இது ஒன்றே பாளி இலக்கியங்களில்
தமிழ் மன்னர்களின்
வரலாறு மறைக்கப்பட்டுள்ளமை
க்கு சிறந்த சான்று
0 Comments:
Post a Comment