பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே
(பொங்கிடும்)
பாசத்தில் எங்களின் தாயானான் கவி பாடிடும் மாபெரும் பேரானான் தேசத்தில்
எங்கணும் நிலையானான் விலை தேடியே வந்திடும் தலையானான்
(பொங்கிடும்)
இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான் பல இளைஞரை சேர்த்துமே களம்
குதித்தான் தன்னின மானத்தை தான் மதித்தான் பகை தாவியே வந்திட கால்
மிதித்தான்
(பொங்கிடும்)
இங்கொரு தாயகம் மூச்சென்றான் தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீச்சென்றான் புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான்
(பொங்கிடும்)
விடுதலைபுலிகளின் பலமானான் தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான் படுகளம்
மீதிலோர் புலியானான் பிரபாகரன் எங்களின் உயிரானான்
(பொங்கிடும்)
என்றுமே எங்களி ன் தளபதியே நீ எங்களின் வானத்து வளர்மதியே இன்று உனக்கு
ஆயிரம் சோதனைகள் தமிழ் ஈழத்தை வாங்கு முன் போதனைகள்
(பொங்கிடும்)
காணொளியில்
http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&v=EKcGEhR5agA
0 Comments:
Post a Comment