-->

தமிழீழதேசியத்தலைவரின் குடும்பபின்னணியும் சிறுபிராயமும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்   பொருளடக்கம் தலைப்பு : பக்கம் : --------------- ------------- 1. தலைவர் அவர்களின் குடும்பப் பின்னனி... 2. ஆரம்ப கால புரட்சித்தோழர்கள்.. 3. புதிய தமிழ்ப்புலிகள் இயக்கம் பிறந்தது... 4. புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்.. 5. தமிழீழ விடுதலைப் புலிகள்... 6. முதலாவது தாக்குதல்... 7.. போர் 1 (ஆவணி 1984 - ஆடி 1987).. 8. இந்தியத் தலையீடு... 9. திம்புப் பேச்சுவார்த்தை... 10. சாகும்வரையிலான உண்ணாவிரதம்.. 11. பெங்களுர் மாநாடு.. 12. தமிழீழம் திரும்புதல்.. 13. இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு. . 14.. இந்திய-சிறீலங்கா ஒப்பந்தம்.. 15. . சுதுமலைப் பிரகடனம்... 16. திலீபனின் தியாகச்சாவு.. 17. 12 போராளிகள் வீரமரணம்.. 18. இந்திய-தமிழீழப் போர்.. 19. அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை... 20. தமிழீழப் போர்2.. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்   யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும்இ அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும் இ தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடிஇ திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார். வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் திருமேனியார் குடும்பமாகும். இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும்இ வல்வை முத்துமாரியம்மன் கோயில்இ நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும்இ நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள்.   தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும்இ அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும் இ தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடிஇ திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார். வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் திருமேனியார் குடும்பமாகும். இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும்இ வல்வை முத்துமாரியம்மன் கோயில்இ நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும்இ நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள்.   தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்   பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் இரகசிய இயக்கத்தில் இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிரு க்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். " உங்களுக்கோஇகுடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்பகால புரட்சித் தோழர்கள்   பிரபாகரன் அவர்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித் துறையைச் ; சேர்ந்தவாகளாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கதை;தை ஆரம்பிக்கும்போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாததுஇ யதார்த்தமானது.   புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் பிறந்தது 1970 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கடுமையான அடக்குமுறையும்இ சகலதுறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட விதமும்இ தமிழ் இளைஞர்; கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது. சிங்கள இன வெறி ஆட்சிக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டுமென்று இளைஞர்கள் துடித்தனர். தமிழர்களின் கட்சிகளோ அல்லது மற்ற சிங்கள இடதுசாரி இயக்கங்களோ இந்த இளைஞர்களின் மனக்கொதிப்பை புரிந்து கொள்ளவில்லை. கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களுக்காகப் போராடச் சரியான தலைவர்களோஇ இயக்கங்களோ இல்லை என்று இளைஞர்கள் கருதினார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான அறப்போராட்டங்களைத் தமிழ்த் தலைவர்கள் நடத்தியிருந்த போதிலும் கூடஇ இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அவர்கள் ஒதுக்கியே வைக்கப் பட்டிருந்தனர். பாராளுமன்றத்தில் அவர்கள் எழுப்பிய குரலுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இல்லை. கானகத்தில் காரிருளில் எழுப்பப்பட்ட குரலாக அவை ஒலித்தன. சிங்கள இன வெறிக்கு இரையாகிப்போன இடதுசாதிக் கட்சிகளும் கூட்டுச்சேர்ந்து தமிழருக்கு எதிராகச் செயற்பட்டன. தமிழர்களின் போராட்டங்களை அவர்களும் அலட்சியம் செய்தனர்.   புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் பிறந்தது   எனவே தமிழ் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகளை நம்பக் கொஞ்சமும் தயாராக இருக்க வில்லை. இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் சூனியநிலை ஒன்று உருவாயிற்று. சிங்கள பேரினவாதிகளின் தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துஇ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்நடத்திச் செல்லப் புரட்சிகரமான அரசியல் அமைப்பு ஒன்று இன்றியமையாதது என்பதைத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினார்கள். இதனால் தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தமிழ் மாணவர் மத்தியில் மாபெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலமே சிங்கள இனவெறியர்களின் கொடுமைகளில் இருந்து தமிழர்கள் விடுதலை பெற முடியும் என்பதை மெல்ல மெல்லத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர். தமிழ் மாணவர்கள் பேரவை பலம் பொருந்திய இயக்கமாக வளர்ந்தது. இதில் தீவிரவாதக் குழுவின் முக்கியமானவராக பிரபாகரன் அவர்கள் இயங்கினார். அக்குழுவில் வயதில் குறைந்தவராகப் பிரபாகரன் அவர்கள் இருந்தபடியால் தம்பி என்ற செல்லப் பெயர் கொண்டு மற்றவர்களால் அழைக்ப்பட்டார். ( இன்றும் இப்பெயர் கொண்டு பிரபாகரன் அவர்களை அழைப்பவர்கள் இருக்கிறார்கள்) தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்தத் தீவிரவாதக் குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டடோர் இருந்தனர். இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவி;க்கும் வகையில் அரச பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை போறுப்பேற்றுக் கொண்டு பிரபாகரன் அவர்கள் உட்பட நான்குபேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். 16 வயதுச் சிறுவனாக இருந்த பிரபாகரன் அவர்கள் மட்டும் மனத்துணிவுடன் சென்று அரச பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும்இ ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன. அவரைவிட வயது மூத்தவர்கள் எல்லோரும் அவரின் துணிவையும் பொறுப்பெடுத்த காரியத்தையும் பாராட்டினார்கள். தமிழ் தீவிரவாதத்தின்இ தமிழ் தீவிரவாத இயக்கத்தின் முன்னோடியாகத் தோன்றிய பிரபாகரன் அவர்கள் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அதே நேரத்தில் தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்த சிங்கள அரசாங்கம் அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரைக் காவற்துறையினர் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். சித்திரவதை தாங்கமுடியாமல் அவர்களில் ஒருசிலர் தமது சக கூட்டாளிகளைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். சிங்கள காவற்துறையின் கொடுங்கோலர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். (இக் காலத்தில் கொழுப்பிலிருந்த 4ம் மாடி என்ற கட்டிடம் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதற்கு பெயர் பெற்ற இடமாகும்.) அதனால் பிரபாகரன் அவர்கள் தமிழகத்திற்குச் சென்றார். பிரபாகரன் அவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் 1972 ன் ஆரம்பப் பகுதியில் தமிழீழம் திரும்பினார். ஆங்காங்கு சிதறுண்டு இருந்த இளைஞர்களிடையே காணப்பட்ட தீவிரவாதச் செயற்பாடுஇ ஒரு புரட்சிகர இயக்கத்தைஇ புரட்சிகர அரசியற் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு புரட்சிகர தலைமையை நாடி நின்றது. இப்புரட்சிகரச் சூழ்நிலையில்தான் புதிய தமிழ்ப் புலிகள் என்ற இயக்கம் 1972இன் நடுப்பகுதிகளில் தலைவர் பிரபாகரன் அவர்களால் அவரின் 17வது வயதில் தொடக்கப்பட்டது. இவ் இயக்கம் மிகவும் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டதாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்   ' புதிய தமிழ்ப் புலிகள்" இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும்இ துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில்இ தலைவர் பிரபாகரன் அவர்கள்இ தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடுஇ அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார்.   (1) புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாகஇ 1975 ஆடி 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner