-->

ஓ மாவீரர்களே.!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

சாவு ! என்னை எதிர்பார்த்திருக்கிறது என்றான் கோழை சாவை ! நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்றான் வீரன் ஓ ! மாவீரர்களே ! நீங்கள் இரண்டாவது வகை மிதிபட்டுச் சாகிறேன் புலம்பினான் கோழை போராடிச் சாகிறேன் உறுமினான் வீரன் ஓ ! மாவீரர்களே ! நீங்கள் இரண்டாவது வகை காலம் தமிழீழத்தை உருவாக்கும் காத்திருந்தாள் கோழை காலத்தை நான் உருவாக்குவேன் களமாடினான் வீரன் ஓ ! மாவீரர்களே ! நீங்கள் இரண்டாவது வகை உயிர்வாழ விரும்புகிறேன் முனகினான் கோழை மானத்தோடு உயிர்வாழ விரும்புகிறேன் முழங்கினான் வீரன் ஓ ! மாவீரர்களே ! நீங்கள் இரண்டாவது வகை ஓ ! மாவீரர்களே ! உங்கள் வீரம் எங்கள் நிமிர்வு ஆனது வழி வழி இணையில்லா வீரனாய் வீராங்கனையாய் இன்றும் தொடரும் உங்கள் மாவீரர் வரிசை தமிழீழம் மீட்கும் ஓ ! மாவீரர்களே ! இது தான் உண்மை உங்கள் உயிரின் வலிமை அறிந்து எதிரி உங்களை அழித்தான் ஆனால் அவன் ஏமாந்து போனான் ஏனென்றால் உயிரிலும் வலிமை மிக்கது உங்கள் சாவு . கவி வரிகள் . உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் நன்றி . நந்தன் வார இதழ் Share இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner