-->

புன்னகை அழகன் { பிரி தமிழ்ச்செல்வன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார். மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு. ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார். பிரிகேடியரைப் பொறுத்த வரையில் அவரை மிகவும் நேசித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் யதார்த்த பூர்வமான சிந்தனையையும், செயலையும் புடம் போடக்கூடிய செயலினூடாக அறிவுபூர்வமாக வளர்க்கப்பட்டார். அதனால் தான் பிரிகேடியரால் சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் செயற்பட முடிந்தது. அத்தோடு அவரது ஆற்றலானது செயல் பூர்வ அறிவாக மிளிர்ந்தது. அரசியல் ரீதியில் தமிழ் மக்களின் விடுதலை குறித்து ஒரு எத்தனிப்பை செய்து கொண்டு படைத்துறை ரீதியாக பலம் பெறுவதொன்றே தமிழ்மக்களின் விடுதலையை செயல் பூர்வமானதாக்கும் என்ற தேசியத் தலைவர் அவர்களின் விடுதலைச் சிந்தனையை அனைத்துலக மேடைகளில் அவரால் உறுதியுடன் முன் கொண்டு செல்ல முடிந்தது. இத்தகையதொரு அளப்பரிய பணியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையேயும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் ஆற்ற முடிந்ததென்றால் அவர் களத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இராஜதந்திரி என்ற தகைமையே அவருக்கு மூலகாரணமாக அமைந்தது. பிரிகேடியரின் இருபத்துமூன்றாண்டு கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும். ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாகவுள்ளது. ஐ. அரசியல் ரீதியிலானது.ஐஐ. படைத்துறை ரீதியிலானது. 1984 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இணைந்து கொண்ட அவர் அமைப்பின் ஆரம்பகால வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் போராட்டத்தின் பின் தளமாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட அவர் பின்னர் களத்திற்கும், தளத்திற்குமிடையே தேசியத் தலைவர் அவர்களுக்கான இணைப்புச் செயற்பாட்டாளராக செயற்பட்டதன் மூலமாக அவரது ஆளுமை அன்றே தேசியத் தலைவர் அவர்களால் இனங்காணப்பட்டுள்ளதுடன் முதன்மை யானதாகவுமிருந்துள்ளது. பிரிகேடியரின் விடுதலைப் பணியை ஒருகால ஒழுங்கில் நோக்கும்போது அமைப்பில் இணைந்து அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையிலான அவரது முதன்மையான படைத்துறை ரீதியிலான செயற்பாட்டையும் 1993 இலிருந்து அவர் வீரச்சாவடைந்த 2007 வரையான காலத்தையும் இரு கூறுகளாக நோக்கலாம். ஏனெனில் 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரையான காலத்தில் படைத்துறை ரீதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயற்பட்டுள்ளார். இக்காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க இந்திய ஆக்கிரமிப்புக் கெதிரான இந்திய - புலிகள் போர் நடைபெற்றது. இந்திய - புலிகள் போரில் அவர் தென்மராட்சி கோட்டத்தின் தளபதியாக நின்று இந்திய இராணுவம் வெளியேறும் வரை சமராடியுள்ளார். இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக அக்காலத்தில் அவர் ஒரு வீரம் செறிந்த போரை நடாத்தியுள்ளதுடன் இன்று அவரோடு கூடவே நின்று களத்தில் போராடிய போராளிகள், தளபதிகள் நினைவு கூருகின்ற வகையில் தலைமையோடு அவருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் எந்தவித சிக்கலுமின்றி போராளிகளை வழி நடாத்தியமை எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாக படை நடத்தும் அவரது திறனை வெளிப்படுத்துகின்றது. அத்தோடு இக்காலப்பகுதியில் குறைந்தளவு போராளிகளையும், குறைந்தளவு ஆயுத தளவாடங்களையும் கொண்டு இந்தியப் படைகளுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டதுடன் பின்னர் தலைமையோடு தொடர்பினை ஏற்படுத்தியதன் மூலம் ஒரு வரலாற்று நெருக்கடிமிக்க காலத்தில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். உண்மையில் ஒரு சிகரெட்டைப் புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்து விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற இந்திய அரசின் எண்ணத்திற்கு யாழ்ப்பாணத்திற்குள் நின்றபடி இந்தியப் படை வெளியேறும் வரை புலிகள் குறித்த இந்திய அரசின் கணிப்பீடுகளையும் அனுமானங்களையும் பொய்த்துப்போக வைத்த புலிகள் இயக்கத்தின் திறனில் பிரிகேடியரின் பங்கு அளப்பரியது. இதேவேளை பிரிகேடியரின் இரண்டாவது கட்ட ( படைத்துறை ரீதியிலான) செயற்பாட்டில் 1991 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றுச் செயற்பட்ட காலம் முதன்மை பெறுகிறது. இக்காலப்பகுதி மிக முக்கியமான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியிலேயே, முதலில் ஒரு கெரில்லா இயக்கமாக இனங்காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மெதுவாக மரபு வழிப்படையாகத் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றனர். இக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் படையணிகள் ரீதியாகவும் போர் முறைகளிலும் மாற்றங்களைச் சந்தித்ததுடன் ஒரு அரை மரபு வழிப்படையாக மாற்றம் கண்டு வந்தது. அதாவது ஒரு மரபு வழிப்படைக்கு இருக்க வேண்டிய படைக்கட்டுமானங்கள் முழுமை பெறாத நிலையில் ஒரு நவீன மரபு வழிப்படைகளை எதிர்த்துக் களமாட வேண்டிய சூழலில் யாழ். மாவட்டச் சிறப்புத் தளபதியாக பிரிகேடியர் செயற்பட்டார். அதாவது போராட்டத்தின் பிரதான தளத்தினைப் பாதுகாக்கும் தளபதியாக செயற்பட்டார். அத்தோடு அவர் யாழ். மாவட்டத் தளபதியாக பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப் படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக,ஐ. மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதல். ஐஐ. ஆகாயக் கடல் வெளிச்சமரில் கடல்வழியிலான படைஇறக்கத்துக்கு எதிரான சமர். என்பன பிரிகேடியரின் படைத்துறை ரீதியிலான செயற்பாட்டை வெளிப்படுத்தக் கூடியன. ஆகாயக்கடல் வெளிச்சமரைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த முதலாவது மிகப்பெரும் மரபுவழிச்சமராக அது அமைந்ததோடு அனைத்துலக ஊடகங்களினதும், படை ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்த ஒரு சமராகவும் அது திகழ்ந்தது. இந்தச் சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமருக்கு பிரிகேடியரே பொறுப்பாகச் செயற்பட்டார். இந்தச் சமரில் விழுப்புண்ணடையும் வரை அவர் களத்தை வழிநடத்தினார். இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின் உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளார்ந்த ரீதியாக ஒரு மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பிரிகேடியர் நியமிக்கப்பட்டார். படைத்துறை ரீதியாக களங்களை வழிநடத்திய ஒருவர் ஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார். இவரது அரசியற்பணியானது இவர் அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1993 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி பல்வேறு வகையிலும் முதன்மை பெற்றதாகவுள்ளது. ஏனெனில் உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முகங்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அரசியற்பணியை முன்னெடுக்க வேண்டிய சூழமைவு அவருக்குக் காணப்பட்டது. இந்த நிலையிலும் அவர் நெருக்கடிமிக்க பல செயற்றிட்டங்களைச் சீர்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டியிருந்ததுடன் அதனை வெற்றிகரமாகவும் செயற்படுத்தினார். இப்பணியை நாம் இரண்டு வகையில் நோக்கலாம். ஐ. இராஜதந்திரத் தளத்தில்ஐஐ. மக்களின் தளத்தில். ஒரு விடுதலை இயக்கத்தின் இலட்சியம், கொள்கை என்பவற்றை செவ்வனே மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஆற்றுவது மிகக் கடினமான ஒரு பணியாகும். தொடர்ச்சியான போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே இப் பணியை ஆற்றுவதென்பது மிகப் பெரும் சிரமத்தைக் கொண்டது. ஆயினும் இப்பணியை பல்வேறு நெருக்குவாரங்களுக்குமிடையே அவர் முன்கொண்டு சென்றார். விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது, மக்களை அணிதிரட்டுவது, விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத் துலகத்தின் இராஜதந்திர சமர்களுக்கு முகம் கொடுக்கின்ற அதேவேளை இலட்சியத்தின் மீது மக்களைத் தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது என்பவற்றோடு ஒரு நடைமுறை அரசிற்கான கட்டுமானங்களை உருவாக்கும் தலைமையின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது எனப் பரந்துபட்ட வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டியிருந்தது. ஆயினும் இக்காலப்பகுதியில் இவர் ஒரு மிகப் பெரும் போர் இடப்பெயர்வு நெருக்கடிக்கும், இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற வாழ்வியல் நெருக்கடிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டார். ஐ.யாழ்ப்பாண இடப்பெயர்வு.ஐஐ. சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம். யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பொறுத்த வரையில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுத்து வன்னியை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் இருப்புக்கு வழிகோலியது அவரது அரசியற்பணிக் காலத்தில் ஈட்டிய மிகப்பெரும் சாதனையாக நோக்கத்தக்கது. இத்தகையதொரு நிலையிலும் அரசியல்துறைக்கான சிவில் கட்டமைப்புக்கள் குலையாது அவற்றின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டமையானது முதன்மை மிக்க செயற்பாடாகும்.இதேபோன்றுதான் 2004 ஆம் ஆண்டு தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் சுமாத்திரா ஜாவா கடற்பரப்பில் ஏற்பட்ட நிலவதிர்வு காரணமாக கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவிலிருந்து மக்களை துரிதகதியில் மீள்நிலைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி அனைத்துலக சமூகத்தின் பாராட்டு தலையும், கவனத்தையும் தாயகத்தை நோக்கி ஈர்த்தமையானது இவரது திறனிற்குச் சான்றாகும். அனைத்துலகத்தின் உதவிகள் முழுமையாக தமிழ் மக்களுக்கு வந்தடைவதை சிறிலங்கா அரசு தடுத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டக்கூடிய அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி சிறிலங்காவை விஞ்சும் அளவுக்கு செயல்பூர்வமாக அதனை எதிர்கொண்டமையானது அனைத் துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்தமைக்குக் காரணமாக இருந்தது. இச்செயற்றிட்டமானது பாதிக்கப்பட்ட மக்களை துரிதகதியில் இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது. இது பிரிகேடியரின் அரசியற்பணியில் மக்களின் தளத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணியாக அமைந்தது என்றால் மிகையாகாது. இதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவரது இராஜதந்திரப் பணி வித்தியாசமானதாகும். அரசுகளுக்கிடையான இறுக்கமான பிணைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜீக உறவுகளுக்கு நடுவே விடுதலை அமைப்பொன்றின் புரட்சிகர அரசியலை அனைத்துலக நாடுகளின் ஒத்திசைவுப் போக்கின் நடுவே முன்கொண்டு செல்லுதல் என்பது ஒரு கடினமான பணியாகும். விட்டுக் கொடுப்புக்கள் என்ற பேரிலும் இணைந்து செயற்படுதல் என்ற கோதாவிலும் ஒரு விடுதலை அமைப்பை அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவருதல் என்ற புனிதம் கெட்ட இராஜதந்திர வலைப் பொறிக்குள் வீழ்த்திவிட முயலும் அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈடு கொடுத்து இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும் பாதுகாக்கின்ற இராஜதந்திரப் பாத்திரத்தை பிரிகேடியர் ஏற்றிருந்தார். இன்றைய அனைத்துலக சமூகமானது அனைத்துலக ரீதியாக குருட்டுத்தனப் பார்வையூடாக எல்லா இனங்களின் போராட்டங்கள் மற்றும்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner