-->

ஈழத்தமிழர் போராட்டவரலாறு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது அரை நூற்றாண்டு காலமாக வௌ;வேறு வடிவங்களைப் பெற்று ஒரு பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது எனக் கூறலாம். தற்கால ஆயுதந்தாங்கிய வடிவத்தை மட்டும் உற்று நோக்குவோர் அதன் பயங்கர விளைவுகளைக் கண்டு, இதைப் பயங்கரவாதம், பிரிவினை வாதம் எனத் தப்பான பெயர்களைச் சூட்டுவது இதன் பரிணாம வளர்ச்சியை மறைப்பதாக மட்டுமல்;லாமல், ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகளை ஏற்க மறுப்பதாகவும் அமைகின்றது. எனவே இச்சிறிய கட்டுரை இப்போராட்ட வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியின் வௌ;வேறு வடிவங்களைச் சுட்டிக் காட்டுவதோடு அதன் அடிப்படையில் இவ்வடிவங்கள் காலத்தின் தேவையால் ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டவை என்பதனையும் எடுத்துக் காட்டுகின்றது. இலங்கைத் தீவின் பூர்வீக குடிகள் யார் என்பது புராணங்களில் புதைந்து கிடப்பதனால், இன்றும் இது ஒரு விவாதத்திற்குரிய விடயமாகவே அமைகின்றது. இது அர்த்தமற்றது. இவ்விவாதம் கப்பல் ஒன்று நீரில் மூழ்கிக் கொண்டு இருக்கும் பொழுது அதை உருவாக்கியோரைப் பற்றிய விவாதத்தைப் போன்றதாகும். அது மூழ்குவதற்கான காரணத்தைக் கண்டறிந்து ஆவன செய்வதே அர்த்தமுள்ளது. இன்று இலங்கை வாழ் மக்களின் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு, எல்லா மக்களுக்கும் நிறைவான வாழ்வைக் கொடுக்கக் கூடிய ஒரு தீர்வை எட்ட வேண்டுமாயின், இன்று இலங்கைத்தீவு மொழி, மத, கலாச்சார, சமூக, பாரம்பரிய அடிப்படையில் பல்இன மக்களைக் கொண்டுள்ளமை அடிப்படையாக ஏற்றக்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். அடுத்தடுத்து வந்த மேலைத்தேய வல்லரசுகளின் (போத்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய) ஆதிக்கத்தின் கீழ் இலங்கைத் தீவு உட்படுத்தப்படுமுன் (போத்துக்கேயர் 1505 இல் வணிக நோக்குடன் கால் வைத்தது முதல் ) இலங்கை மூன்று (கோட்டை, கண்டி, சீதாவாக்கை அல்லது முதல் இரண்டு) சிங்கள இராட்சியங்களையும் ஒரு (யாழ்ப்பாணம்) தமிழ் இராட்சியத்தையும் கொண்டிருந்தமை சரித்திரம் கூறும் உண்மை. பிரித்தானிய ஆட்சிக்கு 1802 இல் இலங்கைத்தீவு கையளிக்கப்பட்டபோது கைச்சாத்திடப்பட்ட ஆமியன்ஸ் (Amiens) ஒப்பந்தத்தோடு இணைக்கப்பட்ட இலங்கைத் தீவின் வரைப்படமே இதை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் சர். கியுக் கிளேகோன் ( Sir. Hugh Cleghorn) 1799 இல் பிரித்தானிய அரசுக்கு வரைந்த உத்தியோக பூர்வக் குறிப்பில் இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதி பண்டைக் காலத்தில் இருந்து தமிழர்களின் கைவசமுள்ளமைiயும் இவர்கள் சிங்களவரில் இருந்து சமயம், மொழி, கலாச்சாரம் என்பனவற்றில் வேறுபட்டவர்கள் என்பதையும் விரித்துக்கூறுகின்றார். ஆயினும் 1815 இல் கண்டி இராச்சியமும் 1818 வன்னிக் குறுநிலத் தலைவர்களும் பிரித்தானிய ஆதிக்கத்திற்கு அடிபணிந்த பின்பு, இலங்கைத் தீவை, அதன் அரசியல் அல்லது தேசியகூறுகளைக் கருதாது அதனை ஓர் புவியியல் கூறாகக் கருதி, தமது நிர்வாக நலன்களுக்காக 1833இல் ஒருங்கிணைத்தனர். எனினும் தேசவளமை போன்ற நடைமுறைச் சட்டங்கள் தொடர்ந்தன. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக, 1948இல் பிரித்தானிய அரசில் இருந்து இலங்கை சுதந்திரம் பெறும் வரை இலங்கைத்தீவு முழுவதையும் ஒரு தனி நிர்வாக அலகாக அமைக்க எடுத்த முயற்சிகள் முழுக்க முழுக்கப் பயனளிக்கவில்லை. பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்ததன்பின் சிங்கள அரசு தமிழ் மக்களின் தேசிய உணர்வை நசுக்கும் அல்லது அழித்தொழிக்கும் நோக்குடன் பல சட்ட திட்டங்களைப் புகுத்தியது. S. W. R. D. பண்டாரநாயக்கா, தமது குறுகிய சுய நல நோக்கிற்காகக் (Sinhala Only) சிங்களம் மட்டும் அரசியல் மொழியாகப் பிரகடனப்படுத்தப்படுத்தினார். இதனால் சிங்களம் கற்காத தமிழர்களுக்கு அரசஸ்தாபனங்களில் வேலை வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. சர்வகலாசாலைகளில் தமிழ் மாணவர்களுக்கான அனுமதி, அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக மாற்றி அமைக்கப்பட்டது. தமிழ் பகுதியில் அரச முதலீடுகள் மிகச் சொற்பமாகக் குறைக்கப்பட்டன. பாதுகாப்புப் படைக்கு தமிழர்களின் உள்வாங்கல் படிப்படியாகக் குறைக்கப்பட்டு இன்று ஏறத்தாழ பாதுக்காப்பு படை முழுக்க முழுக்க சிங்களவர்களாகவே உள்ளது. அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்களினால்; பல தமிழ் பகுதிகள் முழுமையாகவே அழிக்கப்பட்டு சிங்களவரால் குடியேற்றப்பட்டன. பல இடங்களின் பெயர்களும் சிங்களமயமாக்கப்பட்டன. அரச குடியேற்றத் திட்டங்கள் 1950 அளவிலேயே ஆரம்பிக்கப்பட்டாலும் 1980 அளவில் மிகமிக மும்மரமாக உத்வேகம் அளிக்கப்பட்டன. ஆனால் அனைத்திற்கும் மேலாக 1958 முதல் தொடர்ச்சியாக தமிழ் மக்கள்மேல் அவிழ்த்து விடப்பட்ட அரசியல் பயங்கரவாதம் தமிழ் மக்களின் அடிப்படைப் பாதுகாப்பு உரிமையையும் வாழ்வுக்கான உத்தரவாத உரிமையையும் கேள்விக்குறியாக்கின. இலங்கைத் தீவு பிரித்தானிய அரசிடமிருந்து 1948இல் சுதந்திரமடையுமுன்பும், பின்பும் சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு வரையறைகள் 1972 இல் ஒரு தலைப்பட்சமாகக் கொண்டுவரப்பட்ட குடியரசு அரச சட்டயாப்பினால் நிராகரிக்கப்பட்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களும் இலங்கை அரசின் பிரஜைகளா என்பதற்கான பதிலைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இவ்விக்கட்டான நிலையே இலங்கை வாழ் தமிழ் மக்களைத் தம் பூர்வீக நிலத்தை மீண்டும் தமக்குரியதாக ஆக்கும் பாரிய வரலாற்றுத் தேவைக்கு இட்டுச் சென்றது. இதன் பிரதிபலிப்பே 1959 இல் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் அவர்கள் உருவாக்கிய ஈழத்தமிழ் ஒற்றுமை முன்னணியாகும். பண்டைய யாழ்ப்பாண இராட்சியப் புலவர்களும் அவர்தம் பாடல்களும் முறையே ஈழப்புலவர்கள், ஈழ நாட்டுப் பாடல்கள் என இலக்கியங்களில் குறிப்பி;டப்பட்டிருந்தபோதும், இலங்கைத் தமிழர்கள் தம் பூர்வீக நாட்டை மீளப் பெறும் பணியில் அரசியல் வட்டாரத்தில் " வன்னிச் சிங்கம்" என அழைக்கப்பட்ட சி. சுந்தரலிங்கம் அவர்களே "ஈழத்தமிழ்" சொற்றொடரை முதன் முதலாகப் பாவித்து தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். திரு. சுந்தரலிங்கம் அவர்களின் ஈழத்தமிழச்; சுதந்திரத்திற்கான அறைகூவல் வரலாற்று தேவையால் பின்வரும் பின்னணியில் எழுந்ததொன்றாகும். 1. 1956 இல் கொண்டு வரப்பட்ட 'சிங்களம் மட்டும்' அரச மொழிச் சட்டம் 2. 1958 இல் திரு. பண்டாரநாயக்காவின்; ஒருதலைப்பட்சமான 'பண்டாரநாயக்கா - செல்வநாயகம்' ஒப்பந்தம் மீறல் 3. 1958 இல் தமிழ் மக்களுக்கெதிரான இன கலவரமும் அரச பயங்கரவாதக் கட்டவிழ்பபும்; 4. அரசுப்படை நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டமை 5. 1958 இல் எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுத்து வைக்கப்பட்டு சிறையி;டப்பட்டமை. ஆயினும் 1960 அளவில் திரு. சுந்தரலிங்கத்தின் அறைகூவல் தமிழ்மக்கள் மத்தியில்;; அவர்கள் உணர்வைத் தட்டியெழுப்புவதாக அமையவில்லை. இக்காலப் பகுதி ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் செயற்பாடற்ற ஒரு பகுதியாயினும், விடுதலை வித்துக்கள் விதைக்கப்பட்ட காலமாகும். அவ்வகையில் விடுதலை வரலாற்றின் பரிணாம வளர்ச்சியின் முதல் வடிவத்தை இங்கே சந்திக்கின்றோம். ஆனால் 1972இல் பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சுதந்திர அரசியல் சட்டயாப்பை வாபஸ் பெற்று புதிய குடியரசு சட்டயாப்பை தமது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் ஒருதலைப் பட்சமாகத் திணித்து அதன் மூலம் சிறுபான்மைக் குடிமக்களாகிய தமிழ்; மக்களின் உரிமைகளைப் பறித்த போதுதான் தமிழ் மக்கள் இனிமேல் மாற்ற முடியாத தமது தலைவிதியை உணர்ந்தார்கள். தாம் இலங்கை தீவில் இரண்டாம்தர பிரஜைகளே என்பது தெளிவாகிய போதே தமிழ் மக்கள் தமது பூர்வீக பூமியை மீளப் பெற்று சுதந்திரமாக வாழ முனைப்புற்றார்கள். இக்காலப் பகுதியே விடுதலை வரலாற்றின் பரிணாம வளர்ச்சியின் இரண்டாம் வடிவமாகும். விடுதலை வரலாற்றின் முதலாம் வடிவம் செயற்பாடற்ற, வடிவமாக அமைந்திருந்த பொழுதிலும், இரண்டாம் வடிவம் அகிம்சைவழி அரசியற் போராட்ட வரலாற்றுக் காலமாக அமைந்திருந்தது. தமிழ் மக்கள் தம்மேல் ஒருதலைப்பட்சமாகத் திணிக்கப்பட்ட குடியரசு அரசியலச்; சட்டயாப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை நிரூபிக்கத் தமிழரசுக் கட்சித் தலைவர் S. J. V செல்வநாயகம் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து மீண்டும் ஓர் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் அமோக வெற்றிப்பெற்ற தந்தை செல்வா, தமிழ் மக்கள் இனிமேல் தமது ஈழத்தமிழ் அரசை நிறுவுவதைவிட வேறுவழியற்;ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும், எனவே தமது கட்சி தமிழ் மக்களின் இவ்வரலாற்றுத் தேவையை எவ்வகையிலும் பூர்த்திச்செய்ய உழைக்கும் எனவும் பாராளுமன்றத்திலே பகிரங்கமாக அறிக்கையிட்டார். இச்சூழலிலே வௌ;வேறு கட்சிகளாகப் பிரிந்து நின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து 1976இல் "தமிழர் விடுதலைக் கூட்டணி'யை உருவாக்கினர். அதன் முதல்த் தேசிய பெதுக்கூட்டத்தில் தமிழ் மக்கள் தமது தாயகமாகிய தமிழ் ஈழத்தை மீண்டும் இஸ்தாபிப்பதே தம் தலையாய பணியாக ஏகமனதாக அறிக்கையி;ட்டனர். மீ;ண்டும் 1977இல் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் ஈழத்தாயகத்தை இஸ்தாபிப்பதற்கென்றே தம்மைத் தேர்வு செய்யக்கோரி மிக அதிகப்படியான வாக்குகளுடன்; 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுச் செய்; யப்பட்டனர். கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இதைத் தெளிவுபடுத்தி, இக்குறிக்கோளை அமைதியான வழியிலோ அன்றேல் போராட்ட ரீதியிலோ பெற்றெடுக்கப்போவதாகக்; கூறுகின்றது. எனவே தமிழீழக் கொள்கை ஆயுதம் தாங்கிய போராளிகளால் 1980 அளவில் உருவாக்கப்பட்டதொன்று என்பது வரலாற்றக்குப் புறம்பானதாகும். தமிழீழ நிலைப்பாடு முதிர்ந்த அரசியல் வாதிகளால் தமிழ் மக்;கள் நிலைகண்டு, அவர்கள் வரலாற்றுத் தேவையாகப் படிப்படியாக எடுக்கப்பட்ட தீர்க்கமான ஒரு முடிவாகும். இக்குறிக்கோளை அடைய தமிழ் அரசியல் வாதிகள் அகிம்சை வழி நின்று போராடினார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் அவர்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச பயங்கரவாதமே 1970 அளவில் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு இட்டுச்சென்றது என்பதே வரலாறு கூறும் உண்மையாகும். தமிழ் மக்களுக்கெதிரான அரச பயங்கரவாதத்தில் 1958 இலிருந்து மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, அவர்கள் சொத்துக்கள் அழிக்;கப்பட்டு, தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட போதெல்லாம் அவர்கள் ஆயுதம் தாங்கிப் போராட வில்லை மாறாக, நிராயுதபாணியான தமிழ் மக்கள் மீதே அரச பயங்கர வாதமும் இனவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தம்மைப் பாதுகாக்க, தம் இனத்தைப் பாதுகாக்க, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராட ஆரம்பித்தார்கள். இப்போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற சிங்கள அரசும் தன் அடக்குமுறையை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டே சென்றது. தமிழர்களின் ஆயுதம் தாங்கிய போராட்ட வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது 1983 கறுப்பு ஜுலை ஆகும். இலங்;கை பிரஜைகள் எனக் கூறிக்கொள்ளும் எவரும் அவமானப்படக் கூடியதான தமிழர்களுக்கெதிரான இனக் கலவரம் தமிழ் இளைஞர்களை அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் உத்வேகத்தோடு முன்செல்லவைத்தது. இளைஞர்களின் ஆயதம் தாங்கிய போராட்ட வரலாற்றின் ஆரம்ப காலத்தில் பாரத தேசத்ததின் பங்கினையும் ஈழத்தமிழர் விடுதலைப் போரட்ட வரலாறு மறுக்க முடியாது. மிகவும் விசேசமாக 1983 கறுப்பு ஜுலை தமிழகத்தல் உணர்வு அலைகளைப் பிறப்பித்தது. தமிழக அரசின் உந்துதலால் பாரத அரசும் இளைஞர்களின் ஆயதம் தாங்கிய போராட்டத்திற்குப் பல வழிகளிலும் துணை நின்றது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றின் மூன்றாம் வடிவம் இரத்தக் களரியான ஒரு வடிவமாக அமைந்தது மிகத் துர்அதிர்ஷ்டவசமே. ஆனால் முதிர்ந்த தமிழ் அரசியல்வாதிகளுடைய அகிம்சை வழிப் போரட்டம், அதாவது வரலாற்றின் இரண்டாம் வடிவம், எதிர்பார்த்த எப்பலனையும் அளிக்காத பட்சத்தில் இளைஞர்கள் அவ்வழிப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்தது இயற்கையே. மேலும் மிக துர்அதிஸ்டவசமாகப், புற்றீசல் போல் உதித்த பல போராட்டக் குழுக்கள் தமிழீழப் போராட்டத்தை ஓரளவு முன்னெடுத்துச் சென்ற போதிலும்;, உரிமைக் காக்கப் புறப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஆரம்பக் குறிக்கோளுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவில்லை. பல தடவைகளில் தனி நபர்களின் ஒழுக்கக் கேடும், சில இயக்கங்களின் நடைமுறையும் போராட்டக் குழுக்களுக்கிடையே பகைமையை வளர்த்துச் சகோதரக் கொலைகளில் முடிந்தது. இந்த உட் பூசல்களினால் சில இயக்கங்கள் அழிந்தொழிந்தன, சில இன்றும் பெயரளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பக் காலத்திலேயே உருவாகி இன்றும் போராட்டப் பாதையில் உரிமைக்குக் குரல் கொடுக்கும் இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்; தன்னை வலுப்படுத்தி உருவாக்கி இருக்கின்றது. இவர்கள் குறிக்கோளின் வைராக்கியமும் ஆயத பலமும் இவர்களை இன்று ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தலைமைக்கு இட்டுச் சென்றதுள்ளது. தமிழ் இளைஞர்களின் ஆயதம் தாங்கிய போராட்டத்தை எந்தவொரு வகையிலும் நசுக்க முடியாத இலங்கை அரசு, இந்திய அரசின் அனுசரணையுடன் 1985 இல் திம்பு நகரில் பேச்ச வார்த்தை நடத்தியது. ஈழத்தமிழர் தரப்பின் ஏக மனதான நிலைப்பாடுகள் இங்கே தெளிவாக எடுத்துக் கூறப்பட்டன. ஆனால் இலங்கை அரசு ஈழத்தமிழரின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க மறுத்ததில் இப்பேச்சு வார்த்தைகள் எவ்வித பயனுமின்றி முறிவடைந்தன. இதனைத் தொடர்ந்து 1987 இல் இலங்கை ஜனாதிபதி J.R. ஜெயவர்த்தனாவுக்கும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்குமான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு அதன்படி தமிழ் பிரதேசங்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் ஒரு வகையான சுய ஆட்சி முறை ஏற்றக் கொள்ளப்பட்டது. ஆனால் இலங்கை அரசு ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டப்படி அதிகாரப் பரவலாக்கல் மூலம் சுய ஆட்சி வழங்க காலம் தாழ்த்தியது, இதனை இந்திய அரசு அழுத்தங்களினாலும் சாதிக்க முடியாத நிலை உருவானது. மீண்டும் துர்அதிர்ஷ்டமாக, அமைதி காக்க வந்த இந்; தியப் படையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மோதலில் ஈடுபட்டனர் பல நூற்றக்கணக்கான புலிகளும், இந்தியப் படைகளும் பொது மக்களும் செத்து மடிய வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசவுடன் 1989-90 இல் விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தை நிகழ்த்தினர். அவர்கள் இடையில் ஏற்பட்ட கருத்தொருமைப்பாட்டினால் இந்திய அரசப் படைகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் இப்பேச்சு வார்த்தைகளும் தீர்க்கமான எந்தவொரு முடிவையும் எட்டாமலே முறிவடைந்தன. இவ்வாறு போருக்கும், பேச்சுவார்த்தைக்கும் இடையில் மாறி மாறித் தொடர்ந்து ஈழத்தமிழர் விடுதலை வரலாற்றின் மூன்றாம் வடிவம் 2002 இல் விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப் படுத்தி அனுசரித்து வருகிற போர் நிறுத்தத்துடன் புதிய ஒரு வடிவத்தில் நுழைந்துள்ளது. இப்போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, முன்னால் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்குவுக்கு விடுதலைப் புலிகளுக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் நிறுத்தப்பட்டு, நார்வே அரசின் அனுசரணையுடன் மூன்று வட்டப் பேச்சு வார்த்தைகள் நடந்தேறியுள்ளன. இக்கட்டத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவின் சூழ்ச்சிகரமான காய் நகர்த்தல்களால் பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவின் அரசு கலைக்கப் பட்டு, பொதுத் தேர்தல் மூலம் மீண்டும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவின் கட்சி இடதுசாரி இயக்கங்களின் துணையுடன் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இப்புதிய அரசுக்கும், விடுதலைப் புலிகள் உடனான பேச்ச வார்த்தைப் பற்றி ஒரு மனதான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இன்று போர் வெடிக்குமோ என்ற பீதியில் மக்கள் ( தமிழர்களும்;, சிங்களவர்களும்) வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலை மாறி நிரந்தரமானதோர் தீர்வு ஏற்பட்டு நிலையான அமைதி உருவாக வேண்டுமாயின் அது அரசியல்வாதிகளினதும் போராளிகளினதும் கையில் மட்டும் இல்லை. இது பொதுமக்கள் கையில் தான் உண்டு. இலங்கை வாழ் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்திரவாதம் வேண்டுமாயின் அவர்கள்தம் பூர்வீக பூமியில் சுதந்திரமாக வாழக் கூடிய ஒரு சட்ட அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன் அவசியத்தை இலங்கை வாழ் மக்கள் அனைவரும், அகில உலக அமைப்புக்களும் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டும்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner