-->

தமிழீழதேசியத்தலைவரின் சிந்தனைகள்

விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக
இயங்குகின்றது இந்த வரலாற்றை இயக்கும் மகத்தான சக்தியும் அதுவே
...
விடுதலை என்பது ஒரு தேசியக்கடன் இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும்
உண்டு ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தை முழுத்தேசிய
இனமும் பகிர்ந்துகொள்ளவேண்டும் இந்த தேசிய சுமையை சமூகத்தின்
அடிமட்ட ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம்
நமது தேசத்திற்கு செய்யும் துரோகம் என்றே சொல்ல வேண்டும்
...
நாம் ஒரு சத்திய லட்சியத்தால் பற்றுதலால் உறுதிகொண்ட மக்களாக
ஒன்றுதிரண்டு நின்றால் எந்தவொரு சக்தியாலும்
எம்மை அசைக்கவோ அழிக்கவோ முடியாது
...
உலகத்தின் எந்தவொரு நாடும் இரத்தம் சிந்தாமல் தியாகங்கள்
புரியாமலும் சுதந்திரம் பெற்றதில்லை
...
தான்நேசித்த மக்களுக்காக தான்நேசித்த மண்ணுக்காக ஒரூவர் எத்தகைய
உயர்ந்த உன்னதமான தியாகத்தைச்செய்யமுடியுமோ அந்த அற்புதமான
அர்ப்பணிப்புத்தான் திலீபன் செய்திருக்கிறான்
...
போராட்டத்தின்
எதார்த்தநிலையை புறநிலை உண்மைகளை மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன்
மக்களிடையே கருத்துக்களைக்கட்டி வளர்ப்பதில் மக்கள்
தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்
ஒரு விடுதலைப்போராட்டத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்வதில் மக்கள்
தொடர்பு சாதனங்கள் வகிக்கும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது
...
இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்குவரை சுதந்திரத்தை இழந்து
வாழும் மக்கள் இருப்பார்கள் விடுதலைப்போரும் இருக்கத்தான் செய்யும் இது
தவிர்க்க முடியாத வரலாற்று நியதி
...
இரத்தம்சிந்தி வியர்வைசிந்தி கண்ணீர்சிந்தி தாங்கொண துன்பத்தின் பரிசாக
பெறுவது தான் சுதந்திரம்
...
திலீபனின் தியாகம் இந்திய மாயையைக் கலைத்து தமிழீழ தேச உணர்வை
தட்டியெழுப்பியது அந்த தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமே அன்னை பூபதியின்
அறப்போர் அமைந்து
...
சுதந்திரத்தை நாம் வென்றெடுக்காது போனால் அடிமையாக வாழவேண்டும், தன்மானம்
இழந்து தலைகுனிந்து வாழவேண்டும், படிப்படியாக அழிந்து போகவேண்டும். ஆகவே
சுதந்திர போராட்டத்தைத்தவிர எமக்கு வேறு வழி ஏதுமில்லை.

மேதகு தமிழீழதேசியத்தலைவர் அவர்களின் சிந்தனைகள்

25,27-ஜீலை-1983 வெலிக்கடசிறையில் படுகொலை செய்யப்பட்டோர்

வெலிக்கடைக்
கொலைச்
சம்பவங்களுக்கு முந்தைய
சில நாட்களில் தீவ்யன''
போன்ற சிங்களப்
பத்திரிகைகளில்
தமிழ்க்
கைதிகள்
சிறைச்சாலைகளில்
விசேஷமாகக்
கவனிக்கப்படுகிறார்கள்
என்று பொய்ச்
செய்திகள்
வெளியிடப்பட்டதன்
மூலமும்
தமிழ்க்
கைதிகளுக்கு எதிராகத்
துவேஷம்
சிங்களக்
கைதிகள்
மத்தியில்
வளர்க்கப்பட்டது .

வெலிக்கடைச்
சம்பவத்தில்
சம்பந்தப்பட்ட
எந்தவொரு சிங்களக்
கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித
நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
இவையெல்லாம்,
வெலிக்கடைப்
படுகொலைகள்
முன்னரே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட
சதி என்பதை எந்தவித
சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன .

வெலிக்கடைச் சிறைச்சாலையில்
படுகொலை செய்யப்பட்டவர்களின்
விவரம்
பின்வருமாறு :
தங்கதுரை என்று அழைக்கப்படும்
நடராசா தங்கவேல் ,

குட்டிமணி என்று அழைக்கப்படும்
செல்வராஜா யோகச்சந்திரன் ,

ஜெகன்
என்று அழைக்கப்படும்
கணேஷானந்தன்
ஜெகநாதன் ,

தேவன்
என்று அழைக்கப்படும்
செல்லதுரை சிவசுப்பிரமணியம்,

சிவபாதம்
மாஸ்டர்
என்று அழைக்கப்படும்
நவரத்தினம்
சிவபாதம் ,

செனட்டர்
என்று அழைக்கப்படும்
வைத்திலிங்கம்
நடேசுதாசன் ,

அருமைநாயகம்
என்றும்
சின்னராஜா என்றும்
அழைக்கப்படும்
செல்லதுரை ஜெயரெத்தினம்,

அன்ரன்
என்று அழைக்கப்படும்
சிவநாயகம்
அன்பழகன் ,

ராசன்
என்று அழைக்கப்படும்
அரியபுத்திரன்
பாலசுப்பிரமணியம் ,

சுரேஷ்
மாஸ்டர்
என்று அழைக்கப்படும்
காசிப்
பிள்ளை சுரேஷ்குமார்,

சின்னதுரை அருந்தவராசா,

தேவன் என்றும்
அரபாத்
என்றும்
அழைக்கப்படும்
தனபாலசிங்கம்
தேவகுமார் ,

மயில்வாகனம்
சின்னையா ,

சித்திரவேல்
சிவானந்தராஜா,

கணபதிப்பிள்ளை மயில்வாகனம்,

தம்பு கந்தையா,

சின்னப்பு உதயசீலன்,

கணேஷ்
என்றும்
கணேஷ்வரன்
என்றும்
அழைக்கப்படும்
கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்,

கிருஷ்ணபிள்ளை நாகராஜா,

கணேஷ்
என்று அழைக்கப்படும்
கணபதி கணேசலிங்கம் ,

அம்பலம்
சுதாகரன்,

இராமலிங்கம்
பாலச்சந்திரன்,

பசுபதி மகேந்திரன்,

கண்ணன்
என்று அழைக்கப்படும்
காசிநாதன்
தில்லைநாதன் ,

குலம்
என்று அழைக்கப்படும்
செல்லப்பா குலராஜசேகரம் ,

மோகன்
என்று அழைக்கப்படும்
குமாரசாமி உதயகுமார் ,

ராஜன்
என்று அழைக்கப்படும்
சுப்பிரமணியம்
சிவகுமார் ,

ராஜன்
கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்,

கொழும்பான்
என்று அழைக்கப்படும்
கருப்பையா கிருஷ்ணகுமார்,

யோகன்
என்று அழைக்கப்படும்
ராஜயோகநாதன் ,

அமுதன்
என்றும்
அவுடா என்றும்
அழைக்கப்படும்
ஞானசேகரன்
அமிர்தலிங்கம் ,

அந்தோணிப்
பிள்ளை உதயகுமார்,

அழகராசா ராஜன்,

வேலுப்பிள்ளை சந்திரகுமார்,

சாந்தன்
என்று அழைக்கப்படும்
சிற்றம்பலம்
சாந்தகுமார்
முதலிய 35 பேர்.

இரண்டாம் நாள்
படுகொலை செய்யப்பட்டோர்
விவரம்
வருமாறு :
1. தெய்வநாயகம்
பாஸ்கரன் 2.
பொன்னம்பலம்
தேவகுமார் 3.
பொன்னையா துரைராசா 4.
குத்துக்குமார்
ஸ்ரீகுமார் 5.
அமிர்தநாயகம்
பிலிப்
குமாரகுலசிங்கம்
6.
செல்லச்சாமி குமார்
7.
கந்தசாமி சர்வேஸ்வரன்
8.
அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 9.
சிவபாலம்
நீதிராஜா 10.
ஞானமுத்து நவரத்தின
சிங்கம் 11.
கந்தையா ராஜேந்திரம்
12.
டாக்டர்
ராஜசுந்தரம் 13.
சோமசுந்தரம்
மனோரஞ்சன் 14.
ஆறுமுகம்
சேயோன் 15.
தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
16.
சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
17.
செல்லப்பா இராஜரட்னம்
18.
குமாரசாமி கணேசலிங்கன்.

குட்டிமணியின் கண்கள் 25-ஜீலை-1983

குட்டிமணியின்
கண்கள்
"எனது மரணதண்டனையை நிறைவேற்ற
முன்
எனது கண்களை எடுத்து,
பார்வையற்ற
ஒருவருக்குப்
பொருத்துங்கள். நான்
பார்க்க முடியாத
தமிழீழத்தை என்
கண்களாவது பார்க்கட்டும்."
- குட்டிமணி
விடுதலை விலைமதிப்பற்றது.
நாளை மலரப் போகும்
தமிழீழத்திற்காக
ஆயிரமாயிரம்
வீரர்களும்
வீராங்கனைகளும்
தங்கள்
இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக்
கொண்டார்கள் .
தனது எதிர்காலத்
தலைமுறை எந்த வித
அடக்குமுறைகளும்
அற்று உரிமையுடனும்
சுதந்திரத்துடனும்
வாழ்வதற்காக
தன்னை அழித்துக்
கொண்டவர்தான்
குட்டிமணி என்று அழைக்கப்படும்
திரு செல்வராசா யோகச்சந்திரன் .
ஈழத் தமிழர்களின்
இன்னல்கள்
நிரந்தரமாகக்
களையப்
படவேண்டுமென்றால்
தனித்
தமிழீழம்தான்
நிரந்தரத் தீர்வாக
அமையும் என்பதில்
மிக உறுதியாக
இருந்தவர்
குட்டிமணி . அந்த
விடுதலை வீரரை 08-05
1981 அன்று சிங்களக்
காவல் துறையினர்
கைது செய்து சிறையில்
அடைத்தனர் . சிங்கள
நீதிமன்றம்
அவருக்கு மரணதன்டனை வழங்கித்
தீர்ப்பளித்தது .
தீர்ப்பளித்த
நீதிபதி குட்டிமணியின்
இறுதி ஆசையைக்
கேட்டபோது ,
அதற்கு குட்டிமணி கூறிய
பதில் அவரது உள்ளக்
கிடக்கையையும்
விடுதலைமேல் அவர்
கொண்டிருந்த தீராத
பற்றையும்
உலகுக்கு வெளிச்சம்
போட்டுக்
காட்டியது .
"எனது மரணதண்டனையை நிறைவேற்ற
முன்
எனது கண்களை எடுத்து,
பார்வையற்ற
ஒருவருக்குப்
பொருத்துங்கள். நான்
பார்க்க முடியாத
தமிழீழத்தை என்
கண்களாவது பார்க்கட்டும்."
இதுதான் அந்த
விடுதலை வீரரின்
கடைசி ஆசை . அதற்குப்
பின் அவர்
வெலிக்கடைச்
சிறையில் அடைக்கப்
பட்டார் . அந்தச்
சிறையில்
ஏற்கனவே பல
சிங்களக்
கைதிகளும் தமிழ்க்
கைதிகளும்
இருந்தனர் .
சிங்களக் கைதிகள்
கொலை , கொள்ளை,
பாலியல்
வல்லுறவு போன்ற
குற்றங்களுக்காக
சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
தமிழர்கள்
விடுதலைப்
போராட்டத்தில்
ஈடுபட்டதற்காக
சிறை வைக்கப்
பட்டிருந்தனர்.
இனமோதல்களை தவிர்ப்பதற்காக
தமிழ்க் கைதிகளும்
சிங்களக்
கைதிகளும்
வெவ்வேறு சிறைகளில்
அடைத்து வைக்கப்
பட்டிருந்தனர்.
குட்டிமணி 34
தமிழ்க்
கைதிகளுடன்
அடைத்து வைக்கப்
பட்டிருந்தார் . 1983
ஆம்
ஆண்டு இலங்கையில்
தமிழ்
மக்களுக்கு எதிராக
மிகப் பெரிய இனக்
கலவரம் மூண்டது .
யூலை மாதம் 24 ஆம்
திகதி தொடங்கிய
அந்தக் கலவரம் பல
வாரங்கள்
தொடர்ந்தது .
இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்ட
தமிழர்கள்
படுகொலை செய்யப்
பட்டார்கள் . பலர்
உயிரோடு கொழுத்தப்
பட்டனர் . தமிழ்ப்
பெண்கள் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்
பட்டனர் .
பல்லாயிரக்கணக்கான
தமிழர்களின்
சொத்துக்கள்
சூறையாடப் பட்டன .
அப்போது ஆளுங்கட்சியாக
இருந்த ஐக்கிய
தேசியக்
கட்சி (U.N.P.)
கலவரத்தை அடக்காமல்
கை கட்டி வேடிக்கை பார்த்ததுமில்லாமல்
கலவரத்தை மேலும்
தூண்டும்
வேலைகளிலும்
இறங்கியது .
இந்தக் கலவரத்தின்
தீ வெலிக் கடைச்
சிறையில்
அடைத்து வைக்கப்பட்டிருந்த
சிங்களக்
கைதிகளையும்
பற்றிக் கொண்டது.
சிறைக்
காப்பாளர்கள்
அந்தச் சிங்களக்
கைதிகளின்
இனவெறிக்கு தீனி போடும்
வகையில் தமிழ்க்
கைதிகள்
அடைத்து வைக்கப்
பட்டிருந்த சிறைக்
கதவுகளைத்
திறந்து விட்டனர் .
கத்தி, வாள் மற்றும்
பல கூரிய
ஆயதங்களுடன்
தமிழ்க் கைதிகளின்
அறைகளுக்குள்
நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர்.
குட்டிமணியின்
கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப்
பட்டிருந்த அந்தச்
சிங்களக் கைதிகள்
அவரை வெட்டிப்
படுகொலை செய்தது மட்டுமல்ல
அவரது கண்களைத்
தோண்டி எடுத்து அதை தங்களது கால்களால்
நசுக்கி அழித்தனர் .
குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப்
பட்ட 35 தமிழ்க்
கைதிகளின்
உடல்களை வெளியில்
எடுத்துச்
சென்று சிறைச்
சாலை முற்றத்தில்
இருந்த புத்தர்
சிலைக்கு முன்னால்
போட்டு விட்டு ஆனந்தக்
கூத்தாடினர் .
குட்டிமணி மட்டுமல்ல
அவரது கண்கள் கூட
தமிழீழத்தைப்
பார்த்துவிடக்கூடாது என்பதில்
வெறியாக இருந்தனர்
அந்தச் சிங்களக்
கைதிகள். அந்த
விடுதலை வீரரின்
இறுதி ஆசையை நிறைவேறாமல்
செய்தனர் .
குட்டிமணி மட்டுமல்ல
பல்லாயிக்கணக்கான
பெண்களும்
ஆண்களும் தங்கள்
உயிரினும் மேலாக
நேசித்த அந்தத்
தமிழீழத்
தனியரசைக் காணும்
முன்பே போர்க்களத்தில்
தங்கள் உயிர்களைக்
காணிக்கையாக்கிக்
கொண்டனர் . இவர்கள்
எதைக் கேட்டார்கள்?
உரிமைகள்
மறுக்கப்பட்ட
தங்கள்
இனத்துக்காக
விலங்கிலும்
கேவலமாக
நடத்தப்பட்ட
தங்கள்
மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் விடுதலையையும் சுதந்திரத்தையுமே கேட்டார்கள்

திட்டமிட்டு நடந்தேறிய சதி ஜீலை-1983

  ராணுவத்தினரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைத் தொடர்ந்து சிங்களக் கைதிகள் கலைந்தனர். மேல் மாடியில் ஐந்து சிங்களக் கைதிகள் கண்ணீர்ப் புகையைச் சகிக்க மாட்டாது தமிழ்ப் போராளிகள் வசம் அகப்பட்டபோது தமிழ்ப் போராளிகள் சிங்களக் கைதிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தனர். சிங்களக் கைதிகள் கலைந்தவுடன் தமிழ்க் கைதிகள் விழுந்துகிடந்த தமது தோழர்களை அணுகியபோது படுகாயமுற்ற பலரின் உயிர்கள் பிரிந்துவிட்டன. படுகாயமுற்ற சிலரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தோரை சிறை அலுவலர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர்.    படுகாயங்களுடன் யோகராசா என்ற தமிழப் போராளி கொழும்புப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த சிங்கள வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த சிங்களத் தாதிகள் கேலி செய்தனர். இறுதியாகச் சிங்களப் பெண் டாக்டர் ஒருவர் யோகராசாவுக்குச் சிகிச்சையளித்து யோகராசாவுக்கு மறுபிறப்பு அளித்தார்.   27.7.1983 அன்று 18 தமிழ்ப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 19 பேர் தமது பயங்கர அனுபவங்களுடன் தப்பிப் பிழைத்தனர்.   வெலிக்கடையில் கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஈழப் போராளிகளின் உடல்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மண்ணில் சங்கமமானது. சிங்களப் பாசிசச் சட்டத்தின் கீழ்க் கொல்லப்படும் எந்த நபரினது உடலையும் மரண விசாரணையின்றித் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியும். இதன்மூலம் ஆயுதப்படையினர் கேட்பாரின்றித் தமிழர்களைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.   தமது பாதுகாப்பிலிருந்த சிறைக்கைதிகளின் கொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒரு கம்பித்துண்டைச் சிறைக் கைதிகள் வைத்திருப்பதையே மிகவும் பாரதூரமான குற்றம் எனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம் பயங்கரமானதும் கொல்லக்கூடியதுமான ஆயுதங்களைச் சிங்களக் கைதிகள் வைத்திருக்க அனுமதித்தது ஏன்?   தாக்குதல் தொடங்கியவுடன் சிறை அதிகாரிகளோ அருகிலிருந்த ராணுவத்தினரோ சிங்களக் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது உற்சாகமூட்டியது ஏன்? 23-ஆம் தேதி படுகொலைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் நீதி விசாரணை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கப்படாததால், முதல் நாள் கொலையிலிருந்து தப்பிய தமிழ்க் கைதிகள் 27- ஆம் தேதி கொலை செய்யப்பட அனுமதிக்கப்பட்டார்கள்.   ""இலங்கையிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமானதும், சிறந்த பாதுகாப்பும் கொண்டது. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலக வீடு உள்ளது. சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு முன்பக்கத்தில் சிறைச்சாலை கமிஷன் அலுவலகம் உண்டு. அதன் பின்பக்கத்தில் கொழும்பு விசாரணைக் கைதிகளின் சிறைச்சாலை.   வெலிக்கடை சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய தெருவில் ஓரங்களில் சிறை உத்தியோகஸ்தர்கள், காவலர்களின் வீடுகள் உள்ளன. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் ஆசீர்வாதத்துடன், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை'' என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளியான புஷ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற அவரது நூலில் (பக்.371-372).   வெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் ""தீவ்யன'' போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில் விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன் மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில் வளர்க்கப்பட்டது.   வெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக் கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம், வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன.   வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:   தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார், மயில்வாகனம் சின்னையா, சித்திரவேல் சிவானந்தராஜா, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், தம்பு கந்தையா, சின்னப்பு உதயசீலன், கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன், கிருஷ்ணபிள்ளை நாகராஜா, கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம், அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன், பசுபதி மகேந்திரன், கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன், குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம், மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார், ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார், ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம், கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன், அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம், அந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன், வேலுப்பிள்ளை சந்திரகுமார், சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர்.   இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு:   1. தெய்வநாயகம் பாஸ்கரன் 2. பொன்னம்பலம் தேவகுமார் 3. பொன்னையா துரைராசா 4. குத்துக்குமார் ஸ்ரீகுமார் 5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம் 6. செல்லச்சாமி குமார் 7. கந்தசாமி சர்வேஸ்வரன் 8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 9. சிவபாலம் நீதிராஜா 10. ஞானமுத்து நவரத்தின சிங்கம் 11. கந்தையா ராஜேந்திரம் 12. டாக்டர் ராஜசுந்தரம் 13. சோமசுந்தரம் மனோரஞ்சன் 14. ஆறுமுகம் சேயோன் 15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் 16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம் 17. செல்லப்பா இராஜரட்னம் 18. குமாரசாமி கணேசலிங்கன்.  

வெலிக்கந்தசிறைச்சாலையில் மீண்டும்கொலைவெறிதாக்குதல் 26-27ஜீலை-1983

  அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், "இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது'' என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது. 25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர்.   அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் 26.7. 1983 அன்று மாலை விசாரணை என்ற நாடகத்தை நடத்துவதற்குப் போலீஸப்ரும், நீதிபதியும், அரசாங்க உயர் அதிகாரிகளும் வந்து கொலைக்களத்தைச் சென்று பார்வையிட்டார்கள்.   சி-3 பிரிவில் இருந்த தமிழ் இளைஞர்களிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தார்கள். "" இனிமேல் நேற்று நடந்த மாதிரி ஒன்றும் நடக்கமாட்டாது'' என்று நீதிபதி, சிறை உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாரும் கூடிப் பேசினார்கள். தேநீர் விருந்துடன் அன்றைய விசாரணை முடிவடைந்தது. வந்த அரசாங்க அதிகாரிகள் திருப்தியுடன் சென்றுவிட்டார்கள்.   நீதிபதி வருவதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அங்கே மிஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளை நீதிபதியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று மிரட்டினார்கள். எஞ்சியிருந்த தமிழ் இளைஞர்கள் சிறை அதிகாரிகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாது படுகொலையில் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதிகளில் சிலரை அடையாளம் காட்ட முடியும் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.   ஆனால் நீதிபதியோ, அதிகாரிகளோ இது விஷயமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெலிக்கடைச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் கொலைகாரர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெலிக்கடையிலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும்படி விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.   26.7.83 அன்று இரவு வானொலியில் முதலில் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டபோது சிங்களக் கைதிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கொண்டாடினர்.   வெலிக்கடையிலிருந்து தம்மை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்தனர். 26- ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 28 பேரையும் ஒய்.ஓ. ( வர்ன்ற்ட்ச்ன்ப் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள்) கட்டடத்திற்கு மாற்றினார்கள்.   இக் கட்டடம் சப்பல் கட்டடத்திற்கு அருகாமையில் புத்த விகாரைக்குப் பின்னால் சிறைச்சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. ஒய்.ஓ. கட்டடம் மேல்மாடி ஒன்றைக் கொண்டுள்ளது. மேல்தளம் மண்டப வடிவில் அமைந்துள்ளது. கீழ்த்தளம் பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய 9 அறைகளைக் கொண்டுள்ளது.   ஒய்.ஓ. கட்டடத்தில் ஏற்கெனவே 9 தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒன்பது பேரும் மேல் தட்டிற்கு மாற்றப்பட்டார்கள். மதகுருமார்கள் சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீய தலைவர் எஸ்.ஏ. டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலை அணித் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மேல்தளத்தில் இருந்தார்கள். கீழ்த்தளத்தில் 8 அறைகளில் மும்மூன்று பேரும் ஓர் அறையில் நான்கு பேருமாக 28 தமிழ்க் கைதிகள் மாற்றப்பட்டனர்.   27.7.1983 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தையே சிறை அதிகாரிகள் இரண்டாவது கொலைத் தாக்குதலுக்கும் தெரிந்தெடுத்தனர். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் இப்படுகொலைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கைதியும் சிறையை விட்டுத் தப்பிச் செல்லும் எவரும் சுட்டுக் கொல்லப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம். ஊரடங்கு நேரத்தில் மரணத்திற்குப் பயந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டார்கள் என்பது சதிகாரச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.   இரண்டாவது நாள் படுகொலைத் திட்டத்தைக் கச்சிதமாக முழுமையாக நிறைவேற்றினார்கள். சிறைக் காவலர்கள் பயங்கரமான பொய் வதந்தி ஒன்றைக் கைதிகள் மத்தியில் பரப்பினர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தி மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது.   27.7.1983 அன்று மாலை 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரம். சப்பல் பகுதியில் ஏ-3 விசேஷ பிரிவில் இருந்த விசாரணைக் கைதிகளும் (சிங்களவர்) தண்டிக்கப்பட்ட கைதிகளும் (இத்தாலிய விமானமொன்றை பிணைப் பணம் கேட்டு கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட சேபால ஏக்க நாயக்கா உட்பட) கத்தி, கோடாரி, பொல்லு, விறகு கட்டை, கம்பி, குத்தூசி போன்ற ஆயுதங்களுடன் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு கொலை வெறியுடன் ஒய்.ஓ. கட்டடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.   ஏ-3 பிரிவில் இருந்த இக்கைதிகள் ஒய்.ஓ. கட்டடத்திற்கு வரவேண்டுமானால் பூட்டிய பெரும் இரும்புக் கதவுகள் மூன்றையும் பூட்டிய சிறிய இரும்புக் கதவொன்றையும் உடைத்தும் சுவரொன்றை ஏறியுமே உள்வர முடியும். ஆனால் கைதிகள் இக்கதவுகளை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அக்கதவுகள் யாவும் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தன.   சுதந்திரமாக விடப்பட்ட முதல் நாள் சிங்களக் கொலைகாரர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். தாக்க வந்தவர்கள் தமது கைகளில் சாவிக்கொத்தை வைத்திருந்தார்கள். சில கதவுகள் உடைக்கப்பட்டன; சில கதவுகள் சாவிகளினால் திறக்கப்பட்டன. மீண்டும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.   முதல்நாள் படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். சாவதற்கு முன் எதிர்த்துப் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டனர். ஆயுதத் தாங்கிய கும்பலை எதிர்ப்பதற்கு அவர்கள் கையில் எந்தவிதக் கருவிகளும் இல்லை. போர்வையைக் கதவுக் கம்பிகளுக்குள் விட்டு, கதவைத் திறக்காதபடி போர்வையை உள்ளுக்குள் இருந்து இழுத்துப் பிடித்தனர். சிறை அறையில் பாத்திரங்களுக்குள் இருந்து சிறுநீரையும் சாப்பிடக் கொடுக்கப்பட்ட காரமான குழம்பையும் இடையிடையே கொலைகாரர்கள் மீது ஊற்றினார்கள். கொலை வெறியர்கள் கதவுக்கு அருகில் நெருங்கும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினால் குத்தப்பட்டார்கள்.   சிங்களக் கைதிகள் வெளியிலிருந்து நீண்ட தடிகளினாலும் கம்பிகளினாலும் குத்தினார்கள். தமிழ்ப் போராளிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகள் போர்வையால் கதவை இழுத்துப் பிடித்தபோது சிங்களக் காடையர் போர்வைகளைக் கோடாரிகளினால் கொத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் போராட்டம் நீடித்தது. இதேசமயம் மேல்மாடியிலிருந்த தமிழ்க் கைதிகள் தம்மைப் பாதுகாக்கத் தயாரானார்கள்.   மத குருமார்களுக்குப் பூசை செய்ய மேஜை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. மேல் மாடிக்குச் சுமார் 50 சிங்களக் கைதிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் மேசைக் கால்களை உடைத்துக் கையிலெடுத்துக் கொண்டனர். 75 வயது நிரம்பிய டாக்டர் தர்மலிங்கத்தின் கையில் கூட ஒரு மேசைக் கால் இருந்தது. ""நாங்கள் நாய் போலச் சாகக்கூடாது'' என்று டாக்டர் தர்மலிங்கம் வீரமூட்டினார். சிங்களக் கைதிகள் அறைக்கதவை ஒரே அடியில் உடைத்து விட்டனர்.   டாக்டர் ராஜசுந்தரம் கதவருகே சென்று சிங்களத்தில் ""நாங்கள் சகோதரர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை? எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள்?'' என்று கூறியபொழுது அவர் வெளியே இழுக்கப்பட்டார். தலையில் பலமான ஒரு அடி. டாக்டர் ராஜசுந்தரத்தின் தலை பிளந்து ரத்தம் ஆறாக ஓடியது. அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றிய உயிர் பிரிந்தது.   இடையிடையே மேலேயிருந்த தமிழ்ப் போராளிகள் கதவுக் கம்பியில் ஓங்கி அடித்துச் சத்தமெழுப்பியபோது, சிங்களக் கைதிகள் பின்வாங்கினார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். வெளியிலிருந்த சிங்களக் கைதிகள் கம்பிகளினாலும், தடிகளினாலும் குத்தினார்கள். வெளியிலிருந்து கைதிகள் எறிந்த கம்பி ஒன்று தமிழ்ப் போராளிகள் வசம் கிடைத்தது. நீண்ட நேரமாக ஜீவமரணப் போராட்டம்.   இக்கொலை வெறிச் சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பின்னால் அமைந்த கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிறைப் பூட்டுகளை உடைத்துத் தப்பி ஓட முயற்சித்தபோதுதான் சிறைச்சாலை நிர்வாகம் உஷாரானது. சிங்களக் கைதிகள் ஆயுதங்களைத் தங்கள் மீதே திருப்பித் தப்பி ஓட முயற்சிக்கலாம் எனப் பயந்த நிர்வாகம் கைதிகளை அமைதிப்படுத்தத் தொடங்கியது.   தாக்குதல் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்தான் ராணுவ அதிரடிப் படையினர் உள்ளே வந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். கட்டடத்திற்கு வெளியேயிருந்த சிங்களக் கைதிகள் ""கொட்டியாவ மறண்ட ஓன'' "" கொட்டியாவ மறண்ட ஓன'' (புலிகளைக் கொல்ல வேண்டும், புலிகளைக் கொல்ல வேண்டும்) என வெறிக்கூச்சல் எழுப்பினர். அன்று ஓர் இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அதிரடிப் படை ஓரளவு நியாயத்துடன் நடந்து கொண்டது.   மாறாக முதல்நாள் தாக்குதலின்போது ஆயுதப் படையினர் படுகொலைக்கு உற்சாகமூட்டினர். இதில் ஒரு சிங்களக் கமாண்டரே வழி

வெலிக்கடை சிறை படுகொலைகள் 25-ஜீலை-1983

  சிங்கள அரசு ஈழப் பகுதிகளில் கைது செய்யும் தமிழ்ப் போராட்ட வீரர்களைத் தமிழர் பகுதியிலுள்ள சிறைகளில் அடைக்காது சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைப்பதே வாடிக்கை. இந்த நடவடிக்கை மிகவும் பாதுகாப்பானது என்றே அவர்கள் நினைத்திருக்க வேண்டும். பின்னாளில் இந்த நினைப்பு உண்மையாகவும் ஆனது. இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறையேயாகும். இங்கு சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இச்சிறைக் கட்டடம் சிலுவை வடிவில் பிரிட்டிஷார் காலத்தில் (1843-இல்) கட்டப்பட்டதாகும். இந்தச் சிறையில் அடைக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் அடைக்கப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பர். இங்கு அடைபட்டிருக்கும் ஏனைய சிங்களக் கைதிகளைப் போல் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் செய்திப் பத்திரிகைகள் வாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ, வானொலி கேட்கவோ, காற்றோட்டமான வசதிகளோ, சிறை நூலக வசதியோ மறுக்கப்பட்டு இருட்டு குகையில் வசிக்கிற நிலைமையைத் தோற்றுவித்தார்கள். தமிழ்ப் பகுதிகளில் நடந்ததாகக் கருதப்படும் சம்பவங்களுக்கான வழக்குகள் யாவும் சிங்களப் பகுதிகளிலுள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களின் பெற்றோர், மனைவி மக்கள், உற்றார் உறவினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் யாவரையும் சந்திக்க அனுமதியும் மறுக்கப்பட்ட நிலையில்தான் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஈழ மக்கள் செய்தித் தொடர்பு நிலையம் வெளியிட்ட ஸ்ரீலங்கா வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் நூலிலிருந்து-சிறிதே திருத்தப்பட்ட பகுதி இதோ: இங்குள்ள பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட சப்பல் கட்டடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாகும். கட்டடத்தின் கீழ்ப்பகுதி ஏ-3, பி-3, சி-3, டி-3 என நான்கு விசேஷ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக் கட்டடத்தின் மேல்மாடிகள் இரண்டும் சாதாரணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சாதாரண கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மேல்மாடிகளிலும் பலதரப்பட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சுமார் 600 கைதிகள் இருந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் சிங்களவர்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, தீவைப்பு, வீடுடைப்புப் போன்ற பலதரமான குற்றங்களைச் செய்த இவர்கள், தமிழ் இளைஞர்களைக் கொலை செய்வதற்கு அதிகாரிகளால் ஏவிவிடப்பட்டனர். கீழ்ப் பகுதியின் விசேஷ நான்கு பிரிவுகளில் பி-3 பிரிவில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், நடேசதாசன், சிவபாதம் மாஸ்டர், தேவன் ஆகிய ஆறுபேரும் தண்டிக்கப்பட்ட கைதிகளாக, வேறு சில சிங்கள விசேஷ சிறைக் கைதிகளுடன் தனித்தனி அறைகளில் பூட்டப்பட்டிருந்தனர். சி-3 பிரிவில் பனாகொடை ராணுவ முகாமில் சித்திரவதையை அனுபவித்தபின் கொண்டுவரப்பட்ட 28 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர். இவ்வறைகள் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை வைத்திருப்பதற்கு அமைக்கப்பட்ட வசதிகள் குறைந்த அறைகளாகும். டி-3 பிரிவில் 29 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் இருந்தனர். ஏ-3 பிரிவில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த சிங்கள விசாரணைக் கைதிகள் இருந்தனர். பலம் வாய்ந்த இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்த பி-3, சி-3 பிரிவுகள், பூட்டுக்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும். இப் பிரிவு திறந்து விட்டாலன்றி எவரும் (சக அதிகாரிகள் உள்பட) உள்ளே செல்ல முடியாது. டி-3 பிரிவின் கதவு பலகையால் இருந்தாலும் பலம் வாய்ந்த பூட்டு பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும். இந்த நான்கு விசேஷ பிரிவுகளுக்கும் பொறுப்பாக ஒரு ஜெயிலரும், ஒரு பொறுப்பதிகாரியும், நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனியே நான்கு சிறைக் காவலர்களும் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள். இக்கட்டடத்தைச் சுற்றி இருவரிசை முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு வெளியே பலத்த ராணுவக் காவல் போடப்பட்டிருந்தது. 25-7-1983- இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள். ரெஜஸ்-துணைத் தலைமை சிறை அதிகாரி, சமிதரத்ன-சிறை அதிகாரி, பாலித- காவலதிகாரி. ஆகிய மூன்று சிறை அதிகாரிகளுமே இனப் படுகொலைக்கு சிறைக்குள்ளே திட்டம் போட்ட சூத்ரதாரிகள். திட்டமிட்டபடி இவ்வதிகாரிகள் குறிப்பிட்ட சிறைக் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சாராயம், கசிப்பு போன்ற மது வகைககளைக் கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொலை வெறியைத் தூண்டினர். அந்த நேரத்தில் சிறைச்சாலை உயரதிகாரிகள் மதிய உணவுக்காகத் தத்தம் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். உயர் அதிகாரிகள் சிறையில் இல்லாதபோது நடந்த வன்முறையெனத் தப்பித்துக் கொள்ள இந்த ஏற்பாடு. தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின. வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன. சிங்கள சிறைக்கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்வதை இனவெறி பிடித்த சிங்கள சிறைக் காவலர் பார்த்து ரசித்தார்கள். கொலைகள் முடிந்தவுடன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்ற இராணுவ வீரர்கள் (தமிழ் அரசியல் கைதிகள் தப்பியோடாது இராணுவ வீரர்கள் வெலிக்கடையில் தொடர்ந்து காவலுக்கு நின்றார்கள்) உள்ளே அழைக்கப்பட்டார்கள். உள்ளே வந்த இராணுவ வீரர்கள் கொலை வெறிக்கு உரமூட்டினார்கள். ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது. குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதே காரணத்திற்காகக் குட்டிமணி குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார். சிங்கள வெறியர் விசிலடித்து ஆர்ப்பரித்து ""ஜெயவேவா'' (மகிழ்ச்சி ஆரவாரம்) கோஷம் எழுப்பிக் குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர். குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர். பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர். சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து ""சில்'' அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர். சிறுவன் மயில்வாகனத்திற்கு ஏற்பட்ட மரணம் மனதை உருக்குவதாகும். இச்சிறுவன் கப்பற்படையினரின் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு (பவுசர்) பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான். இச்சிறுவன் சப்பல் கட்டடத்திற்கு வெளியே சாதாரண கைதிகளுக்கு உணவு வழங்கப்படும் இடத்தில் மறைந்திருந்ததைக் கண்ணுற்ற சிறை அதிகாரி சமிரத்ன அச்சிறுவனின் தலைமயிரைப் பிடித்திழுத்துக் கத்தியால் அவன் குரல்வளையை வெட்டினான். இரத்தம் பீறிட்டுவர அச்சிறுவனும் புத்தருக்குக் காணிக்கையாக்கப்பட்டான். இச்சிறுவனைப் படுகொலை செய்த சமிதரத்ன ஒரு பட்டதாரியாவான் என்பதும் வெட்கக் கேடான உண்மையாகும். சிறைச்சாலை வாகனத்தில் ஈழ விடுதலைப் போராட்ட இளைஞர்களின் உடல்கள் முழு நிர்வாணமாகப் போடப்பட்டன. அந்த உடல்களின் மத்தியில் உயிர்ப் பிரிவின் முனகல் கேட்டபோது கொலை வெறியர் பொல்லால் அடித்து கம்பியால் குத்தி அவ்வொலிகளை நிரந்தரமாக நிறுத்தினார்கள்!

நீதிமன்றில் தொடர்ந்த வாதம் 1983

தங்கதுரை   தங்கதுரையின் நீதிமன்ற வாதம் மேலும் தொடர்கிறது - நான் வேறானாலும்கூட ஒரே தீவின் பிரஜைகள் என்ற வகையில் உங்கள் புரிந்துணர்வைப் பெற வேண்டும் என்ற நல்நோக்குடனேயே இவ்வழக்கின் விசாரணைக்கு நாம் சமூகமளித்தது மட்டுமல்லாது, இன்று எமது நிலையையும் உங்கட்கு தெளிவாய் காட்டினோம். இதனால் ஏற்படும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்தில் எம்பொருட்டு நீங்கள் குரல் கொடுப்பீர்களே ஆயின், மிக்க மனநிறைவை எய்தியவர்களாவோம்.   இல்லாவிடினும்கூட தற்போதைய சமூக, பொருளாதார நடவடிக்கைகளே தொடர்ந்து அதன் சுமை தாங்காது என உணர்ந்து அதன் தளைகளை உடைத்து உங்களை விடுவிக்க நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் மிக உறுதுணையாய் இருப்போம் என்பதை மனப்பூர்வமாய் உங்கட்கு தெரிவிக்கிறோம்.   தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றேதான் எமது முற்றான பணி. ஈழத்திய தமிழர், தமிழராய் தொடர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி என்பதனை ஸ்ரீலங்கா அரசு எம்மைப் பல வழிகளிலும் உந்தியதன் மூலமே அவ்வழியில் மிக முனைப்பாய் உள்ளோம்.   எமது நோக்கு மிக விசாலமானது. ஆப்பிரிக்கக் கண்டம் என்றால் என்ன, லத்தீன் அமெரிக்க நாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கையில் எமது சகதேசத்தவரான மக்களின், குறிப்பாக சிங்கள மக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படிப் போகும்.   இப்படி இருக்கையில், ஸ்ரீலங்காவின் போலீஸப்ர் மட்டுமே உங்கள் பார்வையில் அப்பாவிகளாய் தோற்றம் தருகின்றார்களா? பச்சைக் கொலையாக 1977-ஆம் ஆண்டில் மட்டும் உயிர் இழந்தவர்களே 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள். அவர்களின் குருதி பாய்ந்து ஓடியதால் இத் தீவின் மேல் கவிந்திருந்த வானமே செக்கல் மயமானது. அவை எல்லாம் உங்களுக்குப் பயங்கரவாதம் என்று தோன்றவில்லையா? தமிழ் மக்களைக் கொலை செய்தவர்கள் மட்டுமே அப்பாவிகளாகவும், குற்றம் செய்யாதவர்களாகவும் உங்களுடைய கண்களுக்கு தோற்றம் தருகின்றார்களா? தமிழ் மக்களின் உயிர், உடைமை என வரும்போது உங்கள் சிந்தனையின் மெல்லிய உணர்வுகள் அறவே மரத்துவிடுகின்றனவா? அல்லது அப்படியான ஓர் உணர்வு உங்கள் வாழ்வில் புரியாத ஒரு மொழியா?   நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ, அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மன நோயாளிகளோ அல்லர். மாறாக, விடுதலையை முன்வைத்துப் போராடும் ஒரு ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்.   சிங்கள மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். எமது பூமியில் மட்டுமல்லாது உங்கள் நாட்டின் பல பாகங்களிலும் மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் மீது பல தடவைகள் உங்கள் நாட்டு அதிகார அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தைச் சரி என நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அன்றியும் இவை மட்டுமல்லாது நம்மை நாம் அல்லாதவராக்கும் முயற்சியில் பல வழிகளிலும் ஈடுபட்டு வரும் உங்கள் அரசின் நாகரிகமற்ற நடவடிக்கைகளின் பாதிப்பில் இருந்து எம்மக்களை மீட்க நாம் முன்னின்றமையைத் தான் தவறு என்று சொல்வீர்களா?   அப்படியான ஓர் உயர்ந்த லட்சியத்தை முன்வைத்துப் போராடிய எம் மீது பயங்கரவாதத் திரையைப் போர்த்தி, உங்கள் நாட்டுச் சட்டங்களிலும் பயங்கரவாதத்தைப் புகுத்தி புதுப் பெருமையைத் தேடிக்கொண்ட உங்கள் அதிகார அமைப்பு எம்மீது விசாரணை என்ற பெயரில் நடத்தும் கண்துடைப்புகளையும் சரி என ஏற்றுக் கொள்கின்றீர்களா? அல்லது பாதிக்கப்படுபவன் தமிழன்தானே என்ற பொறுப்பற்ற உணர்வா? அப்படியாயின் தற்போதைக்கு உங்கள்மீது எம்மால் அனுதாபம் கொள்ள மட்டுமே முடியும்.   நாம் விடுதலை பெறுவது நிதர்சனமான உண்மை. அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச்சட்டங்களும் எம்மை அணுகா. அப்படியாயின் இச்சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுப்பீர்கள் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா?   இரு அயல் தேசங்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இல்லை. மாறுபட்ட கொள்கை உடைய எத்தனையோ நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்பு என்ற விஷயங்களுக்காகச் சில பொதுக் கோட்பாடுகளுக்கு இடையில் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வரவில்லையா? அதற்காக அந்நாடுகள் தமது இறைமையை விட்டுக் கொடுத்து விட்டன என நாம் சொல்ல முடியுமா?   இவ்வுலகின் வல்லாதிக்கம் கொண்ட சில சக்திகள், தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாய் மூன்றாம் மண்டல நாடுகளைப் பொருளாதார ரீதியில் தலையெடுக்க விடாது செய்து வரும் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதத்தில், இந்த உபகண்டத்தின் தன்னாதிக்கமுள்ள முற்போக்குக் குடியரசுகள், இவ்வுபகண்ட நன்மை கருதி அதற்கு ஒரு பொது அமைப்பையோ அல்லது எந்தக் குடியரசினதும் தன்னாதிக்கத்திற்கு பங்கம் வராவகையில் பல குடியரசுகள் கொண்ட ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பட்சத்தில் உபகண்ட நன்மை கருதி தமிழ் ஈழம் நிச்சயமாக தன் பங்களிப்பை வழங்கும்.   இறுதியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரசின் எந்த அமைப்பிலும் இருந்து நாம் நீதியை எதிர்பார்க்கவில்லை. இம்மன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல. எமக்குத் தெரியும் உங்களது சங்கடமான நிலைமை. சுயேட்சையான நிர்வாகம் அருகிவரும் உங்கள் அரசியல் அமைப்பில் நீதி நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் அரசைத் திருப்தி பண்ணியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருப்பது இயல்பே.   இந்நிலையில், தமிழ் இன விடுதலை இயக்கங்களை நசித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஓர் அரசின் மன்றத்தில் இனியும் மெனக்கெடுவதற்கு ஏதுமில்லை. எமது இயக்கத்தின் மீதும் இம்மன்றத்தில் நடத்தி முடிக்கப்பட இருக்கும் இரண்டாவது வழக்கு இது. இனி எத்தனை வழக்குகள் எம்மீது உங்களால் சோடிக்கப்பட்ட போதும் நாமும் விசாரணையில் பங்கெடுத்துக் கொண்டது எனும் நிலை இவ்வழக்குடன் பூர்த்தியாகின்றது. உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எமது எந்தவித இடையூறும் இல்லாது விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள். தற்போதைக்கு உங்களுக்கு நாம் செய்யும் உதவி இதுவே.   தற்போதைக்கு இவ்வழக்கின் மூலம் உண்மை நிலையை உலகிற்கும், குறிப்பாய் இத்தீவின் மக்கள் யாவர்க்கும் உணர்த்திவிட்ட மகிழ்வே எமக்கு மேலோங்கி உள்ளது. மக்களின் மனத்தீர்ப்பே எமக்கு முக்கியமானவை. அவர்கள் தீர்ப்பு நிச்சயமாய் எமக்கே சாதகமாய் அமையும் என்ற நிறைவே எய்தியுள்ளோம்.   இனி எம்மீது எத்தனை வழக்குகள்தான் சோடிக்கப்பட்டாலும், எத்தனை அவதூறுகள் வாரி இறைக்கப்பட்டாலும் எமக்கு அதுபற்றிக் கவலை இல்லை. உங்களது அந்த நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெறப்போவதும் நாமே. உங்கள் தீர்ப்பின் பாதிப்புகள் எம்வரை அந்நியமானவையே.   எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தைச் சிறையில் கழிக்கவோ- வேண்டுமாயின் மரணத்தைக் கூடத் தழுவவோ நாம் தயங்கவில்லை.   ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிகச் சர்வ சாதாரண சம்பவங்களே! இதை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவுமே இல்லை. எதை எய்கின்றோமோ அதுவேதான் நம்மிடம் திரும்பி வரும், எதை விதைக்கின்றோமோ அதையேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன் நான். நாம் விதைத்தவை விஷ விதைகளுமல்ல, எய்தவை நச்சு பாணங்களுமல்ல. அதனால்தான் இந்த நிமிடத்திலும் நான் மிகத் தெளிவாக மனநிறைவுடன் நிற்கின்றேன்.   வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஈழம் அகன்று போகட்டும் வறுமையும் அணுவாயுதப் பயமுறுத்தலும். ஒழிக பசியும் பிணியும். ஓங்கட்டும் மனித நேயம். தங்கதுரை வாதம் முடிந்ததும் நீதிமன்றம்

தங்கதுரையின் சூளுரை <1983 நீதிமன்றில்>

  தங்கதுரை   கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, விசாரித்தபோது ஈழத் தமிழர்களின் பிரச்னை என்ன என்பதைத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கதுரை தெரிவித்த கருத்துகள் வரலாற்றுப் புகழ்பெற்றவை. அந்த உரை, தனக்கு மரண தண்டனை நிச்சயம் என்பது தெரிந்திருந்தும் தனது கொள்கைகளிலிருந்து மாறாது உறுதியாய் நின்ற சாக்ரட்டீஸின் உரைக்கு நிகரானது அந்த உரை. நவீன கால உதாரணம் சொல்ல வேண்டுமானால், கியூபாவின் விடுதலைக்காக ஆயுதமேந்தி அப்போதிருந்த அரசிடம் மாட்டிக் கொண்டு நீதிபதிமுன் நிறுத்தப்பட்ட ஃபெடல் காஸ்ட்ரோவின் உரைக்கு ஒப்பானவை எனலாம்.   1983- ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாளன்று கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை நிகழ்த்திய வாதத்திலிருந்து: *   ''கனம் நீதிபதி அவர்களே!   ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான, அதிகாரம் உரிமை கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபணையையும் மீறி, ஸ்ரீலங்கா அரசின் நீதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.   நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஷ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது, இம்மன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளோம்.   எமது குற்றமற்ற தன்மை, மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி, எமது சாட்சிகளின் மூலமாயும், சித்திரவதைப் புகழ் ஸ்ரீலங்கா அரசுப் போலீஸ் அதிகாரிகளைத் தமது குறுக்கு விசாரணைகளின்போது அடிக்க வைத்த குட்டிக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்து விட்டமை கண்கூடு.   வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜையாக்கமாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.   இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விஷயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும், தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புக்களையும் மீறித் திட்டமிட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விஷயங்கள் அல்ல.   இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும், உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன?   நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீலங்காவின் ஏவல் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.   இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின்வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன?   காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.   இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா, இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா, கிடையாது. இந்த இம்சைகள் யாவும் அவர்களின் லட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்கள் அதை ஸ்ரீலங்கா அரசிற்கு நன்கு உணர்த்தியே வந்தனர். சமீப காலமாக ஸ்ரீலங்கா அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் அதை மிக உறுதியாய் நிரூபித்தனர்.   இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமாயும் அரசில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசு, நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்தசாமத்தில் ராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?   பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகளினால் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றும் அறியாத ரகசியங்கள் அல்ல. போதாக் குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜண்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைச் சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு.   இத்துணை கேவலங்களையும் நடத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மைப் பயங்கரவாதிகளாய் சித்தரிக்கக் கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?   பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.   ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை.   இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று.   இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது லட்சியம் மட்டுமல்ல இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர்.   எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும், பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.   எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத் தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.   ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்கு தமிழனத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்.   வழமையாக ஸ்ரீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்னையில் ஆளும் அமைப்பு ஏதும் தீர்வுகாண முயல்கையில் அதை எதிர்த்துக் கழறுவதும், சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஓர் ஆளும் அமைப்பு - நேரடியாய்த் தமிழ் மக்கள் பால் இனவெறியைத் தூண்டியமை கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை. ஸ்ரீலங்காவின் ஆளும் அமைப்பு - தமிழ் மக்கள் இடையேயான உறவுநிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றுவித்தமையை இத் தார்மீகப் பொறுப்பைத் தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.   தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்ப்போம், தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சில ஸ்ரீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ, நீங்கள் இதுவரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்தது உண்டா? மாறாக, பிரச்னையைத் தீர்க்கின்றோம் என கபடப் போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள்.   உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே.   இத்தீவில் வனவிலங்குகளுக்கேனும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்குப் பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாம் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.   விசாரணையின் நடுவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, ''இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?'' என்றார்.   ''எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதுமல்லாமல், எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களைப் புனையச் செய்தது அல்லாது எம்மையே பொய்யராக்கவும் எத்தனித்தபோது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை. உண்மைக்கு மேடையோ, அன்றி வெளிச்சமோ போட்டுக் காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்தச் சக்தியாலும் நிரந்தரமாய்த் தடுத்துவிட முடியாது.   நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக, அதை நாம் கண்டித்து உள்ளோம். ஆனாலும் பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத் தீயினாலும், ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்தபோதிலும், தமிழ்ப் பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை, அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?   மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில போலீஸப்ரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் இங்கு ஏற்கெனவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? அன்றி, எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எம் இறைமையை அங்கீகரிக்கும்படியும், அதன் முதல் கட்டமாய் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய், அதன் மொத்த உரித்தாளரான ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளை எம் பூமியில் இருந்து மீளப்பெற உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோ விலாசத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகின்றோம்.   * நாம் வன்முறைமீது காதல் கொண்ட  

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைகள் 2

கல்வியும் , மொழியும் , பண்பாடும் , நிலமும்
எமது இனக்கட்டமைப்பைத்தாங்கி நிற்கும் தூண்கள்
...
மிகவும் கொடுங்கோன்மையான , இராணுவ சர்வாதிகார
ஆட்சி எம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது
. . .
தமிழ்
இனத்தின் ஆன்மாவை ஆயுத பலாத்காரத்தின் மூலம்
எம்மை அடிமை கொள்ளச்செய்வதே எதிரியின் திட்டம்
. . .
இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்களதேசம்
மூழ்கிக்கிடக்கும்வரை தமிழரின்
அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் நீதியான நியாயபூர்வமான அரசியல்
தீர்வை நாம் சிங்கள ஆளும்
வர்க்கத்திடமிருந்து எதிர்பார்க்கமுடியாது
. . .
இன ஒடுக்குமுறையாலும் ராணுவ அடக்குமுறையாலும்
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத்
தீர்த்துவிடமுடியாது
. . .
எமது மொழியில், எமது பண்பாட்டில், எமது கலைகளில்,
எமது மண்ணில் நாம் கொள்ளும் பாசமும், நேசமும்
தேசியபற்றுணர்வாக பரிணாமம் பெறுகின்றன
. . .
சிங்கள அரசின் திட்டமிட்ட
ஒடுக்குமுறை காரணமாகவே சுயநிர்ணய உரிமைக்காகவும்
அரசியல் உரிமைக்காகவும் போராட்டத்தில் குதித்தோம்
. . .
எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனம்
கண்டு கொள்ளது சுலபம் ஆனால்
துரோகி முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள் எதிரியின்
கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள்
தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக்
கொடுக்கும் இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள்
மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க
வேண்டும்
. . .
இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில்
சூழலவில்லை ஒவ்வொரு நாடும் தனது தேசிய தேசிய
சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது மனிதஉரிமை,
மக்கள்உரிமை என்ற தார்மீக
அறத்திலிருந்து வழுவி பொருளாதார, வர்த்தக
நலன்களே நோக்காகக்கொண்டுள்ளது
. . .
அறிவின் அதியுயர்ந்து பிறப்பது தான் எளிமை
தன்னலமும், தற்பெருமையும் அகன்ற நற்பண்பாக
எளிமை தோன்றுகின்றது இந்த எளிமை ஒருவனை ஆழமான
மனிதனாக ஆக்குகின்றது
. . .
நாம் சுதந்திர மனிதர்களாக
எமது தலையெழுத்தை நாமே நிர்ணயிக்கும்
உரிமை பெற்றவர்களாக இருந்தால் தான், கல்வி உட்பட சகல
சமூக அமைப்புக்களிலும் ஒரு உன்னதமான
வளர்ச்சிப்போக்கில் உயர்நிலைக்கு நகர்த்திச்
செல்லமுடியும்
. . .
விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம் நெருப்பினை நீந்திக்கடக்கும் நீண்ட
பயணம் தியாகத்தீயினில் குதிக்கும் யாகம் இந்த
விடுதலை வேள்விக்கு தமது உயிர்களை சுகங்களை தியாகம்
செய்தவர்கள் மாவீரர்கள்
. . .
விடுதலை என்ற இலட்சியத்தை நாம்
இலகுவாகத்தேர்ந்தெடுக்கவில்லை வரலாறு தான்
அதை எம்மிடம் வலுக்கட்டாயமாக கையளித்து,
சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதனையும்
வரலாறு எமக்கு விட்டுவைக்கவில்லை
. . .
குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத்
தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே
சாரும்
. . .
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும்,
பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள்,
காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்
. . .
எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது
இன்றைய வரலாற்றின் தேவை இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் தட்டிக்கழிக்க
முடியாது
. . .
தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு
தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய ஒரு
போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை
. . .
விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப்
பங்காளிகளாக மாறவேண்டும்

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைகள் 1

***தமிழீழ
தேசியத்
தலைவரின்
சிந்தனையிலிருந்து***
*நிலத்தில்
புதையுண்டிருக்கும்
ஆயிரமாயிரம்
சமாதிக்
கற்களும்
விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன.
*வீதிகளில்,
சந்துகளில்,
சுவர்களில்
நாம்
சந்திக்கும்
மாவீரர்களது திருவுருவங்களும்
விடுதலையின்
சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.
*நாம் யாரையும்
ஏமாற்றவும்
இல்லை , துரோகம்
இழைக்கவும்
இல்லை . ஆனால்
எம்மை யாரும்
ஏமாற்றினால்
அல்லது துரோகம்
இழைத்தால்
நாம்
பதிலடி கொடுக்கத்
தயங்கமாட்டோம்.
*சத்தியத்திற்காய்
சாகத்
துணிந்து விட்டால்
ஒரு சாதாரண
மனிதப்
பிறவியும்
சரித்திரத்தைப்
படைக்க
முடியும்.
*மற்றவர்கள்
இன்புற்றிருக்க
வேண்டும்
என்பதற்காகத்
தன்னை இல்லாதொழிக்கத்
துணிவது தெய்வீகத்
துறவறம் ,
அந்தத்
தெய்வீகப்
பிறவிகள்தான்
கரும்புலிகள்.
*விடுதலைப்
போராட்டம்
என்பது இரத்தம்
சிந்தும்
ஒரு ரணகளம்
பயிற்சி -
தந்திரம் -
துணிவு இந்த
மூன்றும்
ஒரு படையணிக்கு அமையப்
பெறுமாயின்
வெற்றி நிச்சயம் .
*சுதந்திரம்
இல்லாமல் மனித
வாழ்வில்
அர்த்தமே இல்லை.
*நாம்
துணிந்து போராடுவோம்,
சத்தியம்
எமக்குச்
சாட்சியாக
நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக
நிற்கின்றது .
*கேணல்
கிட்டு ஒரு தனிமனித
சரித்திரம் ,
ஓய்வில்லாத
புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றில்
ஒரு காலத்தின்
பதிவு
இலட்சியத்தால்
ஒன்று பட்டு எழுச்சி கொண்ட
மக்களை எந்த
ஒரு சக்தியாலும்
ஒடுக்கிவிட
முடியாது .
*மக்களின்
துன்ப
துயரங்களில்
பங்கு கொண்டு,
அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத்
திட்டமிட்டுச்
செயலாற்றுவதுதான்
உண்மையான
அரசியல் வேலை .
*விழிப்புத்தான்
விடுதலைக்கு முதல்
படி .
விடுதலைப்
போராட்டம்
என்பது இரத்தம்
சிந்தும்
புரட்சிகர
அரசியற்ப்
பாதை.
*இன்றைய
காலத்தின்
தேவைக்கேற்ப -
வரலாற்று ஓட்டத்திற்கு அமைய
கலை இலக்கிய
கர்த்தாக்கள்
புதுமையான ,
புரச்சிகரமான
படைப்புக்களை உருவாக்க
வேண்டும் .
*எமது மொழியும்,
கலையும்,
பண்பாடும்
எமது நீண்ட
வரலாற்றின்
விழுதுகளாக
எமது மண்ணில்
ஆழமாக
வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய
வாழ்விற்கு ஆதாரமாய்
நிற்பவை .
*எமது போராட்டத்தின்
வலிமை எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.
*மனித
ஆன்மாவின்
ஆழமான
அபிலாசையாகவே மனிதனிடம்
சுதந்திர தாகம்
பிறக்கின்றது .
*சிங்களப்
பேரினவாதமானது தமிழினத்தின்
தேசிய
அன்மாவில்
விழுத்திய
ஆழமான வடுக்கள்
ஒருபோதும்
மாறப்போதில்லை.
*மலைபோல மக்கள்
சக்தி எமக்கு பின்னால்
இருக்கும் வரை ,
எந்தப்
புதிய
சவாலையும் நாம்
சந்திக்கத்
தயார் .
*மாவீரர்கள்
காலத்தால்
சாவதில்லை .
அவர்கள்
காலத்தை உருவகிப்பவர்கள்.
*எமது மக்கள்
மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,
அதனின்றும்
மக்களை விடுவித்து எமது மக்களின்
சுதந்திரத்தையும் ,
பாதுகாப்பiயும்
நிலைநாட்டும்
வரை , நாம்
ஆயுதம் ஏந்திப்
போராடுவதைக்
கைவிடமாட்டோம் .
*இயற்கை எனது நண்பன்,
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,
வரலாறு எனது வழிகாட்டி.
*உழைப்பவனே பொருளுலைகைப்
படைக்கின்றான்,
மனித
வாழ்க்கையின்
அடிப்படைத்
தேவைகளைப்
பூர்த்தி செய்கின்றான்.
*நாம் தமிழீழப்
பெண்
சமூகத்தின்
மத்தியில்
ஒரு பெரிய
புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம்.
தமிழர்
வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில்
நடைபெற்றிருக்கின்றது .
*சான்றோரைப்
போற்றுவதும்,
கற்றோரைக்
கௌரவிப்பதும்
தமிழர்களாகிய
எமது மரபு ,
எமது சீரிய
பண்பாடு .
எமது சொந்தப்
பலத்தில்
நாம்
வேரூன்றி நிலையாக
நிற்பதால் ,
மற்றவர்களின்
அழுத்தங்களுக்குப்
பணிந்து கொடாமல்
தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.
*அனைத்துத்
தமிழ் மக்களும்
ஒரே இனம் என்ற
தேசாபிமான
உணர்வுடன்
போராட்டத்தில்
பங்கு கொண்டால்
எமது விடுதலை இலட்சியம்
வெற்றி பெறுவது நிச்சயம்
மாவீரர்கள்
ஒரு சத்திய
இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள் .
அவர்களது சாவு,
சாதாரண மரண
நிகழ்வு அல்ல,
எனது தேச
விடுதலையின்
ஆன்மீக
அறை கூவலாகவே மாவீரர்களது மரணம்
திகழ்கின்றது .
ஒரு உயிர்
உன்னதமானது என்பதை நான்
அறிவேன் , ஆனால்
உயிரிலும்
உன்னதமானது எமது உரிமை,
எமது சுதந்திரம்,
எமது கௌரவம்.
*கரும்புலிகள்
எமது இனத்தின்
தற்காப்புக்
கவசங்கள் -
எமது போராட்டப்
பாதையின்
தடை நீக்கிகள் -
எதிரியின்
படைபலத்தை மனப்
பலத்தால்
உடைத்தெறியும்
நெருப்பு மனிதர்கள்.
*எமது மக்கள்
சுதந்திரமாகவும்,
கௌரவமாகவும்,
பாதுகாப்பாகவும்
வாழவேண்டும் .
இந்த
இலட்சியம்
நிறைவேறவேண்டுமாயின்
நாம்
போராடியே ஆகவேண்டும் .
*நான்
பெரிது நீ
பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்.
நாடு நமக்குப்
பெரிதானால்
நாம் எல்லோரும்
அதற்குச்
சிறியவர்களே ,
எமது நிலையற்ற
வாழ்விலும்
பார்க்க
நாட்டின்
வாழ்வே பெரியது.
*எமது விடுதலைப்
போராட்டத்தின்
பளுவை அடுத்த
பரம்பரை மீ
சுமத்த நாம்
விரும்பவில்லை .
எமது கடின
உழைப்பின்
பயனை அவர்கள்
அனுபவிக்க
வேண்டும் .
*ஒரு விடுதலை வீரனின்
சாவு,
ஒரு சாதாரண மரண
நிகழ்வல்ல
அந்தச்
சாவு ஒரு சரித்திர
நிகழ்வு , ஓர்
உன்னத
இலட்சியம்
உயிர்பெறும்
அற்புதமான
நிகழ்வு .
உண்மையில்
ஒரு விடுதலை வீரன்
சாவதில்லை ,
அவனது உயிராக
இயங்கி வந்த
இலட்சிய
நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.
*தமிழீழ
மண்ணில்
ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள்
நாம் . தமிழனின்
வீர மரபைச்
சித்தரிக்கும்
சின்னமாக
உதித்த
எமது இயக்கம் ,
வீரவரலாறு படைக்கும்
புரட்சிகர
விடுதலைச்
சக்தியாக
விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.
*ஒடுக்கப்படும்
மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப்
போராட
வேண்டும் ,
அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக்
கட்ட முன்வர
வேண்டும் .
எந்த
ஒரு விடுதலை இயக்கமும்
தனியாக நின்று ,
மக்களுக்குப்
புறம்பாக
நின்று ,
விடுதலையை வென்றெடுத்ததாக
வரலாறு இல்லை .
அது நடைமுறைச்
சாத்தியமான
காரியமுமல்ல .

பெரியவர்களின் சிந்தனைகள்

நம்முடைய
மண்ணில்
இருந்து எதிரிகள்
விரட்டி அடிக்கப்
படுகிறவரை ,
நாம்
ஓயப்போவதில்லை.
இதற்காக நாம்
மிகப் பெரிய
தியாகத்தைச்
செய்ய
வேண்டும் . நாம்
ஒன்றுபட்டு நிற்போமானால்
எம் கைகளில்
சுதந்திர
விடுதலை
.....................
சுதந்திரம் ,
விடுதலை ஆகியவற்றில்
முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம் .
நாம் ஜனநாயக
முறையோடு பிணைக்கப்பட்டவர்கள்.
நம்முடைய
லட்சியம்
நேர்மையானது .
எனவே நாமிதில்
நிச்சயம்
.........................
புரட்சி என்பது வாலிபத்தின்
கூறு ,
பகுத்தறிவாளர்கள்
ஆயுதம் :
பழைமை விரும்பிகள்
புரட்டர்கள் ,
எதேச்சதிகாரிகள்
ஆகியோருக்கு நஞ்சு :
மக்களின்
மகத்தான
சக்தி விடுதலை
.........................
நம்பிக்கை எதன்
மீது ஏற்பட்டாலும்;
அது உண்மையில்
நம்பிக்கைக்கு உரியதாக
இருக்க
வேண்டும் ;
அப்போதுதான்
வெற்றிக்
கிட்டும்
..........................
நம்முடைய
மண்ணில்
இருந்து எதிரிகள்
விரட்டி அடிக்கப்
படுகிறவரை ,
நாம்
ஓயப்போவதில்லை.
இதற்காக நாம்
மிகப் பெரிய
தியாகத்தைச்
செய்ய
வேண்டும் . நாம்
ஒன்றுபட்டு நிற்போமானால்
எம் கைகளில்
சுதந்திர
விடுதலை .
.........................
சுதந்திரத்துக்காக
நாம் எந்த
விலையும் தரத்
தயாராய் இருக்க
வேண்டும் ! தாய்
நாட்டின்
விடுதலைக்கு,
மக்களின்
சுதந்திரத்துக்கு நாம்
தருகிற எந்த
விலையும் -
தியாகமும்-வீண்
போகாது
.......
தேசிய
ஒருமைப்பாடும்,
ஒற்றுமை மனப்பான்மையும்
நம்
அனைவருக்கும்
மிகவும்
இன்றியமையாதவையாகும் .
மத, இன,சாதி,
மொழி,
முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட
தேசியக்
கண்ணோட்டமும்
ஒற்றுமை மனப்பான்மையும்தான்
எம்நாட்டை வளமிக்கதாக
உருவாக்க
வழி வகுக்கும்
.......
மற்ற
எல்லா வழிகளையும்விட
ஜனநாயகம்
ஒன்றுதான் மனித
குலத்தை ஆளக்கூடிய
மிக உயர்ந்த
மார்க்கம்
ஆகும்
........
சுதந்திரமும்
ஜனநாயகமும்
இன்று மரணப்
படுக்கையில்
கிடக்கின்றன.
அவற்றின்
பாதுகாவலர்கள்
என்று சொல்லப்
படுபவர்களாலேயே அவை மேலும்
பயங்கரமாகப்
பழி வாங்கப்படுகின்றன
.........
ஜனநாயகம்
வெற்றி பெற
வேண்டுமானால்,
அதற்குப்
பின்னணியாக
மக்களின்
நல்லெண்ணமும்
பொறுப்புணர்ச்சியும்
இருக்க
வேண்டும் .

தீயினில் எரியாத தீபங்களே<குமரப்பா, புலேந்திரன்

பாரத அரசின்
பாதங்கள்
எங்கள் தாயக
பூமியில் தடம்
பதித்தபோது தமிழீழ
மக்கள்
தங்களை வசந்தம்
தழுவிக்கொண்டதாகவே கருதினர்
ஸ்ரீலங்கா அரசின்
அராஜகத்தீயில்
எரிந்து கொண்டிருந்த
இவர்கள் பாரத
நாட்டின்
சிந்தனைக்காற்றில்
திழைக்கலாம்
என்று கனவுகள்
கண்டனர் . ஆனால்
காக்க
வந்தவர்களே தம்மைத்தாக்கிய
போது தமீழீழ
மக்களின்
கனவுகள் ,
கற்பனைகள்
யாவும்
சிதைந்து போயின.
இழப்புக்கள்
எமக்கு புதியவை அல்ல,
சோதனைகளை எமது தலைவர்
சந்திப்பது இதுதான்
முதல்
தடவையும் அல்ல ,
எனவே பாதி வழியில்
நிற்காது எமது பயணம்.
தமிழீழ மக்கள்
வேதனைத்தீயில்
வெந்துகொண்டிருக்கும்
வேளையிலும்
அவலங்களுக்கு மத்தியில்
வாய்திறந்து பாடுகின்றனர்.
பாட
மறுக்கப்பட்ட
சோகங்களும்
தாகங்களுமே இந்த
களத்தில்
கேட்கும்
கானங்கள் .
விடுதலைப்புலிகளை மக்கள்
எவ்வளவு ஆழமாக
நேசித்தார்கள்
என்பதை எமது மக்களின்
பல்வேறு தரப்பினரின்
வாய்
வழியாக
கேட்டும்
வெளிப்பாடே இந்த
வெளியீடு
இந்த கான
ராகங்கள்
உருவாக்கும்
போது காலநேரங்கள்
பாராது உளமார்ந்த
உணர்வுடன்
பங்களிப்பு தந்த
தமிழக
இசைக்கலைஞர்கள்
அனைவருக்கும்
தமிழ்மக்கள்
சார்பில்
புலிகளின்
நன்றிகள் .
காலத்தால்
அழியாத இந்த
கானங்கள்
உருவாக்க உதவிய
அனைத்து கரங்களையும்
நாம்
நன்றி உணர்வுடன்
பற்றிக்கொள்கிறோம்
இந்த களத்தில்
கேட்கும்
கானங்கள் .
இந்திய
ஸ்ரீலங்கா அரசின்
கூட்டுச்சதியால்
பலாலியில்
பலியாகி தீருவில்
வெளியில்
தியாகிகளாகி விட்ட
குமரப்பா ,
புலேந்திரன்,
அப்துல்லா, ரகு,
நளன், பழனி,
கரண், நிரேஷ்,
ரெஜினோல்ட்,
தவக்குமார்,
அன்பழகன்,
ஆனந்தகுமார்
ஆகிய
பன்னிரு வேங்கைகளின்
நினைவாலயங்களில்
காணிக்கையாக்குகின்றோம்
. . . . . . . . . . . . . . . . . . .
புலிகளின்
தாகம் தமிழீழத்
தாயகம்
. . . . . . . . .. . . . .
ஒலிவடிவில்
தரவிறக்க http://
www.tamileelamsongs.blogspot.com

தமிழர் வரலாற்றில் ஜீலை 83

தமிழர்களின்
செங்குருதியில்
எழுதப்பட்ட
நாள் 1983
யூலை 23
தமிழினத்தின்
வரலாற்றில் இது
ஓர் மறக்க
முடியாத நாள் !
"கறுப்பு யூலை"
உயிரைப்
பிழிந்தெடுத்த
உண்மையின்
மறுமலர்ச்சியின்
நாள்
அத்திகதியுடன்
இன்று 27
வருடங்கள்
பூர்த்தியாகின்றது


தமிழின
மக்களின்
மீது பாரிய
இனஅழிப்பையும்
தமிழின
விரோதத்தையும்
தூண்டி விட்ட
நாள் !
தமிழர்களைக்
கண்ட இடத்தில்
துன்புறுத்தல் ,
இனப்படுகொலை செய்தல் ,
உடமைகளை அழித்தல்
என்ற
மனநிலையை
சிங்கள இன
வெறியாளர்களாலும்
காடையர்
குழுக்களாலும்
நாடெங்கும்
திட்டமிட்டும்
தமிழின இன
அழிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டும்
வெலிக்கடை சிறைச்சலையில்
53
தமிழ் சிறைக்
கைதிகளை படுகொலை செய்தும்
உலகிற்கு தனது இன
விரோதத்தை வெளிப்படுத்தியும்
பேரினவாதத்திற்க்கும்
ஓர் உடனடிக்
காரணமாகவும்
அமைந்த நாள் !

தமிழின
அழிப்பு என்கின்ற
திட்டத்தில்
தமிழினத்தின்
மீது தாக்குதல்களை நடாத்தியும்
அச்சமூட்டியும்
அவர்களை பணிய
வைத்தும்
தனது மேலான்மையை சிங்களம்
வலுப்படுத்திய
நாள் !
அடக்கு முறையாளர்கள்
போராளிகளை
அழிப்பதில்காட்டும்
தீவிரத்தை விட
பொது மக்களின்
ஆன்ம
உறுதியை உடைக்க
வேண்டும்
என்பதில்தான்
அதிக
அக்கறை காட்டுகின்றனர் .
நமது வெற்றியின்
இரகசியமும் ,
எங்களுக்கான
நேரமும்
எங்களோடுதான்
அந்த
நேரத்துக்கான
வேலையை நாம்
செய்தோம் ஆனால்
நமது வெற்றியின்
இரகசியம்
எமக்கு புரியும்
சோர்வடையாதே தமிழா துணிந்து நில் !
மொழியாகி எங்கள்
மூச்சாகி
நாளை முடிசூடும்
தமிழ்
மீது உறுதி !
வழிகாட்டி எம்மை உருவாக்கும்
தலைவன்
வரலாறு மீதிலும்
உறுதி !
விழிமூடி இங்கே
துயில்கின்ற
வேங்கைவீரர்கள்
மீதிலும்
உறுதி !
இழிவாக வாழோம்
தமிழீழப்
போரில்
இனிமேல் ஓயோம்
இது உறுதி !


சிறி நவரத்தினம்

கட்டுநாயக்கா வான்படைத்தாக்குதல் 24-ஜீலை-2001

1983 ஜீலை 23,24
ல் கொழும்பில்
தமிழர் மீதான
வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர்
படுகொலை செய்யப்பட்டனர் .
இதன்
பாதிப்புக்கள்
அனைவருக்கும்
தெரியும் . 2001
இல் இதேநாளில்
ஜீலை 24 ல்
கொழும்பில்
அரசு துடிதுடித்தது.
கட்டுநாயக்கா விமானப்
படைத்தளத்
தாக்குதல்
ஜூலை 24, 2001
அன்று விடுதலைப்புலிகளின்
14
தற்கொடைப்படை உறுப்பினர்களால்
நடத்தப்பட்ட
இலங்கையின்
வரலாற்றில் மிக
முக்கியமான
தாக்குதல்
ஆகும் .
கட்டுநாயக்கா விமானப்
படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச
விமான நிலையம்
அமைந்திருந்ததும்
குறிப்பிடத்தக்கது .
தாக்குதல்
நடத்தப்படுவதற்கு ஒரு நாள்
முன்னர் சிங்கள
இசையைக்
கேட்டுக்
கொண்டிருந்த
விடுதலைப்புலிகளின்
உறுப்பினர்கள்
விமான
நிலையத்தின்
அருகிலிருந்த
பூங்காவில்
இருந்தனர்
என்றும்
அவர்கள்
மீது ஏற்பட்ட
சந்தேகத்தினால்
விமான
நிலையத்திற்கு அருகில்
வசித்தவர்கள்
விமான நிலைய
அதிகாரிகளுக்குத்
தகவல்கள்
அளித்தும்
துரிதமான
நடவடிக்கைகள்
எடுக்கப்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது .
பின்னர்
அங்கு அதிகாரிகள்
வந்து பார்க்கும்
பொழுது பூங்காவில்
எவரும்
இருக்கவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது
2001 ஜூலை 23
திங்கட்கிழமை மாலை 8.30
14
கரும்புலிகள்
உறுப்பினர்கள்
ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில்
கூடினர் .
2001 ஜூலை 23
திங்கட்கிழமை மாலை 9:45
மணியிலிருந்து 11:15
அப்பகுதியில்
மின்சார
சேவை தடைப்பட்டது.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30
மணியளவில்
தாக்குதல்
தொடங்கப்பட்டது.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில்
இருந்த 21
படை விமானங்கள்
மற்றும்
பயணிகள்
விமானங்கள்
அழிக்கப்பட்டன.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை காலை 8.30
மணிவரை தாக்குதல்
நீடிக்கப்பட்டது .
தாக்குதலினால்
ஏற்படுத்தப்பட்ட
இழப்புகள்
அழிக்கப்பட்ட
விமானங்கள்
எண்ணிக்கை 28
முற்றிலுமாக
அழிக்கப்பட்டவை
இரண்டு எ (A) - 340
-
300 பயணிகள்
விமானங்கள்
ஒரு எ (A) - 330
-200
பயணிகள்
விமானம்
நான்கு கிபிர்
போர்
விமானங்கள்
மூன்று கெ (K)-8
பயிற்சி விமானங்கள்
இரண்டு எம் .ஜ.ஜி (MIG)
- 27 ஜெட் போர்
விமானங்கள்
இரண்டு பெல்
(bell) 412
உலங்கு வானூர்தி
இரண்டு வி .வி.ஜ.பி (VVIP)
412
உலங்கு வானூர்தி
இரண்டு எம் .ஜ
(MI) -17
உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை
இரண்டு - A-320
பயணிகள்
விமானங்கள்
ஒரு - A-340
பயணிகள்
விமானம்
ஒரு அண்டொனோவ்
(Antonov)
போக்குவரத்து விமானம்
ஒரு எம் .ஜ (Mi) -24
உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell)
412
உலங்கு வானூர்தி
நான்கு கிபிர்
போர்
விமானங்கள்
விடுதலைப்புலிகளால்
நடத்தப்பட்ட
இத்தாக்குதலானது இலங்கையின்
பொருளாதாரத்தில்
வரலாறு காணாத
மாற்றத்தை ஏற்படுத்தியது .
இத்தாக்குதலின்
மூலம் சுமார்
375
மில்லியன்
அமெரிக்க
டாலர்களிற்கும்
அதிகமான
சொத்துக்கள்
அழிக்கப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது

தமிழீழவிடுதலைப்புலிகளின் வரலாறு

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப வரலாறு தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே பிரபாகரன் திரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும். யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும் அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும் தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார். வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் திருமேனியார் குடும்பமாகும். இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும் வல்வை முத்துமாரியம்மன் கோயில் நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள 'சிதம்பரா கல்லூரியில்" 10 ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது. தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன. அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள்இ ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள் பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார். இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் கரிகாலன் என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது. தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். "உங்களுக்கோ குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்பகால புரட்சித் தோழர்கள் பிரபாகரன் அவர்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவாகளாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கதை ஆரம்பிக்கும்போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது யதார்த்தமானது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் பிறந்தது. 1970 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கடுமையான அடக்குமுறையும் சகலதுறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட விதமும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது. சிங்கள இன வெறி ஆட்சிக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டுமென்று இளைஞர்கள் துடித்தனர். தமிழர்களின் கட்சிகளோ அல்லது மற்ற சிங்கள இடதுசாரி இயக்கங்களோ இந்த இளைஞர்களின் மனக்கொதிப்பை புரிந்து கொள்ளவில்லை. கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களுக்காகப் போராடச் சரியான தலைவர்களோ இயக்கங்களோ இல்லை என்று இளைஞர்கள் கருதினார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான அறப்போராட்டங்களைத் தமிழ்த் தலைவர்கள் நடத்தியிருந்த போதிலும் கூட இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அவர்கள் ஒதுக்கியே வைக்கப் பட்டிருந்தனர். பாராளுமன்றத்தில் அவர்கள் எழுப்பிய குரலுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இல்லை. கானகத்தில் காரிருளில் எழுப்பப்பட்ட குரலாக அவை ஒலித்தன. சிங்கள இன வெறிக்கு இரையாகிப்போன இடதுசாதிக் கட்சிகளும் கூட்டுச்சேர்ந்து தமிழருக்கு எதிராகச் செயற்பட்டன. தமிழர்களின் போராட்டங்களை அவர்களும் அலட்சியம் செய்தனர். எனவே தமிழ் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகளை நம்பக் கொஞ்சமும் தயாராக இருக்க வில்லை. இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் சூனியநிலை ஒன்று உருவாயிற்று. சிங்கள பேரினவாதிகளின் தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்நடத்திச் செல்லப் ~புரட்சிகரமான அரசியல் அமைப்பு~ ஒன்று இன்றியமையாதது என்பதைத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினார்கள். இதனால் ~தமிழ் மாணவர் பேரவை~ என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தமிழ் மாணவர் மத்தியில் மாபெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலமே சிங்கள இனவெறியர்களின் கொடுமைகளில் இருந்து தமிழர்கள் விடுதலை பெறமுடியும் என்பதை மெல்ல மெல்லத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர். தமிழ் மாணவர்கள் பேரவை பலம் பொருந்திய இயக்கமாக வளர்ந்தது. இதில் புரட்சி குழுவின் முக்கியமானவராக பிரபாகரன் அவர்கள் இயங்கினார். அக்குழுவில் வயதில் குறைந்தவராகப் பிரபாகரன் அவர்கள் இருந்தபடியால் ~தம்பி~ என்ற செல்லப் பெயர் கொண்டு மற்றவர்களால் அழைக்ப்பட்டார். (இன்றும் இப்பெயர் கொண்டு பிரபாகரன் அவர்களை அழைப்பவர்கள் இருக்கிறார்கள்) தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்த புரட்சி குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டடோர் இருந்தனர். இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அரச பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை பொறுப்பேற்றுக் கொண்டு பிரபாகரன் அவர்கள் உட்பட நான்குபேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். 16 வயதுச் சிறுவனாக இருந்த பிரபாகரன் அவர்கள் மட்டும் மனத்துணிவுடன் சென்று அரச பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும் ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன. அவரைவிட வயது மூத்தவர்கள் எல்லோரும் அவரின் துணிவையும் பொறுப்பெடுத்த காரியத்தையும் பாராட்டினார்கள். தமிழ் புரட்சிகர இயக்கத்தின் முன்னோடியாகத் தோன்றிய பிரபாகரன் அவர்கள் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அதே நேரத்தில் தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்த சிங்கள அரசாங்கம் அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரைக் காவற்துறையினர் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். சித்திரவதை தாங்கமுடியாமல் அவர்களில் ஒருசிலர் தமது சக கூட்டாளிகளைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். சிங்கள காவற்துறையின் கொடுங்கோலர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். (இக் காலத்தில் கொழுப்பிலிருந்த 4ம் மாடி என்ற கட்டிடம் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதற்கு பெயர் பெற்ற இடமாகும்.) அதனால் பிரபாகரன் அவர்கள் தமிழகத்திற்குச் சென்றார். பிரபாகரன் அவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் 1972 ன் ஆரம்பப் பகுதியில் தமிழீழம் திரும்பினார். ஆங்காங்கு சிதறுண்டு இருந்த இளைஞர்களிடையே காணப்பட்ட விடுதலைச் செயற்பாடு ஒரு புரட்சிகர இயக்கத்தை புரட்சிகர அரசியற் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு புரட்சிகர தலைமையை நாடி நின்றது. இப்புரட்சிகரச் சூழ்நிலையில்தான் ~புதிய தமிழ்ப் புலிகள்~ என்ற இயக்கம் 1972இன் நடுப்பகுதிகளில் தலைவர் பிரபாகரன் அவர்களால் அவரின் 17வது வயதில் தொடக்கப்பட்டது. இவ் இயக்கம் மிகவும் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டதாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும் 'புதிய தமிழ்ப் புலிகள்" இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும் துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார். (1) புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாகஇ 1975 ஆடி 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும் யாழ்ப்பாண மேயருமான அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த புதிய தமிழ்ப்புலிகள் மேயரின் கார்ச் சாரதியை மடக்கி அவரது காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர். இவ்வெற்றிகரமான முதலாவது இராணுவ நடவடிக்கையைத் தானே வகுத்து அதற்குத் தலைமை தாங்கிச்சென்று செய்து முடித்த பெருமை தலைவர் பிரபாகரன் அவர்களையே சாரும். தமிழீழ மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்ததுடன் சுதந்திர தாகம் கொண்ட தமிழ் இளைஞரைப் பொறுத்தவரை இந்நடவடிக்கை தமிழீழ விடுதலையை நோக்கிய நீண்ட கடினமான பயணத்தில் தலைவர் பிரபாகரனின் ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது. (2) 'புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் நிதி பெருமளவில் தேவைப்பட்டது. இதற்கு அரசாங்கப் பணத்தைப் பறித்தெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. சிறீலங்கா அரசு எல்லா மக்களினதும் வரிப்பணத்திலிருந்தே தமது நிதியினைப் பெற்றுக் கொள்கிறதாயினும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டே வந்தன. எனவே அரசாங்கப் பணத்தை பறித்தெடுத்துத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வது நியாயமானது என உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் 1976 பங்குனி 5ம் நாள் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பட்டப் பகலில் தன் தோழர்களுடன் புகுந்து துப்பாக்கி முனையில் ரொக்கமாக 5 இலட்சம் ரூபாவையும் நகையாக 2 இலட்சம் ரூபாவையும் எடுத்துக் கொண்டு சென்றார். அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டதையடுத்து புத்தூர் வங்கிச் சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைக்கப்பட்டது. 'புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை" அழித்தொழிப்பதையே முக்கிய நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்த பொலிஸ் தலைமையகம் இப்பிரிவை உருவாக்கியது. இப்பிரிவு தகவல் கொடுப்போர் துரோகிகள் ஆகியோரைக் கொண்டதாக தமிழீழப் பகுதிகளில் செயற்படத் தொடங்கியது புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் 1976 வைகாசி 5ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும் இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் தலைவர் பிரபாகரனால் இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன் தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார். இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் 'கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்" என்று கூறினார். தலைவர் பிரபாகரன் தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார். (1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை துரோகிகளை அழித்தல். (2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல். (3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல். 1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் 'தமிழின அழிப்பு" ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார். 1978 சித்திரை 7ம் நாள் கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1978 சித்திரை 25 ம் நாள்இ முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர். 1978 வைகாசி 19ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்" சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது. 1978 ஆவணி 7 ம் நாள் ஐ.தே.க. கட்சியின் ஜெ.ஆர். ஜெயவர்த்தனா அரசு 'புதிய அரசியலமைப்பை" உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர். 1979 ஆடி 20ம் நாள் ஜெ. ஆர்.ஜெயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தை" அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும். இதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (ஜெ. ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் ஜெ.ஆர். ஜெயவர்த்தன. சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில் தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார். இதன்படி 1979 ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. 1981 ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது. இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின. சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் 1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும். 1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் ஜெ.ஆர். ஜெயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர். 1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று 3 பேரைக் காயப்படுத்தி பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது. 1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4 ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர். 1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர். 1983 வைகாசி 18 ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார். 1983 சித்திரை 29 ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர். 1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு ஜெ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது. 1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார். இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர் தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து விடுதலை பெற்ற தமிழீழத்தில் தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது

தேசியத்தலைவரின் சிந்தனைகள் 1of3

--
ros

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner