பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
அக்கினிப்பிழம்புகளே
ஆற்றலின் தோற்றமாய்
அன்று களமாடிய
வீரவேங்கைகள்
மாற்றத்தின்
தேவையாய் மா தவம்
செய்த மான மறவர்களே
போற்றுதற்குரிய
புன்னகை வேள்வியில்
புனித சிகரங்களே -
வீரவணக்கம்
வீரவணக்கம்
மாவீரரே எங்கள்
வீரவணக்கம்
வீரவணக்கம்
வீரவணக்கம்
மாவீரரே எங்கள்
வீரவணக்கம்
துணிவின் வடிவமாய்
துளிர் களமாடிய
எம்மின வீரர்களே
பணிவின்
பிறப்பிடமாக
விளங்கிய
பண்புடை உறவுகளே
துணிவின் வடிவமாய்
துளிர் களமாடிய
எம்மின வீரர்களே
பணிவின்
பிறப்பிடமாக
விளங்கிய
பண்புடை உறவுகளே
அணியின் தலைமையில்
அற்புதமாக பணிபல
செய்தவரே
பணியாத தமிழீழ
தாகத்தால்
எழுந்திட்ட
தற்கொடையாளர்களே
வீரவணக்கம்
வீரவணக்கம்
மாவீரரே எங்கள்
வீரவணக்கம்
வீரவணக்கம்
வீரவணக்கம்
மாவீரரே எங்கள்
வீரவணக்கம்
அச்சமென்பதே இல்லை என்றிட்ட
லட்சிய வீரர்களே
துச்சமாகியே துணிந்து எழுந்திட்ட
துணிவின் சிகரங்களே
அச்சமென்பதே இல்லை என்றிட்ட
லட்சிய வீரர்களே
துச்சமாகியே துணிந்து எழுந்திட்ட
துணிவின் சிகரங்களே
நச்சுப்புகையாலே நாமிழந்தோம்
உமை ஆனந்தபுரத்திலே
மிச்சமின்றியே பகையை அழித்து வெல்வோம்
ஈழத்திலே
நெஞ்சத்தில் வீரம்
பொருந்திய
வீரத்தலைவரின்
தளபதிகளே
அஞ்சியே ஓட
வைத்தவர்
பலமுறை சிங்கள
படையணியை -
நெஞ்சத்தில் வீரம்
பொருந்திய
வீரத்தலைவரின்
தளபதிகளே
அஞ்சியே ஓட
வைத்தவர்
பலமுறை சிங்கள
படையணியை -
வெஞ்சமராடியே விடுதலை தீயை மூட்டி வளர்த்தவரே
விஞ்சிய தியாகம் பல
புரிந்திட்ட
வீரமறவர்களே
கரிகாலன் சேனையில்
காவியம் படைத்திட்ட
கரும்புலி மறவர்களே
புரியாத புதிராய்
புதுமேகம்
கொண்டு களமாடிய
வீரர்களே
கரிகாலன் சேனையில்
காவியம் படைத்திட்ட
கரும்புலி மறவர்களே
புரியாத புதிராய்
புதுமேகம்
கொண்டு களமாடிய
வீரர்களே-
கரிகாலன் சேனையில்
காவியம் படைத்திட்ட
கரும்புலி மறவர்களே
புரியாத புதிராய்
புதுமேகம்
கொண்டு களமாடிய
வீரர்களே-
வரிப்புலியாகியே வரலாற்று சமர்களில்
வழிகாட்டி போனவரே
சரித்திரத்திலே என்றுமே நிலையாகி சாதனை படைப்பீரே
வீரவணக்கம்
வீரவணக்கம்
மாவீரரே எங்கள்
வீரவணக்கம்
வீரவணக்கம்
வீரவணக்கம்
மாவீரரே எங்கள்
வீரவணக்கம்
காணொளியில் காண்பதற்கு
0 Comments:
Post a Comment