ஓயாதஅலைகள் 3 கட்டம் 1 <01/11/1999>
posted by rojan at Sunday, October 31, 2010 0 உங்கள் கருத்துக்கள்
போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடை நீக்கியாகச்செயற்பட்ட தலைவனும்
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடை நீக்கியாகச்செயற்பட்ட தலைவனும்
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
மாவீரர்கள் இருள் விலக்கும் வெளிச்சம்
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
மாவீரர் நாள் {கார்த்திகை27}
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
உரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
பிரி பால்ராஜ் {காணொளிகள்}
(27-நவம்பர்-1965 - 20-மே-2008
இயற்பெயர்: பாலசிங்கம் கந்தையா
கொக்குத்தொடு வாய்
முல்லைத்தீவு)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார்.
தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர்
1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்
1991 ஆம் ஆண்டு தொடக்கம்1993 ஆம் ஆண்டு வரையும்
பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம்1997 ஆம் ஆண்டு வரையும்
விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான
சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின்
முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர்
மேலும் படிக்க
. . . . . . . . . . . . . . . . .
காணொளிகள்
மீளும் நினைவுகள் 1
http://bit.ly/dn2aSx
மீளும் நினைவுகள் 2
http://bit.ly/dbwKhF
மீளும் நினைவுகள் 3
http://bit.ly/bl7jDu
இறுதி அஞ்சலி 1
http://bit.ly/c6Ip3h
இறுதி அஞ்சலி 2
http://bit.ly/aB7zaE
இறுதி அஞ்சலி 3
http://bit.ly/cC3gZ3
பிரி பால்ராஜ் நினைவக கானம்
http://bit.ly/cfL1KM
மக்கள் முன் உரையாற்றும்
பிரி பால்ராஜ்
http://bit.ly/dh7UKN
posted by rojan at Tuesday, October 26, 2010 0 உங்கள் கருத்துக்கள்
பிரி விதுஷா,,, துர்க்கா {காணொளிகள்
சோதியா படையணி சிறப்புத்தளபதி
பொன்னுத்துரை கலைச்செல்வி
<24/03/1971 - 03/04/2009 >
வலிகாமம் யாழ்ப்பாணம்
நினைவகத் தொகுப்பு
காணொளி
பாகம் 1
http://bit.ly/9scw2R
பாகம் 2
http://bit.ly/9EczZV
பாகம் 3
http://bit.ly/bQuxyN
* * * * * * *
* * * * * * *
பிரிகேடியர் விதுஷா
நினைவுத்தொகுப்பு
காணொளி
நினைவக கானம்
http://bit.ly/dgEIZ3
posted by rojan at Tuesday, October 26, 2010 0 உங்கள் கருத்துக்கள்
பிரிகேடியர் தீபன் {காணொளிகள்
(வேலாயுதபிள்ளை
பகீரதகுமார்)
கிளிநொச்சி கண்டாவளை
08/01/1966 - 04/04/2009
நினைவுத் தொகுப்பு
காணொளி
பாகம் 1
http://bit.ly/a1zq2D
பாகம் 2
http://bit.ly/att9bo
பாகம் 3
http://bit.ly/degli9
பாகம் 4
http://bit.ly/c9ykgB
பிரிகேடியர் தீபன் ஈகைச்சுடர் ஏற்றுதல்
http://bit.ly/aFUlY7
பிரிகேடியர் தீபன்
நினைவக கானம்
http://bit.ly/c0Qiwm
posted by rojan at Tuesday, October 26, 2010 0 உங்கள் கருத்துக்கள்
லெப் கேணல் திலீபன்
கேணல்
தியாகதீபம்
திலீபன்
தமிழீழவிடுதலைப்போராட்ட
வரலாற்றிலே
தமிழீழ
விடுதலைப்
புலிகளின்
யாழ் . மாவட்ட
அரசியற்
பிரிவுப்
பொறுப்பாளர்
திலீபன்
அவர்கள் ,
15.09.1987
அன்று ,
நல்லூர்க்
கந்தசாமி கோயிலின்
முன்பாக ,
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச்
சாகும்
வரையிலான
உண்ணாவிரதப்
போராட்டத்தை ஆரம்பித்தார் .
இந்திய
வல்லாதிக்கத்
தின் கண்களைத்
திறப்பதற்காக
அவர் மேற்கொண்ட
அந்தத் தியாகப்
பயணத்தில்,
12 நாட்கள்
ஒரு சொட்டு நீர்
கூட
அருந்தாமல் ,
மனக்கட்டுப்பாட்டுடன்
இருந்து ,
தமிழ் பேசும்
மக்களின்
விடுதலைத்
தீயைக்
கொழுந்து விட்டு எரியச்
செய்தபின் ,
26. 09.1987
அன்று ஈகச்சாவு அடைந்தார்.
காணொளிகள்
திலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 1
http://bit.ly/aZYQgA
திலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 2
http://bit.ly/djce5u
திலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 3
http://bit.ly/ahuu5m
தியாகி திலீபன் 1
http://bit.ly/9Tb2MG
தியாகி திலீபன் 2
http://bit.ly/dsYNRT
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 1
http://bit.ly/aFT07U
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 2
http://bit.ly/bWbTlX
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 3
http://bit.ly/dC8GIk
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 4
http://bit.ly/9R3chc
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 5
http://bit.ly/cPX9UY
திலீபன் அண்ணா வரலாற்று உரை
http://bit.ly/cvGbDa
தியாகதீப நினைவுநாளில் தலைவர்உரை
http://bit.ly/9exV5J
திலீபன் அண்ணா நினைவக கானம்
"நல்லூர் வீதியில்"
http://bit.ly/bXafqk
திலீபன் அண்ணா நினைவக கானம்
"மூச்சிழுக்கும் நேரமெல்லாம்"
http://bit.ly/beP4Qy
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
3ஆம் ஆண்டு நினைவில் எல்லாளன் நடவடிக்கை
தேசியத்தலைவர்
அவர்களால்
எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி மூன்றாம்
ஆண்டு நினைவுநாள்
22-
ஒக்டோபர்-2010
தமிழீழ
விடுதலைப்
போராட்ட
வரலாற்றில்
என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய
நாளாக 2007 ஆம்
ஆண்டு காணப்படுகின்றது
தமிழ் மக்களின்
விடுதலைப்போராட்டம்
தொடக்க
காலத்தில்
கெரில்லா போராட்டமாக
காணப்பட்டு அதன்
வளர்ச்சிப்படிகளில்
பல
திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக
வளர்ச்சிகண்டு பின்
ஒரு இனத்தின்
விடுதலைக்காக
போராடும்
போராட்டமாக பல
கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக
போராடிய
காலகட்டத்தில்
2007 ஆம்
ஆண்டு பத்தாம்
மாதம் 22 ஆம்
நாள்
விடுதலைப்புலிகளின்
பரிணாம
வளர்ச்சியின்
ஒரு படிக்கல்லான
தாக்குதலாக
சிங்களபடையின்
குகை என்றும்
வான்படை தரைப்படையினை கொண்ட
அனுராதபுரம்
வான்படைத்தளத்தில்
தரைவழியாக
நகர்ந்து சென்று தாக்குதல்
தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின்
இருபதிற்கு மேற்பட்ட
வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரிய
சேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்திய
வீரவரலாறான 21
சிறப்பு கரும்புலி மாவீரர்களின்
மூன்றாம்
ஆண்டு 22-
ஒக்டோபர்-2010ல்
நினைவுகூரப்படுகிறது
தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களின்
நேரடி வழிகாட்டலில்
உருவான
கரும்புலிகள்
அணி இறுதியாக
தலைவர்
அவர்களுடன்
உணவருந்தி படம்
எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக
தமிழீழத்தின்
எல்லைப்பகுதிகள்
ஊடாக
கரடு முரடான
பதையினையும்
பள்ளத்தாக்கினையும்
கடந்துசென்று அனுராதபுரம்
என்ற
சிங்களவனின்
குகைக்குள்
சென்று அங்கு தரித்து நின்ற
வான்கலங்கள்
அனைத்திற்கும்
தீ முட்டிய
அந்த தீராத
வீரர்களை நினைவிற்
கொள்கின்றோம்
தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களால்
பெயர்சூட்டி வைக்கப்பட்ட
நடவடிக்கைதான்
இந்த எல்லாளன்
நடவடிக்கை.
அனுராதபுர
வான்படைத்தளத்தில்
21
சிறப்பு கரும்புலிகளின்
நெஞ்சில்
எரிந்த
விடுதலைத் தீ
அன்று அந்த
விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது
சிங்களப்
படையின்
உதவிக்கு வந்த
உலங்கு வானூர்தியும்
விடுதலைப்புலிகளால்
சுட்டுவீழ்த்தப்படுகின்றது.
இந்த எல்லாளன்
சிறப்பு நடவடிக்கையில்
சிறப்பு கரும்புலிகளான
*லெப் .கேணல்
வீமன்
*லெப்.கேணல்
இளங்கோ
*மேஜர்
மதிவதனன்
*கப்டன்
தர்மினி
*கப்டன்
புரட்சி
*மேஜர்
சுகன்
*மேஜர்
இளம்புலி
*மேஜர் காவலன்
*கப்டன்
கருவேந்தன்
*கப்டன்
புகழ்மணி
*மேஜர்
எழிலின்பன்
*கப்டன்
புலிமன்னன்
*கப்டன்
அன்புக்கதிர்
*கப்டன்
சுபேசன்
*கப்டன்
செந்தூரன்
*லெப்ரின்
அருண்
*கப்டன்
பஞ்சசீலன்
*மேஜர்
கனிக்கீதன்
*கப்டன்
ஈகப்பிரியா
*கப்டன்
அருள்மலர்
*கப்டன்
ஈழவேந்தன்
ஆகிய
சிறப்பு கரும்புலிகள்
வீரவரலாறானார்கள்
இந்த
மாவீரர்களின்
மூன்றாம்
ஆண்டில் 22-
ஒக்டோபர்-2010
நினைவிற்கொள்கின்றோம்
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர் "எல்லாளன் நடவடிக்கை
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
எல்லாளன் நடவடிக்கை மூன்றாண்டு நினைவு 22-10-2010
எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள். இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். லெப்.கேணல் இளங்கோ – அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது. எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும். உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது. சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது. லெப். கேணல் வீமன் – பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார். மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் - யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ். குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன. வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான். வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர். அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான். லெப்.கேணல் மதிவதனன் – என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது. அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்- பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது. பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். மேஜர் இளம்புலி – இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது. இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். இவர்களோடு, கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன், மேஜர் சுகன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன், மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன், கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார், கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன், மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன், கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார், கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார், கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச. நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ், கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ், லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன், கப்டன் பஞ்சசீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன், மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி, கப்டன் ஈகப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி, கப்டன் அருள்மலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா, கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். அனுராதபுர மண்ணில் பகைவரின் வானூர்திகளை அழித்து வன்னி முற்றுகைக்கான முதலடியைக் கொடுத்த இந்த வீரமறவர்களின் தியாகத்தை வீண்போகாமல் காக்கப்பட வேண்டும். எல்லாளன் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம். இளந்தீரன்
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
கேணல் ராயூ {காணொளிகள்}
கேணல் ராயூ
நினைவுத் தொகுப்பு 1
http://bit.ly/dngt2h
கேணல் ராயூ
நினைவுத் தொகுப்பு 2
http://bit.ly/bust77
கேணல் ராயூ இறுதி அஞ்சலி 1
http://bit.ly/a4OL5h
கேணல் ராயூ இறுதி அஞ்சலி 2
http://bit.ly/aBE8hR
கேணல் ராயூ இறுதி அஞ்சலி 3
http://bit.ly/9Mmv8f
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
மாவீரர் நாள் கார்த்திகை27 <காணொளிகள்
நவம்பர்
27
உலகத்
தமிழின
விடுதலைக்காக
தனது
இன்னுயிரை
ஈகம்
செய்திருக்கின்ற
ஆயிரமாயிரம்
வீரவேங்கைகளை
நினைவு கூறும்
நாள் .
தமிழீழ
விடுதலைப்
போரில் முதல்
களச் சாவடைந்த
இயக்கவீரர்
லெப்டினன்
சங்கரின்
( சத்தியநாதன்)
நினைவு நாளான
நவம்பர் 27-ஆம்
நாளை பொதுவான
நாளாகத்
தேர்ந்தெடுத்
து
1989- ஆம்
ஆண்டில்
தலைவர்
அவர்கள்
மாவீரர் நாளை
அறிவித்தார் .
1989- ஆம்
நாளை முதலாவது
தமிழீழ
மாவீரர்
நாளாகத்
தமிழ் மக்கள்
உணர்வார்ந்த
நிலையில்
கடைப்பிடித்தது.
அன்றிலிருந்து
தமிழீழத்தின்
மிகப்பெரிய
நினைவுகூரும்
நிகழ்வாகத்
தமிழீழ
மாவீரர் நாள்
நினைவு கூரப்பட்டு வருகின்றது .
காணொளிகள்
{1}
தமிழீழவிடுதலைப்போராட்ட
வரலாற்றில் முதல்களப்பலி
லெப்டினன் சங்கர்
ஒரு பதிவு
http://bit.ly/czD1lT
{2}
தமிழீழதேசியத்தலைவர் அவர்கள்
லெப்டினன் சங்கருடனான
நாட்களை பகிர்ந்து கொள்கிறார்
http://bit.ly/aeAool
{3}
நவம்பர் 27 ஒரு பதிவு
http://bit.ly/9WSWUO
{4}
கார்த்திகைப்பூ
http://bit.ly/ctCmbP
{5}
மாவீரர் நாளின் தோற்றம்
http://bit.ly/agtkNT
{6}
மாவீரர் துயிலும் இல்லம் 1
http://bit.ly/ckkBgV
{7}
மாவீரர் துயிலும் இல்லம் 2
http://bit.ly/awuugg
{8}
மாவீரர் நாள் தோற்றம்
http://bit.ly/agtkNT
{9}
மாவீரர் நாளில் ஈகைச்சுடர் ஏற்றும்போது இசைக்கப்படும் கானம்
http://bit.ly/aV9HtW
***********
மாவீரர் நாள் குறித்ததான
கட்டுரை ஆக்கங்கள்
. . . . . . . . . . . . . . . . . .
{1}
மயானங்கள் புனிதமாகும் மாவீரர் நாள்
http://vrojan.blogspot.com/2010/10/blog-post_8816.html
{2}
லெப் சங்கர்
http://vrojan.blogspot.com/2010/10/blog-post_19.html
{3}
மாவீரர் நாள் நவம்பர் 27
http://vrojan.blogspot.com/2010/10/27.html
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
மாவீரர் ஆலயங்கள் புனிதமாகும் மாவீரர் நாள்
v.rojan
நேரம் நெருங்கிவிட்டது.டாங் டாங் டாங். மணி ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் அமைதியாக நின்று கொண்டிருக்கிறேன். ஏதேதோ எண்ணங்கள் சிதறடித்துக்கொண்டிருந்தன நினைவுகளை. எல்லோரும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள் தீபமேற்றுவதற்கு. நேரம் வந்ததும் பிரதான சுடரை ஏற்றினார்கள் எல்லோரும் ஏற்றினார்கள் ஒரே நேரத்தில். தீபங்கள் பிரகாசித்தன விடுதலையை நோக்கி தீயின் நாவுகள் நீள்வது போலிருந்தது. அங்கே எந்தக்கல்லறையிலும் தீபம் ஏற்றப்படாமல் இருக்காது ஒரு வேளை கல்லறையுள் உறங்கும் ஒருவனது உறவினர்கள் யாவரும் செல்லடியில் செத்துப்போனாலோ அல்லது அகதியாகி உலகில் எங்கேனும் அவலப்பட்டாலோ அவன் கல்லறையை சீச்சி அவனை தத்தெடுத்துக்கொள்ள ஒவ்வொரு தமிழ்மகனும் தயார். அவன் என்பிள்ளை அவனுக்கு நான் சுடரேற்றுகிறேன் என்று எல்லாரும் முன்வருவார்கள்.(இதைத்தான் அல்லது இதனால்தான் புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்கிறார்கள்) மாவீரர் நாள் அன்று துயிலுமில்லம் கல்லறைகளாலும் கண்ணீராலும் நிரம்பியிருக்கும் எல்லாரும் ஒரே நேரத்தில் சுடரேற்ற ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கும். உயிர் உருக்கும் பாடல் அது. மொழியாக எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை வரலாறாய் ஆக்கும் தலைவனின் மீதிலும் உறுதி இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே இங்கு கூவிடும் எங்களின் அழுங்குரல் கேட்குதா குழியினுள் வாழ்பவரே எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் உங்களை பெற்றவர்.உறவினர் வந்துள்ளோம் அன்று செங்களம் மீதினில் உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம் எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் இந்தப்பாடல் விடுதலைப்புலிகளின் வீரச்சாவுகளில் மட்டுமே ஒலிக்கும் பாடல் விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதியது. வர்ணராமேஸ்வரன் பாடியது. உயிர் உருக்கும் வரிகள் மாவீரர் தினத்தன்று அவர்களுக்காகச் சுடரேற்றும் போது மட்டுமே இது ஒலிக்கும். இதில் வரும் எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என்ற வரிகள் வரும்போது கோரசாக நிறைய பாடகர்கள் பாடுவார்கள் எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என்று அப்படி பாடிய பாடகர்களில் ஒருவரான பாடகர் சிட்டுவும் களத்தில் வீரச்சாவடைந்தபோது அவருக்காகவும் இந்தப்பாடல் ஒரு முறை ஒலித்தது. அப்போது சிட்டுவின் வீரச்சாவு அஞ்சலி நிகழ்வை தொகுத்து வழங்கியவர் சொன்னார் இதோ சிட்டுவுக்காக இறுதியாக ஒருமுறை சிட்டுவே பாடிய பாடல்.. கூடியிருந்த சனங்கள் ஹோ என்று கதறின. சிட்டுவின் ஞாபகங்கள் உணர்வூட்டும் பாடல்களாக இன்றைக்கும் வாழ்கிறது அங்கே. எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் இந்த வரிகளைக் கேட்டு விட்டும் யாரும் அழாமல் துயிலுமில்லத்தில் இருந்து திரும்பி வர முடியாது. கனவுகள் விழித்துக்கொள்ளும். எல்லாரும் அழுவார்கள் அங்கே கல்லறைக்குள் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களோ இல்லையோ. யாரும் அண்ணன் தம்பீ வீரச்சாவோ இல்லையோ துயிலுமில்ல வளாகத்தில் இருக்கிற அத்தனை பேரும் வெட்கத்தைவிட்டுக் கதறுவார்கள். அது கவலையா கோபமா என்று தெரியாத அழுகை. தீபங்களின் ஒளியில் கண்ணீர்த்துளிகள் மட்டும் மினுங்கிக்கொண்டிருக்கும். மௌனம் ஒரு பெரிய பாசையைப்போல எல்லாவற்றையும் ஆட் கொண்டிருக்கும். தீபங்கள் குரலெடுத்து அழுவது எல்லோருக்கும் கேட்கும். கல்லறைகள் மெல்லப்பிழப்பது போல இருக்கும். எதுவுமே பேச முடியாது நின்றிருப்போம். மொழியை மறந்து விட்டது போல இருப்போம் அங்கே அப்படித்தான் இருக்கமுடியும். (ஒளிப்படம் கஜானி) துயிலுமில்லம் தான் இன்றைக்கு தமிழர்களின் புனிதப்பொருளாகிவிட்டது. விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரை நீத்த போராளிகளின் வித்துடல்களை ( உடல்களை) அங்கே விதைத்து வைத்திருக்கிறார்கள் தங்கள் அபிலாசை மீட்க தங்கள் மக்களின் துயரங்களைக் களைய அவர்கள் மறுபடியும் முளைப்பார்கள் என்று உணர்வு பொங்கச் சொல்வார்கள் தமிழ் மக்கள். அது தான் உண்மையும் கூட.அதனால் தான் அவர்களை புதைப்பதில்லை விதைக்கிறார்கள். வரலாற்றில் நாங்கள் சுடலை என்பதை ஒரு தீட்டுப்பொருளாக துக்கிக்கும் இடமாக அல்லது எல்லாவற்றினதும் முடிவாகக் கருதி வந்த வழமையை மாற்றி புதிதாக அதை புனிதத்திற்கு இட்டுச்சென்றிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். அது புனிதம் மட்டுமல்ல எல்லாவற்றினதும் தொடக்கமும் கூட. அது மாவீரர் மயானம் அல்ல மாவீரர் துயிலும் இல்லம். அது நிச்சயமாக தீட்டுப்பொருள் அல்ல அங்கிருப்பவை வெறும் கல்லறைகளும் இல்லை இரத்தமும் சதையுமான வீரர்கள் இளமையும் குறும்புமாக ஓடித்திரிய வேண்டிய பிஞ்சுகள். கல்லறைகளின் அருகே போனால் காதை வைத்துக் கேட்டால் நிச்சயம் ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தக்குரல் தன் அம்மாவை அறுதல் படுத்தும் தங்கைக்கு உத்வேகம் அளிக்கும். சிலசமயம் துணைவியின் தலைகோதும். தான் பார்த்தேயிராத தன் குழந்தையை முத்தமிடும். தோழர்களை உற்சாகப்படுத்தும். உள்ளேயிருப்பவர்களின் புன்னகை கல்லறைகளின் முகங்களில் ஒட்டியிருக்கும். கல்லறை ஒரு வேர்விட்ட மரம்போல உறுதியாய் இருக்கும். அங்கிருந்துதான் வேதனைகளையும் சோதனைகளையும் தாங்குவதற்கான சக்தியை தமிழர்கள் பெறுகிறார்கள். போராளிகளிற்கும் தமக்குமான சின்னச்சின்ன முரண்பாடுகளை மக்கள் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் தான் கடக்கிறார்கள். எத்தனை தடவைகள் குண்டு வீசினாலும் என்னதான் பொருளாதாரத்தடை போட்டாலும் உயிர்வாழ்கிற எங்கள் சனங்களின் உறுதியின் ரகசியம் இவர்களின் தியாகங்கள் தான். இந்த தமிழர்களின் புனித இடத்தைத்தான் சிங்கள அரசுபடைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது புல்டோசர் போட்டு தோண்டியது. ராணுவ டாங்க்கினை ஏற்றி கல்லறைகளை மிதித்தது. எங்கள் மயானங்களுக்கே மதிப்பளிக்காத அவர்களா எங்கள் மனங்களுக்கு மதிப்பளிப்பார்கள். அவர்களிடமா நாங்கள் மனிதாபிமானம் பேசுவது. சொல்லுங்கள் உறவுகளே?
posted by rojan at Tuesday, October 19, 2010 0 உங்கள் கருத்துக்கள்
லெப்டினன் சங்கர் <மாவீரர் நாள்
லெப். சங்கர் லெப். சங்கர் (செல்வச்சந்திரன் சத்தியநாதன்- கம்பர்மலை) வீரப்பிறப்பு 19-06-1961 வீரச்சாவு 27-11-1982 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப் படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப்.சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப். சங்கர் 1961 ஆண்டு பிறந்தவர். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆனால் தோற்றத்தில் சிறியவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா? தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன். 'ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றி விட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்" என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப் பயிற்சி பெறத் தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறான். 1978 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன் சங்கராக விடுதலைப் புலியாக மாறினான். சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதி பெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக. .. சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது. இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப் பட்டு பளபளத்தது ரிவோல்வர். 1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்து விட்டது. அவனும் தேடப் பட்டான். 1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கர் தாக்குதல் படைப் பிரிவில் ஒருவனானான். 1982 ஆடி 2ஆம் நாள் முதல் முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப் போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் எழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர், வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம். முதலில் எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமான தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப் பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புக்களுமின்றி வெற்றியுடன் மீண்டனர். 1982 இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப் பாதுகாவலர்கள் தெரிவு செய்யப் படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவு செய்யப் பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுத வரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடம் இருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப் படுகின்றது. இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர் இதை மோப்பம் பிடித்து விடுகிறது கூலிப்படை.... வீடு முற்றுகை இடப்படுகிறது. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்து விடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்து விடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்து விட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக் கொள்கிறார்கள். முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவி விட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கி விடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை இந்தியா கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரை சேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாத நிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது. 27-11-1982 அன்று விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளைத் தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி 'தம்பி" என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே இந்தியாவில் தகனம் செய்யப் பட்டது. இவனது வீரச்சாவு கூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப் படுத்தப்பட்டது. இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000க்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கி உள்ளனர். இம் மாவீரர்களை எல்லாம் நினைவு கூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப் பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று
posted by rojan at Tuesday, October 19, 2010 0 உங்கள் கருத்துக்கள்
மாவீரர் நாள் கார்த்திகை 27
மாவீரர் நாள் இன்று நவம்பர் 27 உலகத் தமிழின விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வேங்கைகளை நினைவு கூறும் நாள். அவர்கள் அங்கே புதைக்கப்படவில்லை, மாறாக ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் விதைக்கப்பட்டிருக்கின்றனர். தனது இன்னுயிரை ஈந்து விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போருக்குத் தனது இன்னுயிரை நீத்த மாவீரர்களின் எண்ணிக்கை பத்து,நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவு கூர இயலாது.எனவே, அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக் கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த இயக்கவீரர் லெப்டினன் சங்கரின்(சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27-ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்து 1989-ஆம் ஆண்டில் தலைவர் அவர்கள் மாவீரர் நாளை அறிவித்தார். 1989- ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாகத் தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும்,தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளிலெல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர, போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால், விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும், பல்வேறு நெருக்கடிக்களுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழ்மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்படும். நடுகற்கள் நாட்டப்படும் வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு, அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப் படுகின்றனர். மாவீரர் நினைவாக பின்பற்றப்படும் நாட்கள் 1 . கடலிற் காவியமான கிட்டு உட்பட பத்து வே ங்கைகள் நினைவாக 16.01.1993 2. அன்னை பூபதி அம்மா நினைவு நாள், மார்ச்சு மாதம் 19-நாள் தொடக்கம், ஏப்பிரல் மாதம் 19-நாள் வரை 3. கரும்புலிகள் நாள் 05.07.1987 4. தியாக தீபம் திலீபன் நினைவுநாள். செப்தம்பர் 15-ஆம் நாள் தொடக்கம் செப்தம்பர் 26-ஆம் நாள் வரை. 5. குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் நச்சுக்குப்பி கடித்து வீரச்சாவடைந்த நாள் 05.10.1987 6. தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈய்ந்த முதற் பெண்புலி மாலதி( தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்) 10.10.1987 7. மாவீரர் நாள், நவம்பர் 25 தொடக்கம் 27 வரை
posted by rojan at Tuesday, October 19, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தாயக கனவுடன் <மாவீரர் நாள் பாடல்
எங்கள்
மூச்சாகி நாளை
முடிசூடும்
தமிழ்மீது
உறுதி !
வழிகாட்டி
எம்மை
உருவாக்கும்
தலைவன் வரலாறு
மீதிலும்
உறுதி !
விழிமூடி இங்கே
துயில்கின்ற
வேங்கை
வீரர்கள்
மீதிலும்
உறுதி!
இழிவாக வாழோம்!
தமிழீழப்போரில் இனிமேலும்
ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே
இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்
உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்
அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்
அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்
எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்கு
கின்றோம்
வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்கு
கின்றோம்
உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொருசத்தியம்
செய்கின்றோம்
உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொரு
சத்தியம்
செய்கின்றோம்
வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்குகின்றோம்
சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது
சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது
எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது
எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது
எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
உயிர்விடும்
வேளையில்
உங்களின்வாயது
உரைத்தது
தமிழீழம்
உயிர்விடும்
வேளையில்
உங்களின்வாயது
உரைத்தது
தமிழீழம்
அதை
நிரைநிரையாகவே
இன்றினில்
விரைவினில்
நிச்சயம்
எடுத்தாள்வோம்
அதை
நிரைநிரையாகவே
இன்றினில்
விரைவினில்
நிச்சயம்
எடுத்தாள்வோம்
உயிர்விடும்
வேளையில்
உங்களின்வாயது
உரைத்தது
தமிழீழம்
தலைவனின்
பாதையில்
தமிழினம்
உயிர்பெறும்
தனியர
சென்றிடுவோம்
தலைவனின்
பாதையில்
தமிழினம்
உயிர்பெறும்
தனியர
சென்றிடுவோம்
எந்தநிலைவரும்
போதிலும்
நிமிருவோம்
உங்களின்
நினைவுடன்
வென்றிடுவோம்
எந்தநிலைவரும்
போதிலும்
நிமிருவோம்
உங்களின்
நினைவுடன்
வென்றிடுவோம்
எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
http://bit.ly/cCIWaA
கானவரிகள்:- புதுவைரத்தினதுரை
posted by rojan at Monday, October 18, 2010 1 உங்கள் கருத்துக்கள்
தமிழீழவிடுதலைப்போராட்ட வரலாறு <காணொளி
விடுதலைப்போராட்ட
வரலாற்றில்
நடைந்தேறிய
ஆரம்பகால
முக்கிய
சம்பவங்கள் ,
தமிழீழ
விடுதலைப்போராட்டம்
தொடங்குவதற்கான
காரணங்களை ,
பலதரப்பட்ட
சான்றோர்களின்
நேரடி நேர்காணல்கள்
மூலமாக ,
""தலைநிமிர்வு""
என்று தலைப்பிடப்பட்டு
தேசியத்தலைவரின்
50 வது பிறந்தநாள்
ஆண்டில் ,
தமிழீழ
விடுதலைப்புலிகளின்
உத்தியோகபூர்வ
ஒளிக்கலப்படப்பிரிவான
" நிதர்சனம்"
நிறுவனத்தால்
வெளியிடப்பட்டது .
காணொளி
பாகம் 01
http://2tag.nl/Z2L9F7 -
பாகம் 2
http://2tag.nl/605747 -
பாகம்3
http://2tag.nl/Z130W9 -
பாகம் 4
http://2tag.nl/33022Z -
பாகம் 5
http://2tag.nl/YI7732 -
பாகம் 6
http://2tag.nl/M98TF0 -
பாகம் 7
http://2tag.nl/AOKVAU -
பாகம் 8
http://2tag.nl/I7M0Y0 -
பாகம் 9
http://2tag.nl/481M4E -
பாகம் 10
http://2tag.nl/4U9618 -
பாகம் 11
http://2tag.nl/03420U -
posted by rojan at Monday, October 18, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தேசியத்தலைவர் போராட்ட வரலாறு <காணொளி
தலைவர்
அவர்களின்
போராட்டவரலாறு -
விடுதலைத்தீப்பொறி
காணொளியில்
பாகம் 1
http://2tag.nl/H3VOJ1 -
பாகம் 2
http://2tag.nl/84T816 -
பாகம் 3
http://2tag.nl/127M09 -
பாகம் 4
http://2tag.nl/7769C2 -
பாகம் 5
http://2tag.nl/9HDL66 -
பாகம் 6
http://2tag.nl/638U8W -
பாகம் 7
http://2tag.nl/332EK8 -
பாகம் 8
http://2tag.nl/28W8F7 -
பாகம் 9
http://2tag.nl/8H2M4F -
பாகம் 10
http://2tag.nl/829NNH -
பாகம் 11
http://2tag.nl/0V633X -
பாகம் 12
http://2tag.nl/69393M -
பாகம் 13
http://2tag.nl/R1JZ94 -
பாகம் 14
http://2tag.nl/7EHTLC -
பாகம் 15
http://2tag.nl/9FW127 -
பாகம் 16
http://2tag.nl/9B6Y7H -
பாகம் 17
http://2tag.nl/EN35DO -
பாகம் 18
http://2tag.nl/83JD1K -
பாகம் 19
http://2tag.nl/V6YUT3 -
பாகம் 20
http://2tag.nl/0P2WS4 -
பாகம் 21
http://2tag.nl/7E9VSH -
posted by rojan at Monday, October 18, 2010 0 உங்கள் கருத்துக்கள்
கேணல் சங்கர் நினைவுதொகுப்பு <காணொளி
வைத்தியலிங்கம்
சொர்ணலிங்கம்
<<வல்வெட்டித்துறை , யாழ்ப்பாணம்>>
1949 - 26-09-2001
26-09-2001 அன்று வீரகாவியமான கேணல் சங்கர் அவர்களின் மீளும் நினைவுகளில்
தேசியத்தலைவர் அவர்களின் நேர்காணல்
காணொளி
பாகம் 1
http://bit.ly/9yqvMk
பாகம் 2
http://bit.ly/cTAoQp
பாகம் 3
http://bit.ly/cIMTbQ
பாகம் 4
http://bit.ly/992JXr
posted by rojan at Sunday, October 17, 2010 0 உங்கள் கருத்துக்கள்
லெப் கேணல் விக்ரர் நினைவுதொகுப்பு <காணொளி
<மருசலீன்
கியூஸ்லஸ்>
பனங்கட்டிக்கொட்டு மன்னார்
<14/11/1963 - 12/10/1986>
லெப் கேணல் விக்டர் அவர்களின் 24ம் ஆண்டு நினைவுநாள் 12/10/2010
மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய லெப் கேணல் விக்ரர் அடம்பனில்
சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல்
களப்பலியானார்
* * * * *
லெப் கேணல் விக்ரர் அவர்களின் , வரலாற்று நினைவுத்தொகுப்பு
காணொளியில் .. . . .
பாகம்1
http://bit.ly/auYmaI
பாகம்2
http://bit.ly/b9FKz9
பாகம்3
http://bit.ly/c4oFZE
posted by rojan at Sunday, October 17, 2010 0 உங்கள் கருத்துக்கள்
முதற்கரும்புலி கப்டன் மில்லர் நினைவுதொகுப்பு <காணொளி
(1- ஜனவரி-1966 -
05-ஜூலை-1987
கரவெட்டி,
யாழ்ப்பாணம்)
எனும்
இயக்கப்பெயர்
கொண்ட
வல்லிபுரம்
வசந்தன்
தமிழீழ
விடுதலைப்
புலிகளில்
ஒரு முக்கிய
உறுப்பினராக
இருந்தவர்
இவரே முதல்
கரும்புலியாக
05-07-1987 அன்று
யாழ் -
வடமராட்சிக்
கோட்டத்தில்
நெல்லியடி மத்திய
மகா வித்தியாலத்தில்
அமைக்கப்பட்டிருந்த
இலங்கைப்
படைத்தளம்
மீதான
தாக்குதலில்
மரணமடைந்தார் .
இவ்நாளே {ஜூலை5}
உலகெங்கும்
பரந்து வாழும்
தமிழ்
உறவுகளால்
கரும்புலிகள்
நாளாக வீரவணக்க
அஞ்சலி செலுத்துகிறார்கள் .
கப்டன் மில்லர்
அவர்களின்
அம்மாவின்
நேர்காணல்
காணொளியில்
http://2tag.nl/VH4A54
* * * * *
முதல்
கரும்புலித்தாக்குதலில்
மில்லருடன்
பங்கெடுத்த
இரு போராளிகளின்
நேர்காணல்
காணொளி
பாகம் 1
http://2tag.nl/2HIY8A
பாகம் 2
http://2tag.nl/522WZ8
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
நித்திய புன்னகை பிரி.தமிழ்ச்செல்வன் நினைவக கானம்
சு.ப.தமிழ்ச்செல்வன்
நினைவக கானம் 01
* * * * *
நித்திய புன்னகை அழகன் இங்கு மீள்துயில் கொள்கிறான்
நாங்கள் தொட்டு எழுப்பவும் சொல்லி அழைக்க ஏதும் பேசாமல் தூங்குகிறான்
தம்பியே தமிழ்ச்செல்வனே எங்கள் தானைத்தலைவரின் பிள்ளையே
உன்னை இழந்தது உண்மையா பதில் சொல்லு எங்கள் செல்லமே
உன்னை இழந்தது உண்மையா பதில் சொல்லு எங்கள் செல்லமே
நித்திய புன்னகை அழகன் இங்கு மீள்துயில் கொள்கிறான்
நாங்கள் தொட்டு எழுப்பவும் சொல்லி அழைக்க ஏதும் பேசாமல் தூங்குகிறான்
பூவிடல் போல உந்தன் புன்னகை போனதா
பேசவந்த பாவியரால் வாசமறந்த சாய்ந்ததுவோ
சாவிரித்த பாவினிலே நீ உறக்கம் கொள்ளுகிறாய்
தலைவனுக்கு என்ன பதில் சொல்லிவிட்டு செல்கிறாய்
தம்பியே தமிழ்ச்செல்வனே தமிழீழத்தை நெஞ்சில்வைத்து தாங்கினாய்
அண்ணன் உயிர்ப்பிள்ளை பகை வீசியகுண்டினம் தூங்கினாய்
நித்திய புன்னகை அழகன் இங்கு மீள்துயில் கொள்கிறான்
நாங்கள் தொட்டு எழுப்பவும் சொல்லி அழைக்க ஏதும் பேசாமல் தூங்குகிறான்
நீ நடந்த
தேசமெல்லாம் நீ
எரிந்து சாகிறாய்
தேசமோ நீநின்ற
ஆசனங்கள்
எரிகிறதே
பாவியர்கள்
காலை வந்து சாவிரித்து போன்றனரே
நாளை இதற்கான
பதில் நம்
தலைவர்
சொல்லுவதே
தம்பியே தமிழ்ச்செல்வனே நீ
சாகவில்லை வாழ்கிறாய்
அண்ணன்
அருகையே நீ
என்றுமே உயிர்வாழ்கிறாய்
நித்திய
புன்னகை அழகன்
இங்கு மீள்துயில்
கொள்கிறான்
நாங்கள்
தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்க
ஏதும் பேசாமல்
தூங்குகிறான்
தம்பியே தமிழ்ச்செல்வனே எங்கள்
தானைத்தலைவரின்
பிள்ளையே
உன்னை இழந்தது உண்மையா பதில்
சொல்லு எங்கள்
செல்லமே
நித்திய
புன்னகை அழகன்
இங்கு மீள்துயில்
கொள்கிறான்
நாங்கள்
தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்க
ஏதும் பேசாமல்
தூங்குகிறான்
உன்னை இழந்தது உண்மையா பதில்
சொல்லையா எங்கள்
செல்லமே
அண்ணன்
உயிர்ப்பிள்ளை
பகை வீசிய
குண்டிலே தூங்குகிறாய்
அண்ணனின்
அருகையே நீ
என்றுமே உயிர்
வாழ்கிறாய்
உன்னை இழந்தது உண்மையா பதில்
சொல்லையா எங்கள்
செல்லமே
நித்திய
புன்னகை அழகன்
இங்கு மீள்துயில்
கொள்கிறான்
காணொளியில்
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
நித்தியவாழ்வினுள் பாலாஅண்ணா நினைவு கானம்
கலாநிதி
அன்ரன் பாலசிங்கம்
நினைவக கானம்
(04-மார்ச்-1938 - 14-டிசம்பர்-2006)
* * * * *
நித்திய வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள் தத்துவமேதையும்
செத்துவிட்டான் என சத்திடப்போவதில்லை
நித்திய வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள் தத்துவமேதையும்
செத்துவிட்டான் என சத்திடப்போவதில்லை
காவியமென் உத்தரவில்
பாலா அண்ணன் நித்திரையி
காவியமென் உத்தரவில்
பாலா அண்ணன் நித்திரையி
கூவும் குரல் வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே
நித்திரையி
கூவும் குரல் வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே
நித்திய வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள் தத்துவமேதையும்
செத்துவிட்டான் என சத்திடப்போவதில்லை
தாய்நிலத்தை தோள்களிலே தாங்கிநின்று நீ சிரித்தாய்
தம்பியுடன் சேர்ந்திருந்து சந்தணமாய் நீ கரைந்தாய்
தாய்நிலத்தை தோள்களிலே தாங்கிநின்று நீ சிரித்தாய்
தம்பியுடன் செர்ந்திருந்து சந்தணமாய் நீ கரைந்தாய்
வாயடைத்து வாழதனில் வார்த்தை வர இல்லை அய்யா
வந்து உனை காண்பதற்கு இங்கு வழி இல்லை அய்யா
அண்ணனே பாலா அண்ணனே இது அழுதுதீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ
அண்ணனே பாலா அண்ணனே இது அழுதுதீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ
ஆசைதனி ஏதுமின்றி அஞ்சியும்
வாழ்ந்திருந்தாய்
அச்சமின்றி நீ
இருந்து அண்ணனுக்கு கை கொடுத்தாய்
ஆசைதனி ஏதுமின்றி அஞ்சியும்
வாழ்ந்திருந்தாய்
அச்சமின்றி நீ
இருந்து அண்ணனுக்கு கை கொடுத்தாய்
பேசவென
வந்தவரின் பொய்
முகத்தை நீ
கிழித்தாய்
பேச்சடங்கி போய்
உறங்கும்
பாய்நிலம் நீ
சிரிப்பாய்
அண்ணன்பாலா அண்ணனே இது அழுது தீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ
அண்ணன்பாலா அண்ணனே இது அழுது தீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ
நித்திய
வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள்
தத்துவமேதையும்
செத்துவிட்டான்
என
சத்திடப்போவதில்லை
காவியமென்
உத்தரவில்
பாலா அண்ணன்
நித்திரையி
கூவும் குரல்
வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே
நித்திரையி
கூவும் குரல்
வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே
நித்திய
வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள்
தத்துவமேதையும்
செத்துவிட்டான்
என
சத்திடப்போவதில்லை
காணொளியில்
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
மேதகு தமிழீழதேசியத்தலைவர் அவர்கள் சிந்தனைகள்<புதியவை 2
சத்தியமும்
தமிழர் பக்கமாகவே நிற்கின்றன
தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளேயன்றி
வேறொன்று மல்ல
அரசியல் தர்மம் தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கிறது
* * * * * *
உலகில் மனித உரிமைகள்,
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
நிகழ்ந்த போது
தலையிட்டும்,
குரலெழுப்பியும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம்
ஈழத்தமிழரின் பேரவலத்தைக்கண்டும்
மெளனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது
* * * * * *
தமிழீழ மக்கள் அனுபவித்து வரும் பேரவலம் உலகத்தின் புருவத்தை
உயர்த்தவில்லை என்பது ஒருபுறம் ஆச்சரியமாகவும் மறுபுறம் வேதனையாகவும்
இருக்கிறது
* * * * * *
எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு
இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில் ஒரு ஆட்சி முறையை
அமைத்து வாழவே நாம் விரும்புகின்றோம்
* * * * * *
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ,
ஒவ்வொரு பக்கத்திலும் ,
எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது
* * * * *
* * * * *
மேதகு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைத்துளிகள்
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
மேதகு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் சிந்தனைகள்<புதியவை
அழிக்க முயல்கிறான்
மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான்
அன்றுதொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான்
* * * * * *
எதிரி ஈவிரக்கமற்றவன்
போர்வெறி கொண்டவன்
எமது தாயகத்தைச் சிதைத்து
எமது இனத்தை அழித்து விடுவதையே
இலட்சியமாகக் கொண்டவன்
* * * * * *
மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள் ,
சுதந்திரச் சிற்பிகள்
எமது மண்ணிலே
ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்
* * * * * *
நாம் இனத்துவேசிகள் அல்லர்
போர்வெறிகொண்ட வன்முறையாளர்கள் அல்லர்
நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ ,
விரோதிகளாகவோ கருதவில்லை
* * * * * *
மாவீரர் துயிலும் இல்லங்களை அழிக்கும் செயலானது
பாரதூரமான பயங்கரவாதச்செயலாகும்
தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த அவச்செயலுக்கு
சிங்கள பேரினவாத அரசே பொறுப்பேற்க வேண்டும்
* * * * * *
இறந்து போனோரின் அமைதியைக் கெடுப்பவர்கள்
இறவாதோருக்கு நிம்மதியைக் கொடுப்பார்களென நான் கருதவில்லை
* * * * *
* * * * *
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
முத்தமிழ் விழாவில் தேசியத்தலைவர் <காணொளி
1991ல் முத்தமிழ் விழாவில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்
நேரடியாக கலந்து சிறப்பித்தார்.
1987 ல் சுதுமலையில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள்
முன் தோன்றினார் . அதன் பின்
மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் மக்கள் முன்னே மக்களின் சந்தோஷத்தின்
மத்தியில் , சாவகச்சேரியில் நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க
இவ்விழாவில் ,
தமிழீழத்தில் பல்துறையில் தேர்வுசெய்யப்பட்ட 10 மாமனிதர்களுக்கு
தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் பட்டம் அளித்து கெளரவித்தார்
காணொளி
பாகம் 1
http://2tag.nl/0DH7WX-
பாகம் 2 .
http://2tag.nl/BW08CN -
பாகம் 3 ,
http://2tag.nl/54KL2X-
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
2ம் லெப் மாலதி
ஆட்காட்டி வெளிதனிற்
பிறந்து
மாலதி யென்னும்
பெயர்'தனைத்
தாங்கித்
தன்னிகரில்லாத்
தமிழிச்சி தானெனத்தனையே ஈந்தாள்
தமிழீழத் தாயவள்
இன்னல் களைந்திட
எடுத்தடி வைத்தாள்!
ஈடிலா மகளிர்
அமைப்பினில்
இணைந்து
பன்னுதற் கரியபல
தாக்குதல்
புரிந்தே
பெருமை சேர்த்தனள்
பெண்ணினத்
திற்கே !
குறும்புத்
தனங்கள்
குறைவின்றி ஆற்றும்
கொஞ்சும்
கிளியாய்க்
குலவி நின்றவள்
நிறுவிடத்
துடித்தனள்
தமிழீழம் தனையே
நெஞ்சினில்
நெருப்பினை ஏந்தி நின்றனள்!
இறக்கும்
போதிலும்
ஆயுதங்கள் தம்மை
இன்னுயிர்
அமைப்பிடம்
கொடுத்து மறைந்தனள்!
மறக்க
வியலா முதற்பெண்
புலியாய்
மாவீரர்
பெயர்களில்
மாண்புற
இணைந்தவள்!
அண்ணன் தன்னிடம்
ஐயமறக் கற்ற
ஆயுதப்
பயிற்சியில்
உயரத் திளைத்து
எண்பத் தேழில்
ஐப்பசித்
திங்கள்
இந்திய இராணுவம்
முற்றுகையிடவே
கண்ணெனத்துமுக்கியைக்
கைதனில் ஏந்திக்
களத்தினில்
இறங்கிக் கயவர்
தம்மைப்
பெண்ணெனும்
தெய்வம்
புலியாய்ப்
பாய்ந்து
பெரிதாய்
வீழ்த்தினள்
பெரும்படை தனையே!
தமிழீழத் தேசிய
விடுதலைப்போராட்டத்தின் தக்கவே முதுகெலும்
பெனவே விளங்கும்
அமிழ்தெனத்
திகழும் ஆன்றநல்
அரிவையர்
அவர்தம்
தியாகமும்
வீரமும் ஒருங்கே
இமயமென நாமடைந்த
வெற்றிக்கு என்றும்
உறுதுணையாய்
நின்றதை உலகே அறியும்!
சமயத்திற்
தன்னுயிர்
போக்கியே சகாயசீலி
தமிழ்ப்பெண்
போர்ப்பணி தொடர
வைத்தனள் !
அடுப்பங்
கரைதனில்
அகப்பை பிடித்தே
உறங்கிய
பெண்தனை உசுப்பி அழைத்து
எடுப்பாய்
நிமிர்ந்து ஆயுதம்
ஏந்தியே
ஆணுக்கு நிகராய்
அவனியிற் றிகழத்
துடிப்புடன்
அமைப்பினைத்
தொடக்கிய தலைவன்
தூய நெஞ்சினைப்
போற்றுதல்
முறையே !
அடிப்படை உரிமைகள்
மறுத்தோரை எதிர்த்து
அணங்குகள்
படையின்று விரட்டுதல்
காணீர் !
'தாயாய்த்
தங்கையாய்
தாரமாய்
தாதியாய்
தரணியிற்
சேவைகள்
செய்திடப்
பிறந்தவள்'
வாயாரப் பேசிய
வரட்டு வார்த்தைகளை
வர்ணங்கள்
பேசியோர்
வஞ்சனைக்
குரல்களைத்
தீயார
இட்டுமே தீய்ந்திடச்
செய்தார் !
தேன்தமிழ்ப்
பெண்கள்
சிறுமையை எதிர்த்தார்'!
ஓயாத அலைகளில்
அவர்தம் ஆற்றலை
உலகம் வியந்தது !
எதிரியும்
திகைத்தான்.!
பட்டுச் சேலைகள்
பலவகை நகைகள்
பகட்டு வாழ்வுகள்
பயனற்ற வையெனக்
கட்டுப்
பாடுடை வாழ்வுதனைக்
கடைப்பிடித்து
'காண்போம்
தமிழீழம்'
என்கின்ற
கொள்கையில்
கட்டான மனிதகுல
வாழ்வின்
விடிவிற்காய்க்
கன்னியராய்த்
தனிமனித
வாழ்வினை அர்ப்பணித்துச்
சிட்டெனும்
சொல்தவிர்'த்துச்
சிறுத்தையாய்ச்
செயற்படும்
செந்தமிழ்ப்
பெண்களின்
சிறப்பினைச்
செப்பிடுவோம்!
அடிமட்டத்
திலிருந்து எழுப்பிய
அமைப்பின்று
ஆணித் தரமாய்
அகலப் பரந்து
கொடியெனெப்
படர்ந்து உயர்'
அரசியலில்
குற்றமில்
நீதித் துறையில்
நிர்வாகத்தில்
இடியென
முழங்கும் ஊடகத்
துறையில்
இரக்கம் மிகுநல்
மருத்துவப்
பிரிவில்
குடிகளின்
நலந்தனைக்
கருத்திற்
கொண்டுமே
கண்ணுறக்க
மின்றிக்
கடமை செய்கிறதே!
இத்தகை வளர்ச்சிக்கு ஈடிலா வித்திட்டு
இறப்பெனும்
முடிவினை வாழ்வினில்
ஏற்றுப்
பத்தரை மாற்றுத்
தங்கமெனத்
திகழ்ந்து
பவ்வியமாய்
விடுதலைக்கு உரம்தனைக்
கொடுத்து
மொத்தத்
தமிழினத்தின்
மனத்திலும்
நிறைந்து
முதலாம் மாவீரப்
பெண்ணென அறிந்து
நித்தமும்
நெஞ்சினில்
நிறை தாமரையாய்
நிறுத்தியே வணங்குவோம்
நாளும்
வாழ்வில் !
posted by rojan at Sunday, October 10, 2010 1 உங்கள் கருத்துக்கள்
பெண்விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி "..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…" தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள். விடுதலைப் போராட்டத்தின் " விழுதுகளுள் ஒன்றாக" உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள். அமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1. 15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன. துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள். மாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. 'நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ." தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம். 'என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ." எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள். அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது. எமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 21 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது. மாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. 2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது. தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்று பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான். தம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும். தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
posted by rojan at Sunday, October 10, 2010 0 உங்கள் கருத்துக்கள்