-->

ஊரெழு தியாகி திலீபனின் தாய்மண்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

பழமையையும் , , வளங்களையும் வனப்புகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஊரெழு கிராமம் மாவீரன் தியாகி திலீபனைப் பெற்றமையால் , தமிழீழ வரலாற்றில் தனித்தன்மையையும் தனியோர் இடத்தையும் ; பெற்றுள்ளது வலிகாமம் கிழக்கில் அமைந்துள்ள இந்தக் கிராமத்திற்கு ஊரெழு என்ற பெயர் வந்தற்கான பலகாரணங்கள் செவிவழி கதைகளாக மக்கள் மத்தியில் உலா வருகின்றன . 1. இந்த ஊர் தனைச்சூழ ஏழு ஊர்களை அரண்களாகக் கொண்டு ஊரெழு எனப்பெயர் பெற்றுள்ளது . ( ஊர் ஏழு என்பதே ஊரேழு மருவி ஊரெழுவானது என்பர் .) கிழக்கில் நீர்வேலியும் தென்பகுதியில் உரும்பிராயும் , மருதனார்மடமும் மேற்கோரமாகச் சுன்னாகம் , வடக்கே ஏழாலை , புன்னாலைக்கட்டுவன் வட கிழக்கில் அச்செழுவும் ஊரெழுவுடன் உறவாடி நிற்கின்றன . 2. முன்னொரு காலத்தில் ஊர்களில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளால் , வேற்றூர் மக்கள் இடம் பெயர்ந்து வந்து இவ்வூர் p ல் தங்கினராம் . ஊர் எழுந்து வந்தமையால் ஊரெழு என அழைக்கப்பட்டது எனவும் ; கூறுவர் . 3. எப்பொழுதுமே இவ்வூர் எழுச்சியுள்ள ஊராக விளங்கியதால் ஊரெழு என மருவியதாகவும் கூறுவோர் உளர் . 4. எங் ; கு என்ன சிக்கல்கள் தோன்றினாலும் , அவற்றை இவ்வூரே எழுந்து வந்துமுன்னின்று அச்சிக்கல்களைமுகங்கொடுத்துத் தீர்த்து வைப்பதனால் , ஊரெழு எனப் பெயர் வந்தது எனக் கூறுவோரும் உளர் . எவை எப்படியிருப்பினும் மேற்கூறப்பட்ட ஒவ்வொரு காரணங்களும் இன்று ஊரெழு என்ற பெயருடன் பொருந்தி வருவதால் , உண்மைகள் போலவே காட்சியளிக்கின்றன . ஊர் அமைவிடம் : யாழ் நகரத்திலிருந்து 6 கி . மீ . தொலைவில் அமைந்துள்ள ஊரெழுக் கிராமத்தைப் பலாலி வீதி ஊடறுத்துச் செல்கின்றது . இவ்வீதி ஊரெழுவைக் கிழக்கு , மேற்கு என இருபெரும் பிரிவுகளாகப் பிரித்து நிற்கின்றது . வடக்கெல்லையில் சாவகச்சேரி - சங்கானை வீதியையும் , மத்தியில் கிழக்கு - மேற்காக , ராஜ வீதியையும் சுன்னாகத்தையும் இணைக்கும் ஒரு வீதியும் அமைந்துள்ளன . ஏறத்தாழ 4 சதுரமைல் நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் 3074 மக்கள் அதாவது 824 குடும்பங்கள் தற்பொழுது வசிக்கின்றனர் . பண்பட்ட செந்நிலமும் வற்றாத நீரூற்றும் என்றும் மக்களுக்கு மன அமைதியைத் தரும் பெரும்வளங்களாக இயற்கை வாரி வழங்கியுள்ளது .   ஊரெழுவில்அதிசயமும் , அற்புதமுமாக விளங்குவது பொக்கணை எனும் வற்றா நீரூற்றாகும் . இதை " யாமா " என்றும் அழைப்பர் . இந்நீரூற்றுக்குப் பல வகையான விளக்கங்களைப் பலரும் வழங்குவர் . இவ்விடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் , இ , டி விழுந்திருக்கலாம் என்றும் அதனால் ஏற்பட்ட குன்றே இவ் வற்றா நீரூற்றாக இருக்கலாம் என அறிவியலாளர் ; விளக்குகின்றனர் . ஊரெழு பழம்பெரும் கிராமம் என்பதற்குச் சான்றாகக் கர்ணபரம்பரைக் கதையோடு தொடர்புபடுத்திப் பொக்கணை ஊற்றுக்கு விளக்கம் கூறுவோரும் உளர் . இராமர் சீதையைத் தேடிப் படைகளுடன் , இலங்கைக்கு வந்திருந்த போது , தண்ணீர்த் தாகம் எடுத்தமையால் , இராமர் தனது அம்பை பூமிமேல் எய்து நீர் ஊற்றை உருவாக்கித் தமது தண்ணீர்த் தாகத்தினைத் தணித்த இடமே இன்னும் வற்றா ஊற்றாக விளங்கும் " பொக்கணை யாமா " என்பது வாய் ; மொழியாகக் கூறப்பட்டு வரும் கதையாகும் . இந்நீர் ஊற்றுக்கு அருகில் இருக்கும் கற்பாறை ஒன்றில் முழங்கால் அடையாளம் போன்று குழிகள் இருப்பது மேலும் இக்கதைக்கும் ; மக்களின் நம்பிக்கைக்கும்வலுச்சேர்ப்பதாய் அமைந்துள்ளது . ஊரெழுக் கிராமத்தில் , நீர் வளம் மட்டுமல்ல நிலவளமும் அவ்வூர் மக்களுக்கு இயற்கையாக அமைந்த ஒன்றாகும் . இங்கு வாழும் மக்கள் தம் நிலத்தைப் " பொன் விளையும் பூமி " என கூறுவர் . எத்தகைய பயிரைச் செய்தாலும் ஊரெழு செம்மண்ணில் அப்பயிர்கள் செழிப்புடன் விளைவதும் , வளர்வதும் அவ்வூர் மண்ணின் சிறப்புத் தன்மையாகும் . உருளைக்கிழங்கு , புகையிலை , வெங்காயம் , வாழை , கோவா , வெற்றிலை , பீற்றுட் , மரவள்ளி , கறணை , கத்தரி , முந்திரிகை , லீக்ஸ் , மிளகாய் , கரட் , இராசவள்ளி , பயிற்றை போன்ற பயிர்கள் இம்மண்ணில் செழிப்பாக வளர்கின்றன , ஊரெழுவில் இயற்கையாக அமைந்த வளங்களில் பனையும் ஒன்று . ஊரெழு மேற்கில் பனைமரங்கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன . ஊரெழுக்கிராமத்தில் , பெரும் சக்திமிக்கத் தெய்வங்களும் விரும்பிக் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றன . பலாலி வீதியில் வீரகத்தி வினாயகர் கோவிலும் , பர்வதபத்தினி அம்மன் கோவிலும் , மேற்குப்பக்கமாகக் கண்ணகி அம்மன் கோவிலும் , உரும்பிராய் - ஊரெழு எல்லையுடன் காட்டு வைரவர் கோவிலும் ஊரெழுக்கிழக்கிற் கேணியடி வைரவர் கோவிலும் பழமைமிக்கப் பெருமைமிக்கத் தலங்களாகும் . இவற்றுள் காட்டு வைரவர் கோவில் , கண்ணகி அம்மன் கோவில் மற்றும் பர்வதபத்தினி அம்மன் கோவில் ஆகியன வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களாகும் . இத்தகை அழகிய ஊரெழுக் கிராமம் இன்று போரால் உருக்குலைந்து காட்சியளிக்கின்றது . நாட்டுப்பற்றும் , ஊர்ப்பற்றும் கொண்ட மக்கள் மறுபடியும் ஊரெழுவை மேம்படுத்தும் நோக்குடன் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செயற்படுத்தி வருகின்றனர் .  


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner