பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
அழைத்தவர் குரலுக்கும் அழையாதோர் அகல்வுக்கும் வலை வீசும் வானவர் தூதனே அழைத்தவன் தியாகி திலீபன் என அறிந்து ஆயிரத்திதொளாயிரத்தி எண்பத்தேளில் செப்டம்பர் இருபத்தாறன்று சுயநலப் பிரியனாய் வந்தவன் நீ... நீயும் அறிவாய் இந்த உலகும் அறியும் அகிம்சையின் தாத்தன் மகாத்மா என்றால் மாசில்லா மகாத்மா தமிழீழத் திலீபன் என்றே உண்ணாமல் உறங்காமல் ஒருதுளி நீரும் அருந்தாமல் இறவாமல் பிறவாமல் எமதீழ விடிவெள்ளியாய் வாழ்கிறான் . தமிழீழப் பார்த்திபன். கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை – ஓர் ஏழையின் பசிக்கே அன்று தந்தான் அம்பிகைபிரியன் ஆதிசங்கரன். துவண்டு துடித்த கொடிமுல்லைக்கே தன் தேர் தந்து வள்ளலானான் மன்னன் பாரி. கார்முகில் கண்ட கோலமயில் மழையில் தோகை விரித்தாடி கூதலால் குறுகிநிற்க தன் போர்வை கொடுத்து மயிலின் கூதல் களைந்தார் அடியவர் மேகனார். கொடுத்தவர் வரிசையில் வள்ளலென கண்டேன் கர்ணனையும் – அவனும் ஒருத்தனக்காகவே கொடுத்தான் தன்னுயிரை . ஈழப்போரின் பார்த்திபனுக்கு ஈடுல்லா இவரெல்லாம் இலக்கியத்தில் வளிக்குத் துணையென வாய் மொழிய நாணிச் சிவக்கின்றன கண்கள் ஒருத்தனுக்கா கொடுத்தான் திலீபன் தன்னுயிரை உலகத் தமிழனுக்காகவே கொடுத்தான். தமிழீழ மலர்வுக்காகவே கொடுத்தான். மெழுகுவர்த்தி யென இவனைச் சொல்ல ஐயப்படுகிறது என் மனசு தானே .. தனியே.. தன்னை உருக்கும் தவத்தில் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி நெய்யென உயிரையும் ஊற்றி ஊற்றி பன்னிரு நாட்களாய் பார்த்திபன் வளர்த்த வேள்விக்குள் காந்தி நாட்டின் அராயகத் தாண்டவங்கள் உலைக்களமதில் நீறு பூத்துக்கொதித்திட அகிலமே கண்டு சிலிர்த்தது. அமைதிப்படையென முலாம்தனை பூசி அராயகத் தேரேறி விரகம் தீத்தவரே கடிதெனக்கண்ட காந்தியக்கொள் கையை நிர்மூலமாக்கிய நிர்மலன் திலீபனே அரியணையாளும் ஆதிக்க உலகில் மூவடி நடந்து தமிழீழத்தடம் பதித்த வாமணனும் இவனே. அகிம்சையெனும் அகல் விழக்கின் அடியும் முடியும் இவனே இன்றுள்ளேன் நாளையிருப்பேனோ நானறியேன் என நல்லூரான் வீதியிலே நமதீழ விடிவிற்கு நல் லுரை பயின்றவன் போர்முறை நிறுத்தி அறவளி நின்று அனலையும் தின்றவன். இறவா வரத்தில் இரண்டறக் கலந்தபின் இந்திய ஆதிக்க இரணியகாண்டத்துக்குள் இறந்து போவானோ காலனே கண்ணுக்கு தெரியா மாயனே முடிந்தால் முன்னுக்கு வா. இருபத்திமூன்றாண்டுகள் இழையோடிக்கழிந்தாலும் இறவாமல் பிறவாமல் என்றும் பதினாறாய் வாழ்கிறான் எங்கள் தமிழீழக் குமரன் திலீபன். அழைத்தது சாவையா – இல்லை திலீபனை அழைத்தது சாவா நிழலையும் களையும் நிர்மலனே நீயே நியம்தனை சொல். . மீள்பதிவு
0 Comments:
Post a Comment