-->

வன்னிபடைத்தள தாக்குதலின் 2ம் ஆண்டு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

நான்காம்கட்ட ஈழப்போரில் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கான முக்கியத்துவங்கள் அதிகம். அரசின் படை நடவடிக்கைகளை பொறுத்தவரையில் கிழக்கு மீதான படை நடவடிக்கை மற்றும் வன்னியில் தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளில் சிறப்பு படையினரின் செயற்பாடுகள் அதிகம். அதற்கேற்ப விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகளும் வேறுபட்டவை, வான்படையை இந்த போரி அறிமுகப்படுத்திய விடுதலைப்புலிகள் ஆழஊடுருவும் சிறப்பு படை மற்றும் கரும்புலி அணிகளின் இணைந்த தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வான்புலிகள் படைத்துறை மற்றும் பொருளாதார கேந்திரமையங்களை தொடர்ந்து தாக்கி வருகையில் அவர்களின் நடவடிக்கையுடன், பீரங்கி மற்றும் தரைப்படை சிறப்பு அணிகளை விடுதலைப்புலிகள் இணைத்து வருவது தற்போதைய போரியல் உத்திகளில் ஒரு புதிய பரிணாமமாகவே கருதப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் பாலாலி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலின் போது கேணல் கிட்டு பீரங்கி படையணியை ஒருங்கிணைத்திருந்த விடுதலைப்புலிகள், அதே வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அனுராதபுரம் வான்படை தளம் மீதான வான்தாக்குதலின் போது தரைப்படையின் சிறப்பு அணிகளையும் ஒருங்கிணைத்திருந்தனர். எனினும் கடந்த வாரம் 9 ஆம் நாள் அதிகாலை வவுனியா படை தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வான்புலிகள், தரைப்படையின் சிறப்பு அணிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கி படையணிகளை விடுதலைப்புலிகள் ஒருங்கிணைத்திருந்தனர். வவுனியா தளத்தை பொறுத்தவரை அங்கு ஸ்குவாட்றன்06 (Mடி17, Mடி171) உலங்குவானூர்தி பிரிவும், ஸ்குவாட்றன் உளவு விமான பிரிவும் நிறுத்தப்பட்டிருப்பது வழமை. எனினும் 2006 ஆம் ஆண்டு வவுனியாவை அண்டிய பகுதிகளில் மோதல்கள் உக்கிரமடைந்ததை தொடர்ந்து ஸ்குவாட்றன்11 பிரிவும், உலங்குவானுõர்திகளில் பெருமளவும் அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு நகர்த்தப்பட்டன. இதனை தொடர்ந்து அனுராதபுரம் வடபகுதி போர்முனையின் பிரதான விமானப்படைத்தளமாக மாற்றம் பெற்றிருந்தது. இது பயிற்சி விமானங்கள் ஸ்குவாட்றன்1 விமானங்களின் தளமாக இருந்ததுடன், வட போர்முனையின் முக்கியத்துவம் கருதி தாக்குதல் உலங்குவானூர்திகளும், போக்குவரத்து வானூர்திகளும், விடுதலைப் புலிகளின் விமானங்களை தாக்குவதற்கு என். கே8 பயிற்சி விமானமும் அங்கு நிறுத்தி வைக்கப்படுவதுண்டு. எனினும் அந்த தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் அனைத்தும் தாக்குதலில் அழிக்கப்பட்டது அரசாங்கத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வவுனியா ஜோசெப் படைத்தளத்தை பொறுத்தவரையில் வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு மையமாகவும், வான்புலிகளை கண்காணிக்கும் ராடர் மையமாகவும் விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு இந்தியா மேற்கொண்டு வரும் படைத்துறை ஒத்துழைப்புக்களில் வன்னி மீது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளில் இந்திய ஆற்றிவரும் பங்களிப்புக்கள் அதிகமானவை. இலங்கை அரசிற்கு மறைமுகமாக படைத்துறை உதவிகளை வழங்கிவரும் இந்தியா, 40 மி.மீ எல்70 தன்னியக்க விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும், நிசாந்த் வகை ஆளில்லாத உளவு விமானங்களையும் லேசர்கள் மூலம் வழிநடத்தப்படும் குறிதவறாத குண்டுகளுக்கான வழிநடத்திகளையும் மறைமுகமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடர்கள் மூலம் வழிநடத்தப்படும் எல்70 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வவுனியா படைத்தளத்திலும் நிறுவப்பட்டிருந்தன. இந்த ஆயுத உதவிகளுக்கு அப்பால் படை நடவடிக்கைகளிலும் இந்திய படையின் உயர் அதிகாரிகள் பங்குபற்றி வந்திருந்தனர். இந்தியாவினால் இலவசமாக வழங்கப்பட்ட இந்திரா ஐஐ ராடர்கள், தாழ்வாகப்பறக்கும் விமானங்களை மிகவும் துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டது. 90 கி.மீ துõரவீச்சும், 35 மீ தொடக்கம் 3000 மீற்றர் உயரத்தில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் இந்த ராடர்களை வன்னியில் இந்திய அரசு நிறுவியதுடன், பாரத் எலக்ரோனிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பொறியியலாளர்கள் அதனை இயக்கியும் வந்திருந்தனர். இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் பொறியியலாளர்கள் களமுனைகளில் பணியாற்றுவதற்கான அனுமதியை இந்திய பாதுகாப்பு அமைச்சகமே வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன ஒடுக்குமுறைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என இந்தியா வெளியில் தெரிவித்துவரும் அதே சமயம் இலங்கைக்கான படைத்துறை உதவிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை கடந்த 9 ஆம் நாள் விடுதலைப்புலிகளால் வன்னி படை தலமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது. அதிகாலை 2.40 மணியளவில் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகளும், சிறப்பு கரும்புலி அணிகளும் வவுனியா படைத்தலைமையகத்தின் ராடர் மையத்தின் வளாகத்திற்குள் உள்நுளைந்த பின்னர், சிறப்பு வேவுஅணிகள் படைத்தளத்தின் முக்கிய மையங்கள் தொடர்பான வேவுதகவல்களை வழங்க கேணல் கிட்டு பீரங்கி படையணியின் 130 மி.மீ பீரங்கிகள் புளியங்குளத்திற்கு கிழக்காக அமைந்துள்ள பீரங்கி நிலையிடங்களில் இருந்து எறிகணைகளை சரமாரியாக வீசத்தொடங்கின. வவுனியா படைத்தலைமையகம் மீதான இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் கொழும்பு வான்படை தலைமையகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்ட போது விடுதலைப்புலிகளின் 130 மி.மீ எறிகணை ஒன்று இந்திரா ஐஐ ராடர் தளத்திற்கு அண்மையாக வீழ்ந்து வெடித்திருந்தது. பீரங்கியின் எறிகணைகள் தளத்தினுள் வீழ்ந்து வெடித்த போது சிறப்பு அணிகளும் தளத்தின் முக்கிய பகுதிகள் மீது தாக்குதலை ஆரம்பித்திருந்தன. வவுனியா வான்படைத்தளமானது, நடவடிக்கை படை தலைமையகம், வான்படை தளம், சிறப்பு படை தளம், வான்பாதுகாப்பு கண்காணிப்பு மையம் ஆகியவற்றை கொண்டிருப்பதுடன் வன்னி படை நடவடிக்கைகளின் ஒருகிணைப்பு கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவின் தலைமையகமும் அங்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கரும்புலிகளின் அணிகள் இராணுவத்தின் சிறப்பு படை அணிகளுடன் மோதல்களில் ஈடுபட்டிருந்த அதே சமயம், சிறப்பு அணிகள் வான்பாதுகாப்பு தளம் மீதான தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தன. லெப். கேணல் மதியழகி தலைமையில் 10 கரும்புலிகள் இந்த சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ள போதும், 20 விடுதலைப்புலிகள் இந்த சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், 10 கரும்புலிகளுடன், மேலும் 10 சிறப்பு படை உறுப்பினர்கள் வவுனியா தளத்தினுள் களமிறங்கியதாகவும், அவர்களே பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களை நெறிப்படுத்தியதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த அணியில் விடுதலைப்புலிகளின் ஒளிப்பட குழுவினரும் இருந்ததாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இந்த மோதல்களின் பின்னர் 10 தொடக்கம் 11 விடுதலைப்புலிகளின் சடலங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தகவல்வெளியிட்டுள்ள அதேசமயம் ஏனைய விடுதலைப்புலிகள் தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.05 மணியளவில் ஆரம்பமான தாக்குதல்கள் உக்கிர கட்டத்தை அடைந்த போது வான்புலிகளின் இரண்டு விமானங்கள் வவுனியா வான்படை தளத்தின் மீது அதிகாலை 3.45 மணியளவில் 25 கி.லோ எடையுடைய நான்கு குண்டுகளை வீசியுள்ளன. இந்த குண்டுகளில் ஒன்று இந்திரா ராடர் அமைந்துள்ள தளத்திற்கு அண்மையாக வீழ்ந்ததுடன், மற்றைய குண்டு தளத்திற்குள் வீழ்ந்துள்ளது. ஏனைய இரண்டு குண்டுகளும் வெடிக்கவில்லை. வான்புலிகளின் விமானங்களை அதிகாலை 3.26 மணியளவில் தமது ராடர்களின் மூலம் அவதானித்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் அதற்கு முன்னரே வவுனியா படைத்தளத்தில் உள்ள ராடர்கள் சேதமடைந்துவிட்டதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாலை 5.00 மணிவரையில் நடைபெற்ற இந்த தாக்குதல்களில் 75 இற்கு மேற்பட்ட 130 மி.மீ எறிகணைகள் முகாம் பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாகவும் இதன் போது 13 இராணுவத்தினரும், ஒரு காவல்துறை உறுப்பினரும், கொல்லப்பட்டதுடன், 18 இராணுவத்தினர், 8 காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் 5 வான்படை சிப்பாய்கள் ஆகியோர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் இழப்புக்கள் அதிகம் என சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன. வவுனியா வான்படை தளத்தில் அமைந்துள்ள இந்திராஐஐ ராடர் சிறிய சேதம் அடைந்ததாக படைத்தரப்பு முன்னர் தெரிவித்த போதும் பின்னர் அதனை மறுத்திருந்தது. ஆனால் ராடர் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது. மேலும் வான்புலிகளின் தாக்குதல் விமானங்களில் ஒன்றை தமது எவ்7ஜி தாக்குதல் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் அரச தரப்பு மேலும் தெரிவித்துள்ளது. எனினும் தமது சிறப்பு அணிகளுடன், வான்புலிகள் மற்றும் பீரங்கி படையணிகள் மேற்கொண்ட தாக்குதலில் வவுனியா படைத்தளத்திள் வான்பாதுகாப்பு ராடர் தொகுதிகள், தொலைத்தொடர்பு கோபுரம், ஆயுத களஞ்சியம் ஆகிய பகுதிகள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட தமது விமானங்கள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெ?வித்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் வான்புலிகளின் விமானங்களில் ஒன்றை தமது வான்படையினர் முல்லைத்தீவு பகுதிக்கு அண்மையான வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்து வந்த தகவல்கள் வவுனியா படைத்தளம் மீதான தாக்குதல் செய்தியின் முக்கியத்துவத்தை குறைத்திருந்தது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ அறிவித்தல் வருவதற்கு முன்னர் வன்னியில் உள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகருடன் தமிழ் ஊடகவியலாளர் இது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது "இந்த தாக்குதலில் தமது 2 தாக்குதல் விமானங்கள் பங்குபற்றியதாகவும், அவை அனைத்தும் பாதுகாப்பாக தளம் திரும்பிவிட்டதாகவும்' அவர் தெரிவித்திருந்தார். சீனாவிடம் இருந்து அண்மையில் இலங்கை அரசினால் கொள்வனவு செய்யப்பட்ட, எவ்7ஜி வான் தாக்குதல் விமானங்கள் மூலமே வான் புலிகளின் சிலின் 143 விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது பல மட்டங்களில் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகளையும் உந்துகணைகளையும் செலுத்தக்கூடிய இந்த விமானங்களில் 30 மி. மீ பீரங்கிகளும் பொருத்தப்பட்டிருப்பதுண்டு. வான்புலிகளின் விமானங்களை எவ்.7 விமானம் வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக படை வட்டாரங்களின் ஒரு தரப்பினர் தெரிவித்து வரும் போது, 30 மி.மீ பீரங்கிகளின் மூலமே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மற்றொரு தரப்பு தெரிவித்து வருகின்றது. படைத்தரப்பின் மாறுபட்ட இந்த தகவல்கள் பாரிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள போதும், இந்த வான் தாக்குதல் தொடர்பாக வேறு பல கேள்விகளும் எழுந்துள்ளன. அதாவது, எவ்.7 விமானம் அதன் ஏவுகணை அல்லது பீரங்கி மூலம் விமானத்தை தாக்கியிருப்பின் அதற்கான பதிவுகள் அதன் ராடர் சாதனத்தில் பதிவாகியிருக்கலாம். ஆனால் அவ்வாறான தகவல்கள் எதுவும் படைத்தரப்பினால் வெளியிடப்படவில்லை. தம்மிடம் அதற்கான ஒளிப்பட ஆதாரங்கள் எதுவும் இல்லை என வான்படை பேச்சாளர் ஸ்குவாட்றன் லீடர் சஞ்சய அதிகரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவை நோக்கிய நகர்வில் ஈடுபட்டுவரும் 59 ஆவது படையணியின் முன்னரங்கிற்கு அண்மையாக விமானம் வீழ்ந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் ஆளில்லாத உளவு விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட தகவல்கள் எதுவும் அதற்கு ஆதாரமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்7 விமானம் தாக்குதலை நடத்தியிருப்பின் தாக்குதல் நடைபெற்ற இடம் தொடர்பான அமைவுப்புள்ளி விமானிக்கு தெரிந்திருக்கலாம். எனவே அந்த பகுதிகளில் உளவுவிமானங்கள் மூலம் தேடுதல் நடத்துவது இலகுவானது. ஆனால் அவ்வாறான தகவல்கள் எதனைøயும் இந்த பத்தி எழுதப்படும் வரையில் வான்படை வெளியிடவில்லை. ஆனால் இலங்கை வான்படையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வான்புலிகள் தமது விமானத்தை சடுதியாக தரையிறக்கியிருக்கலாம் என்பது சிலரது கருத்தாகவுள்ளது. சாதாரண வீதிகளில் கூட தரையிறங்கும் வான்புலிகளின் விமானங்களை விடுதலைப்புலிகள் பின்னர் வேறு பகுதிக்கு நகர்த்தியிருக்கலாம் என்பது அவர்களின் வாதம். கடந்த மாதம் 26 ஆம் நாள் கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகம் மீது வான்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது திருமலையில் உள்ள தமது இலக்கினை சொற்ப நேரத்தில் அடையும் நோக்கத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வான்புலிகள் மேலெழுந்ததாக தெரிவித்த படைத்தரப்பு, கடந்த வாரம் வவுனியா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அதற்கு அண்மையாக உள்ள புளியங்குளத்திற்கு அண்மையான பகுதியில் இருந்தே வான்புலிகளின் விமானங்கள் புறப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளன. எனவே இலங்கை வான்படையின் எவ்.7 விமானங்கள் கட்டுநாயக்கா வான்படை தளத்தில் இருந்து புறப்பட்டு வவுனியா வான்பரப்பை அடைவதற்கு எடுக்கும் 15 நிமிடங்களில் வான்புலிகள் பாதுகாப்பாக தளம் திரும்ப முடியும். மேலும் வெளிச்சங்கள் முழுவதும் அணைக்கப்பட்ட நிலையில் மிகவும் தாழ்வாக பறக்கும் வான்புலிகளின் விமானங்களை மணிக்கு 950 தொடக்கம் 2175 கி.மீ வேகத்தில் பறக்கும் எவ்.7 விமானங்கள் மூலம் இலகுவில் இடைமறித்து தாக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியானதே. வான்புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வரும் தகவல்கள் மிகவும் பலவீனமானவை. களத்தில் கொல்லப்படும் விடுதலைப்புலிகளின் இழப்புக்கள் தொடர்பாக மிதமான தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில், வான்புலிகளின் இழப்புக்கள் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தற்போதைய தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மிதமாகி போகலாம் என்ற கருத்துக்களும் தோன்றியுள்ளன. இதனிடையே அரசாங்கம் ஊடகங்கள் மீது அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் போர் தொடர்பான உண்மையான தாகவல்கள் வெளி வருவது மிகவும் கடினமானது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அனுராதபுரம் வான்படை தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் முதலில் 3 விமானங்கள் சேதமடைந்ததாகவே அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அன்றைய தாக்குதலில் 24 விமானங்கள் அழிந்து போனதாக பின்னர் தகவல்கள் வெளிவந்தன. எனவே கடந்த வாரம் நடைபெற்ற வவுனியா படைத்தளம் மீதான தாக்குதலில் ஏற்பட்டுள்ள மொத்த இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளிவர மேலும் பல காலங்கள் செல்லலாம். ஆனால், இந்த தாக்குதல் ஏற்படுத்தியுள்ள படைத்துறை இழப்புக்களை விட இராஜதந்திர பின்னடைவுகள் அதிகமானவை. அதாவது இந்திய அரசு மறைமுகமாக மேற்கொண்டுவந்த படைத்துறை ஒத்துழைப்புக்கள் அனைத்துலகத்தை எட்டியுள்ளன. அதாவது தமிழ் மக்கள் மீது இந்தியா நேரடியான போரை தொடுத்துள்ளதா என்ற கேள்விகள் உலகத் தமிழ் மக்களின் மனங்களில் எழுந்துள்ளன. மேலும் கடந்த இரு வாரங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு வான் தாக்குதல்களும் தற்போதைய வான்காப்பு உத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டத்திற்கு அரசாங்கத்தை தள்ளியிருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் வான்புலிகளின் தொடர்ச்சியான தாக்குதல் படைத்தரப்பின் போர் உத்திகளை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளுவதுடன் அவர்களின் தாக்குதல் திட்டங்களிலும் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியது. இராணுவம் பாரிய நடவடிக்கைகளுக்கு திட்டமிடும்போது அவர்களின் பின் தளங்கள், கனரக ஆயுதத்தளங்கள், கட்டளை மையங்கள், ஆயுதக்களஞ்சியங்கள், ராடர் நிலைகள் என்பனவற்றின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் இராணுவ நடவடிக்கைக்கான திட்டங்களில் பாரிய தாக்கங்களை உண்டு பண்ணக்கூடியவை என்றால் அதனை மறுக்க


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner