பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
{1}
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்{2}
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்(
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள்- சாவை
எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்
பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்
பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு
கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு
அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்
அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
{2}
கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்
கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்
எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்
மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்
இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்
காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்
கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான்
காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை
நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும்
காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம்
ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்
கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்
{3}
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ இந்தி
அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது
தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது
தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்
தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது )
கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது )
இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது
உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
சிங்களத்துப் படைகளோடு போராடினாய் )
வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் )
பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் )
இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் )
தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ
இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ
{4}
கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்
ஆஆஆஆஆஆ..
[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்
மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2
எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்
[மறைந்திடுமோ உம் நினைவு
அழிந்திடுமோ உம் கனவு] 2
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
ஆஆஆஆ....
கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்
[தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்
தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2
விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர்
[எரிமலையாய் நாம் எழுவோம்
விடுதலைக்காய் தலை தருவோம்] 2
விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
ஆஆஆஆ.....
கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்
பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்
புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்
0 Comments:
Post a Comment