-->

நாமும் நிமிர்வோம் தமிழனாக ! !

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

நாமும் நிமிர்வோம்
தமிழனாக..!
எங்களின் நூலகம்
எரித்தவர் ஏற்றினர்
சிங்கள இனமதன்
சிறுமைத் தனமதை !
கல்வியில் உயர்ந்த
கண்ணியம் நிறைந்த
நற்றமிழ் இனமதை
நாசப் படுத்தவே
தென் திசையிருந்து
வந்த வானரர்
கொடுஞ்செயல் புரிந்தனர் !
பச்சைக் கட்சியின்
மகாவலி அமைச்சராய்
இருந்த காமினி
இழிநிலை செயலதைத்
தலைமையேற்றவன்
தரப்பார் நடத்தியே
கொடுமை புரிந்தனன் !
அறிவின் வறுமையில்
ஆடிய சிங்களம்
அரியதோர் சுரங்கமாய்
திகழ்ந்த நூலகத்தை
தீயிட்டுக் கொளுத்தியே
திமிர்தனம் புரிந்தனர் !
தென் னாசியாவிலே
புகழ் பெற்ற நூலகம்
தீயிலே சாய்ந்ததை
செவி வழி அறிந்த
டேவிட் அடிகளார்
உயிர்தனை துறந்தே
உயிரற்ற உடலமாய்
தரையிலே சாய்ந்தார் !
கல்வியில் செழித்த
இனமொன்றின் மீது
கட்டாயத் தடைகளை
இட்ட போதிலும்
தரப்படுத்தலை
ஏற்றிய போதிலும்
தமிழனின் ஆற்றலை
முடக்கிட முடியாது
சிரமதிலேறிய சினமது
பின்னர் விசராக்கிய
வெறியினில் நின்று
ஆடிய சிங்களம் இன்று
அடிமேல் அடி வாங்கியே
அவமானப் பட்டு
நிற்பதைக் காண்கிறோம் !
அவமானப்பட்டு நின்றால்
போதுமா (?)
அவலத்தைத் தந்தவரக்கு
அவலத்தைக் கொடுப்போம்
அண்ணன் போட்டுள்ள
அரியதோர் கணக்கு
தமிழராய் பிறந்திட்ட
அனைவருக்குமே
கணக்கை சரியாய்க்
கழித்திடும் பங்குண்டு !
தாய் நிலத்தினில் வாழ்பவர்
தம்மையே கொடுக்கிறார்
புலத்திலே வாழும்
நாமென்ன கொடுக்கலாம்
கூனிக் குறுகிக்
குனிந்து நெளிந்து
வாழ்கின்ற வாழ்விலே
யாதென்ன கண்டோம் !
அச்சமற்ற வாழ்வொன்று
முன்னைய நாட்களில்
இருந்தது உண்மை
இன்றைய நாட்களில்
இங்கும் மெதுவாய்
இனவாதம் வளருது
என்று வெடிக்குமோ
எப்படி வெடிக்குமோ
யாரறிவாரோ
புலம் பெயர் உறவே
எங்களை அவர்கள்
அடித்துக் கலைக்குமுன்
நாங்களாகப் போய்விடல்
நன்றிலும் நன்றே !
நாங்களங்கு
போகும் போதிலே
நிமிர்ந்து போகும்
நிலையொன்று வேண்டும்
நிலையொன்றைக் காண
எம் நாடங்கு வேண்டும்
நாடுகாத்திடும்
பங்கினைச்செய்தே
நாமும் நிமிர்வோம்
தமிழனாக !
கல்வியைப் பறித்தார்
நூலகம் எரித்தார்
தமிழினம் போற்றும்
தன்மானம் தன்னை
எரிக்கவும் அழிக்கவும்
இவர்களால் முடியுமா !
இழிநிலையோடு
வாழ்ந்திடும் நிலையை
இவ்வுலகினில் தமிழன்
தாங்கிடல் முறையோ !


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner