-->

தமிழீழ தேசிய பறவை :- செம்பகம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற


தேசியப் பறவை செண்பகம்
பறவைகளைப் பொறுத்தவரை அதிக
பறப்புத்திறன் கொண்ட
பறவைகளுக்கு பெரும்பாலும்
ஒரு மண்ணுக்குரிய தனித்துவ
பூர்வீர்கத்
தன்மை கிடையாது . சில
பறவைகள்
நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும்.
பறப்புத்திறன் குறைந்த
பறவைகள் இந்த புலப்
பெயர்ச்சிக்குப்படுவதில்லை.
இதனால் பறப்புத்திறன்
குறைந்த
பறவைகளே ஒரு மண்ணுக்குரிய
மரபுரிமைச்
சொத்துக்களாகின்றன .
உலகின்
அதிகமான நாடுகளின் தேசியப்
பறவைகளாக பறப்புத் திறன்
குறைந்த
பறவைகளே இருக்கின்றன .
நமது தாயகத்தில் காடை,
கௌதாரி, செண்பகம், புளினி,
காட்டுக்கோழி, மயில் என்பன
உலகின் பலபகுதிகளிலும்
உள்ளன .
இனக்கூற்று அடிப்படையில்
இவற்றில்
நமது தாயகத்திற்குரிய
தனித்துவ அம்சங்கள்
குறைவாகவே உள்ளன .
இந்த வகையில் தமிழர்
தாயகத்தில் பறப்புத்திறன்
குறைந்த மரபுரிமைச்
சொத்துதாக உள்ள பறவைகளில்
தனித்துவ அம்சங்கள்
நிறைந்த செண்பகம் தேசியப்
பறவையாகப்
பிரகடனப்படுத்தப்படுள்ளது.
செண்பகம் பொதுவாக
ஆங்கிலத்தில் கிறேற்றர்
கூகல் அல்லது குறோ பீசன்ற்
என அழைக்கப்படுகின்றன .
நமது தாயகத்திலும்,
இந்தியா, சீனா, ஆகிய
நாடுகளிலும் இதன் இனங்கள்
வாழ்கின்றன .
கறுப்பு உடலையும் காவிநிற
செட்டைகளையும் கொண்ட
செண்பகம் காகத்தை விட
சற்றுப் பெரியது .
நமது சூழலில் இவை தத்தித்
தத்தி திரிவதை நாம்
காணலாம் . இது உலர்வலயப்
பகுதிகளில் தான் அதிகம்
உள்ளது .
மெதுவாக நடையும், தத்தித்
தத்தித் பாய்தலும் இதன்
தினத்துவ செயற்பாடுகள்.
பற்றைகள், சிறுமரங்களின்,
கீழ்ப்பகுதிகள் இதன்
வாழிடங்கள் . நத்தைகள்,
பூச்சிகள், அட்டைகள்,
தவளைகள், பாம்புகள்,
ஓணான்கள் செம்பகத்தின்
உணவுகள் ஆகும் .
பிற பறவைகளின் கூடுகளில்
இடப்பட்ட முட்டைகளையும்
செண்பகம் உண்ணும் .
செம்பகத்தின்
வேட்கைக்காலம்
பெப்ரவரியில்
இருந்து செப்டம்பர்
வரையாகும் .
இது தொடர்ந்து 3
முதல் 4 வரையான
முட்டைகளை இட்டு அடைகாக்கும்.
இதன் உயிரியல் பெயர்
சென்ரோபஸ் சினென்சிஸ்
(Centropus senensis)


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner