பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
{1}
காற்றாகி வந்தோம்
கடலாகி வந்தோம்
காதோரம்
ஒரு சேதி சொல்வோம்
காதோரம்
ஒரு சேதி சொல்வோம்
கரும்புலியாகி நின்றோம்
புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச்
சென்றோம்
புரியாத புதிராகச்
சென்றோம்
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத்
துடைத்தே வாருங்கள் -
எங்கள்
காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம்
செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம்
செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள்
எரிய
வருக வருக தமிழா
வழியில் இடறும் பகைகள்
எரிய
வருக வருக தமிழா
உன் விழியில் வழியும்
நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது
காற்றும் நிலவும்
யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை -
நாங்கள்
போகும் திசையில்
சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
காற்றும் நிலவும்
யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை -
நாங்கள்
போகும் திசையில்
சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும்
புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
மீண்டும் மீண்டும்
புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
எங்கள் மூச்சும் இந்த
காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத்
துடைத்தே வாருங்கள்
கண்ணில் வழியும் நீரைத்
துடைத்தே வாருங்கள்
எங்கள்
காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்
எங்கள்
காவிய நாயகன்
பாதையிலே அணி சேருங்கள்
எம்மை நினைத்து யாரும்
கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன
பூக்கள் வாடாது
0 Comments:
Post a Comment