-->

எல்லாளன் சிறப்பு தாக்குதல்.





எல்லாளன் சிறப்பு தாக்குதல்.



எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்


22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான்.


இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள். இவர்களின் உயிர்த்தியாகமும், இந்தத் தாக்குதலுக்கான காத்திருப்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், இழப்புக்களும் வீண்போகவில்லை, வீண்போகவும் மாட்டாது.

"எல்லாளன் நடவடிக்கை" கரும்புலிகளின் 4ம் ஆண்டு வீரவணக்கம் 22-10-2011






22-10-2007

'எல்லாளன் நடவடிக்கை' - 21 வீரவேங்கைகள் விபரம் 22-10-2011

எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள்.


இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

லெப்.கேணல் இளங்கோ

அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது.

எல்லாளன் நடவடிக்கை" யின் முக்கியத்துவம் என்ன? 22-10-2011


'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்."

கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.

09.10.2007

என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

4ஆம் ஆண்டு நினைவில் எல்லாளன் நடவடிக்கை



தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி 4ஆண்டு நினைவுநாள்
22- ஒக்டோபர் -2011
தமிழீழ  விடுதலைப் போராட்ட வரலாற்றில்
என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக
2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது
தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க
காலத்தில  கெரில்லா போராட்டமாக
காணப்பட்டு அதன்  வளர்ச்சிப்படிகளில்
பல  திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக
வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின்
விடுதலைக்காக போராடும்
போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக
போராடிய

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம். 10-10-1987

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.

வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.

இந்திய இலங்கை கூட்டுச்சதியின் 24 வது வருடம் ! 05-10-1987




காலம் எல்லாவகையான தடங்களையும், தடையங்களையும்,சுவடுகளையும் பின்னோக்கி தள்ளியபடியே மிகமிக வேகமாக நகர்ந்துகொண்டு (ஓடிக்கொண்டு) இருக்கிறது.நினைவுப்படிவுகளின் மேல் புதிது புதிதாக ஏராளம் காட்சிகள் படியபடிய பழையவை மறைக்கப்படுதல் காலஓட்டத்தில் சாத்தியமாகிறது.அதுதான் இயல்பானதும்கூட. ஆனாலும் எத்தனைகாலம் கடந்தாலும் எத்தனை வருடங்கள் உருண்டோடி போனாலும் மனஆழத்தில் படிந்துவிட்ட நினைவுகள் எளிதில் கரைந்துபோகாது. இதோ இருபத்துநான்காவது வருடம் இது.அவர்கள் எம்முன் உருவங்களாக உலாவாமல் விட்டு இருபத்துநான்கு ஆண்டுகளாகிவிட்டன.

1987 ஒக்டோபர் 5ம்நாளில் விடுதலையின் மீதான தமது ஈடற்ற நம்பிக்கையையும் தாயகத்தின் மேலான அசைவற்ற பற்றுதலால் நஞ்சருந்தி வீரச்சவடைந்த பன்னிரண்டு வேங்கைகளின் இருபத்துநான்காவது நினைவுநாள் வந்துவிட்டது.குரூரமான ஒரு சதியின் முகம்நாண அவர்கள் தம்மை ஆகுதியாக்கி தேசத்தின்ஆன்மாவுடன் கலந்தார்கள். லெப்.கேணல் குமரப்பா,லெப்.கேணல் புலேந்திரன்,மேஜர் அப்துல்லா,கப்டன் பழனி,கப்டன் கரன்,கப்டன் ரகு,கப்டன் மிரேஸ்,கப்டன் நளன்,லெப்.அன்பழகன், லெப்.தவக்குமார்,லெப்.ரெஜினோல்ட்,இரண்டாம் லெப்.ஆனந்தகுமார் என்று பன்னிருவேங்கைகள் இந்தியவல்லாதிக்கத்தின் சதிகார முகத்திரையை கிழித்தபடியே

கால் நூற்றாண்டு கடந்தும் லெப்.கேணல் விக்டரின் நினைவுகள்! 12-10-1986




யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.
வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை.

யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி

லெப் கேணல் விக்டர் அவர்களின் நினைவுநாள் 12/அக்டோபர்/1986



லெப் கேணல்
விக்டர்
அவர்களின் நினைவுநாள் 12/அக்டோபர்/1986


விடுதலைப்புலிகளின்
மூத்த
உறுப்பினரான
லெப் கேணல்
விக்ரர்
இயக்கத்தின்
தலை சிறந்த
போர்
தளபதிகளில்
ஒருவராவார்


மன்னார்
பிராந்தியத்
தளபதியாகப்
பணியாற்றிய
லெப் கேணல்
விக்ரர்
அடம்பனில்
சிங்களப்
படையினருடனான
ஒரு வரலாற்றுச்
சண்டையின் போது
12.10.1986 ல்
களப்பலியானார்.
. . . . . . . . . . . . . . . . . . . . . .

லெப் கேணல் விக்டர் கவச எதிர்ப்புப் படையணி

லெப் கேணல் விக்டர்
தலைமையில் இடம்பெற்ற தாக்குதலில்
முதற் தடவையாக கவசவாகனம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது .

அதனை நினைவில் கொண்டு தேசியத் தலைவர் அவர்களால் 1996 ம் ஆண்டு விக்டர் கவசஎதிர்பு அணி உருவாக்கம் பெற்றது

லெப் கேணல் விக்ரர் நினைவு தொகுப்பு <காணொளி 12-10-1986



லெப் கேணல் விக்ரர்
<மருசலீன்
கியூஸ்லஸ்>
பனங்கட்டிக்கொட்டு மன்னார்
<14/11/1963 - 12/10/1986>
லெப் கேணல் விக்டர் அவர்களின் 24ம் ஆண்டு நினைவுநாள் 12/10/2010
மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய லெப் கேணல் விக்ரர் அடம்பனில்
சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல்
களப்பலியானார்
* * * * *
லெப் கேணல் விக்ரர் அவர்களின் , வரலாற்று நினைவுத்தொகுப்பு
காணொளியில் .. . . .
பாகம்1
http://bit.ly/auYmaI
பாகம்2
http://bit.ly/b9FKz9
பாகம்3
http://bit.ly/c4oFZE



தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது

 தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது


* பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண்

பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி


பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி "..
பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…"
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்  அவர்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு

2ம் லெப் மாலதி


மன்னார்
ஆட்காட்டி வெளிதனிற்
பிறந்து
மாலதி யென்னும்
பெயர்'தனைத்
தாங்கித்
தன்னிகரில்லாத்
தமிழிச்சி தானெனத்தனையே ஈந்தாள்
தமிழீழத் தாயவள்
இன்னல் களைந்திட
எடுத்தடி வைத்தாள்!
ஈடிலா மகளிர்
அமைப்பினில்
இணைந்து
பன்னுதற் கரியபல
தாக்குதல்
புரிந்தே
பெருமை சேர்த்தனள்
பெண்ணினத்
திற்கே !

தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர் - 2ம் லெப் மாலதி


தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது. வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர். வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான்

தீயினில் எரியாத தீபங்களே <குமரப்பா, புலேந்திரன்


 


பாரத அரசின்
பாதங்கள்
எங்கள் தாயக
பூமியில் தடம்
பதித்தபோது தமிழீழ
மக்கள்
தங்களை வசந்தம்
தழுவிக்கொண்டதாகவே கருதினர்
ஸ்ரீலங்கா அரசின்
அராஜகத்தீயில்
எரிந்து கொண்டிருந்த
இவர்கள் பாரத
நாட்டின்
சிந்தனைக்காற்றில்
திழைக்கலாம்
என்று கனவுகள்
கண்டனர் . ஆனால்
காக்க
வந்தவர்களே தம்மைத்தாக்கிய
போது தமீழீழ
மக்களின்
கனவுகள் ,

தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04

தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04



தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04


1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது
இலங்கை அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்’ என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.

தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்

இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மாண்ட வேங்கைகள்

1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா - இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.

இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா - இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.



சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.

சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து

இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்



புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது

- தமிழீழத் தேசியத்தலைவர்
மேதகு வே .பிரபாகரன் அவர்கள் -

ஈழவிடுதலை வரலாற்றில் திலிபன் ஒரு தீருப்பு முனை. 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன. இந்தியாவின் வங்கதேச விடுதலையும் இந்திராவின் துணிச்சலும் தமிழீழம் விடுதலை காணும் என்ற கனவில் தமிழினம் மிதந்திருந்தது. ஆனால் இந்திராவின் மனதில் வேறு சிந்தனைகள் இருந்ததைச் சில பதிவுகள் கூறுகின்றன. அவற்றை இந்தியப் பிராந்திய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner