பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
கேணல் ராஜு அவர்களின் 9 ம் ஆண்டு வீர வணக்க நாள் 25 /08 /2011
கேணல் ராஜு இற்கும் இதே நாளில் வீர
காவியம் ஆன ஏனைய மாவீரர்களுக்கும் வணங்கா மண் இணையத் தளம் வீர வணக்கத்தை
தெரிவித்துக் கொள்கின்றது.
கேணல் ராயு
அம்பலவாணன் நேமிநாதன்
யாழ்-மாவட்டம் சுன்னாகம்
அம்பலவாணன் நேமிநாதன்
யாழ்-மாவட்டம் சுன்னாகம்
ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ
போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ
மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான
தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும்
வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல்
ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான
வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது.
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி.
விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு
போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும்
போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயு என்கிற அம்பலவாணன்
நேமிநாதன். இவர் யாழ்-மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி.
அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார்.
தமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின்
அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை
வேட்கையும் கொண்ட கேணல் ராயு அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில்
இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த
காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல்
நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக
அர்ப்பணித்துக கொண்டவர
விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின்
அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர்
அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ
படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த
போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது,
விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின்
உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை
சாத்தியமாக்கினார்.
போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை
வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு
போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல
களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன.
விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல்
ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே
இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப்
புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான
பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில்
விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழிநடத்திய இவர்
25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான
புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார்.
புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய
நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ
அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார்.
இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே
தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.
0 Comments:
Post a Comment