பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
{1}
தமிழா! நீ பேசுவது தமிழா
அன்னையைத்தமிழ் வாயால் 'மம்மி' என்றழைத்தாய்
அழகுக்குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்
தமிழா! நீ பேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை
'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன் போக்கை
இறவை 'னைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை
தமிழா! நீ பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா நம் தமிழ் இப்படிக் கேட்டா?
தமிழா! நீ பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை 'பிரெண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் 'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?
தமிழா! நீ பேசுவது தமிழா?
பாட்டன் கையில 'வாக்கிங் ஸ்டிக்கா?'
பாட்டி உதட்டுல என்ன 'லிப்ஸிடிக்கா?'
வீட்டில பெண்ணின் தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா
{2}
நெஞ்சம் மறக்குமா
நெஞ்சம் மறக்குமா
நெஞ்சம் மறக்குமா
வல்வெட்டித்துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்
படுத்ததை நெஞ்சம் மறக்குமா
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?
குமரப்பா புலேந்தி அப்துல்லா
ரகு நளன் பழனி
மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்
அன்பழகன் கரன் ஆனந்தகுமார் -(2)
எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்
இவர்களல்லவா"?
கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட
கதையைச் சொல்லவா?
தங்கத் தமிழீழ விடுதலை காண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள இந்திய அரசுகள் சதியால்
நஞ்சு குடித்தாரே
ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்
போனால் பிடிப்பாராம்
இந்திய உதவி கொண்டே தமிழனின்
வாழ்வை முடிப்பாராம்
ஆழக்கடலில் போனபுலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே
ஆழக்கடலில் போன புலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே
{3}
சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
பொங்கும் புலிகளின் போர்த்திறன் பாடியே
பூநகர் வெற்றியை வாழ்த்துங்கடா
நாகதேவன்துறை வேகப்படகுகள்
நம்கையில் வந்ததடா -பகை
ஏவியபீரங்கி யாவுமே எங்களின்
காலிற் கிடக்குதடா -அட
பாயும் புலிகளின் கையில் எதிரியின்
பாசறை வீழ்ந்ததடா -காற்றில்
பஞ்சுப்பறந்தது போலப் பறந்தது
வந்த படைகளடா.
சிங்களம் இங்கினி பொங்குமா -வந்தினி
செந்தமிழ் ஈழத்தில் தங்குமா -இனி
தங்குலமை இங்கு தோற்குமா -கரி
காலனின் சேனைகள் தோற்குமா -புது
விந்தைகள் ஆயிரம் சேர்ந்ததடா -புலி
வீரத்தினில் வேரினில் பூத்ததடா -எங்கள்
பொங்கிடும் பூமியைப் பாடுவோம் -பிர
பாகரன் காலமென்றாடுவோம்.
0 Comments:
Post a Comment