பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
விடைபெற்றார் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்
[ வெள்ளிக்கிழமை, 23 மே 2008
தமிழீழ
விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம்
விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று
விதைக்கப்பட்டார்.
தாய் மண்ணின் விடுதலைக்காக தன்னை முழுதாக
ஒப்படைத்து பெருவெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து- திருப்புமுனைகளை
ஏற்படுத்திய தளபதி பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் தளபதிகள், போராளிகள்,
பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்கத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை, 23 மே 2008) முள்ளியவளை மாவீரர்
துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.
மாரடைப்பால் சாவடைந்த பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வீரவணக்கம் செலுத்தியதனைத் தொடர்ந்து வித்துடல் தாயக மண் எங்கும் வலம் வந்து மக்கள் பல்லாயிரக்கணக்கில் இறுதி வணக்கம் செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.
மல்லாவி- கிளிநொச்சி- வட்டக்கச்சி- புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வைக்கப்பட்டு அங்கு வீரவணக்கக் கூட்டங்கள் நேற்றும், இன்றும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வித்தாகி வீழ்ந்த தமது தளபதிக்கு வணக்கம் செலுத்தினர்.
தளபதிகள், பொறுப்பாளர்கள் பிரிகேடியர் பால்ராஜின் போராட்ட வீரவரலாற்றை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து தமது வீரத்தளபதியின் விடுதலைக் குறிக்கோளை தமது உள்ளங்களில் இருத்தி உறுதி எடுத்துக்கொண்டு பிரிகேடியர் பால்ராஜூக்கு தமிழினம் விடை கொடுத்துள்ளது.
தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வணக்கம் செலுத்த பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.
முன்னதாக முல்லைத்தீவு நகரில் இன்று நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்க நிகழ்வு கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி பூரணி ஏற்றினர்.
உடன்பிறப்புக்கள் ஈகச்சுடரேற்றி, மலர்மாலைகளை சூட்டினர்.
தளபதி லக்ஸ்ம்ன, கடற்புலிகளின் தாக்குதல் தளபதி காதர் மலர்மாலை சூட்டினர்.
வீரவணக்க உரையை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை நிகழ்த்தினார்.
தொடர்ந்து வித்துடல் முள்ளியவளைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி வீரவணக்க நிகழ்வு முள்ளியவளை கோட்டப் பொறுப்பாளர் உமைநேசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரை மாவீரர் பணிமனை பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.
ஈகச்சுடர்களை உடன்பிறப்புக்கள் ஏற்றினர்.
மலர்மாலைகளை
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்
வடபோர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன்
மூத்த உறுப்பினர் செ.வ.தமிழேந்தி
தலைமைச் செயலகச் செயலர் சீரன்
தளபதி லக்ஸ்மன்
தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன்
போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ்
தளபதி கேணல் ஜெயம்
நிதித்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான குட்டி
சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன்
நீதி, நிர்வாகப் பொறுப்பாளர் பரா
மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் மாறன்
மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர்களில் ஒருவரான மனோஜ்
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் சி.கரிகாலன்
மகளிர் மூத்த உறுப்பினர் தீபா
புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன்
தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் இளங்கோ
சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி துணைத்தளபதி அமுதாப்
கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம்
உள்ளிட்டோர் சூட்டினர்.
வீரவணக்க உரைகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் ஆகியோர் நிகழ்த்தினர்.

0 Comments:
Post a Comment