பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
பிரிகேடியர் சொர்ணம் 2 ம் ஆண்டு வீரவணக்கம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய யோசப் அன்ரனிதாஸ் என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார்.
தமீழீழ விடுதலைப்புலிகளின் தொடக்ககால போராளியாக 1983 ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்ட சொர்ணம் அவர்கள், இந்தியாவின் மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சிபெற்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பக்கத்துணையாக நின்று செயற்பட்டார்,
இவ்வாறு தாயகத்தில் இந்திய படையினருடனான மோதல்களின் போது எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுத்த விடுதலை வீரனாக செயற்பட்ட செர்ணம் அவர்களை தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் வளர்ச்சியில் அடுத்த நிலையாக படைக்கட்டுமானங்களை உருவாக்கும் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டார்.
இந்நிலையில் களத்தில் களமுனை போராளிகளை வழிநடத்தி போர் வியூகங்களை அமைப்பதில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு பக்கத்துணையாக நின்று திட்டங்களை தீட்டினார். இவ்வாறு விடுதலைப்புலிகளின் பெயர்சூட்டப்பட்ட வெற்றித்தாக்குதல்களில் எல்லாம் சொர்ணம் அவர்களின் திட்டமிடலும் கட்டளைகளும் வழிநடத்தல்களு+டாகவே வெற்றிகளை பெற்றர்கள்.
இவ்வாறு விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு ஏற்றால்போல் படைஅணிகளின் பொறுப்பாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் ஓயாத அலைகள் தாக்குதல்களின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் ஆய்வாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் பின்னர் திருகோணமலை மாவட்ட தளபதியாக செயற்பட்டார்.
பின்பு வன்னியில் மணலாற்றுப்பகுதி கட்டளைத் தளபதியா பொறுப்பேற்று திறம்பட செயற்பட்டு எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினார். இவ்வாற விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல்கள், எதிர்சமர்கள் அனைத்திலும் சொர்ணம் அவர்களின் கட்டளைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கும், இன்நிலையில்தான் சிறீலங்காப்படையின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கையில் விழுப்புண்ணினை தாங்கியவாறு களமுனைப் போராளிகளுக்கு கட்டளைகளை வழங்கிய சொர்ணம் அவர்கள்
இறுதியில் முள்ளிவாய்கால் பகுதியில் ஓருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு எதிரியுடன் போரிட்டுக்கொண்டிருக்கையில் 15.05.2009 அன்று விழுப்புண் அடைந்து வீரச்சாவடைந்துள்ளார்.
0 Comments:
Post a Comment