பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
அன்னை பூபதி
என்று அழைக்கப்படும் தாய்
இந்தியப் படைகளுக்கெதிராக
சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த
நாள் .
யார் இந்த
அன்னைபூபதியென்று சுருக்கமாகப்
பார்க்கும் பதிவிது .
பூபதியம்மாவின் கணவர்
பெயர் கணபதிப்பிள்ளை .
பத்துப்பிள்ளைகளின் தாய்.
மட்டு - அம்பாறை அன்னையர்
முன்னணியின் துடிப்புள்ள
முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய
அமைதிப்படைக்கும்
சண்டை நடந்துகொண்டிருந்த
காலம் .
இந்தியப்படை கிட்டத்தட்ட
மக்கள் வாழிடங்கள்
அனைத்தையும் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்துவிட்டிருந்த
காலம் . அந்த இடைபட்ட
காலத்துள் நடந்த
கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.
இந்நிலையில் தான்
இந்தியப்படைக்கெதிராக
குரல் கொடுக்க , சாத்வீக
போராட்டங்களை நடத்த மட்டு-
அம்பாறை மாவட்ட அன்னையர்
முன்னணி முடிவு செய்தது .
அவர்கள்
இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய
அரசுக்கெதிராக
உண்ணாவிரதப்
போராட்டத்தைத்
தொடங்கினர் .
அவையாவன,
1.உடனடியாக யுத்த
நிறுத்தத்தை அமுல்படுத்த
வேண்டும் .
2. புலிகளுடன்
பேச்சு நடத்தித்
தீர்வு காணவேண்டும்.
அன்னையர் முன்னணியின்
கோரிக்கைகள்
எதுவுமே இந்தியப்படையினரின்
கவனத்தையீர்க்கவில்லை .
ஆனால் தமிழ்ப் பெண்கள்
அடையாள உண்ணாவிரதப்
போராட்டத்தில் அணிதிரண்ட
நிலையில் 1988ம்
ஆண்டு ஜனவரி 4ம்
திகதி அன்னையர்
முன்னணியைத்
திருமலைக்குப்
பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கமைய சென்ற அன்னையர்
முன்னணிக் குழுவினருடன்
இந்தியப் படையின் உயர்
அதிகாரியான
" பிரிக்கேடியர் சண்டேஸ்"
பேச்சுக்கள் நடத்தினார்.
இந்தப்
பேச்சுக்களின்போது அன்னையர்
முன்வைத்த
இரு கோரிக்கைகளையுமே மீளவும்
நினைவூட்டினர் . ஆனால்
கோரிக்கைகள் எதுவும்
நிறை வேற்றப்படவில்லை.
போராட்டம்
தொடர்ந்து நடந்தது.
இந்நிலையில் 1988 ம்
ஆண்டு பெப்ரவரி 10ஆம்
திகதி அன்னையர்
முன்னணியின் நிருவாகக்
குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும்
அழைத்தது . இதற்கமைய
கொழும்பு சென்ற அன்னையர்
முன்னணியின் நிருவாகக்
குழுவினருடன்
பேச்சுக்களை மேற்கொண்ட
இந்திய அதிகாரிகள்
விடுதலைப் புலிகள்
இந்தியப் படையிடம்
ஆயுதங்களை ஒப்படைக்க
வேண்டும் என
வலியுறுத்தியுள்ளனர்.
இதனைக் கடுமையாகக்
கண்டித்த அன்னையர்
முன்னணியினர் ,
விடுதலைப்புலிகள் எங்கள்
பாதுகாவலர்கள் ,
நீங்கள்தான் போர் நிறுத்த
உடன்
பாட்டுக்கு வரவேண்டுமெனத்
தெரிவித்தபோது அந்தச்
சந்திப்பில் கலந்து கொண்ட
இந்தியத் தூதுவர் டிக்சீத்
அன்னையர்
முன்னணி மீது கடுமையாக
ஆத்திரத்தைக்
கொட்டி தீர்த்துள்ளார்.
நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற
நிலையில் சாகும்
வரை உண்ணாவிரதப்
போராட்டத்தைத் தொடக்கத்
தீர்மானித்தனர் .
அப்போது பலர் சாகும்
வரை உண்ணாவிரதப்
போராட்டத்தில்
குதிப்பதற்காக
முன்வந்தனர் . இறுதியில்
குலுக்கல் முறையில்
தேர்வு இடம்
பெற்றது .முதலில்
"அன்னம்மா டேவிட்"
தெரிவு செய்யப்பட்டார்.
1988ஆம்
ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள்
அன்னம்மா டேவிட் அன்னையர்
முன்னணி சார்பாக
உண்ணாவிரதத்தில்
குதித்தார் .
அமிர்தகழி மாமாங்கேஸ்வர்
ஆலய குருந்தை மரநிழலில்
அன்னம்மாவின்
உண்ணாவிரதப்போராட்டம்
தொடங்கப்பட்டது . இந்திய
அரசோ,
இந்தியப்படையோ அன்னம்மாவின்
போராட்டத்துக்குச்
செவிசாய்க்கவில்லை . மக்கள்
அமிர்தகழி குருந்தை மரம்
நோக்கி அணி அணியாகத்
திரண்டனர் .
உண்ணாவிரதத்தை முடிவுக்குக்
கொண்டுவர
இந்தியப்படை திட்டமிட்டது .
பல்வேறு மிரட்டல்,
கெடுபிடிகளுக்கு மத்தியில்
போராட்டம் தொடர்ந்தது .
இறுதியில் சதித்திட்டம்
வரைந்தது இந்தியப் படை .
அன்னம்மாவின் பிள்ளைகளைக்
கைது செய்தனர் .
அவர்களை மிரட்டி 'பலாத்கார
அச்சுறுத்தல்
காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்'
என்ற ஒரு கடிதத்தைக்
கையொப்பத்துடன் வாங்கி,
அதனைச் சாட்டாக
வைத்து அன்னம்மாவைக்
காப்பாற்றுவது போல்
உண்ணாவிரத மேடையில்
இருந்தவரைக் கடத்திச்
சென்றனர் .
இந்தநிலையில்தான்
பூபதியம்மாள்
தன்போராட்டத்தைத்
தொடங்க எண்ணினார் .
முன்னெச்சரிக்கையாக
" சுயவிருப்பின் பேரில்
உண்ணாவிரதமாயிருக்கிறேன்.
எனக்கு சுயநினைவிழக்கும்
பட்சத்தில் எனது கணவனோ ,
அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில்
அனுமதிக்க முயற்சிக்கக்
கூடாது " எனக் கடிதம்
எழுதி வைத்தார்.
உண்ணாவிரதப் போராட்டம்
19.03.1988
அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தில் அதேயிடத்தில்
தொடங்கியது . நீர் மட்டும்
அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள்
வந்தன . இந்தியப்படையால்
அன்னையர் முன்னணியினரிற்
சிலர் வெருட்டப்பட்டனர் .
உண்ணாவிரதத்தைக்
கைவிடும்படி பூபதியம்மாள்
வற்புறுத்தப்பட்டாள் .
உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய
முக்கியஸ்தர்களையும்
அன்னை பூபதியின் பிள்ளைகள்
சிலரையும் இந்திய இராணுவம்
கைது செய்தது . ஆயினும்
போராட்டம்
நிறுத்தப்படவில்லை. அவர்
உறுதியாகப்
போராட்டத்தைத்
தொடர்ந்தார் .
கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளப்படாத
நிலையில் சரியாக
ஒருமாத்தின்பின்
19.04.1988
அன்று உயிர்நீத்தார் .
அவரது உடலைக் கைப்பற்ற
இந்திய இராணுவம் எடுத்த
முயற்சிக்கெதிராக மக்கள்
கடுமையாகப்போராடி உடலைக்
காத்தனர் .
*******************************
ஏற்கனவே திலீபன் இந்திய
அரசுக்கெதிராக
நீராகாரம்கூட அருந்தாமல்
பன்னிரண்டு நாட்கள்
உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார்.
அதற்குப்பின்னும்
உண்ணாநோன்பிருந்த
பூபதியின் செயல் முட்டாள்
தனமானது என்றுகூட
அவர்மீது சிலர்
விமர்சனங்கள் வைப்பதுண்டு.
ஆனால்
பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக
எழுந்த ஒரு போராட்டமிது .
திலீபனின் சாவின் பின்னும்
இந்திய அரசிடம் அவர்கள்
நம்பிக்கை வைத்திருந்தார்கள்
என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை.
சொல்லப்போனால்
திலீபனை விடவும்
பூபதியம்மாவின்
சாவு உறுதிப்படுத்தப்பட்ட
ஒன்று என்றே நினைக்கிறேன் .
ஆனாலும் தங்கள்
எதிர்ப்பைக் காட்ட அவர்கள்
எடுத்த ஆயுதம் அது . அன்றைய
நேரத்தில் மட்டுமன்றி,
பின்னாட்களிற்கூட
அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும்
போதிக்கமுன் யோசிக்க
வைக்கும் ஓர் ஆயுதம்தான்
அன்னைபூபதியுடையது .
0 Comments:
Post a Comment