பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
அன்னை பூபதித்தாய் நீ
அகிலாண்ட ஈஸ்விரி
அருந்தமிழன் உயிர் காக்க
அவதாரம் நீ எடுத்து
அகிம்சை வழியில்
அறப்போரை நீ தொடுத்தாய்
அரக்கர்களோ உணராமல் உன்
ஆருயிரைப்
பறித்தெடுத்தார்
பூமியின்
பொறுமைகொண்டு சாமி வாசலிலே
தவம் இருந்தாய்
புரிந்து கொள்ளாப்
பாவிகளால் புயலாக உன் ஆவி
புகுந்து தமிழ்
மக்களுள்ளே புலி வீரம்
கொடுத்ததனால்
புதுச்சரிதம்
எழுதுகின்றார்
புன்னகையுடன் நீயும்
வாழ்த்தி அவர்
வெற்றி பெற்று விடுதலையை
வென்றெடுக்க அருள்புரிய
வேண்டுமம்மா
வேள்வியினிலே
நெருப்பெரியும்
இங்கு தமிழ் ஈழமதில்
வேள்வியையே நெருப்பாக்கி
விதையானார் மாவீரர்
மறத்தமிழன்
வீரமதை மகிமை பெறச்செய்தவரை
உயர்த்தி எங்கள்
தமழன்வழி உரம்பெற்று
நிமிரவைத்து
உன்னுடைய ஆசையைத்தான்
நிறைவேற்றி வைப்பதற்கு
உடனிருநது அருள்புரிய
வேண்டும்மா எம் தாயே
வீரம்விளைந்த
மண்ணை மீட்டெடுக்க
போராடும்
வீரருக்குள் நீ
இருந்து விடுதலையைப்
பெற்றுத்தா
காரிருளில் இருக்கும்
எங்கள் கனகம் விளையும்
மண்ணை
பேரொளியால்
மகிழவைத்து பெரும்
வெற்றி ஈட்டித்தா
பூவாக
தமிழரது மனந்தனிலே உனைப்
பதிக்க
பூபதியாய் இறைவனவன்
தந்தானோ உன்னையம்மா
பாரில் உள்ள நற்றமிழன்
அனைவருக்கும் அன்னை நீ
பாசமுடன்
உன்தாளை வணங்கி அருள்
வேண்டுகின்றேன் .
0 Comments:
Post a Comment