-->

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் (நிழல் படங்கள்)




தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் (நிழல் படங்கள்)






தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.










  இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்

செஞ்சோலை மலர்கள் படுகொலை


செஞ்சோலை மலர்கள் படுகொலை


முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த 2006 ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது.

செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை



செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை

படுகாயமடைந்த பல மாணவிகள் தமது அவயங்களை இழந்துள்ளனர் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்துள்ளனர்குருதியில் தோய்ந்து கண்ணீரால் கழுவப்படும் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001





 எம் மக்களை கொன்றொழித்த சிங்களத்தின் பல வான்கலங்களைத் தன் தோழர்களுடன் தகர்த்தழித்து மீளாத் துயிலில் உறங்கும் கரிய வேங்கை





2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்



2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்


கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.

"கறுப்பு ஜூலை"


இலங்கை அழகானது, வளமுடையது என்று சொன்னாலும் இலங்கையின் வரலாறு நீளவும் தீயும் குருதியும் நிரம்பிய சுவடுகள்தான். இதிகாச காலத்திலிருந்து அப்படியொரு பிம்பம் இலங்கைக்கு உண்டு. அனுமனின் லங்கா தகனம், முதல் பெரும் தீவைப்பு. தொடர்ந்து போர்களும் அழிவுகளும். மகாவம்சம் சொல்லும் துட்டகெமுனு - எல்லாளன் பகையும் போரும் அடுத்த வரலாற்றுப் பதிவு.

இதுவே இன்றுவரையும் இலங்கையின் ஆழ்மனம். இந்த ஆழ்மன வெளிப்பாட்டின் புதிய வடிவமே இப்போது தொடருகிற இனப்பிரச்சினை. ஒரு அமைதித் தீர்வுக்குப் போக முடியாமல் தடுப்பதும் இந்த ஆழ்மனப் பிரம்மைதான்.

ஐரோப்பியரின் வருகை, அவர்களின் நானூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலனிய ஆட்சி, மேற்குக் கல்வி, கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களின் செல்வாக்கு, ஜனநாயகம் மற்றும் இடதுசாரிச் சிந்தனை எதுவும் இந்த ஆழ்மனப் படிமத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சரியந்தான். இதைவிடவும், பௌத்தம் பெரும் செல்வாக்குச் செலுத்தும் இலங்கையில் அது அமைதிக்குப் பதிலாக இனவாதத்துக்குத் துணையிருக்கும் துயரம் வேறு. இன்னும், தமிழ் - சிங்களம் என்ற மனோபாவங்கள் பெரும் இடைவெளியைப் பராமரிக்கின்றன. இந்த எதிர்மனோபாவமே எல்லாவற்றுக்குமான அடிப்படைப் பிரச்சினை

கறுப்பு ஜுலை நினைவுகள்

கறுப்பு ஜுலை நினைவுகள்


1983ம் ஆண்டு பல்லாயிரக் கணக்கான தமிழினத்தைக் கொன்று வேட்டையாடியது .இன்று தமிழினம், பலமும், உரமும் பெற்றுவிட்டமைக்கு 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரமும் அதன் பின்னர் தமிழினம் கொண்ட விடுதலை உணர்வுமே காரணமாகும்.




மறக்க முடியாத ஜுலைகள்.

மறக்க முடியாத ஜுலைகள்.


யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.
http://meenakam.com/wp-content/uploads/2010/07/23.jpg
1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலர்றறில் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.

1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே அது.

“கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.

கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

 கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு


ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த​ாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை

கட்டுநாயக்கா வான்படைத்தாக்குதல் 24-ஜீலை-2001

 

கட்டுநாயக்கா வான்படைத்தாக்குதல் 24-ஜீலை-2001




1983 ஜீலை 23,24
ல் கொழும்பில்
தமிழர் மீதான
வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர்
படுகொலை செய்யப்பட்டனர் .
இதன்
பாதிப்புக்கள்
அனைவருக்கும்
தெரியும் . 2001
இல் இதேநாளில்
ஜீலை 24 ல்
கொழும்பில்
அரசு துடிதுடித்தது.
கட்டுநாயக்கா விமானப்
படைத்தளத்
தாக்குதல்
ஜூலை 24, 2001
அன்று விடுதலைப்புலிகளின்
14
தற்கொடைப்படை உறுப்பினர்களால்
நடத்தப்பட்ட
இலங்கையின்
வரலாற்றில் மிக
முக்கியமான
தாக்குதல்
ஆகும் .

கரும்புலிகளின் வரலாறு பகுதி 2


 
 

“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”

தலைவர் பிரபாகரன்


விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள் தான் July 05 கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
கரும்புலி கப்டன் மில்லர்
“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியான வடமராட்சியைக் கைப்பற்ற 1987 இன் நடுப்பகுதியில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.

கரும்புலிகளின் வரலாறு 1




ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.

இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கி

உயிர்த் தியாகத்தின் பிரசவம் எல்லாளன்!

தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் திரைப்படம் இன்று அனைவராலும் பேசப்படுகின்றது. இது திரைப்படம் என்பதைவிட உயிர்த்தியாகத்தின் பிரசவம் என்றே கூறலாம். எவ்வளவோ தடைகள் இழப்புக்கள் மத்தியில் இத்திரைப்படம் மக்களின் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் கற்பனையின்றி உயிரோட்டம் மிக்கதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


எல்லாளன் திரைப்படம் தொடர்பாக அதன் ஒளிப்பதிவு இயக்குநர் சந்தோஷ் தெரிவிக்கையில், உரிமைகளையும் உடைமைகளையும் உறவுகளையும் இழந்து உலகமெங்கும் சிதறிக்கிடக்கும் எம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். 27.10.2007 அன்று அனுராதபுரம் வான்படைத் தளம் மீதான தாக்குதல் நடவடிக்கையின் பதிவுதான் இந்த எல்லாளன் திரைப்படம். 2008 ஜனவரி மாதம் எல்லாளன் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று முடிவுசெய்து என்னைத் தெரிவுசெய்தனர்.

கரும்புலி கப்டன் மில்லர் (முதலாவது கரும்புலி)

05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது !

Black Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.

முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி 10-05-1973 - 16-08-1994




10-05-1973 - 16-08-1994



கடலன்னையின் பெண் குழந்தை

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன்

கரும்புலிகள் நாள் *JULY 05



விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள் தான் July 05 கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.


கரும்புலி கப்டன் மில்லர்
“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியான வடமராட்சியைக் கைப்பற்ற 1987 இன் நடுப்பகுதியில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது.

பிரிகேடியர் விதுர்சா அக்கா அவர்களின் வீர வரலாறு...


பிரிகேடியர் விதுர்சா அக்கா அவர்களின் வீர வரலாறு...

 
பிரிகேடியர் விதுர்சா
கந்தையா ஞானபூரணி
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில்:29.09.1969
மண் மடியில்:04.04.2009

விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது.
குருக்கள் கந்தையா, ஞனாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார்.

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு 04-APR-2009

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு



வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.
அதன் நினைவுகளை மீட்டிப்பார்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் நெருப்பாற்று தாக்குதல்கள் தீச்சுவாலைகளுக்கும் மத்தியில் இடம்பெற்றன.

பிரிகேடியர் தீபன் (04-APR-2009)

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌


பிரிகேடியர் தீபன்
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.
வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.
புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.

நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன்





2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 4 ம் திகதி நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இந்திய – இலங்கை இராணுவம் கோழைத்தனமாக நச்சு குண்டு வீசி படுகொலை செய்தனர். இதில் வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள்.
வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம்.
அன்று 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் இறுதி நாட்கள் ஆனந்தபுர மண்ணில் அக்கினி சுவாலைமூண்ட தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன இவ்வாறான தாக்குதல்களுக்கு விடுதலைப்புலிகளின் போராளிகளை

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner