பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
மொபைல் போன் வைரஸ்
கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அளவிற்கு மொபைல் போன் வைரஸ் தாக்கமும் பரவலும் இல்லை என்றாலும் அவை குறித்து அறிந்து கொள்வது நல்லது.
முன் கூட்டியே நம் மொபைல் போன்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். செல் போன் வைரஸ்கள் தன்மை மற்றும் அவை எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கு பார்க்கலாம்.
மொபைல் வைரஸ் – சில அடிப்படைக் கூறுகளும் பரவும் விதமும்
மொபைல் போனில் பரவும் வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம் போலவே தேவையற்ற ஒரு எக்ஸிகியூட்டபிள் பைல் ஆக வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. ஒரு சாதனத்தைக் கைப்பற்றிப் பின் மற்ற சாதனங்களுக்கு அதன் காப்பியை அனுப்பும் வழியையே இந்த வைரஸும் பின்பற்றுகிறது. கம்ப்யூட்டர் வைரஸ் இமெயில் அட்டாச்மெண்ட் மற்றும் இன்டர்நெட் டவுண்லோட் புரோகிராம் வழியாகப் பரவுகின்றன. மொபைல் போன் வைரஸும் இன்டர்நெட் டவுண்லோட் பைலுடன் வருகிறது; எம்.எம்.எஸ். மெசேஜ் இணைந்து பரவுகிறது; புளுடூத் வழி பைல்களை மாற்றுகையில் உடன் செல்கிறது. பெரும்பாலும் கம்ப்யூட்டருடன் பைல்களை பரிமாறிக் கொள்கையில் மொபைல் போன்களுக்கு வைரஸ்கள் பரவி வந்தன. இப்போது மொபைல் போன் களுக்கிடையேயும் பைல் பரிமாற்றத்தின் போது பரவி வருகின்றன.
இந்த வகை பரவல் பெரும்பாலும் சிம்பியன் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கிடையே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுக்கென தயாரித்து பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள போன்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
வைரஸ் பாதிக்கப்பட்ட மொபைல் போன்களில், வைரஸ்கள் கேம்ஸ், செக்யூரிட்டி பேட்ச், கூடுதல் வசதி தரும் ஆட் ஆன் புரோகிராம், பாலியியல் படங்கள் போலக் காட்சி அளிக்கின்றன. சில வைரஸ்கள் போனுக்கு வந்திருக்கும் மெசேஜ் டெக்ஸ்ட்டின் தலைப்பு வரிகளைத் திருடி, அவற்றையே தங்கள் தலைப்பாகவும் வைத்துக் கொள்கின்றன. இதனால் நாம் அவற்றைத் திறக்க ஆர்வம் காட்டுவோம். ஆனால் மெசேஜைத் திறப்பதனால் உடனே வைரஸ் நம் போனை முடங்கச் செய்துவிடும் வாய்ப்புகளும் நூறு சதவிகிதம் இல்லை. அந்த மெசேஜ் உடன் வந்திருக்கும் வேறு இணைப்பு பைலைத் திறந்தால் தான் வைரஸ் தன் வேலையைக் காட்டும். இது போன்ற பரவும் வழிகளில், போன் பயன்படுத்துபவர் தானாக ஒன்று அல்லது இரண்டு முறை மெசேஜ் இயக்க அழுத்த வேண்டியதிருக்கும். பொதுவாக போன் அழைப்புகளை ஏற்படுத்தவும் பெறவும் மட்டுமே பயன்படும் மொபைல்களில் அவ்வளவாக வைரஸ்கள் பரவுவதில்லை.
2004 ஆம் ஆண்டில் Cabir A என்ற வைரஸ் முதல் முதலாகத் தலை காட்டியது. புளுடூத் வழி பரவிய இந்த வைரஸ் பெரும்பாலும் எந்தவித பாதிப்பையும் தான் பரவிய மொபைல் போன்களில் காட்டவில்லை. மால்வேர் புரோகிராம்களைத் தயாரிக்கும் ஒரு சிலர் இது போல் மொபைல் போன்களுக்கும் வைரஸ்களை அனுப்ப முடியும் என்று காட்டுவதற்காகவே இதனைத் தயாரித்தனர்.
ஜனவரி 2005ல், Commwarrior வைரஸ் மிகப் பெரிய அளவில் பரவியது. புளுடூத் மூலமாக ஸ்கேண்டிநேவியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் அனைத்து மொபைல் போன்களுக்கும் பரவியது. ஏதேனும் ஒரு மொபைல் போனில் இந்த வைரஸ் அமர்ந்தவுடன் அருகில் உள்ள புளுடூத் இயக்கப்பட்ட அனைத்து போன்களையும் இது தேடி ஒட்டிக் கொள்கிறது. மேலும் உங்கள் அட்ரஸ் லிஸ்ட்டில் உள்ள அனைத்து எண்களுக்கும் மெசேஜ் அனுப்பி அதன் மூலமும் பரவுகிறது.இதுவரை வந்த மொபைல் வைரஸ்களில் இதுதான் இரு வழிகளில் பரவி அதிக சேதம் விளைவிக்கும் வைரஸாக உருவெடுத்துள்ளது.
பாதுகாத்துக் கொள்வது எப்படி?
எப்படி கம்ப்யூட்டர்களை அவற்றின் வைரஸ்களில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறோமோ, அதே போல மொபைல் போன்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
எப்போதும் ஒரு செய்தியைத் தாங்கி வரும் பைலையோ, புளுடூத் மூலம் வரும் பைலையோ, அதனை அனுப்பியவர், அல்லது புறப்பட்ட எண் நமக்குத் தெரியாத எண்ணாக, பழக்கம் இல்லா எண்ணாக இருந்தால், அந்த பைலைத் திறக்கக் கூடாது. நம் அவசரத்தில் இதனை எப்போதும் கவனமாகக் கொள்ள வேண்டும். அதிக முன்னெச்சரிக்கை யாக உள்ளவர்கள் கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டு, வைரஸ் பைல்களைத் திறந்துவிடும் நிகழ்ச்சிகள் நிறைய நடக்கின்றன.
புளுடூத் செயல்பாட்டினை மறைத்தே வைக்கவும். இயக்க வேண்டாம். அதனை "hidden" என்ற வகையிலேயே வைக்கவும். இதனால் மற்ற மொபைல் போன்களின் புளுடூத் வலையில் இது சிக்காது. இந்த செட்டிங்ஸை புளுடூத் ஆப்ஷன் திரையில் நீங்கள் காணலாம்.
செக்யூரிட்டி அப்டேட் பைல்களை, உங்கள் சிஸ்டம் பைல்களுக்கேற்ப, நிறுவனங்கள் அனுப்புகின்றன. இந்த பேட்ச் பைல்கள், வைரஸ் கொண்ட பைல்கள் எப்படிப்பட்ட பைல் பெயர்களில் வருகின்றன என்று பட்டியல் தருகின்றன. இவற்றைத் தெரிந்து வைத்து, அத்தகைய பைல்களைத் தவிர்க்கவும். FSecure, McAfee, Symantec ஆகியவற்றின் இணைய தளங்களுக்குச் சென்றால் இந்த பைல்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் சில தளங்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிந்து வைத்தால், இவை மொபைல் வைரஸ் மற்றும் பிற தகவல்களைத் தொடர்ந்து அனுப்புகின்றன.
பல நிறுவனங்கள் மொபைல் போன் பாதுகாப்பிற்கென செக்யூரிட்டி சாப்ட் வேர்களைத் தயாரித்து வழங்குகின்றன. பெரும்பாலானவை இலவசங்களே. சில கூடுதல் வசதிகளுக்குக் கட்டணம் செலுத்தச் சொல்கின்றன. இவை வைரஸ்களை நீக்குகின்றன. வைரஸ் நுழைந்துவிடாமல் மொபைல் போன் களைப் பாதுகாக்கின்றன. சிம்பியன் சிஸ்டம் தயாரித்து வழங்கும் நிறுவனம், தன் சிஸ்டத்தில் புளுடூத் மூலம் வரும் வைரஸ் பைல்களைத் தடுக்கும் புரோகிராம் ஒன்றைத் தயாரித்து வழங்குகிறது.
மேலே தரப்பட்ட தகவல்களிலிருந்து எப்படி முதலில் வந்த வைரஸ் புரோகிராமிற்குப் பின் வந்த வைரஸ்கள், தங்கள் வடிவமைப் பிலும், மேற் கொள்ளும் சேத வழிகள் மற்றும் சேதங்களிலும் முன்னேறியுள்ளன என்று பார்க்க முடிகிறது. இப்போதைக்கு பெரும் அளவில் மொபைல் போன்களை இந்த வைரஸ் புரோகிராம்கள் போன்களைக் கெடுக்க வில்லை என்றாலும் வரும் நாட்களில் இவற்றின் தீவிரம் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன் மூலம் வங்கி பணப் பரிமாற்றம் எல்லாம் மேற்கொள்ளப் போகும் சூழ்நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment