-->

26-DECEMBER-2009

26-DECEMBER-2004 அன்று ஆசிய கண்டத்தில் சுமார் 13 நாடுகளைதாக்கி,2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை பலிகொன்று, பல மில்லியன் மக்களின் வாழ்வாதாரம்,கோடிக்கணக்கான சொத்துக்களை தாக்கி அழித்த ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகிறது. இவ்அனர்த்தத்தில் வரலாற்றிலேயே அதிக அளவு மக்களை பலிகொண்ட இயற்கை அனர்த்தமாக இது பதிவுசெய்யப்பட்டது. ஒரு சில மணித்தியாலத்தில் அத்தனை மனித உயிர்களையும் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.
இறந்த மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்
இன்று
26-DECEMBER-2009

செல்பேசியில் இணையம்

செல்பேசியின் மூலம் அதிவேகமாக இணையம் உபயோகிக்க
செல்பேசியில் இணையத்தை உபயோகிப்பதை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். ஆனால் செல்பேசியில் இணையத்தை உபயோகிப்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன.முக்கியமாக அதன் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். அனைத்து முகவரிகளையும் பார்க்க இயலாது. இந்த குறைகளை போக்குவதற்கு என்றே தயாரிக்கப்பட்டது தான் ஒபோரா மினி என்னும் மென்பொருள். இதன் மூலம் நீங்கள் கணினியில் அப்படி இணையத்தை பயன்படுத்துகிறீர்களோ அதை போலவே உங்கள் செல்பேசியிலும் உபயோகிக்கலாம். கீழே உள்ள முகவரிக்குச் சென்று உங்கள் செல்பேசியின் நிறுவனத்தை (model) தேர்வு செய்து தரவிக்கம் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் கணினி நேரடியாக தரவிறக்கம் செய்து விட்டு பின்பு உங்கள் செல்பேசிக்கு cable அல்லது bluetooth மூலமாக upload செய்து உபயோகியுங்கள்

கைபேசி வைரஸ்

மொபைல் போன் வைரஸ் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அளவிற்கு மொபைல் போன் வைரஸ் தாக்கமும் பரவலும் இல்லை என்றாலும் அவை குறித்து அறிந்து கொள்வது நல்லது. முன் கூட்டியே நம் மொபைல் போன்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். செல் போன் வைரஸ்கள் தன்மை மற்றும் அவை எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கு பார்க்கலாம். மொபைல் வைரஸ் – சில அடிப்படைக் கூறுகளும் பரவும் விதமும் மொபைல் போனில் பரவும் வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம் போலவே தேவையற்ற ஒரு எக்ஸிகியூட்டபிள் பைல் ஆக வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. ஒரு சாதனத்தைக் கைப்பற்றிப் பின் மற்ற சாதனங்களுக்கு அதன் காப்பியை அனுப்பும் வழியையே இந்த வைரஸும் பின்பற்றுகிறது. கம்ப்யூட்டர் வைரஸ் இமெயில் அட்டாச்மெண்ட் மற்றும் இன்டர்நெட் டவுண்லோட் புரோகிராம் வழியாகப் பரவுகின்றன. மொபைல் போன் வைரஸும் இன்டர்நெட் டவுண்லோட் பைலுடன் வருகிறது; எம்.எம்.எஸ். மெசேஜ் இணைந்து பரவுகிறது; புளுடூத் வழி பைல்களை மாற்றுகையில் உடன் செல்கிறது. பெரும்பாலும் கம்ப்யூட்டருடன் பைல்களை பரிமாறிக் கொள்கையில் மொபைல் போன்களுக்கு வைரஸ்கள் பரவி வந்தன. இப்போது மொபைல் போன் களுக்கிடையேயும் பைல் பரிமாற்றத்தின் போது பரவி வருகின்றன. இந்த வகை பரவல் பெரும்பாலும் சிம்பியன் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கிடையே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுக்கென தயாரித்து பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள போன்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. வைரஸ் பாதிக்கப்பட்ட மொபைல் போன்களில், வைரஸ்கள் கேம்ஸ், செக்யூரிட்டி பேட்ச், கூடுதல் வசதி தரும் ஆட் ஆன் புரோகிராம், பாலியியல் படங்கள் போலக் காட்சி அளிக்கின்றன. சில வைரஸ்கள் போனுக்கு வந்திருக்கும் மெசேஜ் டெக்ஸ்ட்டின் தலைப்பு வரிகளைத் திருடி, அவற்றையே தங்கள் தலைப்பாகவும் வைத்துக் கொள்கின்றன. இதனால் நாம் அவற்றைத் திறக்க ஆர்வம் காட்டுவோம். ஆனால் மெசேஜைத் திறப்பதனால் உடனே வைரஸ் நம் போனை முடங்கச் செய்துவிடும் வாய்ப்புகளும் நூறு சதவிகிதம் இல்லை. அந்த மெசேஜ் உடன் வந்திருக்கும் வேறு இணைப்பு பைலைத் திறந்தால் தான் வைரஸ் தன் வேலையைக் காட்டும். இது போன்ற பரவும் வழிகளில், போன் பயன்படுத்துபவர் தானாக ஒன்று அல்லது இரண்டு முறை மெசேஜ் இயக்க அழுத்த வேண்டியதிருக்கும். பொதுவாக போன் அழைப்புகளை ஏற்படுத்தவும் பெறவும் மட்டுமே பயன்படும் மொபைல்களில் அவ்வளவாக வைரஸ்கள் பரவுவதில்லை. 2004 ஆம் ஆண்டில் Cabir A என்ற வைரஸ் முதல் முதலாகத் தலை காட்டியது. புளுடூத் வழி பரவிய இந்த வைரஸ் பெரும்பாலும் எந்தவித பாதிப்பையும் தான் பரவிய மொபைல் போன்களில் காட்டவில்லை. மால்வேர் புரோகிராம்களைத் தயாரிக்கும் ஒரு சிலர் இது போல் மொபைல் போன்களுக்கும் வைரஸ்களை அனுப்ப முடியும் என்று காட்டுவதற்காகவே இதனைத் தயாரித்தனர். ஜனவரி 2005ல், Commwarrior வைரஸ் மிகப் பெரிய அளவில் பரவியது. புளுடூத் மூலமாக ஸ்கேண்டிநேவியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் அனைத்து மொபைல் போன்களுக்கும் பரவியது. ஏதேனும் ஒரு மொபைல் போனில் இந்த வைரஸ் அமர்ந்தவுடன் அருகில் உள்ள புளுடூத் இயக்கப்பட்ட அனைத்து போன்களையும் இது தேடி ஒட்டிக் கொள்கிறது. மேலும் உங்கள் அட்ரஸ் லிஸ்ட்டில் உள்ள அனைத்து எண்களுக்கும் மெசேஜ் அனுப்பி அதன் மூலமும் பரவுகிறது.இதுவரை வந்த மொபைல் வைரஸ்களில் இதுதான் இரு வழிகளில் பரவி அதிக சேதம் விளைவிக்கும் வைரஸாக உருவெடுத்துள்ளது. பாதுகாத்துக் கொள்வது எப்படி? எப்படி கம்ப்யூட்டர்களை அவற்றின் வைரஸ்களில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறோமோ, அதே போல மொபைல் போன்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம். எப்போதும் ஒரு செய்தியைத் தாங்கி வரும் பைலையோ, புளுடூத் மூலம் வரும் பைலையோ, அதனை அனுப்பியவர், அல்லது புறப்பட்ட எண் நமக்குத் தெரியாத எண்ணாக, பழக்கம் இல்லா எண்ணாக இருந்தால், அந்த பைலைத் திறக்கக் கூடாது. நம் அவசரத்தில் இதனை எப்போதும் கவனமாகக் கொள்ள வேண்டும். அதிக முன்னெச்சரிக்கை யாக உள்ளவர்கள் கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டு, வைரஸ் பைல்களைத் திறந்துவிடும் நிகழ்ச்சிகள் நிறைய நடக்கின்றன. புளுடூத் செயல்பாட்டினை மறைத்தே வைக்கவும். இயக்க வேண்டாம். அதனை "hidden" என்ற வகையிலேயே வைக்கவும். இதனால் மற்ற மொபைல் போன்களின் புளுடூத் வலையில் இது சிக்காது. இந்த செட்டிங்ஸை புளுடூத் ஆப்ஷன் திரையில் நீங்கள் காணலாம். செக்யூரிட்டி அப்டேட் பைல்களை, உங்கள் சிஸ்டம் பைல்களுக்கேற்ப, நிறுவனங்கள் அனுப்புகின்றன. இந்த பேட்ச் பைல்கள், வைரஸ் கொண்ட பைல்கள் எப்படிப்பட்ட பைல் பெயர்களில் வருகின்றன என்று பட்டியல் தருகின்றன. இவற்றைத் தெரிந்து வைத்து, அத்தகைய பைல்களைத் தவிர்க்கவும். FSecure, McAfee, Symantec ஆகியவற்றின் இணைய தளங்களுக்குச் சென்றால் இந்த பைல்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் சில தளங்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிந்து வைத்தால், இவை மொபைல் வைரஸ் மற்றும் பிற தகவல்களைத் தொடர்ந்து அனுப்புகின்றன. பல நிறுவனங்கள் மொபைல் போன் பாதுகாப்பிற்கென செக்யூரிட்டி சாப்ட் வேர்களைத் தயாரித்து வழங்குகின்றன. பெரும்பாலானவை இலவசங்களே. சில கூடுதல் வசதிகளுக்குக் கட்டணம் செலுத்தச் சொல்கின்றன. இவை வைரஸ்களை நீக்குகின்றன. வைரஸ் நுழைந்துவிடாமல் மொபைல் போன் களைப் பாதுகாக்கின்றன. சிம்பியன் சிஸ்டம் தயாரித்து வழங்கும் நிறுவனம், தன் சிஸ்டத்தில் புளுடூத் மூலம் வரும் வைரஸ் பைல்களைத் தடுக்கும் புரோகிராம் ஒன்றைத் தயாரித்து வழங்குகிறது. மேலே தரப்பட்ட தகவல்களிலிருந்து எப்படி முதலில் வந்த வைரஸ் புரோகிராமிற்குப் பின் வந்த வைரஸ்கள், தங்கள் வடிவமைப் பிலும், மேற் கொள்ளும் சேத வழிகள் மற்றும் சேதங்களிலும் முன்னேறியுள்ளன என்று பார்க்க முடிகிறது. இப்போதைக்கு பெரும் அளவில் மொபைல் போன்களை இந்த வைரஸ் புரோகிராம்கள் போன்களைக் கெடுக்க வில்லை என்றாலும் வரும் நாட்களில் இவற்றின் தீவிரம் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன் மூலம் வங்கி பணப் பரிமாற்றம் எல்லாம் மேற்கொள்ளப் போகும் சூழ்நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Mobile + Opera

நாம் பெரும்பாலும் ஒபேரா மினி இணைய உலாவியின் நான்காம் பதிப்பைத்தான் உபயோகித்து வருவோம். ஒபேரா இப்போது அதன் ஐந்தாம் பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. இது அதிக வசதிகளுடன் மேம்படுத்த்தப் பட்டு உள்ளது.

உங்களிடம் ஒபேரா மினி பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்புக்கு மாறி கொள்ளுங்கள். இது பெரும்பாலான மொபைல்களில் நன்றாக வேலை செய்கிறது.

அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்

1. இது பழைய பதிப்பிலிருந்து முற்றிலும் மாற்றுபட்டது. தொடுதிரை (touchscreen) மொபைல்களை ஆதரிக்கிறது.

2. கணினி இணைய உலாவிகளை போன்று டேப்(Tabs) வசதிகளை கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் பல இணைய பக்கங்களை திறந்து கொள்ள முடியும். மாறி கொள்ள முடியும்.

3. ஸ்பீட் டயல் வசதி மூலம் நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை முகப்பில் சேமித்து வைத்து கொண்டு அணுக முடியும்.

4. பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் உங்கள் லாகின் பாஸ்வோர்ட் , பெயரையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் ஒரு இணைய பக்கத்துக்கு செல்லும் போது மீண்டும் மீண்டும் பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டிய தொந்தரவு இல்லை.

5. முன்பெல்லாம் மொபைலில் இணைய பக்கத்தில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்வது இயலாத காரியம். இப்போது இந்த பதிப்பில் அதனை செய்யலாம். இணைய பக்கத்தில் உள்ள வாசகங்களை காப்பி செய்து மற்ற மொபைல் அப்ப்ளிகேஷன்களில் பேஸ்ட் செய்து உபயோகிக்கலாம்.

இதிலும் தமிழ் இணையபக்கங்கள் நன்றாக தெரிகின்றன. அந்த வசதியை எப்படி கொண்டு வருவது என அறிந்து கொள்ள இந்த இடுகையை பார்க்கவும். மொத்தத்தில் இந்த பதிப்பு மூலம் ஒபேரா தான்தான் இன்னும் மொபைல் இணைய உலாவிகள் சந்தையில் மாகாராஜா என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது. மொபைலில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் இந்த ஒபேரா மினி பீட்டா பதிப்பை கட்டாயம் சோதித்து பாருங்கள்.

கணிணி இணையம்

பிரவுசர் போட்டியில் பல்வேறு புதிய வசதிகளுடன் எப்போதும் ஆப்பரா அறிமுகமாகும். இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்ல.

ஆனால், இன்று பிரவுசர்களில் அதிகம் பேசப்படும் பல புதிய வசதிகளை ஆப்பரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணைய பக்கங்களில் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பம் போன்ற புதிய வரைமுறைகள் ஆகியவற்றை ஆப்பரா தான் முதலில் கொண்டு வந்தது. இதே போல் இப்போது வெளியிடப்பட்ட பிரவுசரிலும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

ஆப்பரா தனக்கென பல வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் ஆப்பராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஆப்பரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக்கும். இதன் சிறப்புகளை இங்கு பட்டியலிடலாம். முதலில் இதன் வேகத்தைக் கூற வேண்டும். இது செயல்படும் தன்மை முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. சூப்பர் பாஸ்ட் என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன்னால் வந்த பதிப்பு 9.6 பதிப்பைக் காட்டிலும் 40% வேகம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மற்றபடி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பாப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ். ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில் பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் மெயில் வசதி உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் பி.ஓ.பி. 3 மெயில்களை இந்த பிரவுசர் மூலமாகவே கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு.

இதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக் காட்சியினை ஒரு தம்ப்நெயில் படமாக அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு புதிய உத்தி ஆகும். இதற்கு முன் கர்சரை அந்த டேப்பின் மேலாகக் கொண்டு செல்கையில் மட்டும் இந்த படம் தெரியும். மேலும் இவை அமைந்துள்ள டேப் பாரின வலது இடதாக இழுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

அடுத்த சிறப்பு இதன் ஸ்பீட் டயல் வசதியாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத்துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப் நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அப்போது அதனைக் கிளிக் செய்து, தளத்திற்குச் செல்லலாம். இந்த வசதி டிபால்ட்டாகக் கிடைக்கிறது.

இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி இதிலுள்ள இன் – லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குகளை அமைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் புதுமையாக ஆப்பரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும்போது, இந்த தொழில் நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணைய தளங்களை ஆப்பராவின் சர்வர்களில் கம்ப்ரைஸ் செய்து பின் தருகிறது. இதனால் டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும் நமக்குப் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர இணையப் பக்கங்களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆப்பரா தந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவுசரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக்கப்படும். இந்த வசதியை ஆப்பரா பிரவுசர் தரவில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம். வேண்டாதவர்கள் தாராளமாக ஒரு முறை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் இதனையே வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு ஆப்பரா பிரவுசர் தேவை என்றால் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குமான பைல் இங்கு இலவசமாகக் கிடைக்கிறது.

இணையம்+தொலைக்காட்சி

உங்களால் நம்பமுடியவில்லையா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கணினி வேலைகளை செய்வதற்கு கம்ப்யூட்டருக்கு தனி எல்.சி.டி மானிட்டரும், டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு தனி எல்.சி.டி மானிட்டரும் வைத்து இடத்தை அடைத்துக் கொண்டிருப்போம்.

இனி அந்த தொல்லை இல்லை.டிவியையும் பார்த்துக்கொண்டு,கணினி வேலைகளையும் செய்து கொள்ள வசதியாக கொரியா நாட்டை சேர்ந்த எல்ஜி நிறுவனம் உலகத்திலேயே முதல் முறையாக எல்.சி.டி.டி.வி மானிடரை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நாம் தனியாக FULL HD வசதியுள்ள எல்.சி.டி டிவி வாங்கவேண்டுமென்றால் குறைந்தது 35,000 ரூபாய் என்ற விலையில் வாங்க வேண்டும். ஆனால் எல்.ஜி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த மானிடர் 12,990 என்ற ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. அதிலும் FULL HD தொழில்நுட்பம் கொண்ட மானிடர்கள் 15,750 என்ற விலையிலேயே கிடைக்கிறது.

சரி இந்த டிவியில் படம் பார்த்துக்கொண்டே கணினி வேலைகளை எப்படி செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.அதற்கு நீங்கள் இந்த படத்தை பாருங்கள்.

கணிணியில் கோப்புக்கள்

கோப்புகளை சேமித்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கமான ஒன்றுதான். விண்டோஸ்சில் இது எளிதான வேலை அல்ல. நீண்ட நேரம் பிடிக்கும். ஆனாலும் தெளிவான முடிவுகளை தருமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

விண்டோஸ்சில் கோப்புகளை தேடுவதற்கு என்று ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது. சில நொடிகளில் சரியான முடிவுகளை தந்து விடும். நன்றாக வேலை செய்கிறது. மேம்படுத்த பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால் கண் இமைக்கும் நேரத்தில் முடிவுகளை தருவதாக அதை வடிவமைத்தவர் தெரிவிக்கிறார்.

முதலில் உபயோகிக்கும் போது கோப்புகளை இன்டெக்ஸ் செய்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். அப்புறம் மின்னல் வேகம்தான். இதை பற்றி மேலும் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

இங்கே சென்று தரவிறக்கி உபயோகித்து பாருங்கள். நீங்களே இதன் வேகத்தை உணருவீர்கள்.

WINDOWS 7

மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.

புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.

விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். இதனைச் சோதனைக்கென பயன்படுத்திப் பார்த்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.

அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது. இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.

நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன. இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1. இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.

2. 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.

3.ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.

4. ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.

5. நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

6.ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.

7. மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.

8. விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

9. விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது. விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.

இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.

மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.

விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது

கணிணியில் தகவல்கள்

கம்ப்யூட்டரில் பைல்களைத் தொடர்ந்து எழுதுவதும் அழிப்பதுவுமாக இருக்கையில் அவை தொடர்ச்சியாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படுவதில்லை.

ஏனென்றால் அவ்வப்போது பைல்களை அழிக்கையில் ஏற்படும் வெற்றிடங்கள் தொடர்ச்சியாக அடுத்த பைலுக்குக் கிடைப்பதில்லை. இதனைச் சரி செய்திடத்தான் விண்டோஸ் நமக்கு டிபிராக் (‘Defrag’) என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது.

இதன் மூலம் துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படும் புரோகிராம்கள் மீண்டும் ஓரளவிற்குத் தொடர்ச்சியாக எழுதப்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்ட பின் இந்த பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து படிப்பது விரைவாக நடக்கிறது. எனவே இந்த டிபிராக் செயல்பாட்டினை நாம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் வெற்றிடங்கள் சிதறலாக இல்லாமல் தொடர்ச்சியாக நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒரு முறை டிபிராக் செய்திட கம்ப்யூட்டர் பிராசசரின் வேகம் மற்றும் ஏற்கனவே பைல்கள் ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது சில வேளைகளில் நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் இருக்கும். அந்நேரத்தில் நம்மால் வேறு எந்த வேலையையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியாது.

இவ்வாறு இல்லாமல், எப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படாமல், பைல்கள் எதுவும் எழுதப்படாமல் இருக்கும் நேரத்தில், பின்னணியில் இந்த டிபிராக் செயல்பாடு தானாகவே மேற்கொள்ளப்பட்டால் எப்படி இருக்கும். முதலில் நமக்கு நேரம் மிச்சமாகும். இரண்டாவதாக டிபிராக் உடனுடக்குடன் செய்யப்படுவதால் புரோகிராம்களையும் பைல்களையும் இயக்குவது வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப்படும்.

இந்த வேலையைத்தான் Smart Defrag செய்கிறது. இது ஒரு இலவசமாக டவுண்லோட் செய்யப்படக் கூடிய புரோகிராம். இதனைப் பதிந்துவிட்டால் எப்போதெல்லாம் உங்கள் கம்ப்யூட்டர் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கிறதோ அப்போதெல்லாம் ஸ்மார்ட் டிபிராக் செயல்பட்டு ஹார்ட் டிஸ்க்கை ஒழுங்கு செய்கிறது. மீண்டும் நீங்கள் கம்ப்யூட்டரில் பணியாற்றத் தொடங்கியவுடன் தற்காலிகமாகத் தன் செயல்பாட்டினை நிறுத்தி வைக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை நிறுத்தும் வரை காத்திருக்கிறது.

பின் மீண்டும் நீங்கள் வேலையை நிறுத்தியவுடன் தன் பணியை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது. இதனால் நாம் கம்ப்யூட்டரை டிபிராக் செய்வது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இந்த புரோகிராமை பின்னணியில் இயங்கச் செய்துவிட்டு நம் இஷ்டப்படி கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருக்கலாம். நம் சிஸ்டமும் ட்யூன் செய்யப்பட்டு எப்போதும் விரைவாகவும் எளிதாகவும் இயங்கும்.

பறக்கும் 4 சக்கர வாகனம்

சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.

அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிணியால் கண்ணுக்கு ஆபத்து

அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.

அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.

பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.

கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.

கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.

GOOGLE CROME

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை.

இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent) தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது.

நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால் கீழுள்ள முகவரில் டவுண்லோட் செய்யுங்கள் . பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம்.

விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மதுபான கடை

இங்கிலாந்து பள்ளி ஒன்றின் மாணவர்கள்,ஆசியர்கள்,பெற்றோர்கள் தினமும் அருகில் உள்ள மதுபானகடைக்கு செல்கிறார்கள் என்றால் நம்புகிறீர்களா ஆனால் உண்மை.
படியுங்கள் மிகுதி விபரத்தை

அழைத்து செல்வதே ஆசிரியர் தான் ஆம் சிறிய பள்ளியின் பெயர் ஸ்டோக் ப்ரூயர்ன்.
டோவ்செஸ்டர் நகரில் உள்ளது.39 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்.
உணவக வசதி இல்லை.மதுபான கடையில் வசதி இருக்கிறது இதனாலே அழைத்துச் செல்கிறார்கள்.உணவு ருசியாக இருப்பதால் பெற்றோர்களும் வருகிறார்கள்.நல்ல விடயம் தானே
COPY
NEWS
Mon 11/12/2009

v.rosu

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner