தலையெனவே காத்துநின்றெம் தலைவனாகினாய் - விடு
தலையதனை உதயமாக்கும் இரவியாகுவாய்
அலையெனவே மறத்தமிழர் திரண்டு நிற்கிறோம் - உம்
அடுத்த அடி வெற்றிக் கொடி சூளுரைக்கிறோம்
சிறுவயதில் ஏசுவாக கொடுமைகள் கண்டாய் - பின்
வீறு கொண்டு சிவகுருவாய் எதிரியழித்தாய்
இடையினிலே புத்தனாக சாந்தம் உடுத்தினாய் - இனி
கடைசியிலே கொள்ளும் அவதாரம் என்னவோ?
களத்தினிலே உம்முருவாய் வீரர் போரிட -சிங்
களத்தவர்கள் கதறியோடும் காட்சி நாம் கண்டோம்
அளப்பெரிய சாதனைகள் நிறைய நிகழ்ந்தன - எமது
இழப்பதனை ஈடுசெய்ய ஈழம் முகிழணும்
உம்மைப் போன்ற தலைவர் யார்க்கும் வாய்த்திடமாட்டார் - எம்
தெம்பைக்கூட்டி உணர்வை ஊட்ட முன்வரமாட்டார்
இம்மையில் நாம் ஈழமெனும் சுவர்க்கம் கண்டிட - நீர்
இருக்கையிலே(யே) ஈழம் கண்டு வளப்படுத்தணும்
அகவையிலே ஐம்பதுகள் தொட்டுவிட்டாலும் - எம்
அக அவையில் துடிப்புமிகு இளவரசர் நீர்
சுகமான சுமை தாங்கும் சூரிய தேவா - நீர்
யுகமாகி புகழோங்க வாழ்ந்திட வேண்டும்