பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல் நடைபெற்றதன் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. இத்தாக்குதலில் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினர் 13பேர் கொல்லப்பட்டனர். இயக்க வளர்ச்சியில் அண்ணனுக்குத் தோள் கொடுத்து உழைத்த மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவித்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். சிறையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள், அரச உதவிபெற்ற சிங்களக் காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
'நான் இறந்தாலும், எனது கண்கள் மற்றொருவருக்குப் பொருத்தப்படவேண்டும். அதன்மூலமாவது, தமிழ் ஈழம் மலர்வதை என் கண்கள் காணவேண்டும்' என்று சொன்ன குட்டிமணியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு நிலத்தில் எறியப்பட்டு சிதைக்கப்பட்டன. கொழும்பு வீதிகள் தோறும் தமிழர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். தமிழ்ப்பெண்கள், சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் இயலாத நினைவு மீட்டல்களோடும், கண்ணீரோடும்... இன்றைய நாளும்... இனத்தின் இன்னல் தீரும்வரையான ஒவ்வொரு நாட்களும்.. தமிழ் இனத்தின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்.
ஒளிப்படத்தில்: செல்லக்கிளி அம்மானுடன், அண்ணன்
0 Comments:
Post a Comment