-->

25,27-ஜீலை-1983 வெலிக்கடசிறையில் படுகொலை செய்யப்பட்டோர்


வெலிக்கடைக்
கொலைச்

சம்பவங்களுக்கு முந்தைய
சில நாட்களில் தீவ்யன''
போன்ற சிங்களப்
பத்திரிகைகளில்
தமிழ்க்
கைதிகள்

கட்டுநாயக்கா வான்படைத்தாக்குதல் 24-ஜீலை-2001





1983 ஜீலை 23,24
ல் கொழும்பில்
தமிழர் மீதான
வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர்
படுகொலை செய்யப்பட்டனர் .
இதன்
பாதிப்புக்கள்
அனைவருக்கும்
தெரியும் . 2001
இல் இதேநாளில்
ஜீலை 24 ல்
கொழும்பில்
அரசு துடிதுடித்தது.
கட்டுநாயக்கா விமானப்
படைத்தளத்
தாக்குதல்
ஜூலை 24, 2001
அன்று விடுதலைப்புலிகளின்
14
தற்கொடைப்படை உறுப்பினர்களால்
நடத்தப்பட்ட
இலங்கையின்
வரலாற்றில் மிக
முக்கியமான
தாக்குதல்
ஆகும் .
கட்டுநாயக்கா விமானப்
படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச
விமான நிலையம்
அமைந்திருந்ததும்
குறிப்பிடத்தக்கது .
தாக்குதல்
நடத்தப்படுவதற்கு ஒரு நாள்
முன்னர் சிங்கள
இசையைக்
கேட்டுக்
கொண்டிருந்த
விடுதலைப்புலிகளின்
உறுப்பினர்கள்
விமான
நிலையத்தின்
அருகிலிருந்த
பூங்காவில்
இருந்தனர்
என்றும்
அவர்கள்
மீது ஏற்பட்ட
சந்தேகத்தினால்
விமான
நிலையத்திற்கு அருகில்
வசித்தவர்கள்
விமான நிலைய
அதிகாரிகளுக்குத்
தகவல்கள்
அளித்தும்
துரிதமான
நடவடிக்கைகள்
எடுக்கப்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது .
பின்னர்
அங்கு அதிகாரிகள்
வந்து பார்க்கும்
பொழுது பூங்காவில்
எவரும்
இருக்கவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது
2001 ஜூலை 23
திங்கட்கிழமை மாலை 8.30
14
கரும்புலிகள்
உறுப்பினர்கள்
ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில்
கூடினர் .
2001 ஜூலை 23
திங்கட்கிழமை மாலை 9:45
மணியிலிருந்து 11:15
அப்பகுதியில்
மின்சார
சேவை தடைப்பட்டது.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30
மணியளவில்
தாக்குதல்
தொடங்கப்பட்டது.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில்
இருந்த 21
படை விமானங்கள்
மற்றும்
பயணிகள்
விமானங்கள்
அழிக்கப்பட்டன.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை காலை 8.30
மணிவரை தாக்குதல்
நீடிக்கப்பட்டது .
தாக்குதலினால்
ஏற்படுத்தப்பட்ட
இழப்புகள்
அழிக்கப்பட்ட
விமானங்கள்
எண்ணிக்கை 28
முற்றிலுமாக
அழிக்கப்பட்டவை
இரண்டு எ (A) - 340
-
300 பயணிகள்
விமானங்கள்
ஒரு எ (A) - 330
-200
பயணிகள்
விமானம்
நான்கு கிபிர்
போர்
விமானங்கள்
மூன்று கெ (K)-8
பயிற்சி விமானங்கள்
இரண்டு எம் .ஜ.ஜி (MIG)
- 27 ஜெட் போர்
விமானங்கள்
இரண்டு பெல்
(bell) 412
உலங்கு வானூர்தி
இரண்டு வி .வி.ஜ.பி (VVIP)
412
உலங்கு வானூர்தி
இரண்டு எம் .ஜ
(MI) -17
உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை
இரண்டு - A-320
பயணிகள்
விமானங்கள்
ஒரு - A-340
பயணிகள்
விமானம்
ஒரு அண்டொனோவ்
(Antonov)
போக்குவரத்து விமானம்
ஒரு எம் .ஜ (Mi) -24
உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell)
412
உலங்கு வானூர்தி
நான்கு கிபிர்
போர்
விமானங்கள்
விடுதலைப்புலிகளால்
நடத்தப்பட்ட
இத்தாக்குதலானது இலங்கையின்
பொருளாதாரத்தில்
வரலாறு காணாத
மாற்றத்தை ஏற்படுத்தியது .
இத்தாக்குதலின்
மூலம் சுமார்
375
மில்லியன்
அமெரிக்க
டாலர்களிற்கும்
அதிகமான
சொத்துக்கள்
அழிக்கப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது

கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

 கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த​ாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.

ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்​.

'தில்லீஸ் குறூப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.

மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.
'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
மாதக் கடைசி. கையில் பணமில்லை.

வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.
அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.

மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.
அந்த 'ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.
எனினும் என்ன பயன்?
எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.
அது திறக்கப்படவில்லை.
மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.
பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.
மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
அவர்களின் பின்னால் 'ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
இராணுவத்தினர் 'ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.
கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.
அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.
அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.
நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.
ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
ஓடினால் 'தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.
நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.
கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.
அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.
சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.
இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
இரவு எட்டு மணியிருக்கும்.
முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.

லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூட​ ிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.

பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.
அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.

இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
பசித்தது.

துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."
அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.

யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.
யாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்

வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல் நடைபெற்றதன் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று



வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல் நடைபெற்றதன் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. இத்தாக்குதலில் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினர் 13பேர் கொல்லப்பட்டனர். இயக்க வளர்ச்சியில் அண்ணனுக்குத் தோள் கொடுத்து உழைத்த மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவித்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். சிறையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள், அரச உதவிபெற்ற சிங்களக் காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

'நான் இறந்தாலும், எனது கண்கள் மற்றொருவருக்குப் பொருத்தப்படவேண்டும். அதன்மூலமாவது, தமிழ் ஈழம் மலர்வதை என் கண்கள் காணவேண்டும்' என்று சொன்ன குட்டிமணியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு நிலத்தில் எறியப்பட்டு சிதைக்கப்பட்டன. கொழும்பு வீதிகள் தோறும் தமிழர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். தமிழ்ப்பெண்கள், சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட​ு,பின் துண்டம் துண்டமாக வெட்டி எறியப்பட்டார்கள். அந்தத் துயர் படிந்த நாட்களையே இன்று உலகம் பூராவும் வாழும் தமிழர்களாகிய நாம் 'கருப்பு ஜூலை' என்று நினைவு கூருகிறோம்.

மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் இயலாத நினைவு மீட்டல்களோடும், கண்ணீரோடும்... இன்றைய நாளும்... இனத்தின் இன்னல் தீரும்வரையான ஒவ்வொரு நாட்களும்.. தமிழ் இனத்தின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்.

ஒளிப்படத்தில்: செல்லக்கிளி அம்மானுடன், அண்ணன்

உயிரம்புகள் கரும்புலிகளை மையப்படுத்திய ஈழகாவியம்

அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவாயுதங்களைக் கொண்டும் அதி நவீன இராணுவ தொழில்நுட்பங்களாலும் உலகையே அச்சுறுத்தும் வல்லாதிக்க சக்திகளைக் கூட அச்சமடையச் செய்திருக்கும், தமிழீழ மக்களின் போரியல் முறைகளில் ஒன்றான உயிராயுதம் தாக்கி இருக்கும், மானுட ஆத்மாவை பிறருக்காய் உவந்தளிக்கும் மகோன்னத தியாகிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமே.. உயிரம்புகள்..! தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிராயுதமாக திகழும் கரும்புலிகளை மையப்படுத்தி ஒரு வலுவான திரைக்கதை அமைத்து நெறிப்படுத்தி - அனைவரும் உட்காச்ந்திருந்து பார்க்கக் கூடிய ஒரு விறுவிறுப்பான திரைப்படமாக உயிரம்புகள் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள். எமது மண்ணின் திரைப்பட வரலாற்றில் உயிரம்புகள் சற்று வித்தியாசமான முயற்சி எனலாம். இதுவரை இதுபோன்றதொரு திரைப்படம் இதுவரை வெளிவரவில்லை. என்ற நிலை இருந்தது. இத்திரைப்படம் மூலம் அக்குறை தீர்ந்துள்ளது என உணரப்படுகிறது. நீண்டகாலப் பெருமுயற்சியின் வெளிப்பாடாகக்கூட இது இருக்கலாம். முதலில் சிறந்த வலுவான கதையை தெரிவு செய்த குழுவிற்குப் பாராட்டு தெரிவிக்க வேண்டும். உயிரம்புகள் மூலம் வீடியோத் திரைப்பட உலகிற்குள் முதன்முதலாக ஊடக இல்லம் நுழைந்துள்ளதும் அவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளதும் பாராட்டுக்குரியது. இவ்வீடியோ திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்து நெறியாள்கை செய்திருக்கும் அல்பேட் பவுலசின் முயற்சி சாதனைக்குரியது. ஏனெனில் ஒரு இளைஞன் தன் வீடியோக் கமரா மூலம் அற்புதங்களை நிகழ்த்தலாம் என்பதற்கு அடையாளமாக உயிரம்புகள் வீடியோத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல், திரைக்கதை இயக்கம் எனப் பல்துறை நிபுணராக நின்று படத்தை வெற்றிகரமாக இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குனர் என நிரூபித்துள்ளார். அது நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியதுதான். சராசரி சினிமா உலகம் அல்லது திரைப்பட உலகம் என்பது விசாலமானது அதற்குள் தாக்குப்பிடிப்பது என்பது கடினமானது தான். இதில் பலர் மூழ்கிப் போனவரலாறுகளே நிறையவுண்டு. இது உலகம் பூராகவும் பொருந்தும். இந்நிலையில் ஈழத்தமிழர்களின் சினிமா என்பது எவ்வளவு கரடுமுரடான பாதைகளால் கடக்கப்பட வேண்டியது என்பது சம்மந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பார்கள். ஆயினும் இந்தக் கடின முயற்சியில் ஈழத்தமிழ்த் திரைப்பட உலகினர் ஈடுபட்டு வருகின்றனர். என்பது பாராட்டுக்குரியது. என்பதோடு இத்தகைய முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்கள் திரைப்பட இரசிகர்கள் போன்றோர் ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்திரைப்பட உலகின் மத்தியில் உண்டு. அந்த வகையில் ஆதரவளிக்கப்பட வேண்டிய திரைப்படம் உயிரம்புகள் ஆகும். இப்போது நாங்கள் உயிரம்புகள் திரைப்படத்தில் மனதில் நின்ற சில காட்சிகள் உங்களையும் கவரும் என்பதற்காக ஒரு சில காட்சிகளைத் தருகின்றேன். சிறிலங்கா இராணுவம் எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பகுதியில் 250 போராளிகள்; சிங்கள் இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கி விடுகின்றனர். இதுகுறித்து படைத்துறைத் தலைமை ஆலோசித்து எதிரியின் முற்றுகைக்குள்ளாகிய போராளிகளை மீட்பதற்கு தாக்குதல் கட்டளைப் பீடத்தில் தந்திரோபாயமான திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கு மூன்று பேர் கொண்ட கரும்புலிகள் அணி தெரிவு செய்து அனுப்பப்பட்டு வெற்றிகரமான தாக்குதல் மூலம் இராணுவமுகாம் அழிக்கப்பட்டு 250 போராளிகளும் காப்பாற்றப்படுகின்றனர். இதுவே திரைப்படத்தின் கரு. படம் தொடங்கி முடியும் வரை விட்டுச் செல்ல முடியாதவாறு விறுவிறுப்புடன் நகர்கிறது. காலையில் அந்தக் கரும்புலிகள் அணி புறப்படுகிறது. அந்த இராணுவ முகாம் மதியம் 12 மணிக்குத் தாக்கப்பட வேண்டுமென இலக்குவைக்கப்படுகிறது. சுமார் 25 கிலோமீற்றர் தூரத்தை இவர்கள் கடக்கவேண்டும் அதற்கு இவர்கள் கால் நடையாகவே நடந்து சென்று எதிரியின் இலக்கை அடைகிறார்கள். காலையில் இருந்து தாக்குதல் இலக்கு விரையும் வரையும் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் படத்திற்கு மெருகூட்டுகின்றன. அந்தக் கரும்புலி அணியில் இடம்பெற்றுள்ள மூவரின் இயல்பான நடிப்பு அனைவர் மனங்களையும் தொட்டுவிடுகின்றது. மூவரும் படத்திற்கு புதிய வரவுகள் தான் ஆயினும் தாங்கள் அறிமுக நடிகர்கள் என்று நம்பமுடியாதவாறு அவர்களின் நடிப்பு உரையாடல்கள் என்பன அமைந்திருக்கின்றன. படத்தில் முக்கியமாகக் கணேஸ்மாமாவைக் குறிப்பிடவேண்டும். அவரது பாத்திரம் எல்லோர் மனங்களிலும் ஒருசுமையை ஏற்படுத்திவிட்டது. கரும்புலிகள் அணி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்து சந்திக்கும் ஆள் கணேஸ்மாமாவே. (அவர் ஒரு நகைச்சுவை நடிகர்) போராளிகளை இராணுவத்திற்குத் தெரியாமல் அழைத்துச் சென்று மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை எடு;த்துக் கொடுப்பதும், ஆயுதங்களை எடுக்க ஆலமர உச்சிக்கு ஏறுவதும், இடையில் களைத்துப் போய் இருப்பதும் ஏலாமல் வீழ்ந்து விடுவாரோ என எண்ணும் நேரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறுவதும் சுவாரசியமான காட்சியாகும். அவர் ஒரு வயது முதிர்ந்த மனிதராக இருந்தபோதும் மனத்துணிவோடு ஏறுவது இந்தப் போராட்டத்தின் மீது கொண்டிருக்கும் உணர்வைக் காட்டுகிறது. ஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் ஒருவர் எவ்வாறு போராளிகளுக்கு உதவுவதும் அது விடுதலை வேட்கையின் வெளிப்பாடாக இருப்பதும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆலமர உச்சியில் மறைந்திருந்த ஆயுதங்களை போராளிகளிடம் கொடுத்துவிட்டு அவர் அடையும் ஆனந்தம் உணர்வாக வெளிப்படுகிறது. கரும்புலி அணி அதனைப் பெற்றுச் செல்வதும் மனதைவிட்டு அகலாதவை. அவரது நடத்தை போராடும் தேசமக்களின் பற்றுணர்வை வெளிக்காட்டும் சம்பவமாகவும் அதுபடத்தைத் தூக்கி நிறுத்தும் காட்சியமைப்பாகவும் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தாக்குதலுக்குத் தயார்படுத்தப்பட்ட கரும்புலிகள் அணியில் இடம்பெற்ற சசி, நிலவன், கீதன் ஆகியோரின் நடிப்பு அற்புதம். தாக்குதலுக்குத் தயாராக மூன்று கரும்புலிகள் படைத்துறைத் தளபதியால் தெரிவு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்போது பெண் கரும்புலிப் போராளிகளில் ஒருவரான சசி பேராடுகிறார். இந்தமுறை எனக்கு அந்த வாய்ப்பை தருவதாகக் கூறினீர்கள் இப்போது ஏன் என்னை விட்டுவிட்டீர்கள் என கூறுகின்றாள். அதற்கு இது சற்றுக் கடினமான பணி நீங்கள் கஸ்ரப்படுவீங்கள் எனக் கூறுகிறார் படைத்தளபதி. அப்போது இல்லை எங்களால் முடியும் தானும் தாக்குதல் அணியில் இடம்பெறப் போவதாக வலியுறுத்தி அதில் இணைந்து கொள்கிறாள். கரும்புலிப் போராளிகள் பயிற்சிப் பாசறையில் மிகவும் மகிழ்ச்சியோடு பயிற்சி பெறுவதும் தேசவிடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்ய தயாராக இருப்பதும் எந்தச் சவால்களைச் சந்திக்கும் திறனுள்ளவர்களாக இருப்பதும் இத்திரைப்படம் மூலம் எம் கண்முன்னே கொண்டு வரப்படுகிறது. கரும்புலி அணிக்குச் சசி தெரிவுசெய்யப்பட்டதுடன் அடையும் மகிழ்ச்சி பெண்களாலும் பெரும் தாக்குதல்களை நடாத்த முடியும் எனவாதிடுவதும் அவரது நடிப்பால் மேலும் வெளிப்படுத்தப்படுகிறது. 250 போராளிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கட்டளைப்பீடத்தின் பணிப்பை நிறைவேற்ற வேகமாக நடந்து ஒரு இடிந்து போன வீட்டில் களைப்பாற நுழைகிறார்கள் அது இராணுவத்தாக்குதலால் சிதறிப்போயிருந்தது. அங்கே கூடிக்கதைக்கிறார்கள். நிலவன் சொல்கிறான் இதுதான் எங்கட வீடு இந்த முற்றத்தில் தான் ஓடி விளையாடுறனாங்கள். ஒரு நாள் விளையாடும் போது தங்கையோடு சண்டை பிடித்து அவள் பல்லுடைந்து போய்விட்டது. அம்மா அடிக்க ஓடிப்போய் இந்த மாமரத்தில ஏறிவிட்டன். என தன் இளமைக்கால வாழ்க்கையை நினைவு கூர்ந்த போது யதார்த்தமாக இருந்தது. அது எல்லோர் வீட்டிலும் நிகழும் ஒரு சம்பவமாக மனக்கண் முன்வந்து மோதியது. இராணுவத் தாக்குதல்களால் வீடு வாசல்களை இழந்து போன ஆயிரமாயிரம் தமிழ்மக்களின் யதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாகவும் அந்தக் காட்சி அமைந்திருக்கிறது. அனைவரையும் நெகிழவைத்தது அதுபோன்ற மரத்தடியில் இருந்து சாத்திரம் பார்ப்பதும் பிஸ்கட் சாப்பிடுவதும் கதை அளப்பதும் என எல்லாம் மனதில் நிற்கின்ற சம்பவங்களாக நம் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. படத்தின் உச்ச கட்டமாக இராணுவத்தின் ஆட்லறித்தளம் முகாம் மீது கரும்புலிகள் அணி தாக்குதலை தொடர்கின்றனர். இந்த வெற்றிகரமான தாக்குதலைக் கண்டு சிங்களப்படை முகாம் கட்டளையதிகாரி துள்ளுவதும், குதிப்பதும் தன் வீரர்களிடம் புலிகளை அழிக்கும் படியும் கூறி கட்டுப்பாட்டுக்குள் வீரவசனம் பேசுவதும் முளிபிதுங்கி பூனைக்குட்டி மாதிரி சுத்தி ஓடுவதும் இறுதியில் சூடு வாங்குவதும் படை முகாம்கள் புலிகளிடம் வீழ்ச்சியடையும் போதும் நடைபெறும் நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக சிங்களத்தில் படையதிகாரி பேசுவது தமிழ் திரைப்படத்திற்கு புதியமுயற்சி வித்தியாசமானதொன்றாக உள்ளது. அது பின்னிணைப்பாக தமிழில் வருகிறது. மொத்தத்தில் படையதிகாரியாக நடிக்கும் பரமநாதனின் நடிப்பு நன்றாகவிருந்தது. இறுதிக்கட்ட தாக்குதல் ஓர் ஆங்கிலப்படம் போன்ற உணர்வை ஏற்படுத்தயது. ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்பைத் தோற்றுவிப்பதாக இருந்தது. சராசரி ஒரு திரைக்கதை என்ன நோக்கில் செல்ல வேண்டுமோ அதுமாதிரி அமைந்திருந்தது. இறுதியில் கரும்புலி அணி இராணுவ முகாமை முற்றுகையிட்டு தகர்த்தழிக்கிறது. நிலவன் வீரச்சாவு அப்போது சசி கீதனிடம் கேட்கிறாள் ஏன் நிலவன் போனவன்? எனக்குத் தானே அந்தச் சந்தர்ப்பம் என்றாள.; ஏன் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இசைப்பிரியனின் இசை படத்தை மெருகூட்டுகிறது. எமது மண்ணின் வாசனையை ஒளிப்பதிவாக்கி தந்த உயிரம்புகள் கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒட்டுமொத்தமாக உயிரம்புகள் திரைப்படம் எமது மண் வரலாற்றில் ஒரு சிறந்த பதிவு. புதிய முயற்சியாக விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் காவற்றுறை என்பவற்றின் துணையோடு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். போராளிகளின் போர்க்களச் செயற்பாடுகளையும் அவர்களது வீரம் தியாகம் போன்றவற்றையும் இனம் கண்டு கொள்ளக் கூடிய நேர்நிலையில் உருவாகவும் இதனைப் பார்க்கலாம். எமது மண்ணின் வீரத்தையும்; ஈகத்தையும் எண்ணி வியப்புற்றிருக்கும் உலகின் முன் இத்திரைப்படமும் ஒரு புதியபார்வையை வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது போன்ற படைப்புக்கள் வெளிவரவேண்டும் இன்னும் இன்னும் வர வேண்டும். ஈழத்தமிழர் திரைப்பட வரலாற்றில் ஊடக இல்லத்தின் முயற்சி பயன் மிக்கது. இது போன்ற படைப்புக்களைத் தொடர்ந்து வெளிக் கொணர வேண்டும் அதற்குத் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை வழங்குவர். நல்ல சிறந்த படைப்புக்கள் என்றும் வரவேற்றப்படும் என்ற யதார்த்த நிலைக்கு ஒருமைல் கல்லாக உயிரம்புகள் வெளிவந்திருக்கின்றன. எமது மண்ணின் வாசனையும் எமது மண் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம். அதிலிருந்து விடுபட எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது என்ற செய்தியும் இதில் சொல்லப்பட்டுள்ளது. படத்தில் நடித்துள்ள அனைத்துக் கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு நடிகரும் தன்பாத்திரத்தை புரிந்து சிறப்பாக நடித்துள்ளார்கள். குறிப்பாக கரும்புலியாக நடித்திருக்கும் சசி, நிலவன், கீதன் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டனர். அவர்களது இயல்பான நடிப்பு மிகமிகத் தத்துரூபமாக அமைந்து விட்டது. நீண்ட காலமாக இதுபோன்றதொரு படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆசைக்கு வழி பிறந்துள்ளது. தமிழ்ச் செய்திகள்

கரும்புலிகள் உயிராயுதத்தின் முதல் வித்து-கப்டன் மில்லர்

 கரும்புலிப்போர் வடிவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. வீரத்தினதும் - உயிர்ஈகத்தினதும் - மனஉறுதியினதும் அதிஉயர்வடிவமாக கரும்புலிப் போர்முறை உள்ளது. தன்னோடு எதிரிஇலக்கையும் சேர்த்தழிக்கும் ஓர்மம் நிறைந்த போர்முறையாக அது அமைந்துள்ளது. அதனால்தான் உயிராயுதம் என்ற பொருள் பொதிந்த பெயர்சூட்டலுடன் கரும்புலிப்போர்வடிவம் இனங்காணப்பட்டுள்ளது. கடலிலும் - தரையிலும் இந்தப்போர்முறையை புலிகள் இயக்கம் பல்வேறு உத்திகள் வாயிலாக நடைமுறைப்படுத்திவருகின்றது. தமிழரது வீரமரபின் மகுடமாக கரும்புலிகள் திகழ்கின்றனர். கரும்புலிப்போர்முறையின் தேவை என்ன? கரும்புலிகள் எவ்வாறு உருவாகின்றனர்.? கரும்புலிப்போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்குகின்றது? இனக்கொலைபுரியும் சிங்களப்படைமீது இந்தப் போர்முறை ஏற்படுத்தும் தாக்கம் என்ன? தமிழரது தேசிய அரசியலில் கரும்புலிகள் ஏற்படுத்திவரும் தாக்கம் என்ன? என்பன போன்ற வினாக்களுக்க இந்தக்கட்டுரை விடையளிக்க முயல்கின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பான புறநிலை உண்மைகளைக் கருத்திற்கொண்டு, போரியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழீழதேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் கரும்புலிப்போர்முறை உருவாக்கப்பட்டது. தமிழீழப்போர் அரங்கில் இந்தப் புதிய வகைப்போர்முறை அறிமுகப்படுத்தப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. 1987 அம் ஆண்டு ~விடுதலை நடவடிக்கை| என்ற பெயரில் யாழ். குடாநாட்டின் வடமராட்சிப்பகுதியை ஆக்கிரமிக்க சிங்களப்படைகள் படையெடுத்தன. நெல்லியடியில், பாடசாலை வளாகத்தில். முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் மீது முதலாவது கரும்புலித்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. வெடிமருந்து நிரப்பிய பாரவூர்தி ஒன்றை அந்தப் படைமுகாமிற்குள்ளே ஓட்டிச்சென்று தடைகள் பல கடந்து, தாக்குதல்புரிந்த கரும்புலி வீரன் மில்லரால் இந்தப் போர்வடிவம் தொடக்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, 21 வருடகாலத்தில் 329 கரும்புலிவீரர்கள் இந்தப் போர்முறையில் பங்கெடுத்துக் காவியமானார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கரும்புலிப்போர் முறைக்கான தேவை என்ன என்ற கேள்வி முக்கியமானது. சிங்களப்படையுடனான போரில் வெற்றிபெறத் தேவையான சில முக்கிய இராணுவத்தேவைகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே இந்தப் புதியபோர் முறையை தலைவர் பிரபாகரன் உருவாக்கியிருந்தார். குறைந்த உயிரிழப்பை விலையாகக்கொடுத்து எதிரிப் படைக்கு நிறைந்த சேதத்தை உண்டுபண்ணுவது இப்போர்முறையின் நோக்கங்களில் ஒன்றாகும். தமிழினத்தின் பரமவிரோதியாக சிங்கள- பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தனது அரசியல் இலட்சியமாகக் கொண்ட சிறிலங்கா அரசு உள்ளது. தமிழினத்தை இன அழிப்புச்செய்து இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள - பௌத்த பூமியாக்குவதே பேரினவாதிகளின் அரசியல் இலட்சியமாகும். சிங்கள மக்களிடமிருந்து உருவாக்கப்பட்ட சிறிலங்காவின் முப்படைகளையும் - தமிழினத்தை இனக்கொலை செய்து அழிக்கும் - ஒரு கருவியாக சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது. எண்ணிக்கையில் தமிழர்களைவிட அதிகூடிய சனத்தொகையை சிங்கள மக்கள் கொண்டிருப்பதால் சிங்களப்படைகளின் ஆள் எண்ணிக்கையும் மிக அதிகமானதாகும். எண்ணிக்iயில் அதிகூடிய சிங்களப்படையை வெற்றிவாகை சூடுவதன் மூலமே தமிழரின் விடுதலையைப் பெறமுடியும் என்ற இராணுவ யதார்த்தம் உள்ளது. எனவே தான் புலிவீரர்களது களப்பலி என்பது புலிகள் இயக்கம் அதிக கரிசனை காட்டும் ஒரு விடயமாகவுள்ளது. தமிழர் தரப்பு உயிரிழப்பைக் குறைத்து எதிரிக்கு அதிக சேதத்தை உண்டு பண்ணவேண்டுமாயின் புலிகளின் தரப்பிலிருந்து ஒப்பீட்டளவில் அதிகளவு களவீரம் வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. வீரமும் - உயிர் அர்ப்பணிப்பும் புலிகள் இயக்கத்தின் தனிமுத்திரையாக உள்ளன. இந்த வீரத்தினதும் - உயிர் அர்ப்பணிப்பினதும் அதிஉயர்வடிவமாக கரும்புலிப் போர்முறை காணப்படுகின்றது. கரும்புலிப்போர்முறையில் ஒரு திகைப்பூட்டும் இராணுவ அம்சமும் உள்ளது. எதிரிப்படையை நிலைகுலைய வைக்க இந்தத்திகைப்பூட்டல் அவசியமானது. இதனால் சிங்களப்படைமுகாம்கள் மீதான தாக்குதல்களின்போது ஆரம்பக்கட்டமே, புலிகளுக்குச் சாதகமானவகையிலேயே ஆரம்பமாகி - புலிகளின் கைமேலோங்கி தாக்குதல் வெற்றியில் முடிய உதவுகின்றது. இதேசமயம், இருதரப்பினதும் ஆயுத பலத்தைப் பொறுத்தளவிலும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஒரு அரசு என்ற அங்கீகாரத்தை சிறிலங்கா அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு நாடுகளிடமிருந்தும் நவீன அழிவாயுதங்களை, பெருந்தொகையில், கொள்வனவு செய்து தமிழருடன் போரிடுகின்றது. தமிழ்மக்கள் மீதும் - தமிழரின் விடுதலைச்சேனை மீதும் சிங்களப்படையினர் பயன்படுத்தும் நவீன போராயுதங்களுக்கு இணையான பதிலாயுதங்களைப் பெறும் வழிகள் புலிகள் இயக்கத்திற்கு அடைக்கப்பட்டே இருக்கின்றன. போராயுதங்கள் தொடர்பிலான இத்தகைய பாதக அம்சங்களைச் சீர்செய்து - சிங்களப்படைகளுக்கு நிகராகப் போர்புரியும் இராணுவத்தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு போரில் புதிய வழிகளைக் கைக்கொள்ள புலிகள் இயக்கம் நிர்ப்பந்திக்கப் படுகின்றது. கரும்புலிப்போர் முறைமூலம் இந்த இராணுவத்தேவையை ஈடுசெய்ய புலிகள் இயக்கம் முயற்சிக்கின்றது. சிங்களப்படைகளிடம் அதிநவீன போர் விமானங்கள் உண்டு. நீண்டதூர வீச்செல்லை உடைய ஆட்டிலறிகள் உண்டு. டாங்கிகள் - கவச வாகனங்கள் உண்டு. மிதமிஞ்சிய வெடிப்பொருள் சக்தியும் அதனிடம் உண்டு. அதிகளவு அழிவாற்றல் சக்திகொண்ட எதிரியின் இந்தப் போராயுதங்கள் அழிக்கப்படாமல் அல்லது முடக்கப்படாமல் மரபுப்போரில் புலிகள் இயக்கத்தால் எதையும் சாதிக்கமுடியாது போய்விடும். இதனால். இன அழிப்பு என்ற சிங்கள அரசின் நோக்கத்தையும் அது இலகுவில் அடைந்துவிடும். எனவேதான், சிங்களப்படையின் போராயுதங் களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் உயிராயுதமாக கரும்புலிப்போர் முறையை புலிகள் இயக்கம் பயன்படுத்தி வருகின்றது. இந்தக் கரும்புலிப்போர் முறைமூலம் எதிரியின் வான் தளங்கள் - ஆட்டிலறித்தளங்கள் - கட்டளைப் பீடங்கள் - என்பன அழிக்கப்பட்டு சிங்கள அரசின் இராணுவத்திமிர் உடைக்கப்படுகின்றது. தமிழரின் இனப்பிணக்கை இராணுவ வழியில் ஒருபோதுமே தீர்க்கமுடியாது என்ற போரியல் பாடத்தை, புலிகள் இயக்கம், இந்தக் கரும்புலிப்போர் முறைமூலமே சிங்கள அரசுக்கு உணர்த்தி வருகின்றது. சிங்களப்படையுடனான போரில் இராணுவ மேலாண்மைகளை அடைய கரும்புலிப் போர்முறை பெரிதும் உதவி வருகின்றது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும். தரைப்போரில் மட்டுமல்ல கடற்சண்டைகளிலும் இதே இராணுவத் தேவைகளுக்காக கரும்புலித் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. சிங்களக் கடற்படையின் கடற்போர்க்கலங்களுக்கு இணையாக கடற்கலங்களைப் பயன்படுத்திப் போர் புரியும் வசதிகளும் - வாய்ப்புகளும் புலிகள்இயக்கத்திற்கு தற்போது இல்லை. புலிகளிடமுள்ள சிறியரக சண்டைப்படகுகளும், சிங்களக்கடற்படையிடமுள்ள சக்திவாய்ந்த கடற்கலங்களும் சண்டையிடுவதென்பது டேவிட்டும் - கோலியாத்தும் சண்டையிடுவது போன்றது. டேவிட் பயன்படுத்தியது போல புதிய வழிகளையும் தந்திரங்களையும் பயன்படுத்தியே கோலியாத் என்ற கடற்படை அரக்கனை வீழ்த்தமுடியும். இந்தப் புதிய வழியும் - தந்திரமும் கரும்புலிப்போர் முறைமூலம் செயற்படுத்தப்படுகின்றன. கரும்புலிப்படகுகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் சிங்களத்தின் கடற்கலங்களை அழித்தொழிக்கும் நாசகாரிக்கப்பல்கள் போல அவை செயற்படுகின்றன. கரும்புலிப்போர் முறைமூலம் எதிரியின் போர்த்தளபாடங்கள் பலவற்றை கடற்கலங்கள் - வான்கலங்கள் உட்பட புலிகள் இயக்கம் அழித்திருக்கின்றது. போர்க்களத்துக்கு வெளியே இருந்தபடி இனக்கொலைப் போருக்கான கட்டளைப் பீடங்களாகச் செயற்படும் சிங்களத்தின் போர்த்தலைமைகளை அழித்து - எதிரிப்படையை நிலைகுலைய வைக்கும் போரியல் செயற்பாடுகளையும் கரும்புலி வீரர்கள் நிறைவேற்றி வருகின்றனர். இதன் காரணமாக போரில் இராணுவ பலச்சம நிலையைப் பேணுவதில் புலிகள் இயக்கம் வெற்றிகண்டு வருகின்றது. அபரிதமான ஆயுதவளத்தையும் - அதிகூடிய ஆள்வளத்தையும் மூலதனமாகக்கொண்டு தமிழருக்கெதிராக இனப்போர் தொடுத்துள்ள சிங்களப்படைக்கு அச்சுறுத்தலாக கரும்புலிப் போர்முறை உள்ளது. தம்மிடம் இல்லாத போர் ஆயுதமொன்றை புலிகள் வைத்துப் பயன்படுத்துகின்றனர் என்ற அச்சம் சிங்களப்படையிடம் உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை எல்லாம் கடந்து சிங்கள அரசின் இராணுவ இலக்குகளை தாக்கியழிக்கும் கரும்புலிகளின் திறன்கண்டு சிங்களப்படைத் தலைமையும் போருக்குத் தலைமை கொடுக்கும் அதன் அரசியற்தலைமைகளும் அஞ்சுகின்றன. இதனாற்தான் கரும்புலிப்போர் வடிவத்தை புலிகள் இயக்கத்திடமிருந்து களைவதற்கு சிங்கள அரசு முயற்சிக்கின்றது. இந்தநிலையில் கரும்புலிப்போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்குகின்றது! என்ற கேள்வியும் முக்கியமானது. கரும்புலிப்போர் முறை தொடர்பான ஒரு தவறான புரிதலை உலகம் வைத்திருக்கின்றது. தற்கொலைத்தாக்குதல்கள் என்று உலகம் இழிவாக நினைக்கும் சர்வதேச பயங்கரவாதத்துடன் கரும்புலிப்போர் முறையையோ, புலிகள் இயக்கத்தையோ ஒப்பிட்டுக் கருத்துக்கூற முனைவது தவறானது. தமிழ் - சிங்கள இனப்போரில், தமிழர்பக்கம் இருக்கின்ற ஒரு போரியல் தேவையை ஈடுசெய்ய முனையும் ஒரு தாக்குதல் வடிவத்தை உலகம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். 'தேவை தான் கண்டுபிடிப்பின் தாய்" என்றொரு புகழ் பூத்த விஞ்ஞான வாக்கியம் உண்டு. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குள்ள ஆளணிப் பற்றாக்குறை - ஆயுத வளப்பற்றாக்குறை என்ற பலவீனமான இராணுவ அம்சங்களை ஏதோ ஒரு வகையில் பதிலீடு செய்து விடுதலைப்போரை வழி நடாத்த வேண்டிய கட்டாயத்தேவை புலிகள் இயக்கத்திற்கு உண்டு. இந்தப் போரியல் தேவையே கரும்புலிப்போர் முறை என்ற புதிய கண்டு பிடிப்பிற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. எனவே கரும்புலிப்போர்முறை என்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு விஞ்ஞான பூர்வமான போராட்ட வடிவமாகும். தன்னை அழித்தபடி எதிரியின் இராணுவ இலக்குகளை அழிக்க முயலும் இப்போர் வடிவத்தை வெறுமனே தற்கொலைத் தாக்குதல் என்று சிறுமைப்படுத்த முடியாது. தற்கொலை என்பது வாழ்வியல் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க முடியாத கையாலாகாத்தனத்தாலும் - வாழ்க்கை மீதான வெறுப்பினாலும் - விரக்தியினாலும் ஏற்படும் மனநலன் முறிவுகளின் வெளிப்பாடுதான் தற்கொலை. ஆனால், கரும்புலிகளின் உயிர்ஈகம் என்பது ஒரு போர்க்களத்தியாகமாகும் - விடுதலை உணர்வால் உந்தப்பட்ட புலி வீரர்களின் அதிஉயர் அர்ப்பணிப்பு இது. எமது மக்களின் அழிவைத்தடுக்கவும் போர்க்கள வெற்றிகளை உறுதிப்படுத்தவுமென திட்டமிட்டுச் செய்யப்படும், ஒரு போர்வடிவத்திற்கான, உயிர்விலை அது. தமிழரின் நிலத்தை ஆக்கிரமிப்புச்செய்தபடி - தமிழ் மக்களை இனக்கொலை செய்யும் சிங்களப்போர் இயந்திரத்தையே கரும்புலிப் போர்முறை குறிவைக்கின்றது. எனவே போரியல் ரீதியில் இது நியாயமானது சிங்கள வான்படையின் 'கிபீர்" வகை மற்றும் 'மிக்" வகை போர் விமானங்கள் தமிழரின் வான்பரப்பில் அச்சத்தை ஊட்டியபடி பறந்து - 500 கி.கி, 1000 கி.கி நிறையுடைய அழிவுகர குண்டுகளை தமிழரின் குடிமனைக்குள் போட்டு அவலங்களை விதைக்கும் போது அந்தப் போர் விமானங்களை புலிகள் எப்படித் தடுப்பது! அல்லது எப்படி அழிப்பது! இங்கே உயிராயுதத்தின் தவிர்க்க முடியாத இராணுவத் தேவையை உணர முடியும். சிங்களத்து வான்கலங்களை கரும்புலிப் போர்முறை மூலம் புலிகள் அழித்தொழிக்கும் போது தமிழ்மக்கள் மகிழ்ச்சி கொண்டாடுவது எதற்காக! சிங்களப்படைகளின் ஆட்லறிகள் - பீரங்கிப்படகுகளை கரும்புலி வீரர்கள் தம்முடன் சேர்த்துத் தகர்த்தெறியும் போது தமிழ்மக்கள் வெற்றி கொண்டாடுவது எதற்காக! எதிரி வைத்திருக்கும் பலம் பொருந்திய இத்தகைய கொலை ஆயுதங்கள் கரும்புலி வீரர்களால் அழிக்கப்படுவதென்பது தமிழ்மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு ஒப்பானது. அதனால்தான் அவை அழிக்கப்படும் போது தமிழ்மக்கள் மகிழ்ச்சி கொண்டாடுகின்றனர். இதே சமயம், தமது போர் விமானங்கள் - போர்க்கப்பல்கள் கரும்புலித் தாக்குதல்களில் அழிக்கப்படும் போது அவற்றைப் பயங்கரவாதத் தாக்குதல் என்று உலகிற்குக் கூற சிங்கள அரசு முயல்கின்றது. ஆனால் தனது போர் விமானங்கள் ஆட்லறிகள் - பலகுழல் எறிகணைச் செலுத்திகள் தமிழர் குடிமனைக்குள் நடாத்தும் குண்டுத்தாக்குதல்களை போர் நடவடிக்கை என்று நியாயப்படுத்த முனைகின்றது. கரும்புலிகள் என்றால் யார்! இவர்கள் எவ்வாறு உருவாகின்றார்கள் என்ற கேள்விக்கான விடை புதிரானதல்ல. தமிழீழ விடுதலையை இலட்சியமாக வரித்துக்கொண்டு புலிகள் அமைப்பில் இணைந்த போராளிகள், நீண்டநாள் கள அனுபவங்களுக்குப் பின்னர், கரும்புலிகள் அணியில் இணைய விரும்பி தலைமைப்பீடத்திற்கு கடிதம் வரைகின்றனர். நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர் அவர்கள் கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். விடுதலையை விரைவாக்க வேண்டும் - ஒரு போர்வீரன் அல்லது வீராங்கனை என்ற வகையில் அதிகம் சாதித்து போராட்டத்திற்குப் பலம் சேர்க்கவேண்டும் என்ற விருப்பு இவர்களை கரும்புலிகளாக மாற்றிவிடுகின்றது. விடுதலை உணர்வும் - தேசபக்தியும் - தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கையும், விசுவாசமும் கரும்புலிகளுக்கு செயல் வீரத்தை ஊட்டிவிடுகின்றன. மனித மனச்சாட்சியை உலுக்கும் அந்த அதி உன்னத வீரக்தியாகத்தைப் புரியும் கரும்புலிகளின் அரசியல் இலக்கு தமிழரின் விடுதலைதான். அதனால்தான் கரும்புலித்தாக்குதல் நிகழும் போதெல்லாம் அதைக் கேள்வியுற்று, தமிழ்மக்கள், ஓர்மம், பெறுகின்றனர். இலட்சிய உறுதி பெறுகின்றனர். எதிரியின் எண்ணிக்கை பலம் கண்டோ அவனது ஆயுதபலம் கண்டோ அஞ்சாமல் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற வீர உணர்வை மக்கள் பெறுகின்றனர். இந்த வகையில், தமிழரின் தேசிய அரசியலில் கரும்புலிகள் ஏற்படுத்தி வரும் சிந்தனைத்தாக்கம் ஆழமானது. - சு. ரவி - விடுதலைப் புலிகள் ஏடு (04.09.08)

கரும்புலிகள் உயிராயுதம்

யூலை இது கரும்புலிகள் மாதம். யாரிந்தக் கரும்புலிகள்? காலக்கருக்கலில் வந்துதித்த நெருப்புச் சூரியர்கள்! கந்தகத்தை நெஞ்சில் சமந்து சாவுக்கு தேதி குறித்து சிரித்தபடி கையசைத்து விடைபெறும் சந்தன மேனியினர். அணுவாயுதங்களை அழித் தொழிக்கப் பிறந்திட்ட உயிராயுதங்கள்! 1987 ஆம் ஆண்டு முதல் தேசியத் தலைவனின் எண்ணக்கருவில் பிரவசமான நெருப்புக்குழந்தைகள். செயற்கரிய ஈகத்தை மிக எளிதில் செய்து விட்டு முகம் காட்டாமலே செல்கின்ற ஈசைக் செம் மல்கள். விலை மதிப்பற்ற மனித உயிர்களை எதிர் கால சந்ததியினரின் சுதந்திரத்திற்காகவும் சுபீட்சமான நிம்மதியான வாழ்வுக்காகவும் ஈகம் செய்து சரித்திரத் தில் நிலையான இடத்தினைப் பிடித்தவர்கள். "கொடைக்குக் கண்ணன்" என இயம்பிய இலக்கியங்கள் இன்று கொடையில் உயர்ந்த தற் கொடைக்கே இலக்கணமாகத் திகழும் கரும்புலிகளை மேற்கோள் காட்டி " ஈகத்தின் இலக்கணங்களாக"ப் போற்றுகின்றன. தமிழீழப் போராட்டத்தில் காலத்திற்குக் காலம் எதிர்வரும் தடைகளை நீக்கிட " தடைநீக்கிகளாக" தேசியத் தலைவனின் எண்ண வீச்சிலிருந்து உரு வானவர்கள் கரும்புலிகள். எப்பேர்பட்ட படைகளையும் தூசெனவே எண்ணித் தகர்த்தெறியும் மாபெரும் சக்தியாக கரும்புலிகள் தம்வசம் உள்ளனராதலால் இன்று படைச் சமபலத்தோடு எதிரிகளுடன் களத்தில் போரிட்டு வெற்றிகளைக் குவிக்கின்றனர் தமிழீழ விடுதலைப்புலிகள். உலகே வியக்கின்றது, தற்கொடையாளரின் நெஞ்சுறுதி கண்ணுற்று. வாழ்தலின் ஆசை உயிரினத் தின் பொதுவிதி. மரணத்துடன் போராடும் இறுதிக் கணத்திலும் வாழும் ஆசை எஞ்சி நிற்கும். ஆனால் இவர்களோ தமது சாவுக்குத் தேதி குறித்து போட்டி யிட்டு செல்கின்றனரே.... எப்படி இது சாத்திய மாகின்றது? வாழும் ஆசைகளின்றி பிறந்த அபூர்வப் பிறவிகளா இவர்கள்? இல்லை! இல்லவே இல்லை! நெடுநாள் வாழும் ஆசை அவர்களுக்குள்ளும் உண்டு. ஆனால் அதைவிட தாய்மண்ணின் சுதந்திரமே அவர் கள் இலட்சியமாக மேலோங்கியுள்ளது. இன்றைய எம் மண்ணின் சிசுக்களேனும் நாளை சுதந்திர தாயகத்தில் ஆடிப்பாட வேண்டும் என்பதற்காக தமது இளமைக் கனவுகளையும் ஆர்ப்பரித்தெழும் யௌவன ஆசை களையும் மனதின் அடிவாரத்தில் ஆழக்குழி தோண்டி புதைத்தவர்கள்.
மானுட ஆய்வாளர்களால் ஆராய்ந்தறிய முடியாத ஆழ்சுரங்கம் அவர்கள் மனங்கள். அவர் களது மனத்தின் திண்மை உலக சமுதாயத்தில் எம் இனத்தை உயர்த்தி வைத்திருக்கின்றது இன்று. ஆயுத பலத்தாலும் ஆட்சி அதிகாரத்தாலும் மிருகத்தனமாக தமிழீழ மக்களை அவர்கள் தேசத்திலேயே அடக்கி ஒடுக்கி சித்திரவதைப் படு கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எனவெல்லாம் மிலேச்சத்தனமாக அழித்தொழித்து வரும் இனவாத சிங்களக் கூலிப்படைகளின் கொட்டமழித்து ஓட ஓட விரட்டிடவே தீரமிகும் மகாசக்தியாக உருமாறியவர் களே கரும்புலிகளாவர். 1987 ஆம் ஆண்டு யூலை 5ஆம் திகதி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டு எம் மக்களுக்கு இடையூறு பல விளைவித்து வந்த சிங்கள இராணுவத்தினரின் முகாமினுள் புகுந்து சின்னாபின்னமாக்கிய முதல் கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் நினைவாக ஆண்டு தோறும் யூலை 5 ஆம் திகதி கரும்புலிநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகக்குறைந்த உயிர் இழப்புகளுடன் மிகப் பெரிய சேதத்தை எதிரிகளுக்கு உருவாக்கும் பொருட்டு தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக் கப்பட்ட உன்னதமான போர்வடிவமே கரும்புலித் தாக்குதலாகும். உலக அதிசயங்களுள் எட்டாவது அதிசயமாகப் பதியப்பட வேண்டிய ஒன்றே கரும் புலிகளின் ஈகைச் செயலாகும். எரிமலையைச் சுமந்தவண்ணம் எதிரிகளின் பாசறைகளை நோக்கிச் செல்கையிலே என்னென்ன எண்ணுவரோ? யாரை நினைப்பரோ? தமிழீழக் கனவு களோடு உடல் சிதறி மண்ணோடு மண்ணாக, காற்றோடு காற்றாக, கடலோடு கடலாக கலந்து நிலைத்து வாழும் கரும்புலிகளின் நினைவுகள் ஆழத் தடம் பதித்து எம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பது உறுதி. வரலாற்றினை வழிநடத்த வரலாறாகவே ஆனவர்களை நின்றொரு கணம் நினைத்தொரு பொழுது விழி உகுக்கும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து இரும்புப்பூக்களைத் தொழுதெழும்காலமிது. எமது இனம் எம் மண்ணில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எம் மக்கள் தினந்தினமும் செத் துக் கொண்டிருக்கின்றனர். எமக்காக கரம் நீட்டி உதவவோ குரல் கொடுக்கவோ உலகில் எவருமே எமக்கு இல்லை. ஆனாலும் எமக்காக நிலத்திலும் புலத்திலும் உறுதியாக கை கோர்த்த வண்ணம் நாம் இருக்கின்றோம். நாமோ நமது பலம். நம்மைச் சுற்றி அசுர பலம் கொண்ட எதிரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு பக்கபலமாக இந்த உலகே கண்மூடி வாய்கட்டி காதுகளைப் பொத்தி அநீதியை நிலை நாட்டிட கங்கணம் கட்டி துணை நிற்கிறது. நிர்க்கதியாக நிற்கும் எம்மக்களை எதிரி களிடமிருந்து பாதுகாக்கவும் தற்பாதுகாப்புக்காகவும் மக்களே இன்று ஆயுதமேந்தி பயிற்சிகளும் பெற்று வருகின்றனர். எம்மக்களை இன அழிவிலிருந்து மீட் டெடுக்கும் வலிமை மிக்க ஆயுதங்களாக கரும்புலிகள் புறமுதுகிட்டோடிடச் செய்யும் தீரம் கரும்புலிகளின் காலத்தின் பின்னர் நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். ஒவ்வொரு கரும்புலியின் மரணத்திலும் ஓராயிரம் கரும்புலிகள் உருவாகின்றனர். அச்சத்தின் ஆணிவேரை அகத்திலிருந்து அறுத்தெறிந்து விட்டு வீரத்தின் விதையை மனங்களுள் விதைத்த வண்ணம் கரும்புலிகள் கனவுகளை தமது தோள்களின் சுமந்த வண்ணம் இலட்சியப் பயண வீறுடன் முன்னெடுக் கின்றன. புதிது புதிதாக இணையும் கரும்புலிகள் வீறுடன் முன்னெடுக்கின்றனர். வீரர்களுக்கு நடுகற்கள் அமைத்து தெய்வங் களாக போற்றி வணங்குதல் பழந்தமிழர் பண்பாடு. இன்று எம் தேச எல்லைகள் மாவீரரின் நடுகற்களால் வரையப்பட்டு வருகின்றன. காவல் தெய்வங்களை உளமாரப் பூசித்து வீரத்தை வரமாகப் பெறுகின்ற காலமிது. கரும்புலித் தாக்குதலுக்கு செல்கின்ற ஒவ்வொரு கரும்புலியும் தாயினும் மேலாக தாம் போற்றும் தேசத்தலைவனுடன் ஒரு நாளில் தமது பொழுதுகளை கழிப்பது வழமை. எவராலுமே அணுக முடியாத தலைவருடன் அருகமர்ந்து கதைபேசி அகமகிழச் சிரித்தாறி ஒன்றாக உணவருந்தி உணர்வுகளைப் பரிமாறி கடைசியில் விடைபெறும் வேளை வரும்போது கட்டியணைத்து வழியனுப்பி வைக்கையிலே கண்ணீரை மறைத்த வண்ணம் தலைவனின் குரல் கணீரென ஒலிக்கும். "நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால வருவன்" என. ஒவ்வொரு கரும்புலியுடனும் சிலபொழுது உளமாரப் பழகி விடைபெற்றுப் பின் அவரின் வீரமரணச் சேதி தன் வீடு வந்து சேருகையிலும் எம் தேசத்தலைவரின் ஆன்மா ஒரு கணம் நடுங்கும். விழி யோரம் நனையத் துடிக்கும். மறுகணமே உணர்வுகட்கு அப்பாற்பட்ட உரிமைச் சுதந்திரத்திற்காக தானைத் தலைவன் விழிகள் நிமிரும். விழிகள் அனல் கக்க வரலாற்றை வழிநடத்த எம் தலைவன் எழுச்சியுடன் எழுந்து நடக்கின்றான். எம்மக்களும் அவன் பின்னால் எழுச்சியோடு அணி திரள்கின்றனர். கரும்புலிகள் தமிழினத்தை எண்ணுகின்ற நெஞ்சமெல்லாம் உறுதி கொள்கின்றன. காலங்காலமாக தமிழ் இலக்கியங்கள் பொழிந்தது போல் ஆண்மைக்கு மட்டுமல்ல, பெண்மைக்குள்ளும் களவீரம் உண்டு எனப் புதிய இலக்கணம் படைத்தவர்கள் புலிகள். காங்கேசன்துறை துறைமுகத்தில் 45 அடி ஆழம் கொண்ட நீர்ப்பரப்பில் நிலை கொண்டிருந்த 6300 தொன் எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த ராடர்களை பொருத்தியிருந்த நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை தனி ஒரு பெண்ணாகத் தகர்த் தெறிந்த கடற்புலி அங்கயற்கண்ணியின் தீரத்தினை வரலாறு ஒருபோதுமே மறந்திட முடியாது. அவனைப் போல எத்தனையெத்தனை பேர்.... ஆணென்றும்..... பெண்ணென்றும்... ஒருவர் இருவரா எழுத்தில் ஒரு சில பக்கங்களுள் அடக்குவதற்கு? நீண்டு கிடக்கும் பட்டியலில் ஒவ்வொரு கரும்புலியுமே நிலையான சரித்திரமாக நிலைத்து நிற்க தொடர்கிறது. ஈழத்தமிழரின் சுதந்திரப் போராட்ட சரித்திரம் இன்னமுமே.... விறு கொண்டே.... களத்துக்கவி புதுவை இரத்தினதுரை "பகைவனே! படுக்கையைத் தட்டிப்பார் கட்டிலுக்கு கீழே கரும்புலி இருப்பான்" என தன் கவிதையொன் றில் கூறியது போன்று காற்றுக்கூட உட்புகாத இடங்களுக்குள் கரும்புலிகள் நுழைந்திருக்கின்றனர் என்பதற்கு அண்மைக்கால நிகழ்வுகளே தக்க சான்றுகள். "கரும்புலிகளுக்கு எட்டமுடியாத சிகரங்கள் எதுவும் இல்லை. தொட்டசைக்க முடியாத சுமைகள் இல்லை" எனக் கவிஞர் கூறியது போல் "இல்லை என்றொன்று இல்லை" என நிரூபித்துக் காட்டியவர்கள் கரும்புலிகள். தாமில்லாத போதும் என்றோ ஒருநாள் நிச்சயமாக தம் கனவுகள் நனவாகும் என்பதை உறுதியாக அவர்கள் நம்பியதனால் தான் தாயகத்தை கனவு கண்டவர்கள் தம் தாயகத்தினை மீட்டு சுதந்திர தேசத்தில் தாம் வாழுமுன்பே விழிமூடினர். அவர்கள் ஒவ்வொரு தமிழர்மீதும் தம் ஒப்பற்ற தலைவன் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டதனால் தான் ஈகத்தின் உச்ச வடிவினராக தம் உயிரையே எம் தேசத்திற்காக ஈய்ந்திடத் துணிந்தனர். அந்த உயிர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை எம்மாலான தேசத்தொண்டினை ஒவ்வொரு தமிழனும் செய்வதுவேயாகும். கரும் புலிகளைக் கண்களால் எம்மால் பார்க்க முடியாது. ஆனால் தவழ்ந்து வரும் தென்றல் போல் அவர்களின் ஈகையினது பெருமையை எம்மால், எம் சுவாசத்தால் உணரலாம். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு தமிழனையும் கரும்புலிகளின் ஈகைச் சாவு ஒருகணமேனும் அதிரச் செய்யும். சாதாரண மனிதர்கள் போன்றதல்ல விழி மூடிய இந்த மனிதத் துறவிகளின் உன்னத உயிர்கள். விலைமதிப்பற்ற கிடைத்தற்கரிய ஆன்மாக்களை கையசைத்து விடைகொடுத்து விட்டு, காலாட்டிச் சோற்றுப்பிழைப்புக்காக வாலாடடி; வாழ இனியும் முனைவாயோ தமிழா? இது தமிழன் தலை நிமிரும் கரும்புலிகள் சகாப்தம். எம்மண்ணவரின் உயிர்களின் விலைகொடுப்புகளிற்கெல்லாம் "பொருள்" ஈட்டிட வேண்டும். இன்னுமொரு கரும்புலி தன் இன்னுயிரை ஈவதைத் தடுத்திட வேண்டுமெனில் நிலத்திலும் புலத்திலும் உள்ள உலகத் தமிழரெல்லாம் சுதந்திரத் தமிழீழத்தை தம் உயிர்மூச்செனக் கொண்டு உழைத் திடல் வேண்டுமிங்கு. காற்றில் கரைந்தவர்களுக்கு நடுகல் நட்டு தொழுதெழும் வேளை அவர்கள் கனவுகளை நனவாக்கிட உறுதியெடுத்துக் கொள்வோம். காலமாய் ஆனவாக் ளின் கலல் றைகள் முன்னால் காலமினி சொல்லட்டும் ஓர் இனிய சேதி தமிழரின் தாயகம் மீட்கப்பட்டதென.... அதுவரையில் நானும.; .... நயுP ம.; ... அவர்களும்.... இவர்களும்.... ஒனறு; படுவோம!; தாய் மண்ணின் விலங்கொடிப்போம்!

கரும்புலிகள் வரலாறு ஜுலை.05

ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது. இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது. வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் 'லிபரேசன் ஒப்பிரேசன்" இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது. கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார். இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான். இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990 ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற ' எடித்தரர்" என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில் எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது. இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ. என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989 ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார். இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984 ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின் களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987 அக் 10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார். இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து காவியமானவர் இவரே முதற்பெண் கடற்புலியுமாவார். இவர்களை தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19 ஏப்பிரல் 1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத் தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள். 18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில் சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம். எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில் ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18 மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம் இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள் உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது. இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே. ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1 தொடங்கியது. 1336வேங்கைகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப் போராட்ட களநிலைகளில் ஓயாத அலைகள் 3 இன் வெற்றி என்பது தமிழ் மக்களிற்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நின்றது. இம்மாவீரர்கள் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். இலங்கைத் தீவில் இரு இராணுவக் கட்டமைப்பின் இராணுவ சமநிலையிலும் இது மாற்றத்தை உண்டாக்கியது. விடுதலைப் புலிகள் சார்பான இராணுவ வலு அவர்களுக்கு சாதகமானதாகவே எழுந்து நிற்பதாகவே உலகம் கருதியது. இராணுவ ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தாக்குதல் தரையிறக்கத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் 3 இன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 வெற்றிலைக்கேணி, புல்வெளி போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தன. 1999 டிசம்பர் 17அன்று பரந்தனும், தெற்கு ஆனையிறவும் வீழ்ந்தன. இதனைத் தொடர்ந்து சில இராணுவத் தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆனையிறவு வடக்கே இயக்கச்சியை 2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22அன்று கைப்பற்றினர் 2000. 04.23 அன்று ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது. இந்த ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் அதிக விலை கொடுத்துள்ளனர். இதற்கு அரிய தியாகம் செய்த மாவீரர்களை மறப்போமா? 25. 04.2001 இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை முறியடிப்புச் சமரில் புலிகள் வெற்றிவாகை சூடினர். அப்போது இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பே அவர்களை அமைதிவழிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அதற்குக் காரணமாக 141 வேங்கைகள் தங்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இதற்குப் பின் சந்திரிக்கா அரசின் இராணுவத் தோல்விகளால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த அரசியல் மாற்றங்கள் கூட தமிழர்களிற்கு எதுவும் தந்துவிடவில்லை. சர்வதேச அனுசரணையோடு நோர்வேயின் சமரசத்துடன் அரசு- புலிகளிடையே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அதனைக்கூட நிராகரித்துவிட்டு மஹிந்தராஐபக்ச போர் புரிகிறார். இதன்நடுவே இந்தப் போரை தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்ச்சியை முறியடிக்க தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை போராளிகள் வழங்கி வருகின்றனர். இந்த வீரர்களின் இலட்சியக்கனவு ஒருநாள் நிறைவேறும். இந்நேரத்தில் கடந்த ஆண்டில் அனுராதபுர கூட்டுப்படைத்தள தாக்குதலில் 23 கரும்புலிகள் செப்டெம்பரில் வவுனியா படைமுகாம் தாக்குதலின் 10கரும்புலிகளும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இப்போதும் எம்மனதில் நிற்கிறார்கள். இந்த வேளையில் போரின் அனைத்து வழிகளிலும் நம்முடன் நின்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனும், பிரிகேடியர் பால்ராஐ்சுக்கும் இந்தப் போரில் வீரகாவியமான அனைத்துப் போராளிகளுக்கும் இந்த மாவீரர்கள் நாளில் எங்கள் வீரவணக்கத்தை வழங்கி நிற்போம். இந்தத் தேசம் விடியும் என்ற கனவுடன் சென்ற அந்த மாவீரர்களின் இலட்சியத்தைப் பின்தொடர்வோம். - கலியுகன்

கரும்புலிகள் நாள் - 2008 நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு

கரும்புலிகள் நாள் - 2008 நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு


தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தாயக விடுதலைப் போராட்டத்தை வீச்சாகத் தம்மை உவந்தளித்த தற்கொடையாளர்களான கரும்புலிகளை ஒன்றுசேர நினைவிற் கொண்டு முதன்மைப் பொதுச்சுடரேற்றி வைத்தார்.
வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நேற்று சனிக்கிழமை (05.07.08) நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி, மறைமுகக் கரும்புலிகளின் பொதுத் திருவுருவப்படம் உள்ளிட்ட 356 கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு திருமதி மதிவதனி பிரபாகரன், கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கரும்புலிப்படையணிப் போராளிகள், போராளிகள் ஆகியோர் ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் தொடங்கின.
தேசத்தின் புயல்களான கரும்புலிகள் பாடல்களுக்கு மாவீரர் வணக்க நடனம் இடம்பெற்றது.
தலைமையுரையை இராஜன் கல்விப் பிரிவுப் போராளி நிலவன் ஆற்றினார்.
தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை வாழ்த்துப் பாடலுக்கான கரும்புலிப் படையணிப் போராளிகளின் நடனம் இடம்பெற்றது.
நிகழ்வில் ஆறு வெளியீடுகள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டன.
முதல் வெளியீடாக "கடற்கரும்புலிகள் பாகம் - 12" எனும் பாடல் குறுவட்டை கடற்புலிகள் சிறப்புத்தளபதி கேணல் சூசை
" எல்லாளன் பெயர் சொல்லி" எனும் பாடல் குறுவட்டை படையப் புலனாய்வு சிறப்புத்தளபதி இரத்தினம்
"அனுராதபுரத்துக்கு அதிரடி" எனும் குறுவட்டை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு
"உயிராயுதம் விவரண" குறுவட்டை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்
கரும்புலி மேஜர் நிலவனின் பாடல்களைக்கொண்ட "புதிய காற்று" குறுவட்டை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன்
"கடற்கரும்புலிகள் பாகம் - 13" குறுவட்டை கடற்புலிகளின் தளபதி நரேன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.
வெளியீடுகளை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பெற்றுச் சிறப்பித்தார்.
தொடர்ந்து கலையரசி ஆசிரியையின் நெறியாள்கையில் பாடலும் ஆடலும்,
புதுவை அன்பனின் நெறியாள்கையில் கரும்புலிகளைச் சித்திரிக்கும் நாடகம்,
கடற்புலிகளின் சமகால நிகழ்வையொட்டிய நாடகம் ஆகியன இடம்பெற்றன.

Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com

கரும்புலிகள் நாள் ஜீலை 05, 2011



வேற்றுக்கிரகமொன்றில் நீங்கள் பிறந்திருக்க வேண்டும்
வேற்றுமை கொள்ளும் இவ்வினத்தில்
வீரர்களாய் வந்துதித்த வேங்கைகளே!

தேசத்தின் நினைவுடனே உடல் வெடித்து தீரர்
ஆயிரம் ஆயிரம் வெற்றிச் செய்திகளை
ஆகுதியாகிய உங்கள் பெயர்களின் நாங்கள் மகிழ்ந்தோம்
நாளையை பற்றிய எதிர்பார்ப்புக்கள் அற்ற மனிதர்கள்
உங்கள் சாவில் ஊர் வாழ கனவு கண்டீர்...

 
வேற்றுக்கிரகமொன்றில் நீங்கள் பிறந்திருக்க வேண்டும்
வேற்றுமை கொள்ளும் இவ்வினத்தில்
வீரர்களாய் வந்துதித்த வேங்கைகளே!

தேசத்தின் நினைவுடனே உடல் வெடித்து தீரர்
ஆயிரம் ஆயிரம் வெற்றிச் செய்திகளை
ஆகுதியாகிய உங்கள் பெயர்களின் நாங்கள் மகிழ்ந்தோம்
நாளையை பற்றிய எதிர்பார்ப்புக்கள் அற்ற மனிதர்கள்
உங்கள் சாவில் ஊர் வாழ கனவு கண்டீர்...

கரும்புலி மாவீரர்களே கல்லைறை கேளா உங்கள்
களச்சாதனைகள் பல வெல்வோம் இன்றேன் வீழ்வோம் என்று
வீர்ச் சமர் புரிந்த உங்களது மனோபலம்
எங்களில் யாருக்குமே இல்லை...

எம் இனம் வாழ உயிர் கொடுத்த உறவுகளே
உங்களை தாண்டி தொலை தூரம் வந்தோம்
உயிர் மீது ஆசை உறவுகள் மீது பாசம்
தேசத்தின் மீது ஆக்கறை மட்டுமே எங்களது
உங்களுக்கு மட்டும் எம் தேசத்தின் மீது காதல்

நாங்கள் புன்னகை செய்யும் பூவையரை
சுற்றி சுற்றி காதல் செய்திருக்க நீங்கள்
பூமா தேவியின் புதிய பிரசவாமாம்
ஈழ திருநாட்டை காதல் கொண்டீர்

குண்டு வெடி வெடிக்கும் போதெல்லாம்
பட்டாடு வெடி கொழுத்தும் அற்பர்களாய்
புலம் பெயர்ந்த நாமிங்கே இருந்திருக்க
நீங்கள் உங்கள் உடல் வெடித்து ஈழ
விடியலை உறுதியாக்கி கொண்டீர்கள்

நாட்களை எண்ணிய படியே எம்
ஆயுளுக்குள் அடைவோம் தமிழீழம் என்று
ஆளுக்கு ஆள் வீர வசனம் பேசுகையில் நீங்கள்
அந்த ஆயுளை முடித்து அடைய போகும்
ஈழத்தின் விடியலுக்காய் நீங்கள் அணைந்தீர்கள்

வெற்றுக்காய் நாங்கள் போட்ட கோசங்கள்
வேசங்கள் என்பதை அறியாமல் -என்
உறவுகளே நீங்கள் தீயாகி போனது சோகம்

வேதனைத்தணல் கொட்டும் நெஞ்சோடு
விடுபட முடியாத சோகத்தின் எதிரோலியோடு
வேங்கைகளே உங்களிடம் வேண்டுகின்றேன்
மன்னித்து விடாதீர்கள் எம்மை!

நீங்கள் ஏற்றிய தீயில் குளிர் காய
குழுமியிருக்கும் கூட்டத்துள் நானும்
என் புலத்து உறவுகளும் அடக்கம் என்பதால்

புன்னகைத்த படி கடமைகைள எம் தலையில்
வைத்து விட்டு போன வேங்கைகளே!
பூக்கின்ற நம்பிக்கை பூவும்
புல்லர்கள் அழிக்கின்ற அவலம் தொடருது

உங்களின் பெயரில் உலகெங்கும்
உயர் வாழ்வு நடக்குது...
மன்னீத்துக்கொள்ளுங்கள்... மாவீரர்களே....

நானும் இந்த புலம் பெயர் உறவுகளுக்குள் ஒருவன் என்பதால்...

தெய்வீகத் துறவிகள் கரும்புலிகள்

‘தெய்வீகத் துறவிகள்

“பலவீனமான எமது இனத்தின் பலமான ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்” என்று கூறினார் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரின் நகர்வுப் பாதையில் – இறுமாப்போடு எழுந்து நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்தவர்களுக்கான நாள்.
ltte black tigers
எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள். தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ – அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.
தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள். எமது இனத்தின் அதிசயங்கள் அவர்கள்; எமது திமிரின் அடையாளங்கள் அவர்கள். நியாயபூர்வமான எமது இனத்தின் அரசியல் வேட்கையினது குறியீடுகள் அவர்கள்.
அரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பண உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள். அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல; எம்முள் எல்லாமுமாய் நிறைந்தவர்கள். நேற்று வரை மட்டுமல்ல; இன்று முதலும், எமது விடுதலையை நாம் வென்றெடுக்கும் வரையும்… அதற்கும் அப்பாலும் அவர்களே எங்கள் நெஞ்சுரம்.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் 1987, ஜூலை 5 ஆம் நாள் – கரும்புலி கப்டன் மில்லர் தொடக்கி வைத்த இந்த வரலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு தனியான – தனித்துவமான – அத்தியாயமாகப் பதிவாகிவிட்டது. அன்று முதல் – கடந்த 22 வருடங்களில் – உரிமை கோரியும் உரிமை கோராமலும், தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் – 700 வரையான கரும்புலி மாவீரர்கள் தமிழீழம் என்ற எங்கள் ஆன்ம தாகத்தின் வெளிப்பாடாக தமது உயிர்களைத் தந்தார்கள். தேசியத் தலைவர் அவர்கள் கூறியதனைப் போல – “அடுத்தவர்கள் இன்புற்று இருப்பதற்காக தம்மை இல்லாது அழித்த தெய்வீகத் துறவிகள் அவர்கள்.”
அந்த தெய்வீகத் துறவிகளின் நினைவுடன்… அவர்கள் தந்து சென்றிருக்கும் துணிவுடன்… அவர்கள் ஊட்டிச் சென்றிருக்கும் உறுதியுடன்… – அவர்கள் செப்பனிட்டுச் சென்றிருக்கும் பாதை வழியே… – எல்லோரும் வாருங்கள்… போராட்டத் தேரை இழுத்து எங்கள் தேசத்தை விடுவிப்போம்.

கரும்புலி கப்டன் மில்லரின் அம்மா

'என்ர மகன்
நாட்டுக்காகத்தானே
செத்தவன்
நினைக்க பெருமையாக
இருக்கு"

மில்லரின் அம்மா

'என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை." மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள்.

அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்......." அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ;மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. ஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்... முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும்போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி" மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கிவிட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.
இப்படித்தான் இன்னும் ஒரு நாள்.......
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் ஷராங்கிற்குள் குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.
தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை.
காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது.
முன்புபோல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்றுபோனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். ' அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டீசு கொடுத்து கொண்டு நிக்கிறான்."
அம்மாவுக்கு உள்@ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள்.
அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப் படுவாள். இது வழமையாகிப் போனது.
இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. 'பயிற்சி முகாமில் நிக்கின்றான்" என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.
தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள்.

'அது ஒபறேசன் லிபறேசன் காலம் அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்...." 'திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது.
பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.
அடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்....
முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்.... என்ர பிள்ளையும்.....
அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி... அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக்குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்...... பிறகு வருவினம்.."
ம்.....ம்..... என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்........

'அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு"

முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது !

கரும்புலி கப்டன் மில்லர் 

 

முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது !
05-07-1987

Black Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.
ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.
மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.
வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.
பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்;தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.
திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்;கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்
கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.
மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான். அவன் அங்கு பணியாற்றிய காலத்தில் ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப் பெண்ணுடைய வீட்டுக்கு கமல் செல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் நாட்டின் விடுதலைக்காக கமல் தன் உயிரை வைத்து பணியாற்றியது கமலின் பால் அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்த்தது. கமல் வீட்டிக்குப் போகும் சமயங்களில் எல்லாம் அன்பாக உபசரித்து கமலுக்கு ஆதரவழித்து, அன்பு செலுத்தினாள். நாட்கள் நகர நகர இருவரும் அன்பால் இறுகப் பிணைக்கப்பட்டனர். ஒருவரை ஒருவர் மனமார நேசித்தனர். உலக வழக்கப்படி கூறினால் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இருந்தனர். அப் பெண் கமலின் உயிர் வாழ்வுக்காக எப்பொதும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். ஆனால் ஒருபோதும் கமலின் தீவிரமான போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை.
மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் வந்திருந்த வேளையிலே நெல்லியடி முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்ற முன்வந்தாள். முதல் நாள் கமலும் திலீபனும் ஒன்றாக இருந்த வேளையிலே திலீபனிடம் ஓர் வேண்டுதல் விடுத்தான். கமல் நான் சில வேளை இத்தாக்குதலில் சாவடைந்தால் என்னை நேசிப்பவளுக்கு அதை உடனடியாக தெரிவித்து விடு என்பதாகும். என்ன சத்தியமான வார்த்தைகள் ஏதோ தன் இறப்ளை தான் அறிந்து வைத்திருந்தது போல் கூறியிருக்;கிறான். தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்;லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.
அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்;டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.
பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.
முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். 'தடைகள் அகற்றப்டட்டு விட்டது" ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு.
மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர்
'பிரபா பரவாயில்;லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்." என்றான்.
மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.
மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. 'பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்;தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்;கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.
மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.
வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து 'மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு" மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..
வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இ;டத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.
தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்;கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கன்.
மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்;தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner