-->

வீரத்தின் விளைநிலமே விடுதலையின் பிறப்பிடமே-பார்வதி அம்மாள் நினைவககானம்<காணொளி

வீரத்தின்
விளைநிலமே
விடுதலையின்
பிறப்பிடமே

காலமிட்ட கோலமதில்
கரைந்தது இன்று உனதுயிரே


வீரத்தின்
விளைநிலமே
விடுதலையின்
பிறப்பிடமே
காலமிட்ட கோலமதில்
கரைந்தது இன்று உனதுயிரே


தாயென்ற
சொல்லுக்கே தாயே நீ
தானே

தமிழர்களின்
எண்ணமதில்
நிறைந்திருந்தாய்
நீயே

தாயென்ற
சொல்லுக்கே தாயே நீ
தானே

தமிழர்களின்
எண்ணமதில்
நிறைந்திருந்தாய்
நீயே


விடுதலையை காண்பதற்காய்
வீறுகொண்டு எழுந்தவரை
முத்தமிட்டு களமனுப்பி முதற்தாயாய்
ஆகிவிட்டாய்


கானகத்தில்
நிலைத்திருந்து களம்கண்ட
உன் சேயை
தொலைவிருந்து வாழ்த்துகையில்
தலைசிறந்த தாயானாய்


முற்றுகைக்குள்
நீயும்
வாழ்ந்து வலிகளை உந்தன்
உடற்சுமந்தாய்
வெற்றுடலாய் சாயும்
போதும்
மலர்களைப்போல்
புன்னகைத்தாய்


சஞ்சலங்கள் கொண்ட
வாழ்வில் சற்றும்
நீயோ சளைத்ததில்லை
சாத்திரங்கள் ஓதும்
பெண்மே நீயும்
வாழ்ந்ததில்லை

உற்றவர்கள் தொலைவிருந்தும் உந்தன் உள்ளம் இனித்திருக்கும்
இற்றை வரை காண்பதற்காய் உன் விழிகள் தவித்திருக்கும்

பெருந்தலைவன் உன் நாக்குழலில் அழைத்திருக்கும்
நீ வளர்த்த வீரனுக்காய் உன் விழிகள் சொரிந்திருக்கும்

வார்த்தை போதவில்லை இங்கு உந்தன் வாழ்முடன் எழுந்திடவே
வாய்க்கரிசி இடவும் கைகள் நீளும் தூரம் நீயுமில்லை

போதுமடி தாயே போய் வா பொழுதும் துயரம் உனக்கெதற்கு
ஆளும் ஒரு காலம் தோன்றும் அங்கே உனக்கும் சிறப்பிருக்கும்

போதுமடி தாயே போய் வா பொழுதும் துயரம் உனக்கெதற்கு
ஆளும் ஒரு காலம் தோன்றும் அங்கே உனக்கும் சிறப்பிருக்கும்

காணொளியில்


http://bit.ly/dLEPwU

பகைவாழும் ​தலைநகரில்-வான்கரும்புலிகள்-கேணல் ரூபன் லெப் கேணல் சிரித்திரன் நினைவககானம்<காணொளி

பகைவாழும்
தலைநகரின்
ஒளி போனதும்
பெரும்
வரலாறு எழுதியது புலிவீரம்


கரிகாலன் படை சென்ற
இரு புஸ்பகம்
மோதி வெடியாக
நீறானதே நிகர்
இல்லம்


நேற்றிரவு பகை தலையில்
இடி விழுந்தது
அங்கு வீற்றிருந்த
வீணர்களின்
இடி எரிந்தது


காற்றினிலே வான்புலிகள்
உயிர் கரைந்தது
உமை போற்றி மலர்
தூவுகையில்
விழி கசிந்தது


வானோடி எங்கள்
கரும்புலி ரூபன்
போராடி வென்றிடப்போனான்

வானோடி எங்கள்
கரும்புலி ரூபன்
போராடி வென்றிடப்போனான்


கொடுஞ்சிங்கள
பேய்களின்
சிதைந்துமே அவனுடன்
சிரித்திரன்
சரித்திரம் ஆனான்

கொடுஞ்சிங்கள
பேய்களின்
சிதைந்துமே அவனுடன்
சிரித்திரன்
சரித்திரம் ஆனான்


ஏழிரண்டு வயதினிலே களம்
புகுந்தவன் ரூபன்
ஈழமண்ணின்
விடுதலைக்கு உயிர்
கொடுத்தவன்

ஏழிரண்டு வயதினிலே களம்
புகுந்தவன் ரூபன்
ஈழமண்ணின்
விடுதலைக்கு உயிர்
கொடுத்தவன்


தகதகவென
எதிரிகளை கலங்கடித்தவன்

தகதகவென
எதிரிகளை கலங்கடித்தவன்

எங்கள் அனைவருக்கும் சிரித்திரனே செயல் நடத்துனன்

நேற்றிரவு பகை தலையில் இடி விழுந்தது
அங்கு வீற்றிருந்த வீணர்களின் இடி எரிந்தது
காற்றினிலே வான்புலிகள் உயிர் கரைந்தது
உமை போற்றி மலர் தூவுகையில் விழி கசிந்தது

வான்புலிகள் கரும்புலியாய் உடலெழுந்தவர்
நீரிர் வான்பறந்து ஈழமதன் அழகறிந்தவர்

நாம் நிமிர்ந்து வாழ்வதற்கு தமையழித்தவர்
நாம் நிமிர்ந்து வாழ்வதற்கு தமையழித்தவர்

பெரும் சாதனைக்கு வழிசமைத்து சிறகடித்தவர்


பாடல்- பகைவாழும் தலைநகரில்

பாடியோர்- பாபு சிவநாதன், டேவிட் சுதன்

பாடல்வரி- தேவன் குகதாசன்

இசை- சிவராம் சிரஞ்சீவ்


காணொளியில்


http://bit.ly/hkwtb2

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner