-->

மூதூர் அக்சன்பார்ம் பணியாளர்கள் படுகொலை04/08/2006

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட்
மாதம் 4 ஆம் நாள் பாரிசைத்
தலைமையகமாகக் கொண்டுள்ள
பட்டினிக்கு எதிரான
அமைப்பு Action Contre La
Faim (ACF) என்ற மனிதாபிமான
அமைப்பின் 17 உள்ளுர்
பணியாளர்கள் மூதூரில் உள்ள
அவர்களின் அலுவலகத்தில்
மரண தண்டனை விதிக்கப்படும்
பாணியில்
சுட்டுக்கொல்லப்பட்டனர் .
மூதூர் பகுதியில்
சிறிலங்கா தரைப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சூழ்நிலையிலேயே இந்தப்
படுகொலைகள் இடம்பெற்றன .
2004 ஆம் ஆண்டில்
இடம்பெற்ற ஆழிப்பேரலையால்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவிகளை வழங்கும்
பணியில் இந்த மனிதாபிமான
அமைப்பின் பணியாளர்கள்
ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மூதூரில் போர்
மூண்டதையடுத்து அதில்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கான நிவாரணப்
பணிகளிலும் இவர்கள்
ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையிலேயே 2006 ஆம்
ஆண்டு ஓகஸ்ட்
மாதத்தில் இதன் உள்ளூர்ப்
பணியாளர்கள் 17 பேர்
கொல்லப்பட்டனர். இதில் 16
பேர் தமிழர்கள். ஒருவர்
முஸ்லிம்.

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner